Tuesday, 23 March 2010

கம்பன் கழகம் கொடுத்த பல்பு
இது ஒரு கொசுவத்தி மொக்கைங்கோ! ரெடி ஸ்டார்ட் ரொட்டேட் கொசுவத்தி....

அப்போ நான் பதினொண்ணாம் கிளாசு படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ கம்பன் கழகம் சார்பா மாவட்ட அளவிலான வினாடி வினா... அதாங்க க்விஸ் போட்டி வச்சாங்க. எங்கள் பள்ளி சார்பாக நானும் என் தோழிகள் மூவரும் கலந்து கொண்டோம். எல்லா ரவுண்டிலும் ஜெயிச்சு ஃபைனலில் ஃபர்ஸ்ட் ப்ரைசும் ஜெயிச்சிட்டோம்.(இதெல்லாம் சாதனைன்னு சொல்ல வந்துட்டியாக்கும் அடங்கு மவளே அடங்கு...)

ஆனா ப்ரைசை கையில் கொடுக்கவே இல்லை :(. ஏதோ விழா எடுத்து அப்புறமாத்தான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. சரின்னு நாங்களும் வந்துட்டோம். ரெண்டு மாசம் கழிச்சு எங்க ஊரு சித்ரா லைப்ரரியில் வச்சு விழா நடத்தி ப்ரைஸ் கொடுக்கப் போறதா சொல்லி பள்ளிக்கு லெட்டர் வந்துது.

பள்ளி ஆசிரியையின் துணையோடு நாங்களும் அங்க போனோம். சாயங்காலம் 4 மணிக்கு விழான்னு சொல்லியிருந்தாங்க. நாங்களும் போய் உட்கார்ந்தோம். மொத்தமே ஒரு 50பேர் வந்திருந்தாங்க. அதிலயும் 10பேர் மேடையிலத்தான் இருந்தாங்க.

பத்து பேரும் ஒவ்வொருத்தரா எந்திரிச்சு தலைவர் அவர்களே இவர்கள் அவர்களே... அவர்கள் அவர்களேன்னு ஆரம்பிச்சு (ஆனாலும் எல்லாருக்கும் ரொம்ப நல்ல மனசுங்க. எங்களையும் மறக்காம மாணவ மாணவிகளேன்னு அன்பா சொன்னாங்க) ஒவ்வொருத்தரும் குறைஞ்சது 20நிமிடமாவது ரம்பம் போட்டுக்கிட்டுத்தான் உட்கார்ந்தாங்க.

அப்படீ இப்படீன்னு எல்லாரும் எட்டு மணிபோல பேசி முடிச்சாங்க. எங்க கழுத்துக்கெல்லாம் உடனடியா ஹாஸ்பிட்டல் போய் கட்டு போட வேண்டிய நிலைமை. ஆனாலும் எங்க டீச்சர் கெஞ்சி(?) கேட்டுக்கிட்டதால பொறுத்துக்கிட்டு உட்கார்ந்திருந்தோம்.

ஒருவழியா பல்பு... சே... பரிசு கொடுக்கும் படலம் ஆரம்பிச்சாங்க. வினாடி வினா முதல் பரிசு @@@@பள்ளின்னு அறிவிச்சு எங்கள் ஒவ்வொருத்தர் பேரையும் சொன்னதும் நாலு பேரும் போய் பரிசை வாங்கினோம். பரிசுன்னதும் பெரிய ட்ராஃபி அல்லது ஷீல்டுன்னு நீங்க ரொம்ப குறைவால்லாம் நினைச்சுடக் கூடாது. ஆளுக்கொரு சர்ட்டிஃபிக்கேட் மட்டும்தாங்க கொடுத்தாங்க :(. ஃபோட்டோ கூட புடிச்சாங்க.

அதைக் கூட பொறுத்துக்கிட்டோம் ஆனா இரண்டாவது பரிசு @@@பள்ளி ன்னு சொல்லி அவங்க வந்ததும் அவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ஒவ்வொரு பெரிய புத்தகமும் சர்ட்டிஃபிக்கேட்டும் கொடுத்தாங்க பாருங்க... நாங்க நொந்து போயிட்டோம். என் தோழி கோபத்தில்(?) அழவே செய்துட்டா..

எங்க கூட வந்த டீச்சரோ ரொம்ப பாவம் அதிர்ந்து கூட பேச மாட்டார். அவங்க சரி சரி போனா போகுது சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சுல்ல போவோம்னு கூட்டிக்கிட்டு வந்துட்டார்.

கொசுவத்திக்குள் ஒரு கொசுவத்தி>>>>> இரண்டாம் பரிசு பெற்ற அணியிலுள்ள ஒரு பையன் என்னோடு கணக்கு ட்யூஷன் படித்தார். எங்க ரெண்டுபேருக்கும் எப்போதுமே ஜென்ம பகைதான். நான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சதில் அவனைப் போட்டு நல்லா வெறுப்பேத்தியிருந்தேன்.<<<<<கொசுவத்தி முடிஞ்சுது.

ரெண்டாவது நாள் தினமலரில் கம்பன் கழக பரிசளிப்பு விழான்னு ஒரு செய்தி வெளியாகி ஒரு ஃபோட்டோவும் போட்டிருந்தாங்க. அதுலயும் அவனுங்க படத்தைப் போட்டுட்டு கடைசியா குட்டியூண்டு முதல் பரிசு பெற்றவர்கள்னு எங்க பேரைப் போட்டிருந்தானுங்க. அடப்பாவிங்களா இங்கயும் எங்களை கவுத்திப்புட்டானுங்களேன்னு நொந்துக்கிட்டோம்.

ட்யூஷனுக்குப் போனா அவன் வேற அந்த பேப்பர் கட்டிங்கையும் புத்தகத்தையும் வச்சுக்கிட்டு பந்தா காமிச்சு பழி தீர்த்துகிட்டான் :(. எங்க ட்யூஷன் சார் வேற உன் ஃபோட்டோ போடாம இவன் ஃபோட்டோ வந்திருக்குன்னு அவர் பங்குக்கு வெறுப்பேத்தினார்.

எல்லா கோபமும் தலைக்கேறியிருந்த நேரத்துல எங்க வீட்டுக்கு எங்க அப்பாவைப் பார்க்க ஒருத்தர் வந்தார். கம்பன் கழக உறுப்பினரும் கூட. அவரோட போதாத நேரம்... முந்தாநேத்து உன்னைய அங்க பார்த்தேனேம்மா.. ன்னார். அவ்வளவுதான் என் எல்லா கோபத்தையும் அவரிடம் தீர்த்து விட்டேன். உங்களுக்கு அந்த ஸ்கூலுக்குத்தான் ப்ரைஸ் கொடுக்கணும்னா கொடுக்க வேண்டியதுதானே எதுக்கு போட்டின்னு ஒண்ணை வச்சு இப்படி கேவலப்(?!) படுத்துனீங்கன்னு அவரை போட்டு நொங்கி எடுத்துட்டேன்.

மனுஷர் பாவம் "இல்லம்மா ஏதாச்சும் தப்பு நடந்திருக்கும் இல்லேன்னா இப்படி ஆகியிருக்காதுன்னார்". அடுத்த(மறுபடியுமா?!) தடவை தப்பு நடக்காம பார்த்துக்கறோம்னு சொல்லி என்கிட்ட இருந்து தப்பியோடிட்டார்.

அப்புறம் கொஞ்சகாலம் வரை கம்பன் கழகம்னு சொல்லிக்கிட்டு என் முன்னாடி வந்தவங்க கதை எல்லாம் அவ்வளவுதான். இப்போ நினைச்சா சிரிப்பு வருது. ஆனா அப்போ அம்புட்டு கோவம். அந்த பையன்(இப்போ டாக்டர்) கிண்டல் பண்ணலேன்னா ஒருவேளை அவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டேனோ என்னவோ :)

ஆனா இன்னிக்கு வரைக்கும் கம்பன் கழகம் எங்களுக்கு ஏன் பல்பு கொடுத்திச்சுன்னு மட்டும் புரியவே இல்லை.

18 comments:

 1. //எங்கள் பள்ளி சார்பாக நானும் என் தோழிகள் மூவரும் கலந்து கொண்டோம். எல்லா ரவுண்டிலும் ஜெயிச்சு ஃபைனலில் ஃபர்ஸ்ட் ப்ரைசும் ஜெயிச்சிட்டோம்//

  நம்பிட்டோம் , ஓ... இதுக்கு பேர்தான் பல்பு குடுக்குறதா ?

  அப்புறம் உங்க படையல சாப்பிட்ட நம்ம குலசாமி , ஒரு வாரம் லீவ் போட்டு கொடநாடு (சே.... து .....
  வாய் கொளறுது) , இமயமலை போய்ட்டார்

  ReplyDelete
 2. //// பதினொண்ணாம் கிளாசு படிச்சுக்கிட்டு இருந்தேன்//
  ஏன் இப்படி புளுகுறீங்க....???

  சின்ன வயசுல அந்த சித்ரா லைப்ரரில நவராத்திரிக்கு நான் நாடகம் நடிச்சுருக்கேன்... இன்னும் அப்படியேத்தான் இருக்கு ஒரு மாற்றம் இல்லாம...

  ReplyDelete
 3. பரிசு வாங்குறதுக்கு போட்டில ஜெயிச்சா மட்டும்போதாதுங்க....அதுக்கு ஒரு முகராசிகூட வேணும்... மே பி உங்க கூட்டத்துல யாருக்கும் அது இல்லாம இருந்திருக்கலாம் :))

  ஆனா ஒண்ணுங்க ஒரு கொசுவத்திக்குள்ளேயே இன்னொரு கொசுவத்தி வச்ச ஒரே ஆளு நீங்களாத்தான் இருக்க முடியும். முடில...

  ReplyDelete
 4. pls collect ur award from my blog

  http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html

  பிறகு வந்து படித்து பதிவு போடுகிறேன் கவி!!

  ReplyDelete
 5. //மங்குனி அமைச்சர் said...
  //எங்கள் பள்ளி சார்பாக நானும் என் தோழிகள் மூவரும் கலந்து கொண்டோம். எல்லா ரவுண்டிலும் ஜெயிச்சு ஃபைனலில் ஃபர்ஸ்ட் ப்ரைசும் ஜெயிச்சிட்டோம்//

  நம்பிட்டோம் , ஓ... இதுக்கு பேர்தான் பல்பு குடுக்குறதா ?//

  மங்குனியார்கிட்ட இருந்து இப்படி ஒரு பின்னூட்டம்தான் வரும்னு எனக்கு தெரியுமே!

  //அப்புறம் உங்க படையல சாப்பிட்ட நம்ம குலசாமி , ஒரு வாரம் லீவ் போட்டு கொடநாடு (சே.... து .....
  வாய் கொளறுது) , இமயமலை போய்ட்டார்//

  ரஜினிகாந்த் க்கு மெசேஜ் அனுப்புங்க. தேடிப்பிடிச்சு கூட்டிட்டு வந்துடுவார்

  ReplyDelete
 6. // நாஞ்சில் பிரதாப் said...
  //// பதினொண்ணாம் கிளாசு படிச்சுக்கிட்டு இருந்தேன்//
  ஏன் இப்படி புளுகுறீங்க....???

  சின்ன வயசுல அந்த சித்ரா லைப்ரரில நவராத்திரிக்கு நான் நாடகம் நடிச்சுருக்கேன்... இன்னும் அப்படியேத்தான் இருக்கு ஒரு மாற்றம் இல்லாம...//

  வேற வழியே இல்ல நாஞ்சிலாரே நீங்க நம்பித்தான் ஆகணும். நீங்க நாடகத்துல "நடிச்சுருக்கேன்" ன்னு சொல்றத நாங்க நம்பறோம்ல ...

  //பரிசு வாங்குறதுக்கு போட்டில ஜெயிச்சா மட்டும்போதாதுங்க....அதுக்கு ஒரு முகராசிகூட வேணும்... மே பி உங்க கூட்டத்துல யாருக்கும் அது இல்லாம இருந்திருக்கலாம் :))//

  அது என்னவோ உண்மைதான் போல தெரியுது. ஏன்னா எனக்கு இன்னொரு பரிசு கிடைச்சப்பவும் ஏமாத்திட்டானுங்க :(. வாழ்க்கையில பரிசு கிடைச்சதே ரெண்டு தடவைதான் :(

  நீங்க மொட்ட மாடி கவுஜ போட்டு கொல்லும் போது நாங்க கொசுவத்திக்குள்ள இன்னொரு கொசுவத்தி வைக்கக் கூடாதா?! எகொசஇ

  ReplyDelete
 7. // Mrs.Menagasathia said...
  pls collect ur award from my blog

  http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html

  பிறகு வந்து படித்து பதிவு போடுகிறேன் கவி!!

  அவிங்க பல்பு கொடுத்தா என்ன நான் அவார்டு கொடுக்கறேன்னு கொடுத்து எனக்கு ஆறுதல் சொல்லிட்டீங்க மேனகா. ரொம்ப நன்றி!

  ReplyDelete
 8. //அவிங்க பல்பு கொடுத்தா என்ன நான் அவார்டு கொடுக்கறேன்னு கொடுத்து எனக்கு ஆறுதல் சொல்லிட்டீங்க மேனகா. ரொம்ப நன்றி!// கவி உங்க நகைச்சுவையான பதில் கண்டு சிரித்துவிட்டேன்.

  நானும் ஆறுதல் பட்டுக்கிறேன் கவி ஏன்னா பரிசு வாங்கற லிஸ்ட்ல நீங்களும் என்னை போல இருக்கிங்களேன்னு..என்னையும் இப்படி 1 தடவை ஏமாத்திட்டானுங்க பாவிப்பயனுங்க...ம்ம்ம் நாஞ்சிலார் சொல்ற மாதிரி இதுக்கும் ஒரு முகராசி வேணும் போல...

  ReplyDelete
 9. கவி ,மண்டையில மசாலா கம்மியா இருந்தவங்களுக்கு , ’’”போட்டியில முதல் பரிசு பெறுவது எப்படி “”ங்கிர புக் அது. நீங்க முதல் பரிசு வாங்கியதால அந்த புக் உங்களுக்கு தேவையில்ல இப்ப நோக்கு புரிஞ்சிதா அம்பி!!( உஸ்.. அப்பாடா.. ம்.. முடியல..)

  ReplyDelete
 10. கவி ,மண்டையில மசாலா கம்மியா இருந்தவங்களுக்கு , ’’”போட்டியில முதல் பரிசு பெறுவது எப்படி “”ங்கிர புக் அது. நீங்க முதல் பரிசு வாங்கியதால அந்த புக் உங்களுக்கு தேவையில்ல இப்ப நோக்கு புரிஞ்சிதா அம்பி!!( உஸ்.. அப்பாடா.. ம்.. முடியல..)

  ReplyDelete
 11. ஹா ஹா.. கவி.. ஆனாலும் இந்த அநியாயம் பண்ணியிருக்கக் கூடாது அவங்க :) அந்த வயசுல இதெல்லாம் நமக்கு ரொம்ப பெரிய விஷயம்!

  ReplyDelete
 12. // இரண்டாம் பரிசு பெற்ற அணியிலுள்ள ஒரு பையன் என்னோடு கணக்கு ட்யூஷன் படித்தார். எங்க ரெண்டுபேருக்கும் எப்போதுமே ஜென்ம பகைதான். நான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சதில் அவனைப் போட்டு நல்லா வெறுப்பேத்தியிருந்தேன்//

  பொதுவா இந்த குணம் எல்லாபொண்ணுகளுக்கும் இருக்குற மாதிரியே உங்களுக்கும்....

  :(

  ReplyDelete
 13. மேனகா சேம் பின்ச். ஏன் நமக்கு மட்டும் இப்பட்டீல்லாம் நடக்குது அவ்........

  ReplyDelete
 14. // ஜெய்லானி said...
  கவி ,மண்டையில மசாலா கம்மியா இருந்தவங்களுக்கு , ’’”போட்டியில முதல் பரிசு பெறுவது எப்படி “”ங்கிர புக் அது. நீங்க முதல் பரிசு வாங்கியதால அந்த புக் உங்களுக்கு தேவையில்ல இப்ப நோக்கு புரிஞ்சிதா அம்பி!!( உஸ்.. அப்பாடா.. ம்.. முடியல..)//

  இந்த ஆங்கிள்லயும் யோசிக்கலாமோ!

  ReplyDelete
 15. // எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
  ஹா ஹா.. கவி.. ஆனாலும் இந்த அநியாயம் பண்ணியிருக்கக் கூடாது அவங்க :) அந்த வயசுல இதெல்லாம் நமக்கு ரொம்ப பெரிய விஷயம்!//

  ரொம்ப ரொம்ப பெரிய விஷயம் சந்தனா :)

  ReplyDelete
 16. // பிரியமுடன்...வசந்த் said...
  // இரண்டாம் பரிசு பெற்ற அணியிலுள்ள ஒரு பையன் என்னோடு கணக்கு ட்யூஷன் படித்தார். எங்க ரெண்டுபேருக்கும் எப்போதுமே ஜென்ம பகைதான். நான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சதில் அவனைப் போட்டு நல்லா வெறுப்பேத்தியிருந்தேன்//

  பொதுவா இந்த குணம் எல்லாபொண்ணுகளுக்கும் இருக்குற மாதிரியே உங்களுக்கும்....

  :(//

  அந்த வயசுல இதெல்லாம் சகஜமுங்க. ஆம்பளை புள்ளைகளுக்கும் இந்த குணம் உண்டுங்க.

  ReplyDelete
 17. கவி,பரிசை அறிவித்துவிட்டு கைக்கு கிடைக்காமல் போன கதை கூட இருக்கு,அதைவிட இது பரவாயில்லை.கம்பன் தான் பாவம்.

  ReplyDelete
 18. // asiya omar said...
  கவி,பரிசை அறிவித்துவிட்டு கைக்கு கிடைக்காமல் போன கதை கூட இருக்கு,அதைவிட இது பரவாயில்லை.கம்பன் தான் பாவம்.//

  எல்லார்கிட்டயும் ஒரு நொந்த கதை இருக்கும் போல இருக்கே!

  ReplyDelete