Tuesday, 30 March 2010
மில்லியனர் ஆக வேண்டுமா? இதைப் படியுங்க.
இந்தோனேஷிய மொழியை கத்துக்கத்தான் கஷ்டப்பட்டேன்னா இங்க பணத்தை எண்ணுவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன்.என்ன சாமானை வாங்கினாலும் அவன் சொல்லும் விலையைக் கேட்டதும் என் உச்சி மண்டையில "சுர்ர்" ருங்கும். எல்லாமே ஆயிரங்களிலும் லட்சங்களிலும்தான்.
பில் போடற இடத்துல உள்ள ஸ்க்ரீன்ல வர்ற விலையை படிக்கவே கொஞ்ச நேரம் ஆகும். ஆறு இலக்க எண்ணுக்கு குறையாமல் இருக்கும். அதுவேற கமா போடற இடத்துல புள்ளிய வச்சு புள்ளி வைக்கற இடத்துல கமாவைப் போட்டு தொலைச்சிருப்பான். 100,000,000.00ன்னு எழுத வேண்டியதை 100.000.000,00ன்னு எழுதியிருப்பான். லட்சம் கோடின்னு படிச்ச நமக்கு மில்லியன் பில்லியன்னு படிக்க வேற கஷ்டம். நமக்கு ஒண்ணும் விளங்காது.
ஒருவழியா எவ்வளவு பணம்னு படிச்சு டாலரில் எவ்வளவுன்னு கணக்குப் போட்டு அதை நம்ம ஊர் பணத்துக்கு கணக்கு போட்டு அடப்பாவிங்களா இந்த கொள்ளை அடிக்கறீங்களேடான்னு மனசுக்குள்ள திட்டிட்டு அதுக்கப்புறம் பணத்தை எண்ணி கொடுத்துட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். பணத்தை எண்ணவும் திணற வேண்டி வரும்.
பணத்தை எண்றதுல என்ன பிரச்சினை வரும்னு யோசிக்கறீங்களா? பில் 605500ருப்பியா வருதுன்னு வச்சுக்கோங்க. முதலில் 6லட்சத்தை 50000 அல்லது 100000ருப்பியா நோட்டா எடுக்கணும். அப்புறம் அந்த 5000ருப்பியா அப்புறம்500ருப்பியான்னு தேடி எடுத்து கொடுக்கணும். சும்மா 650000கொடுத்துட்டு மீதியை வாங்கி போட்டுக்க வேண்டியதுதானேன்னு கேட்கப்படாது. பின்ன அவன் மீதி 44500ருப்பியாவில் 4500 ருப்பியாவை காயினா கொடுப்பான். அப்புறம் இந்த மாதிரி சில்லறையெல்லாம் சேர்ந்து சேர்ந்து டப்பா டப்பாவா காயின்ஸா இருக்கும். அதை எப்படி செலவளிக்கறது. என்ன இதுக்கே தல சுத்துதா? மில்லியனர் ஆகணும்னா கொஞ்சமாவது கஷ்டப் பட வேண்டாமா?
நம்ம ஊர் ஒரு ரூபாயைக் கொடுத்தால் இங்குள்ள 150ருப்பியா கிடைக்கும். ஆஹா இது ரொம்ப நல்லா இருக்கே 100ரூபாய் எடுத்துட்டுப் போனா நிறைய சாமான் வாங்கலாமேன்னு சரோஜா சாமான் நிக்காலோ ன்னு பொட்டிய தூக்கிட்டு இந்த ஊருக்கு கிளம்பிடப்படாது.
ஒரு குச்சி மிட்டாய் வாங்கணும்னா கூட ஆயிரம் ருப்பியா வேணும். பை நிறைய பணம் கொண்டுபோனா பாக்கெட் நிறைய சாமான் வாங்கலாம். இந்த ஊருல பொட்டிக்கடை வச்சிருக்கறவனும் மில்லியனர்தான். அதனால யாருக்கெல்லாம் மில்லியனர் ஆகணும்னு ஆசை இருக்கோ அவங்க எல்லாம் இந்தோனேசியாக்கு ஓடி வந்துடுங்க. மல்டி மில்லியனர் என்ன பில்லியனரே ஆகலாம் :).
Labels:
இந்தோனேசியா,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு தடவை 500000 ஒரே நோட்டு பாத்துட்டு (இப்பவும் இருக்கு )மயக்கமே வந்தது. கடைசியில் அது துருக்கி நாட்டு பணம். அங்கும் அப்படித்தான் போலிருக்கு.
ReplyDelete//அதனால யாருக்கெல்லாம் மில்லியனர் ஆகணும்னு ஆசை இருக்கோ அவங்க எல்லாம் இந்தோனேசியாக்கு ஓடி வந்துடுங்க. மல்டி மில்லியனர் என்ன //
ReplyDelete:)
என்னயா இது, குழந்தைக்கு இரண்டு ஐம்பது காசுகள் குடுத்து ஏமாற்றுவது போல இருக்கு!
ReplyDeleteஇதற்க்குத்தான் உலகம் முழுவதும் ஒரே பணத்தை கொண்டுவர வேண்டும் என ஆல் இன் ஆல் அழகுராஜா சொல்கிறார் போல.
ஹஹஹ... பண வீழ்ச்சி இப்படி தாறுமாறா இருக்கு...???
ReplyDeleteஅப்ப நீங்களும் ஒரு பில்லேனியர்னு சொல்லுங்க...
உங்களுக்கு வேலை செய்ய வேற நாடே கிடைக்கலையா??? அங்க பூகம்பம், சுனாமி வேற அப்பப்ப வந்து ஹாய் சொல்லிட்டு போகுமே...எப்படி இருக்கீங்க??
//பணத்தை எண்றதுல என்ன பிரச்சினை வரும்னு யோசிக்கறீங்களா? பில் 605500ருப்பியா வருதுன்னு வச்சுக்கோங்க. முதலில் 6லட்சத்தை 50000 அல்லது 100000ருப்பியா நோட்டா எடுக்கணும். அப்புறம் அந்த 5000ருப்பியா அப்புறம்500ருப்பியான்னு தேடி எடுத்து கொடுக்கணும். சும்மா 650000கொடுத்துட்டு மீதியை வாங்கி போட்டுக்க வேண்டியதுதானேன்னு கேட்கப்படாது. பின்ன அவன் மீதி 44500ருப்பியாவில் 4500 ருப்பியாவை காயினா கொடுப்பான். அப்புறம் இந்த மாதிரி சில்லறையெல்லாம் சேர்ந்து சேர்ந்து டப்பா டப்பாவா காயின்ஸா இருக்கும். அதை எப்படி செலவளிக்கறது. என்ன இதுக்கே தல சுத்துதா? மில்லியனர் ஆகணும்னா கொஞ்சமாவது கஷ்டப் பட வேண்டாமா?// ஐயோ கவி கணக்கு படிச்ச எனக்கே இத படித்து புரிஞ்சுக்குறதுக்குள்ள தலை சுத்திடுச்சு...
ReplyDelete//ஆஹா இது ரொம்ப நல்லா இருக்கே 100ரூபாய் எடுத்துட்டுப் போனா நிறைய சாமான் வாங்கலாமேன்னு சரோஜா சாமான் நிக்காலோ ன்னு பொட்டிய தூக்கிட்டு இந்த ஊருக்கு கிளம்பிடப்படாது.
ReplyDeleteஒரு குச்சி மிட்டாய் வாங்கணும்னா கூட ஆயிரம் ருப்பியா வேணும். //
:))))))))))
ஹா ஹா ஹா
குச்சிமிட்டாய்ம் குருவி ரொட்டியும் கூடவா அங்க கிடைக்குது?
;)
நல்ல கதையாயிருக்கு.
ReplyDeleteஎனக்கு ஒரு ருப்பியா மட்டும்
அனுப்பி வைங்களேன்.
(கரன்சி நோட்)
// ஜெய்லானி said...
ReplyDeleteஒரு தடவை 500000 ஒரே நோட்டு பாத்துட்டு (இப்பவும் இருக்கு )மயக்கமே வந்தது. கடைசியில் அது துருக்கி நாட்டு பணம். அங்கும் அப்படித்தான் போலிருக்கு.//
இந்த மாதிரி நிறைய நாடுகள் இருக்கு போல இருக்குது :(
வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்
ReplyDelete@ karmegaraja said...
ReplyDeleteஎன்னயா இது, குழந்தைக்கு இரண்டு ஐம்பது காசுகள் குடுத்து ஏமாற்றுவது போல இருக்கு!
இதற்க்குத்தான் உலகம் முழுவதும் ஒரே பணத்தை கொண்டுவர வேண்டும் என ஆல் இன் ஆல் அழகுராஜா சொல்கிறார் போல.
வருகைக்கு நன்றி கார்மேகராஜா.
உலகம் பூரா ஒரே கரன்சியா... நடக்கும்ங்கறீங்க?!
@ நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஹஹஹ... பண வீழ்ச்சி இப்படி தாறுமாறா இருக்கு...???
அப்ப நீங்களும் ஒரு பில்லேனியர்னு சொல்லுங்க...
அப்படித்தான் சொல்லிக்கறோம் :)
//உங்களுக்கு வேலை செய்ய வேற நாடே கிடைக்கலையா??? அங்க பூகம்பம், சுனாமி வேற அப்பப்ப வந்து ஹாய் சொல்லிட்டு போகுமே...எப்படி இருக்கீங்க??//
எங்க வூட்டுக்காரர்கிட்ட முதல்ல இதத்தான் கேட்டேன். ஆனா டாலர்ல சம்பளம் வாங்கி ருப்பியாவுல செலவளிக்கர சுகமே தனின்னு இப்பதான் புரியுது :). ஒரு சிங்கப்பூர் டாலர் கொடுத்தா இன்னிக்கு நிலவரப்படி 6500ருப்பியா கிடைக்குமே!
இந்த சுனாமி பூகம்பம் எல்லாம் நாங்க இருக்கற தீவுல இல்லை. சுகமான சவுகரியமான வாழ்க்கை.
@ Mrs.Menagasathia said...
ReplyDeleteஐயோ கவி கணக்கு படிச்ச எனக்கே இத படித்து புரிஞ்சுக்குறதுக்குள்ள தலை சுத்திடுச்சு...
இப்போ பழகிடுச்சு மேனகா
@ பிரியமுடன்...வசந்த் said...
ReplyDelete//ஆஹா இது ரொம்ப நல்லா இருக்கே 100ரூபாய் எடுத்துட்டுப் போனா நிறைய சாமான் வாங்கலாமேன்னு சரோஜா சாமான் நிக்காலோ ன்னு பொட்டிய தூக்கிட்டு இந்த ஊருக்கு கிளம்பிடப்படாது.
ஒரு குச்சி மிட்டாய் வாங்கணும்னா கூட ஆயிரம் ருப்பியா வேணும். //
:))))))))))
ஹா ஹா ஹா
குச்சிமிட்டாய்ம் குருவி ரொட்டியும் கூடவா அங்க கிடைக்குது?
;)
குச்சி மிட்டாய் கிடைக்கும் குருவி ரொட்டி கிடைக்காது :(
@ NIZAMUDEEN said...
ReplyDeleteநல்ல கதையாயிருக்கு.
எனக்கு ஒரு ருப்பியா மட்டும்
அனுப்பி வைங்களேன்.
(கரன்சி நோட்)
ஒரு ருப்பியாவா?! இங்க குறைந்த பட்ச காசே 50ருப்பியா(25ருப்பியாவும் இருக்குதுன்னு சொல்றாங்க என் கண்ணில் பட்டதில்லை). 50ருப்பியா காயின் நம்மூர் 10பைசா(இப்போ இருக்கா) சைசில் இருக்கும்
கண்ணை கட்டுது...
ReplyDelete//பணத்தை எண்றதுல என்ன பிரச்சினை வரும்னு யோசிக்கறீங்களா? பில் 605500ருப்பியா வருதுன்னு வச்சுக்கோங்க. முதலில் 6லட்சத்தை 50000 அல்லது 100000ருப்பியா நோட்டா எடுக்கணும். அப்புறம் அந்த 5000ருப்பியா அப்புறம்500ருப்பியான்னு தேடி எடுத்து கொடுக்கணும். சும்மா 650000கொடுத்துட்டு மீதியை வாங்கி போட்டுக்க வேண்டியதுதானேன்னு கேட்கப்படாது. பின்ன அவன் மீதி 44500ருப்பியாவில் 4500 ருப்பியாவை காயினா கொடுப்பான். அப்புறம் இந்த மாதிரி சில்லறையெல்லாம் சேர்ந்து சேர்ந்து டப்பா டப்பாவா காயின்ஸா இருக்கும். அதை எப்படி செலவளிக்கறது. என்ன இதுக்கே தல சுத்துதா? மில்லியனர் ஆகணும்னா கொஞ்சமாவது கஷ்டப் பட வேண்டாமா?
ReplyDelete//
கவி எனக்கு ரொம்ப தல சுத்துது,எனக்கு ரொம்ப வேணாம் 10 ருபியா போதும்..
இன்னும் கொஞ்சம் டீடைலா சொல்லுங்களேன் . (டே மங்கு ஒரு வாரம் லீவ போட்டு எஸ்கேப் ஆகிடு , மத்த ப்ளாக்கர்ஸ் சாவட்டும் )
ReplyDeleteஇந்தோனேஷியா ரூபியா பற்றிய தகவலே போதும்,அவங்க பணத்தை எண்ணுவதில் தான் அதிகம் நேரம் செலவழிப்பாங்க போல் தெரியுது.
ReplyDeleteஅம்மாடியோ எனக்கு அந்த ஆசை கொஞ்சங்கூட இல்லை இல்லை இல்லவேயில்லை கவி..
ReplyDelete// ஜெரி ஈசானந்தன். said...
ReplyDeleteகண்ணை கட்டுது...//
:))
// Jaleela said...
ReplyDeleteகவி எனக்கு ரொம்ப தல சுத்துது,எனக்கு ரொம்ப வேணாம் 10 ருபியா போதும்..
ஹா ஹா... அக்கா இங்க 10ருப்பியால்லாம் கிடையாது. நாங்க ஆயிரங்களிலும் லட்சங்களிலும்தான் பேசுவோம் :)
// மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் டீடைலா சொல்லுங்களேன் . (டே மங்கு ஒரு வாரம் லீவ போட்டு எஸ்கேப் ஆகிடு , மத்த ப்ளாக்கர்ஸ் சாவட்டும் )//
என்னா வில்லத்தனம்...
// asiya omar said...
ReplyDeleteஇந்தோனேஷியா ரூபியா பற்றிய தகவலே போதும்,அவங்க பணத்தை எண்ணுவதில் தான் அதிகம் நேரம் செலவழிப்பாங்க போல் தெரியுது.//
அது என்னமோ உண்மைதான் ஆசியா. வெட் மார்க்கெட் போனா அங்குள்ள வியாபாரிங்க கல்லாப்பொட்டிக்கு பதிலா பெரிய பக்கெட்டை கயிறு கட்டி தொங்க விட்டுருப்பாங்க.
// அன்புடன் மலிக்கா said...
ReplyDeleteஅம்மாடியோ எனக்கு அந்த ஆசை கொஞ்சங்கூட இல்லை இல்லை இல்லவேயில்லை கவி..//
அப்படீல்லாம் சொல்லக் கூடாது மலிக்கா. இங்க 100அமெரிக்க டாலரோடு வந்தாலே போது நாம மில்லியனர் ஆகிடலாம் :)
வீட்ல பெட்டிபெட்டியா பணம் வச்சிருப்பாங்கபோலயே...
ReplyDeleteஇந்தோனேஷியாவுக்கு இன்னிக்கே டிக்கெட் எடுத்துரவேண்டியதுதான் :)
கவி சூப்பர் ஐடியா கொடுத்துட்டீங்க.ஜனத்திரள் பார்டத்து இந்தோனிஷியா எம்பசி திணறப்போகிறது.ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள மளாவி என்ற நாட்டிலும் இப்படித்தான்.
ReplyDelete// சுந்தரா said...
ReplyDeleteவீட்ல பெட்டிபெட்டியா பணம் வச்சிருப்பாங்கபோலயே...
இந்தோனேஷியாவுக்கு இன்னிக்கே டிக்கெட் எடுத்துரவேண்டியதுதான் :)
வாங்க சுந்தரா! வரும் போது பெரிய பர்ஸ் எடுத்துக்கோங்க. இல்லேன்னா பணம் வைக்க இடம் இருக்காது :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தரா
// ஸாதிகா said...
ReplyDeleteகவி சூப்பர் ஐடியா கொடுத்துட்டீங்க.ஜனத்திரள் பார்டத்து இந்தோனிஷியா எம்பசி திணறப்போகிறது.ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள மளாவி என்ற நாட்டிலும் இப்படித்தான்.//
ஹா ஹா சாதிகா அக்கா அப்போ எங்க ஊரைப் போல இன்னும் நெறையா நாடும் இருக்குதுங்கறீங்க.
இந்தோனேசியாக்கு டூரிஸ்டா வரதுக்கு இந்தியர்களுக்கு விசா இங்கே வந்தே எடுத்துக்கலாம். எம்பசி போய் காத்துக் கிடக்க வேண்டாம்.
கணக்கப் பாத்தா எனக்கும் தல சுத்துது :)) ஹாஹ்ஹா..
ReplyDeleteநானும் இங்கத்த நாலணா, பத்து பைசா, ஒரு பைசா அஞ்சு பைசா - இதெல்லாத்தையும் தேடித் தடவி தான் எண்ணுவேன்.. :))
எனக்கும்தான் கவிசிவா தலை சுத்துது கணக்குப் பார்த்ததில. ஆனாலும் ஒரு கதை நினைவுக்கு வந்துவிட்டது.
ReplyDeleteஒருவர் உப்படியான பண நோட்டுப் புழக்கமான நாட்டிலிருந்து வந்து சொன்னார்... இங்கெல்லாம் ஆயிரக்கணக்கில்தானே சம்பளம் கொடுக்கிறார்கள் எங்கள் நாட்டில் நாங்கள் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்குகிறோம் என:)... அவருக்கு அப்படி ஒரு பெருமையாக இருக்கு.
நன்றி ஜெய்லானி. இதோ வந்து வாங்கிக்கறேன் :)
ReplyDeleteஇந்தோனேஷியா ரூபியா பற்றிய தகவலே போதும்
ReplyDeleteஇந்தியாவை நேசியா ன்னு நமக்கு உணர்த்திக்கொண்டிருக்க.....
goma said...
ReplyDeleteஇந்தோனேஷியா ரூபியா பற்றிய தகவலே போதும்
இந்தியாவை நேசியா ன்னு நமக்கு உணர்த்திக்கொண்டிருக்க
ஹி...ஹி