Sunday 21 March 2010

பின்னூட்ட குலசாமிக்கு படையல் தொடர்பதிவு

இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த அன்பு(?) உள்ளங்கள் மங்குனியார், செல்விம்மா மற்றும் அதிரா ஆகியோருக்கு நன்றி(கர்...கர்.......)

நாம்ப போட்டதே மொத்தம் 21பதிவுகள்(மொக்கைதான்). இதுக்கு வந்த பின்னூட்டங்களையும் விரல்விட்டு எண்ணிடலாம் இதில் எங்கயிருந்து பிடிச்சது பிடிக்காததுன்னு சொல்ல :(.

ஆனாலும் ஒரு தொடர்பதிவாவது எழுதலேன்னா நானும் பதிவர்தான்னு சொல்லிக்கிட்டு திரிய முடியுமா! அதான் இந்த பதிவு. எவ்வளவோ சகிச்சுக்கிட்டீங்க இதையும் சகிச்சிக்கிட மாட்டீகளா என்ன :)

பிடித்த பின்னூட்டங்கள்: எல்லா பின்னூட்டங்களும் பிடிக்கும். இல்லேன்னா அதையெல்லாம் இங்கிட்டு போடுவோமாக்கும். அதுக்குத்தானே மாடரேஷன்னு ஒண்ணை வச்சிருக்கோம். ஆனா ஒண்ணுங்க நம்ப மக்கள்ஸ் எனக்கு டெலீட் பண்ற வேலையே வைக்கலீங்க. ரொம்ப... நல்லவங்க :)

நான் பிறருக்கு அளித்த பின்னூட்டங்களில் எனக்குப் பிடித்தது:

நான் முன்னாடி ஒரு பேச்சு பின்னாடி ஒரு பேச்சு பேச மாட்டேனுங்க. அதனால முன்னாடி சொன்னதுதான் இதுக்கும். நான் அளித்த எல்லா பின்னூட்டங்களும் பிடிக்கும்(டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் உட்பட). அட சத்தியமாத்தானுங்க நம்புங்க அட நம்புங்க.

நாங்கள்லாம் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவங்களாச்சே! கழுவற மீன்ல நழுவற மீனாத்தான் இருப்போம்.

டிஸ்கி: இலையில ஒவ்வொரு ஐட்டமா வச்சா இலையே நிறைய மாட்டேங்குதுங்க. அதான் அல்லாத்தயும் அள்ளி மொத்தமா வச்சிட்டேன்.

சரிங்க குலசாமிக்கு படையல் போட்டாச்சு . அடுத்து எந்த வூட்டுக்காரங்க படையல் போடணும்னா சமையலை அட்டகாசமாக்கிக் கொண்டிருக்கும் ஜலீலாக்காவும் எல் போர்ட் மாட்டி சுற்றிக் கொண்டிருக்கும் சந்தனாவும். வந்துடுங்க போட்டுடுங்க.

23 comments:

  1. கவி ரியலி இன்னிக்கு நீங்க எனக்கு போட்ட பின்னூட்டம் படிச்சு நல்லா சிரிச்சுட்டேன் டாங்ஸ் ஜொள்ளிக்கிறேன்...

    :)))

    ReplyDelete
  2. //நாங்கள்லாம் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவங்களாச்சே! கழுவற மீன்ல நழுவற மீனாத்தான் இருப்போம்.//

    அது... படையல் சூப்பர்...

    கிரேட் எஸ்கேப்பா???

    ReplyDelete
  3. இப்பிடி பட்ட ஐடியா தந்ததுக்கு டாங்ஸு.நன்றி(கர்...கர்.......)

    ReplyDelete
  4. படையல் என்றால் இது தான் நிஜப்படையல்,கவி.

    ReplyDelete
  5. அப்ப ஒரு க்ரூப்பா தன் கிளம்பியிருக்கிங்க நாஞ்சில் நாட்டிலிருந்து. அப்ப எல்லோஉம் கழுவுர மீனுல நழுவுர மீனா

    என்னையுமா எத எடுப்பது எத விடுப்பதுன்னு தெரியாம இருக்கேன், நானும் நாஞ்சில் நாட்டு கரவுகளோடு சேர்ந்துடலாமான்னு பார்க்கேன்

    ReplyDelete
  6. கவி நானும் இந்த தொடர்பதிவை எழுதனும்னு யோசிட்டு இருந்தேன். நானும் ஜலிலாக்கா சொல்றமாதிரி உங்களோடு சேர்ந்திருலாம்னு இருக்கேன்..

    ReplyDelete
  7. கவி,
    சூப்பர் நழுவல்!!!!!!!!!!!!

    ReplyDelete
  8. ஆஹா.. அருமை.. சந்துவுக்கு அழைப்போ அழைப்பு.. கவி அதிராவும் சொல்லியிருக்கார்.. இப்போ எழுதினதயே இன்னமும் முடிக்கல.. அதனால இப்போதைக்கு முடியாத மாதிரி இருக்கு..

    அடுத்த தலைப்புல கூப்பிட்டு விடுங்க.. கண்டிப்பா??!! ஹிஹி நாங்களும் நழுவற மீனுங்கோ :)

    ReplyDelete
  9. கவி என்னை நினைவு இருக்கா. சரி நல்ல பின்னுட்ட பதிவு தொடர்ப்ப. அது சரி தவறாக நினக்காதிங்க கவி. எதுங்க நாஞ்சில் நாடு? நிஜமா எனக்கு தெரியாது? சொல்லிதாங்க. எனக்கு தெரிந்த சேரசோழநாடு.

    ReplyDelete
  10. // பிரியமுடன்...வசந்த் said...
    கவி ரியலி இன்னிக்கு நீங்க எனக்கு போட்ட பின்னூட்டம் படிச்சு நல்லா சிரிச்சுட்டேன் டாங்ஸ் ஜொள்ளிக்கிறேன்...

    :)))//

    நன்றி வசந்த்

    ReplyDelete
  11. // நாஞ்சில் பிரதாப் said...
    //நாங்கள்லாம் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவங்களாச்சே! கழுவற மீன்ல நழுவற மீனாத்தான் இருப்போம்.//

    அது... படையல் சூப்பர்...

    கிரேட் எஸ்கேப்பா???//

    அதேதான். எல்லாம் உங்கக்கிட்ட கத்துகிட்டதுதான் :)

    ReplyDelete
  12. //ஜெய்லானி said...
    இப்பிடி பட்ட ஐடியா தந்ததுக்கு டாங்ஸு.நன்றி(கர்...கர்.......)//

    டாங்ஸ்சுக்கு டாங்ஸுங்கோ :)

    ReplyDelete
  13. // asiya omar said...
    படையல் என்றால் இது தான் நிஜப்படையல்,கவி.//

    ஹி ஹி நன்றி ஆசியா!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. // Jaleela said...
    அப்ப ஒரு க்ரூப்பா தன் கிளம்பியிருக்கிங்க நாஞ்சில் நாட்டிலிருந்து. அப்ப எல்லோஉம் கழுவுர மீனுல நழுவுர மீனா

    என்னையுமா எத எடுப்பது எத விடுப்பதுன்னு தெரியாம இருக்கேன், நானும் நாஞ்சில் நாட்டு கரவுகளோடு சேர்ந்துடலாமான்னு பார்க்கேன்//

    வந்தாரை வாழ வைக்கும் எங்கள் நாடு. வாங்கோ வாங்கோ.

    ReplyDelete
  16. // Mrs.Menagasathia said...
    கவி நானும் இந்த தொடர்பதிவை எழுதனும்னு யோசிட்டு இருந்தேன். நானும் ஜலிலாக்கா சொல்றமாதிரி உங்களோடு சேர்ந்திருலாம்னு இருக்கேன்..//

    வாங்கோ வாங்கோ ஜோதியில் ஐக்கியமாகுங்கோ

    ReplyDelete
  17. // செந்தமிழ் செல்வி said...
    கவி,
    சூப்பர் நழுவல்!!!!!!!!!!!!//

    ஹி...ஹி...

    ReplyDelete
  18. // எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    ஆஹா.. அருமை.. சந்துவுக்கு அழைப்போ அழைப்பு.. கவி அதிராவும் சொல்லியிருக்கார்.. இப்போ எழுதினதயே இன்னமும் முடிக்கல.. அதனால இப்போதைக்கு முடியாத மாதிரி இருக்கு..

    அடுத்த தலைப்புல கூப்பிட்டு விடுங்க.. கண்டிப்பா??!! ஹிஹி நாங்களும் நழுவற மீனுங்கோ //

    இப்படி எல்லாரும் மீனா மாறிட்டா எப்பூடி எல்லாரும் கும்மியடிக்கறது?

    ReplyDelete
  19. // Vijis Kitchen said...
    கவி என்னை நினைவு இருக்கா. சரி நல்ல பின்னுட்ட பதிவு தொடர்ப்ப. அது சரி தவறாக நினக்காதிங்க கவி. எதுங்க நாஞ்சில் நாடு? நிஜமா எனக்கு தெரியாது? சொல்லிதாங்க. எனக்கு தெரிந்த சேரசோழநாடு.//

    என்ன விஜி இப்படி கேட்டுட்டீங்க. உங்களையெல்லாம் மறக்க முடியுமா. என்னோட பக்கத்தில் உங்களோட புதிய பதிவுகள் எதுவுமே அப்டேட் ஆகலை. அதனால நீங்க பிசியோன்னு நினைச்சுட்டேன்.

    நாஞ்சில் நாடுன்னா வேற ஒண்ணும் இல்லீங்க. எங்கள் குமரி மாவட்டத்தைதான் நாஞ்சில் நாடுன்னு சொல்லுவோம். முன்னாடி திருவிதாங்கூர் சமஸ்தானத்தோட சேர்ந்து இருந்தப்போ எங்கள் பகுதியின் பெயர் நாஞ்சில்நாடு. தமிழ்நாட்டோட இணைஞ்சப்போ குமரி மாவட்டம் ஆயிடுச்சு.

    ReplyDelete
  20. கவின்னா கவியே தான். கரெக்டா பதில் சொல்லிட்டிங்க. நன்றி கவி. பிசி தான் ஆனாலும் நான் எல்லா நாட்களும் பளாக் விசிட் இல்லை. செவ்வாய்,வியாழன் அன்று மட்டும் அவசியம் முடிந்த வரை எல்லாருடய்ய ப்ளக்கிலும் போய் படித்து பின்னுட்டம் கொடுப்பேன். உஙக ப்ளாக்கின் முகவரியை தேடி எடுத்து வந்திருக்கேன்.இனிமேல் உள்ளேன் அய்யா என்று சொல்லி வருகிறேன். ஒ.கே எங்க ஒரு ஸ்மைல் ப்ளீஸ்.

    ReplyDelete
  21. கவிசிவா!! இது கொஞ்சமும் நல்லாவே இல்லை:) படையல் போதாதென குலசாமி பொங்குறாராம் சுனாமியாக:).... நிபந்தனையை மீறிய கவியை, உடனடியாக நீதிமன்றம் வரும்படி கட்டளையிடுகிறது “பி.நீதிமன்றம்”... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. @விஜி :)

    @அதிரா நான் முன் ஜாமீன் வாங்கிட்டேன் அதிரா :)

    ReplyDelete