இன்று பதிவுலகின் ஹாட் டாப்பிக் நித்யானந்தா! எல்லாம் அடுத்த வேறு ஏதாவது நியூஸ் வர்ற வரைக்கும்தான். அப்புறம் இந்த நித்யானந்தாவை நாமும் மறந்து விடுவோம். வெளிப்படுத்திய ஊடகமும் மறந்து விடும். இப்போது வழக்கு பதிந்துள்ள காவல்துறையும் சிலநாட்களில் இதை மூலையில் போட்டு விடும் வழக்கம் போல. கொஞ்ச நாளில் இன்னொரு ஏதோவானந்தா வந்து விடுவான்.
மக்களும் அவன் பின்னால் பக்தி என்ற பெயரில் ஓடுவார்கள். ஏதேனும் பத்திரிக்கையில் அவனது ஆன்மீக உரைகள் வெளிவரும். நாமும் விழுந்து விழுந்து படிப்போம். கொஞ்ச நாளில் அவன் முகத்திரையும் கிழியும். இப்போது கொண்டாடியவர்கள் அப்போது அவன் படத்தை செருப்பால் அடிப்பார்கள். உருவ பொம்மை கொழுத்துவார்கள். அத்தோடு அடுத்த சீரியலில் மூழ்கிவிடுவார்கள்.
இப்படி எத்தனை போலிச்சமியார்களிடமும் ஃபைனான்ஸ் நிறுவனங்களிடமும் ஏமாந்தாலும் நாங்கள் ஏமாறப் பிறந்தவர்கள் என்ற சபதம் கொண்டவர்களாக மீண்டும் மீண்டும் ஏமாறுவார்கள். கண்ணீர் மல்க பேட்டி கொடுப்பார்கள். கொந்தளிப்பார்கள்
பேராசையும் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் இருக்கும் வரை இப்படிப்பட்ட போலிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேதான் இருப்பர்கள். நம்மிடையே விழிப்புணர்வு இல்லாதவரை இவனைப்போன்றவர்களை தடுப்பது சிரமம்தான்
அது எங்க! நம்மக்கிட்ட விழிப்புணர்வு வர வுட்டுடுவாங்களா நம்ம பாழாப்போன அரசியல்வியாதிகள். எல்லாவற்றையும் இலவசமா கொடுத்து ஒரு டிவி பொட்டியையும் கொடுத்து அது முன்னாடியே சிந்திக்க விடாம கட்டிப் போட்டுருக்கானுங்களே! அப்புறம் எங்க இருந்து விழிப்புணர்வு முழிப்புணர்வு எல்லாம்!
பிட்ஸ்: நம்மூரு சாமியாருங்க இந்தோனேசியாவிலும் வேலையை காட்டிட்டதா ஒரு செய்தி! யோகா சொல்லிக் கொடுக்க வந்தாராம். வந்த இடத்தில் வேலையை காட்டிட்டாராம். இப்போ விசாரணை நடக்கிறதாம்.
ஏதோவானந்தா பெயர் நல்ல இருக்கே,எப்படியோ ஏமாறுகிறவர்கள் இருக்கும் வ்ரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
ReplyDeleteசென்ற இடுகையில் கருத்து சொல்ல முடியலை,என்னன்னு பாருங்க கவி.
ReplyDeleteஎன்னது இந்தோனேசியா வரைக்கும் வந்துட்டானுங்களா--??? அப்ப ஏமாளிங்க உலகம் முழுவதும் இருக்கானுங்கன்னு சொல்லுங்க...
ReplyDeleteதமிழ்மணத்துல இணைக்கலையா?
தமிழிஷ் ஓட்டுப்பட்டை மட்டும் போட்டீங்க...இணைக்கறது யாரு???
நான் இணைச்சு முதல் ஓட்டையும் போட்டேன்...
அக்கவுண்ட் நம்பர் தரவா???
Idhula enga arasial viyaadhigal ulla vandhaanga.. Vaalkai muluvadhum yaar melayaavadhu pali pottae vaala palagittom illa!!!!!
ReplyDelete// asiya omar said...
ReplyDeleteஏதோவானந்தா பெயர் நல்ல இருக்கே,எப்படியோ ஏமாறுகிறவர்கள் இருக்கும் வ்ரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.//
ஏமாறாதே ஏமாற்றாதே ன்னு நல்லா பாட்டு மட்டும் பாடுவோம். ஆனா கரெக்டா ஏமாந்துடுவோம்ல!
//சென்ற இடுகையில் கருத்து சொல்ல முடியலை,என்னன்னு பாருங்க கவி.//
எல்லாம் சரியாத்தானே இருக்கு ஆசியா. என்ன பிரச்சினைன்னு தெரியலியே!
// நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஎன்னது இந்தோனேசியா வரைக்கும் வந்துட்டானுங்களா--??? அப்ப ஏமாளிங்க உலகம் முழுவதும் இருக்கானுங்கன்னு சொல்லுங்க...
தமிழ்மணத்துல இணைக்கலையா?
தமிழிஷ் ஓட்டுப்பட்டை மட்டும் போட்டீங்க...இணைக்கறது யாரு???
நான் இணைச்சு முதல் ஓட்டையும் போட்டேன்...
அக்கவுண்ட் நம்பர் தரவா???//
ஏமாறுரவன் இருக்கற வரைக்கும்தானே ஏமாற்றுபவர்கள் இருக்க முடியும்.
இந்த பதிவு போடும்போது தமிழிஷ் ஓட்டுப்பட்டையில் ஏதோ பிரச்சினை. என் பக்கத்தில் அது வரவேஇல்லை. காணாம் போயிடுச்சு. இப்ப ஓப்பன் பண்ணினா மறுபடியும் இருக்கு.
எப்படியோ தம்பி நீங்க இணைச்சுட்டீங்கள்ல நன்றி!
// nigdyn said...
ReplyDeleteIdhula enga arasial viyaadhigal ulla vandhaanga.. Vaalkai muluvadhum yaar melayaavadhu pali pottae vaala palagittom illa!!!!!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என்னங்க எந்த ஊருல இருக்கீங்க? நம்ப ஊர்ல அரசியல் வியாதி இல்லாத ஒரு இடம் உண்டா? சுடுகாட்டைக் கூட விட்டு வைக்காதவனுங்க.
பிரேமானந்தா ஆரம்பிச்சு எத்தனை போலிச்சாமியாரைப் பார்த்தாச்சு. இவனுங்களை அடக்க அரசு ஏதாவது பண்ணுச்சு? எத்தனை டுபாக்கூர் ஃபைனான்சுகளைப் பார்த்தாச்சு. அவனுங்களை அடக்க ஏதாச்சும் செஞ்சானுங்க?
எல்லாரும் வேண்டியவங்கதானே?
ReplyDeleteஇதையே தானுங்க நானும் சொல்லியிருக்கேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாமலையாரே!
ReplyDeleteநன்றி "டக்கால்டி". இப்பதான் உங்க பதிவையும் படிச்சேன். புத்திசாலிகள் ஒரே மாதிரிதான் சிந்திப்பாங்க :-)
ReplyDelete//எளிதில் அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் இருக்கும் வரை இப்படிப்பட்ட போலிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேதான் இருப்பர்கள்//
ReplyDeleteசரியான கருத்து...!
இங்க இன்னும் ஒரு ரவுடி ஜீப்ல ஏறிட்டாங்கடா சாமீய்ய்..
எல்லா போஸ்ட்டும் நேத்தே படிச்சுட்டேங்க இன்னிக்கு லீவ் எல்லாத்துக்கும் இன்னிக்கு கமெண்ட் போடறேன் சரியா?
ReplyDeleteநன்றி வசந்த்!
ReplyDelete//இங்க இன்னும் ஒரு ரவுடி ஜீப்ல ஏறிட்டாங்கடா சாமீய்ய்..//
யாருங்க அந்த ரவுடி? சத்தியமா நான் இல்லீங்கோ!
//நம்மூரு சாமியாருங்க இந்தோனேசியாவிலும் வேலையை காட்டிட்டதா ஒரு செய்தி! யோகா சொல்லிக் கொடுக்க வந்தாராம். வந்த இடத்தில் வேலையை காட்டிட்டாராம்//
ReplyDeleteஅட!! அந்த படத்தையும் சன் டீவீ போடாம இருக்கனும்.
// ஜெய்லானி said...
ReplyDelete//நம்மூரு சாமியாருங்க இந்தோனேசியாவிலும் வேலையை காட்டிட்டதா ஒரு செய்தி! யோகா சொல்லிக் கொடுக்க வந்தாராம். வந்த இடத்தில் வேலையை காட்டிட்டாராம்//
அட!! அந்த படத்தையும் சன் டீவீ போடாம இருக்கனும்.//
வராது தைரியமா இருங்கோ! இனி விசாரணை முடியு வரை அதைப்பற்றிய எந்த நியூசும் இங்கே வெளிவராது
///கொஞ்ச நாளில் இன்னொரு ஏதோவானந்தா வந்து விடுவான்.///மிக உண்மை கவி.இன்னும் 3 அல்லது 6 மாதத்தில் மீண்டும் ஒரு ந்தா...தோன்றி வண்டவாளம் தண்டவாள்ம் ஏறும்.ஏமாறுவதற்கு சிலர்,அதனை எல்லாம் படித்து பார்த்து சிரிக்க நம்மைப்போல் பலர்.
ReplyDelete"ஏதோவானந்தா" அடுத்த சுவாமிக்கு பெயர் ஐடியா கொடுத்துவிட்டீர்களே.இது நியாயமா?
உண்மையான பக்தி கொண்டவர்களுக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்கள் தேவையில்லை! அதை உணராத போலி பக்தர்கள்தான் போலிகளிடம் ஏமாந்து போகிறார்கள். என்னத்த சொல்ல?!
ReplyDeleteவணக்கம் (பஸ்டு டைம் அதுதான் )
ReplyDeleteஇதுநாள் சகலமான பொது ப்ளாக்-கர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இனமே யாராவது சாமியாரபத்தி எழுதினா அவுங்க ப்ளாக்கு சைக்கிள் , ஆடோ , டெம்போ , மினி லாரி , லாரி , கன்டைனர் , கப்பல் , பிளைட் எல்லாம் வரும் என்பதை தெரியபடுதிகொல்கிறோம் , (முடியல, ப்ளீஸ், வேணாம் எங்க போனாலும் இத பாத்து காது , மூக்கு , கண்ணு எல்லாத்துலையும் ரத்தம் கொட்டுது )
இப்படிக்கு
இந்த ரெண்டுநாள்ல கொலை வெறிக்கு ஆளானோர் சங்கம்
ஆஹா இந்தோனேஷியாவிலுமா?
ReplyDeleteஅங்கேயும் இந்த சாமியாருஙக் ஆட்டைய போட்டுட்டாங்களா?
நித்யானந்தா ந்தா ந்தா என்று எங்கு பார்த்தாலும் கேட்டு கேட்டு காது புளிக்குது..
அட!//! அந்த படத்தையும் சன் டீவீ போடாம இருக்கனும்.//
ReplyDeleteநித்யானந்த வந்து சன் டீவியின் புகழை உயர்த்தி விட்டார்., சன் டீவிக்கு கொரிக்க அவல் கிடைத்த மாதிரி அல்லவா ஆகிவிட்டது
அமைச்சரே வணக்கம் (நானும் உங்களிடம் பேசுவது(?) ஃபர்ஸ்ட் டைம் அதான்)
ReplyDeleteநித்யானந்தர் செய்திகளைப்படிச்சு ரொம்ப நொந்து போயிருக்கீங்க போலிருக்கு. கவலைப்படாதீங்க நாளைக்கு வேற மேட்டர் வந்துடும்.
ஜலீலாக்கா ஆட்டைய போட்றவங்க எல்லா இடத்துலயும்தான் இருக்காங்க. நாமதான் கவனமா இருக்கணும்.
ReplyDeleteஎன்னாச்சுங்க தமிழ் பதிவர்களுக்கு...
ReplyDeleteயாரைப்பார்த்தாலும் நித்தியானந்தா...நித்தியானந்தானு சொல்றாங்க..
கேட்டா.. சிரிச்சுகிட்டே, பதில் சொல்லாம, போயிடறாங்க..?
எனிதிங்க் ராங்க்?.
நத்திங் ராங் பட்டாபட்டி!
ReplyDeleteஎல்லாருக்கும் சன் டீவி நித்யானந்தா காய்ச்சல் பாதிச்சிருக்கு. அவ்வளவுதான்.
நாமதான் ஒருத்தன் மாட்டினாலும் எல்லா சந்துக்கும் தெருவுக்கும் கூட்டிட்டு போய் கும்முவோம்ல (வடிவேலுவை கும்மற மாதிரி) அப்படித்தான் இதுவும்.
பதில் கிடைச்சுதுங்களா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
கவிசிவா... நானும் கேள்விப்பட்டேன்.... எல்லாம் புதுசுக்கு அமழிப்படுவார்கள் பின்பு ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பதுபோலாகிவிடும்.
ReplyDeleteஅதுசரி பழைய கவிப்பக்கத்தோடு புதுசுமோ? நட்பில் உங்கள் தலைப்பு இல்லாமையால் எனக்கு, புதுத்தலைப்புப் போட்டால் டக்கெனத் தெரிவதில்லை... அதுதான் நான் வருவது தாமதமாகிறது.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வ்ரை மாற்றுபவர்கள் இருந்து கொஏண்டு தான் இருப்பார்கள்.
ReplyDeleteஅதிரா பழைய கவிப்பக்கத்தில் followers widget சேர்க்க முடியலை. அதான் புதுசு :-)
ReplyDeleteஎப்படியோ வந்துட்டீங்கள்ல சந்தோஷம் அதிரா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிகே
ReplyDeleteநன்றி "டக்கால்டி". இப்பதான் உங்க பதிவையும் படிச்சேன். புத்திசாலிகள் ஒரே மாதிரிதான் சிந்திப்பாங்க :-)//
ReplyDeleteசாமர்த்தியசாலிகள் என்று கூறிக்கொண்டு மனிதனை மனிதன் ஏமாற்றுகின்ற இவ்வுலகத்தில் புத்திசாலியாய் இருக்க வேண்டியிருக்கிறது...அல்லது புத்திசாலி போல நடிக்கவாவது வேண்டியிருக்கிறது தோழி...
:-)
//சாமர்த்தியசாலிகள் என்று கூறிக்கொண்டு மனிதனை மனிதன் ஏமாற்றுகின்ற இவ்வுலகத்தில் புத்திசாலியாய் இருக்க வேண்டியிருக்கிறது...அல்லது புத்திசாலி போல நடிக்கவாவது வேண்டியிருக்கிறது தோழி...
ReplyDelete:-)//
உண்மைதான்
ஏன் இந்த சாமியார்கள் எல்லாம் ஆரஞ்ச் கலரில் ஆடை அணிகிறார்கள் என்ரு யோசித்ததில் கிடைத்த விடை
ReplyDeleteஅப்பதானே ஆரஞ்ச் சுளை மாதிரி பணத்தை அள்ளோ அள்ளுன்னு அள்ளலாம்.
பலாப்பழ பச்சையும் ஓகே.
ஆனால் சுளை எடுக்க நேரமாகும்