Monday, 8 March 2010

புதிய சட்டசபைக் கட்டிடம்

மார்ச் 13ம் தேதி தமிழ்நாட்டின் புதிய சட்டசபைக்கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது. எல்லாரும் சாமியார் பின்னாடி ஓடுனதுல இந்த செய்தி அடிபட்டு விட்டது.

செய்தி இதுதான்... சட்டசபைக்கட்டிடத்தின் மேற்கூரை குறிப்பிட்ட 13ம்தேதிக்குள் கட்ட முடியாதாம். அதனால் 2கோடி ரூபாய் செலவில் சினிமா செட்டிங் போல சட்ட சபையின் மேற்கூரை அமைக்கப்படுகிறதாம். எவன் அப்பன் வீட்டுப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறது?அப்படி 13ம் தேதியே திறந்தாக வேண்டும் என்ற கட்டாயம்தான் என்ன? வேலைகள் முடியும் வரைப் பொறுத்தால் என்ன?

பல லட்சம் மக்கள் வீடின்றி நடுரோட்டில் உறங்கும் போது இந்த 2கோடி ரூபாய் வீண்செலவு அவசியமா? நாட்டில் வேறு எந்த பிரச்சினைகளுமே இல்லாமல் பாலாறும் தேனாறும் ஓடுகிறது. அரண்மனை தர்பாரில் பாராட்டுக்கூட்டங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தி ரசிக்க வேண்டுமே! அதற்கு தற்போதுள்ள அரண்மனையில் வசதி இல்லையே. மனசு குமுறுது. இவனுங்களை கேட்க யாருமே இல்லையா!

இதையெல்லாம் கேள்விகேட்க வேண்டிய பொறுப்பிலுள்ளவர்களோ காலவரையற்ற ஓய்வில்...அறிக்கை விடுவதோடு அவரது வேலை முடிந்துவிட்டது. கொடநாடுதான் தமிழ்நாடுன்னு முடிவு பண்ணிட்டார் போல!

எல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி. பாதிபேர் ஒட்டுப் போடவே போக மாட்டான். பலர் காசுக்கு வோட்டு என்ற கொள்கையுடையவர்கள். அப்புறம் எப்படி இவனுங்களை கேள்வி கேட்க முடியும். அனுபவி ராஜா அனுபவி!

பின்குறிப்பு: நான் எந்தக்கட்சி ஆதரவாளனும் இல்லை. நாங்க வெறும் சோத்துக் கட்சிதான்:-)

29 comments:

 1. ஆஃப்ட்ரால் 2 கோடிக்கே இம்புட்டு கோவமா?

  தெரியாத பல கோடியிருக்கு மேடம்...

  நம்மளுக்கு எல்லாம் வெறும்கோடித்துணி மட்டும் தெரியும்

  ReplyDelete
 2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதெப்போ நடந்துச்சு? இன்னமும் எதையும் படிக்கல.. படிச்சிட்டு மறுபடியும் எழுதறேன்..

  ReplyDelete
 3. ஒரே ஒரு டவுட்.. கோச்சுக்கப்படாது.. அந்தக் கவிசிவா தானே நீங்க?

  ReplyDelete
 4. இது போல் ஒராயிரம் குமுறல்கள் சத்தமில்லாமல் தமிழ்நாட்டில் தினமும் ஒலித்து கொண்டிருக்கிறது

  எப்பொழுது muteஐ எடுப்பார்களோ தெரியாது ...ம்ஹூம் (பெருமூச்சு)

  நன்றி
  ஜேகே

  ReplyDelete
 5. கவி எந்த கட்சியாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்லிட்டீங்க.

  ReplyDelete
 6. // பிரியமுடன்...வசந்த் said...
  ஆஃப்ட்ரால் 2 கோடிக்கே இம்புட்டு கோவமா?

  தெரியாத பல கோடியிருக்கு மேடம்...

  நம்மளுக்கு எல்லாம் வெறும்கோடித்துணி மட்டும் தெரியும்//

  இந்த ரெண்டு கோடிய எழுதினதுக்கே எத்தனைபேர்கிட்ட அடி வாங்கப்போறேன்னு தெரியலை. மீதி உள்ள கோடிகளையும் எழுதினா தலமறைவு வாழ்க்கைதான் வாழணும். நாட்டு நெலமை அப்படி :-(

  ReplyDelete
 7. எல் போர்ட் சந்தனா அந்த கவிசிவாதான் இந்த கவிசிவா. சந்தேகமே வேண்டாம். எல்லாத்தையும் படிச்சுட்டு சொல்லுங்க

  ReplyDelete
 8. // இன்றைய கவிதை said...
  இது போல் ஒராயிரம் குமுறல்கள் சத்தமில்லாமல் தமிழ்நாட்டில் தினமும் ஒலித்து கொண்டிருக்கிறது

  எப்பொழுது muteஐ எடுப்பார்களோ தெரியாது ...ம்ஹூம் (பெருமூச்சு)

  நன்றி
  ஜேகே//

  டிவியை உடைத்தால் muteஐ எடுத்துடலாம்.

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜேகே

  ReplyDelete
 9. நன்றி ஆசியா! ஆனா எல்லா உண்மைகளையும் சொல்ல பயமாத்தான் இருக்கு :-(

  ReplyDelete
 10. //செய்தி இதுதான்... சட்டசபைக்கட்டிடத்தின் மேற்கூரை குறிப்பிட்ட 13ம்தேதிக்குள் கட்ட முடியாதாம். அதனால் 2கோடி ரூபாய் செலவில் சினிமா செட்டிங் போல சட்ட சபையின் மேற்கூரை அமைக்கப்படுகிறதாம்.//
  ஆகா நீங்க வெளிநாடுன்களா இவ்வளவு ரோசப்படுரிங்க?
  பிசாத்து ரெண்டு கோடி , அவுக மொத்த குடும்ப சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?
  சில ஆயிரம் கோடிகள், எல்லாம் யாரு வீட்டு காசு ?
  இந்தியாவுல பொறந்திட்டா இப்படியெல்லாம் ரோசபடகூடாது , அப்புறம் வீட்டுக்கு ஆட்டோ வரும்

  ReplyDelete
 11. என்னதான் கரடியா கத்துங்க..ஓடி ஓடி போய் ஓட்டுப்போடும் மகா மன்னர்களுக்கு எருமை மாட்டின் மீது பெய்த மழைதான்.உரைக்காது..புரியாது..அப்பா,மகன்,பேரன்,அண்ணன்மகன் மகள்,மாமன்,மச்சான் எல்லோரும் ஆட்சிக்கோலை தூக்கி கொள்ள வழி வகுத்துக்கொடுப்பார்கள்.

  ReplyDelete
 12. என்ன இவ்ளோ சூடா இருக்கீ்ங்க... நம்ம மக்களுக்கு என்ன சொன்னாலும் உரைக்காதுங்க. என்னப்பண்ண??? அடுத்த தேர்தலுக்கு யாரும் ஓட்டுப்போடக்கூடாதுன்ன வீட்டுலசொல்லி வச்சுருக்கேன். நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதுதான் இருந்தாலும் எவனோ திங்கறதுக்கு நாம ஏன் ஒட்டுப்போடனும்...?

  ReplyDelete
 13. அமைச்சரே இப்படி நம்ம மக்கள் இலவசத்துகாக மானம் கெட்டு ரோசம் கெட்டுப்போனதுனாலதான அவனுங்களால இம்புட்டு கோடிக்கு சொத்து சேர்க்க முடிஞ்சுது. இனியும் எரும மாட்டு மேல மழை பெய்ஞ்சது போல இருந்தோம்னா தமிழ்நாட்டையே ஆட்டைய போட்டுடுவானுங்க! இப்பவே ஆட்டைய போட்டாச்சேங்கறீங்களா?!

  ReplyDelete
 14. சாதிகாக்கா நீங்க சொல்றதும் உண்மைதான். நம்ம மக்கள் எருமைகளாக மாறி பல காலம் ஆயிடுச்சு.

  ReplyDelete
 15. // நாஞ்சில் பிரதாப் said...
  என்ன இவ்ளோ சூடா இருக்கீ்ங்க... நம்ம மக்களுக்கு என்ன சொன்னாலும் உரைக்காதுங்க. என்னப்பண்ண??? அடுத்த தேர்தலுக்கு யாரும் ஓட்டுப்போடக்கூடாதுன்ன வீட்டுலசொல்லி வச்சுருக்கேன். நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதுதான் இருந்தாலும் எவனோ திங்கறதுக்கு நாம ஏன் ஒட்டுப்போடனும்...?//

  தினம் தினம் நாட்டுல நடக்கறத பார்க்கும் போது அவ்வளவு ஆத்திரம் வருதுங்க.
  கட்சி சாராத நடுநிலையான மக்கள் விரக்தியில் ஒட்டுப்போடப் போகாம இருக்கணும்ங்கறது தான் அவனுங்க ஆசை. அப்பத்தானே ரொம்ப ஈசியா கள்ள வோட்டு போட முடியும். அதனால கண்டிப்பா ஓட்டுப் போட போகணும். நிக்கற எவனும் யோக்கியன் இல்லேன்னா செல்லாத ஓட்டா ஆக்கிடணும்.
  இப்போ மெஷின்ங்கறதால எப்படி செல்லாத ஓட்டாக்கணும்னு எனக்கு தெரியலை. எப்படியும் சுயேச்சைகளும் நிற்பார்கள். அவர்களுக்கு போட்டு விடலாம். இல்லேன்னா ரெண்டு மூணு பட்டனை ஒரே நேரத்தில் சேர்த்து அமுக்கிட்டு வந்துடலாம். தப்பித்தவறி கூட இந்த கட்சிகளின் சின்னத்துக்கு நேரே விரல் பட்டுடக் கூடாது.

  தேர்தல் நேரத்தில் இந்தியாவில் இருந்தால் கண்டிப்பாக வோட்டுப் போட போவேன். செல்லாத ஓட்டாக்கிவிட்டுதான் வருவேன். முன்னாடியும் அப்படித்தான் செய்திருக்கிறேன்.

  ReplyDelete
 16. நல்லா கேட்டீங்க...
  இப்படியே எல்லாரும் கேக்குறதோட நிப்பாட்டிட்டு வோட்டு போடும் போது யோசிச்சாங்கனா போதும்.

  ReplyDelete
 17. // டக்கால்டி said...
  நல்லா கேட்டீங்க...
  இப்படியே எல்லாரும் கேக்குறதோட நிப்பாட்டிட்டு வோட்டு போடும் போது யோசிச்சாங்கனா போதும்.//

  அங்கதானே பிரச்சினையே! வாங்கின காசுக்கு விசுவாசத்தோட நச்சுன்னு குத்திட்டு வந்துடறாங்களே!

  எல்லார்கிட்டயும் நான் சொல்றது ஒண்ணே ஒன்னுதான். கட்சிக்காரன் காசு கொடுக்கறானா... கூச்சப்படாம வாங்கிகோங்க. ஏன்னா அது நம்மக்கிட்ட இருந்து அடிச்ச பணம்தான். ஆனா வாக்குச்சாவடிக்குப் போகும் போடு நல்லா யோசிச்சு ஓட்டுப் தகுதியானவனுக்கு ஓட்டுப் போடுங்கன்னுதான். எவனுமே லாயக்கில்லையா செல்லாத ஓட்டாக்கிடுங்க. விழற ஓட்டுல பாதிக்கு மேல செல்லாத ஓட்டுன்னு வையுங்க அப்போ தேர்தல் ஆனையமும் முழிச்சுக்கும். கட்சிகளும் பொறுப்பானவனை நிறுத்தும். எல்லாம் என் எதிர்பார்ப்புதான்.

  ReplyDelete
 18. என்ன சொன்னாலும் எ மா ம தான். இருந்தாலும் சொல்வதை சொல்லிடுவோம் இல்ல கவி..

  நல்லா சொல்லியிருக்கீங்க!

  வந்துபோங்க நம்ம பக்கமும்..

  ReplyDelete
 19. நன்றி மலிக்கா!

  ReplyDelete
 20. //தேர்தல் நேரத்தில் இந்தியாவில் இருந்தால் கண்டிப்பாக வோட்டுப் போட போவேன். செல்லாத ரஓட்டாக்கிவிட்டுதான் வருவேன். முன்னாடியும் அப்படித்தான் செய்திருக்கிறேன்//

  எல்லாரும் நல்லகேட்டுக்கோங்கப்பா...நாகர்கோவில் தொகுதில செல்லாத ஓட்டுபோட்டவங்க இவங்கதான்... அவங்களே ஒப்புதல் வாக்குமுலம் கொடுத்துத்தட்டாங்க.

  இதுக்கு நானே பரவாயில்ல...இதுக்கு ஓட்டுப்போடபோகாமலே இருந்திருக்கலாம்:))

  ReplyDelete
 21. நாஞ்சிலாரே எங்களை மாதிரி ஆட்களுக்காக "வாக்களிக்க விருப்பமில்லை" அப்படீன்னு ஒரு ஆப்ஷனும் இனிமேல் அந்த மெஷினில் வைக்கப் போறாங்களாம்(எப்போன்னு கேட்கப்படாது குறைந்தபட்சம் ஒரு 20 ஆண்டுகள் ஆகலாம்) உங்களை மாதிரி ஆட்களை தூக்கி உள்ளப்போடலாம்னும் இருக்கங்களாம். பார்த்து தம்பி கம்பி எண்ண வச்சிடப் போறாய்ங்க :-)

  ReplyDelete
 22. //அடுத்த தேர்தலுக்கு யாரும் ஓட்டுப்போடக்கூடாதுன்ன வீட்டுலசொல்லி வச்சுருக்கேன். நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதுதான் இருந்தாலும் எவனோ திங்கறதுக்கு நாம ஏன் ஒட்டுப்போடனும்...?//உண்மைதான் .ஓட்டுப்போடப் போகும் பொழுது செலவு செய்யும் நேரத்தை ரெண்டு பதிவை வலைப்பூவில் போட்டாலும் கொஞ்சம் ஓட்டும்,கொஞ்சம் பின்னூட்டமும் வரும்.

  ReplyDelete
 23. அடப்பாவியளா..

  நல்லா எழுதறீங்க கவி.. மேலே வையுங்கோ..

  ReplyDelete
 24. நன்றி சந்தனா! மேலே வச்சுட்டேன் :-)

  ReplyDelete
 25. கவி கூல்டவுண்....

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதெப்போ நடந்துச்சு? இன்னமும் எதையும் படிக்கல.. படிச்சிட்டு மறுபடியும் எழுதறேன்..// சந்து!! நன்றாகவே சிரித்திட்டேன்... ஏதோ இந்தியாவுக்கு உடனேயே பிளேன் எடுத்துப்போய் பேசப்போறீங்களோ என நினைச்சுட்டேன்...:).

  ReplyDelete
 26. உண்மைதான் .ஓட்டுப்போடப் போகும் பொழுது செலவு செய்யும் நேரத்தை ரெண்டு பதிவை வலைப்பூவில் போட்டாலும் கொஞ்சம் ஓட்டும்,கொஞ்சம் பின்னூட்டமும் வரும்./// சாதிகா அக்கா... பின்னால சங்கிலியும் வரும்:):)... பார்த்துப்பேசுங்கோஓஓஓஓஓஓஒ

  ReplyDelete
 27. கவி நீங்க லேட் ,என்னுடையது இதை படித்துவிட்டு பதில் சொல்லுங்க , உங்க கோபம் பீப்பியா மாறும்..http://kjailani.blogspot.com/2010/01/blog-post_16.html

  ReplyDelete
 28. //கவி நீங்க லேட் ,என்னுடையது இதை படித்துவிட்டு பதில் சொல்லுங்க , உங்க கோபம் பீப்பியா மாறும்//

  உங்களோடதும் படிச்சுட்டேங்க ஜெய்லானி. ஊருக்கு போக ப்லான் இருக்கு. அப்புறம் வீட்டுக்கு ஆட்டோ வந்துடப்போகுதுன்னு பயமா இருக்கு :(. தினம் தினம் நாட்டு நடப்பை படிக்கும் போது பிபி தலைக்கு ஏறுது. யாரைச் சொல்லி என்ன செய்ய.

  ReplyDelete
 29. அவ்வளவு பணம் போட்டு கட்டிய கட்டிடம்
  பார்ப்பதற்கு ....ரயில் நிலையத்தில் ஆயில் டேங்,தண்ணீர் டேங் மாதிதான் தெரிகிறது.

  ReplyDelete