Sunday 7 March 2010

அட்வைஸ்னு சொல்ல மாட்டேன்!


இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் பெற்றோரை ஊரில் விட்டு விட்டு பிற நகரங்களில் அல்லது பிற நாடுகளில் இருக்கிறோம்.

அவர்களுக்கு தனிமை தெரியாமலிருக்கவும் நாம் தள்ளி இருந்தாலும் மனதளவில் அவர்களோடேவேதான் இருக்கிறோம்கிற ஒரு பாதுகாப்புணர்வை அவர்களுக்கு கொடுப்பது ஒவ்வொரு பிள்ளையின் குறைந்தபட்ச பொறுப்பு என்றே நினைக்கிறேன். தங்களோடவே அவர்களை வைத்துக் கொள்ளும் பொருளாதார நிலையும் பெற்றோருக்கு நம்மோடு வந்து தங்கிக்கொள்வதில் விருப்பமும் இருந்தால் நம் பெற்றோர்களுடன் இணைந்திருப்பதே ஒவ்வொரு பிள்ளையின் உரிமை. ஏன் "உரிமை"ன்னு சொல்றேன்னா "கடமை" என்ற வார்த்தை அன்புக்கு உரியது அல்ல. அன்பு உரிமையானதாக இருக்க வேண்டுமே தவிர கடமைக்காக இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

நாம் பெற்றோருடன் இணைந்திருக்க முடியாத சூழ்நிலையில் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு நடந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் பிசியான இயந்திர வாழ்க்கையில் மறந்து விடுகிறோம். அதை ஞாபகப்படுத்தவே இந்த பதிவு.

அவரவர் பொருளாதார மற்றும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தினந்தோறுமோ வாரம் ஒருமுறை அல்லது இருமுறையோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வேண்டும். எல்லாரும் இத செய்துக்கிட்டுத்தானே இருக்கோம்னு நினைக்கத் தோணும். ஆனால் ஏதோ அவசர வேலை அல்லது ஏதோ சூழ்நிலையால் பேச முடியாவிட்டால் ஒருநிமிடம் அவர்களை தொலைபேசியில் கூப்பிட்டு பின்னர் பேசுவதாக சொல்லி விட்டால் அவர்களுக்கும் நிம்மதி.

நமக்கு இது சிறிய விஷயமாக இருக்கும். ஆனால் வழக்கமான தொலைபேசி அழைப்பு தாமதமாகும் போது வயதானவர்கள் நிச்சயம் பதற்றமடைவார்கள். அதை தவிர்ப்பது நலம்.

குழந்தைகளையும் தாத்தா பாட்டியோடு பேச ஊக்கப்படுத்த வேண்டும். அதற்காகவவது பிள்ளைகளுக்கு தாய்மொழியில் பேசக்கற்றுக் கொடுக்க வேண்டும். இன்று வெளிநாட்டில் உள்ள குழந்தைகள் அழகாக தாய் மொழியில் பேசுகிறார்கள் என்பதைப்பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.

நம் பெற்றோர் வழக்கமான செக்கப்புக்கு போகும் டாக்டரின் தொலைப்பேசி எண்ணைத் தெரிந்து கொண்டு இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருதடவை அவர்களது உடல்நிலை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது பல டாக்டர்கள் இதை ஊக்கப்படுத்துகிறார்கள். நாம் இப்படி செய்யும் போது பெற்றோர், தன் பிள்ளை தூரத்தில் இருந்தாலும் நம் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். நிச்சயம் அது அவர்களுக்கு மனத்தெம்பைக் கொடுக்கும். நமக்காகவாவது தங்கள் உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

நம் வேலையைப்பற்றியும் வாழ்க்கைச்சூழலைப்பற்றியும் அவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்கள் குழந்தையின் (ஏழுகழுதை வயசானாலும் நாம் அவர்களுக்கு குழந்தைதான்) வேலைப்பளுவும் லைஃப்ஸ்டைலும் பிரச்சினைகளும் தெரிய வரும். புரிந்து கொள்வார்கள். அதற்காக எப்போதும் புலம்பிக் கொண்டிருந்தால் சலிப்பு தட்டி விடும்.

வயதாகும் போது தாம் ஒதுக்கப்படுகிறோமோ என்ற எண்ணம் வருவது இயல்பு. அதை அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு. இனிமையான வார்த்தைகளும் நம் வாழ்வில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவர்களை கலந்தாலோசிப்பதும் அந்த வேலையை செய்து விடும். அவர்கள் சொல்லும் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் போது பக்குவமாக ஏன் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முடியலைன்னு விளக்கமா சொல்லிட்டோம்னா கண்டிப்பா ஏத்துக்குவாங்க.

கடைசியா பெற்றோருக்கும் ஒரு வார்த்தை. உங்கள் குழந்தைகள்தான் ஆனால் தனி மனிதர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு அவர்களிடம் ஏதேனும் வருத்தம் இருந்தால் அவர்களிடமே நீ இது செய்வது எனக்கு பிடிக்கவில்லை எனக்கு கஷ்டமா இருக்குன்னு மெதுவா அன்பா அவர்களை குற்றம் சாட்டாமல் சொல்லிவிட்டால் இருவருக்கும் பிரச்சினை இல்லை. அதை விட்டு மூன்றாம் மனிதரிடம் இதை சொன்னால் அதற்கு கண் காது மூக்கு எல்லாம் முளைத்து உங்கள் பிள்ளைகள் காதை எட்டும். தேவையற்ற மனசங்கடங்கள் உருவாகும்.

ரொம்ப அறுத்துட்டேன்னு புரியுது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் தனிமையில் இருந்து, நாம் அறியாமல் செய்யும் சில தவறுகளால் மனம் வருந்துவதைக் கண்கூடாக பார்த்திருக்கிறேன். பிள்ளைகளுக்காக மேலே சொன்னவை அனைத்துமே பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் தாங்கள் எதிர்பார்ப்பதாக சொன்ன விஷயங்கள்தான். புதிதாக நான் ஒன்றுமே சொல்லவில்லை.

22 comments:

  1. நீங்கள் கூறுவது சரி தான்...இருப்பினும் பல பெற்றோருக்கு தாங்கள் நன்கு பழகிய, சொல்லப் போனால் அங்கேயே பல வருடம் வாழ்ந்து, ஊர் சுற்றி, பரபரப்புடன் இருந்து வந்தவர்களுக்கு தங்கள் பிள்ளைகள் வசிக்கும் புதிய ஊரில் ஒருவித தனிமை மற்றும் பொழுது போகாத நிலை போன்ற காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பிள்ளைகளும் அவர்கள் வேளையிலேயே முழு கவனமும் செலுத்த வேண்டியிருக்கிரதால் வார இறுதியில் மட்டுமே அவர்களிடம் நிறைய நேரம் செலவழித்து நன்கு உரையாட நேரம்கிடைக்கிறது.

    ReplyDelete
  2. good post kavi...

    // உங்களுக்கு அவர்களிடம் ஏதேனும் வருத்தம் இருந்தால் அவர்களிடமே நீ இது செய்வது எனக்கு பிடிக்கவில்லை எனக்கு கஷ்டமா இருக்குன்னு மெதுவா அன்பா அவர்களை குற்றம் சாட்டாமல் சொல்லிவிட்டால் இருவருக்கும் பிரச்சினை இல்லை//

    உங்களோட இந்த டீல் நல்லாயிருக்கு...

    ReplyDelete
  3. // டக்கால்டி said...
    நீங்கள் கூறுவது சரி தான்...இருப்பினும் பல பெற்றோருக்கு தாங்கள் நன்கு பழகிய, சொல்லப் போனால் அங்கேயே பல வருடம் வாழ்ந்து, ஊர் சுற்றி, பரபரப்புடன் இருந்து வந்தவர்களுக்கு தங்கள் பிள்ளைகள் வசிக்கும் புதிய ஊரில் ஒருவித தனிமை மற்றும் பொழுது போகாத நிலை போன்ற காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.//

    அதனால்தான் பெற்றோருக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே நம்மோடு வந்து இருக்க சொல்லியிருக்கிறேன்.

    //பிள்ளைகளும் அவர்கள் வேளையிலேயே முழு கவனமும் செலுத்த வேண்டியிருக்கிரதால் வார இறுதியில் மட்டுமே அவர்களிடம் நிறைய நேரம் செலவழித்து நன்கு உரையாட நேரம்கிடைக்கிறது.//

    அதிக நேரம் தேவையில்லை நண்பரே. இரவு உணவு சேர்ந்து சாப்பிடும்படிபார்த்துக் கொண்டாலே போதும்.

    ReplyDelete
  4. நன்றி வசந்த்.

    எப்போதுமெ மூன்றாம் நபர் தலையிடும் போதுதான் சாதாரண சிக்கல் இடியாப்ப சிக்கலாகி விடுகிறது. அதான் இந்த டீல்

    ReplyDelete
  5. அதனால்தான் பெற்றோருக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே நம்மோடு வந்து இருக்க சொல்லியிருக்கிறேன்.//

    ஏன் என்றால் நான் இதை நன்கு அனுபவித்து இருக்கிறேன். இதனால் நான் என் பெற்றோரை குறை சொல்லவில்லை. நான் கேட்ட போது நாங்கள் உன்னுடனே வந்துவிடுகிறோம் என்று கூறிய எனது அப்பாவே தான் எனக்கு இங்க போர் அடிக்குதுடா என்றார். எனக்கும் சரி என்று படவே இப்போது அவர் விருப்பபடியே தன் சொந்த ஊரில் சந்தோஷமாக இருக்கிறார்.

    ReplyDelete
  6. ரொம்ப அறுத்துட்டேன்னு புரியுது.//

    இருக்கிறதில இது தாங்க பெஸ்ட் லைன்

    எல்லோருக்கு தேவையான ஒரு நல்ல பதிவு

    ReplyDelete
  7. //ஏன் என்றால் நான் இதை நன்கு அனுபவித்து இருக்கிறேன். இதனால் நான் என் பெற்றோரை குறை சொல்லவில்லை. நான் கேட்ட போது நாங்கள் உன்னுடனே வந்துவிடுகிறோம் என்று கூறிய எனது அப்பாவே தான் எனக்கு இங்க போர் அடிக்குதுடா என்றார். எனக்கும் சரி என்று படவே இப்போது அவர் விருப்பபடியே தன் சொந்த ஊரில் சந்தோஷமாக இருக்கிறார்.//

    பல பெற்றோரும் இப்படித்தான். எங்கள் பெற்றோர் வருவார்கள். இரண்டு அல்லது மூன்று மாதம் எங்களோடு இருப்பாங்க. அப்புறம் ஊருக்கு போயிடுவாங்க. மீண்டும் அடுத்த வருடம் வருவாங்க.
    எப்படியோ எல்லோரும் சந்தோஷமா இருந்தா நல்லதுதான்.

    ReplyDelete
  8. அமைச்சரே குழப்பறீங்களே!

    ரொம்ப அறுத்துட்டேன்னு புரியுது.//

    இருக்கிறதில இது தாங்க பெஸ்ட் லைன் னு சொல்லிட்டு எல்லாருக்கும் தேவையான நல்ல பதிவுன்னு சொல்றீங்களே
    அப்போ இது நல்லபதிவா மொக்கையா?!

    ReplyDelete
  9. இந்த மங்குனி அமைச்சருக்கு அட்வைஸ சொன்னா பாகற்காய் சாப்பிடுவது போல இல்லையா இருக்கும்.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு கவி,
    எல்லா பாயிண்டுக‌ளும் அருமை

    ReplyDelete
  11. நன்றி ஜலீலாக்கா!

    அமைச்சருக்கு அட்வைஸ்னா பாகற்காய் சாபிடுவது போலவா? நாந்தான் தலைப்பிலேயே அட்வைஸ்னு சொல்லமாட்டேன்னு சொல்லிட்டேனே :-)

    ReplyDelete
  12. ////ரொம்ப அறுத்துட்டேன்னு புரியுது.//

    இருக்கிறதில இது தாங்க பெஸ்ட் லைன் //

    அது ஒன்னும் இல்லைங்க இது நம்ம ஸ்டைல் (அதாவது மொக்க )


    //எல்லோருக்கு தேவையான ஒரு நல்ல பதிவு//

    இது உண்மை (சே மங்குனி இதல்லாம் ஒரு பொழப்பா )


    //Jaleela said...
    இந்த மங்குனி அமைச்சருக்கு அட்வைஸ சொன்னா பாகற்காய் சாப்பிடுவது போல இல்லையா இருக்கும்.//

    ஆகா... நீங்க ரெண்டு பேரும் பிரென்ட்சா ...... எஸ்கேப்........................................

    ReplyDelete
  13. சிலர் சிந்திக்க மறக்கும் நினைவு . இந்த அவசர உலகில் ...அவரவர் வசதிப்படி அமைத்து கொள்வதே நன்று.

    ReplyDelete
  14. நல்லாருக்குங்க...சில விசயங்கள் புதுசா இருக்கு...
    யாருக்கு உதவுச்சோ இல்லயோ என்ககு சில விசயங்கள் உபயோகமா இருந்துச்சு...

    அது என்னவிசயம்னுல்லாம் கேட்காதீங்க...:))

    ReplyDelete
  15. ///அன்பா அவர்களை குற்றம் சாட்டாமல் சொல்லிவிட்டால் இருவருக்கும் பிரச்சினை இல்லை. அதை விட்டு மூன்றாம் மனிதரிடம் இதை சொன்னால் அதற்கு கண் காது மூக்கு எல்லாம் முளைத்து உங்கள் பிள்ளைகள் காதை எட்டும். தேவையற்ற மனசங்கடங்கள் உருவாகும்.//

    இதை அனைவரும் புரிந்து நடந்தால் முதியோர் இல்லங்களும் இனி இருக்காது.

    ReplyDelete
  16. புரிஞ்சிடுச்சு அமைச்சரே!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலாமதி.

    நன்றி பிரதாப்! உங்களுக்கு பயன்பட்டதுல சந்தோஷம். எந்த விஷயத்துக்குன்னு கேட்கமாட்டேன். ஓரளவுக்கு யூகித்து விட்டேன் :-)

    //இதை அனைவரும் புரிந்து நடந்தால் முதியோர் இல்லங்களும் இனி இருக்காது.//

    உண்மைதன் ஜெய்லானி. அது சிலருகுப் புரியாமல் போவதுதான் பிரச்சினையே!

    ReplyDelete
  17. தற்சமயத்துல எனக்கு ரொம்பத் தேவையான அட்வைஸ் கவி.. ரொம்ப நன்றி.. மறுபடியும் ஒருக்கா படிச்சுப் பாக்கனும் போன் போடறதுக்கு முன்னால..

    ReplyDelete
  18. நன்றி சந்தனா!

    ReplyDelete
  19. கவிசிவா, திரும்பிப் பார்ப்பதுக்குள் ஜலீலாக்கா மாதிரி மளமளவெனப் பதிவுகள் போட்டுவிட்டீங்கள்.. ஒவ்வொன்றும் அழகாக எழுதுறீங்க... இதில கடைசியில பெரியோருக்கும் புத்திமதி சொல்லிட்டீங்க... கீப் இற் மேல...

    அதுசரி கவிசிவா, எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்... இந்த ஏழுகழுதை வயதென்றால் எத்தனை வயது? நானும் கும்பலில் கோஓஓஓஒவிந்தா கோஓஓஓவிந்தா என பல இடங்களில் சொல்லியுள்ளேன், ஆனால் உண்மையில் அர்த்தம் தெரியாது? நீங்களும் அதிராமாதிரியோ?:) அல்லது தெரிந்து வைத்திருக்கிறீங்களோ....

    சந்து இன்னுமா போன் போடல? ஐ மீன் கீழே???

    ReplyDelete
  20. அதிரா மனதில் தோன்றுவதை எழுதுகிறேன். அவ்வளவுதான்.
    ஏழுகழுதை வயசுன்னா ஏழு கழுதைகளோட வயசுன்னு மட்டும்தான் எனக்கு தெரியும் :-)

    ReplyDelete
  21. ஏழு கழுதை வயசுன்னா அதுஇல்ல தாய்குலமே, ””ஏர் உழ லாயக்கான வயசு”” என்று அர்த்தம்.

    முக்கிய குறிப்பு::: இது போல சந்தேகம் வந்தால் என்னை கேளுங்கள்.

    இப்படிக்கு ,
    வித்தியாசமாக யோசிப்போர் சங்கம்.

    ReplyDelete
  22. அருமையான அட்வைஸ்
    யாரும் மறுக்க முடியாத உதாசீனப்படுத்த முடியாத குறிப்புகள்

    ReplyDelete