Wednesday, 17 March 2010

படைப்பு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும்

சமீப காலமாக எங்கும் அதிகம் புழங்கப்படும் வார்த்தை கருத்து சுதந்திரம் மற்றும் படைப்பு சுதந்திரம்.

ஒருவர் தன் படைப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்த அவருக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. அப்போதுதான் அவரது படைப்பு சிறப்பானதாக இருக்கும். ஆனால் அப்படிப் படைக்கும் ஒரு படைப்பு பல்லாயிரக்கணக்கானோரின் மனதைப் புண்படுத்தும் என்று தெரிந்தும் அதை வெளியிட்டால் அதை படைப்புச் சுதந்திரம் என்ற பாதுகாப்பு அடையாளத்தின் கீழ் கொண்டுவர முடியாது. அப்படியே அது அவரது படைப்புச் சுதந்திரம் என்றால் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மற்றவர்களின் கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

இவ்வளவு நேரம் எதைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று எல்லோருக்கும் புரிந்திருக்கும். அதேதான் ஓவியர் எம்.எஃப். ஹூசைன் விவகாரம்தான்.

இந்திய குடியுரிமை வேண்டாம் என்கிறார் என்றால் அது அவரது இஷ்டம். அதைத் தடுக்கவோ எதிர்க்கவோ அவசியம் இல்லை. எத்தனையோ இந்தியர்களும் இன்னொரு நாட்டின் குடியுரிமை பெற்றிருகின்றனர்.

கோவில் சிலைகளில் இல்லாத ஆபாசமா இவரது ஓவியத்தில் உள்ளது என்கின்றனர் ஒரு பக்கம். உன் தாயை இப்படி வரைவாயா என்கிறது இன்னொரு பக்கம். என் மனதில் ஒரே ஒரு கேள்விதான் வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் மன உணர்வுகளையும் நம்பிக்கையயும் புண்படுத்தும் ஒரு ஓவியத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும். மீண்டும் மீண்டும் அந்த அப்பாவிகளை ஏன் புண்படுத்த வேண்டும் அறிவுஜீவிகளே! ஒரு பக்குவப்பட்ட படைப்பாளியாக இருந்தால் மக்கள் மனதைப் புண்படுத்தியதற்கு மன்னிப்பு அல்லவா கேட்டிருக்க வேண்டும்.

எதிர்ப்பவர்களின் கேள்வியிலும் நாகரீகம் இருக்க வேண்டாமா? பெற்றவளையும் மனைவியையும் உடன் பிறந்தவளையும் வரைவாயா என்று கேட்பது அசிங்கமாக இல்லையா? அவர்களும் உன் தாயும் சகோதரிகளும்தானே!

இன்று படைப்பு சுதந்திரம் பற்றி இவ்வளவு பேசும் நாம் நம் தேசப்பிதாவின் படம் இன்னொரு வெளிநாட்டில் அவமதிக்கப்பட்ட போது கொதித்தெழுந்து சம்பந்தப்பட்டவரை மன்னிப்பு கேட்க வைத்தோமே அப்போது எங்கே போனது நம் படைப்பு சுதந்திரம் பற்றிய கருத்துக்கள்?

காந்திஜியை விமர்சிப்பவர்கள் நம் நாட்டிலேயே இருக்கும் போது இன்னொருத்தன் அவரை அவமதித்த போது ஒட்டுமொத்தமாக வெகுண்டெழுந்தோமே ஏன்? நம் நாட்டவர்கள் அவரை அவமதித்ததை விடவா (அதான் இன்னமும் பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லையே) வெளிநாட்டவன் அவமதித்து விட்டான் என்று அமைதியாகவா இருந்தோம்.

மத நம்பிக்கைகள் தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் இன்னொருவர் மூக்கை நுழைத்து கருத்து சொல்வதும் கேலி செய்வதும் மனம் புண்படும்படி செயல்படுவதும் என்னைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனம். கடவுள் இல்லை என்று நம்புவதும் பிரம்மா விஷ்ணு இயேசு கிறிஸ்து என்று பெயரும் உருவமும் கொடுத்து வழிபடுவதும் அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டு வணங்குவதும் அவரவர் விருப்பம். இதில் மற்றவர் கருத்து சொல்வதும் கேலி செய்வதும் தேவையற்ற ஒன்று.

அறிவுஜீவிகள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டவும் அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்கு சேகரிக்கவும் மதங்களைப் பயன்படுத்துவதை தயவு செய்து விட்டு விடுங்கள். நாங்கள் எங்கள் நம்பிக்கைகளோடு ஒற்றுமையாக இருந்து விட்டுப் போகிறோம்.

13 comments:

 1. நீங்க சொல்வதும் சரிதான். சென்சிட்டிவான விசயங்களை பற்றி சர்ச்சை எழுப்பும்போதுதான் பப்ளிச்சிட்டி கிடைகிறது என்ன செய்ய??? சாமியார்களின் லீலையில் மக்கள் காட்டிய ஆர்வம் மாதிரிதான் இதுவும். விட்டுத்தள்ளுங்க... அவங்களுக்கும் நேரம்போகவேண்டாமா????

  ReplyDelete
 2. சரியா சொன்னிங்க ,தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் ,(உதா சாரு நிவேதிதா )

  ReplyDelete
 3. தமிழிஷில் இனைக்கவும். நல்ல பதிவுதானே....

  ReplyDelete
 4. //அறிவுஜீவிகள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டவும் அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்கு சேகரிக்கவும் மதங்களைப் பயன்படுத்துவதை தயவு செய்து விட்டு விடுங்கள். நாங்கள் எங்கள் நம்பிக்கைகளோடு ஒற்றுமையாக இருந்து விட்டுப் போகிறோம். //

  ஆமாங்கடா டேய் விட்ருங்கடா நாங்க பாவம்...

  :(

  ReplyDelete
 5. நீங்க சொல்றதும் சரிதான் பிரதாப். எல்லாத்தையும் வி(சு)ட்டுத்தள்ளிட வேண்டியதுதான்.

  ReplyDelete
 6. நன்றி ஜெய்லானி

  ReplyDelete
 7. //ஆமாங்கடா டேய் விட்ருங்கடா நாங்க பாவம்...

  :(//

  ரிப்பீட்டு

  ReplyDelete
 8. நல்லா எழுதிருக்கிங்க கவி!! அரசியல்வாதிகளை என்னன்னு சொல்றது..திருந்தவே மாட்டாங்க...

  ReplyDelete
 9. கவிசிவா, உங்கள் பக்கம்வந்தால் நிறைய விஷயங்களை அறிய முடிகிறது. தொடருங்கோ.. பட் கூல் டவுண் பிளீஸ்ஸ்ஸ்:).

  ReplyDelete
 10. என்னாங்க டகால்ன்னு பெரிய்ய மேட்டர் எடுத்து இவ்வளவு ஈஸியா ஹேண்டில் பன்னிருகிங்க , டபுள் ஓகே

  ReplyDelete
 11. நன்றி மேனகா!

  //கவிசிவா, உங்கள் பக்கம்வந்தால் நிறைய விஷயங்களை அறிய முடிகிறது. தொடருங்கோ.. பட் கூல் டவுண் பிளீஸ்ஸ்ஸ்:).//

  அய்யோ அதிரா எனக்கு குளிருது. இவ்ளோ ஐசை என் மேல கொட்டிட்டீங்களே! இதுக்கு மேல நான் கூலாகாம இருப்பேனா. கூல் ஆகிட்டேன் :)

  நன்றி மங்குனியாரே!

  ReplyDelete
 12. கவிசிவா, இப்பத்தான் இங்க வர்றேன். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை என் கருத்தும் இதேதான்.

  இரண்டு தரப்புமே ரொம்ப அநாகரீகமா நடந்துக்கிறாங்க. அவர் மேலே வழக்கு போட்டு, நீதிமன்றத்தில நிறுத்தியிருக்கலாம்.

  ReplyDelete
 13. வருகைக்கு நன்றி ஹுசைனம்மா. பெரும்பான்மை மக்களின் கருத்தும் இதுதான். ஆனா கொஞ்சம் பேர் ஆடற ஆட்டத்தால எல்லாமே குழப்பமாயிடுது. என்னத்த சொல்ல!

  ReplyDelete