சமீபத்தில் அறுசுவை.காம் இல் நடந்த ஒரு பட்டிமன்ற வாதங்களைப்(பட்டிமன்றத்துக்கு நாட்டாமை நான் தான் :)) படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கே!
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
பணிவோடு ஆசிரியர் சொன்னதைக் கேட்டோம்
ப்யூன் வந்து கொடுத்தார் ஸ்காலர்ஷிப் ஃபாரம்
ஏழையாய் இருந்தாலும் முற்படுத்தப்பட்ட ஜாதிக்காரனை
ஏற்றிவிட ஊக்கத்தொகை கிடையாதாம்!
கல்லூரியில் அடி எடுத்து வைக்க நினைக்க
கல் வந்து விழுந்தது கல்விக் கனவில்!
முற்படுத்தப்பட்டவனாம் ஜாதியால்!
முகம் சுளித்து தீண்டத் தகாதவனாய் தள்ளி வைத்தது அரசு!
சொந்த ஜாதிக்காரன் கல்லூரியும்
சொல்லாமல் புறந்தள்ளி தாளிட்டது
கையில் காசு இல்லாததால்!
கையில் காலணா இல்லாதவனை தள்ளி வைத்தது சமூகம்!
அலுக்காமல் கிடைத்ததைப் படித்து
அரசு வேலைக்கு முதல் விண்ணப்பம்...
அதிகாரமாக சொன்னது ஒதுக்கீடு இல்லை என்று
மீண்டும் தீண்டத் தகாதவனாய் தள்ளி வைத்தது அரசு!
ஜாதியால் தள்ளி வைத்தால் வன்கொடுமைச் சட்டம் பாயுமாமே!
முற்படுத்தப்பட்ட ஜாதி என ஒதுக்கி வைக்கும் அரசு..
பாயுமா இச்சட்டம்?!
முற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரு ஏழையின் புலம்பல்!
டிஸ்கி: இதற்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால் இதுவும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது என் கருத்து.
உண்மைதான். முற்படுத்தப்பட்ட ஜாதினாலே ஏதோ கோடீஸ்வரன்னு இன்னும் நினைச்சுட்டு இருக்கானுங்க... நல்ல மார்க் இருந்தும், ஜஸ்ட் பாஸ் ஆன பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரியில் கொடுக்கும் இடங்களில் ஒரு இடம் கூட கிடைக்காது. இது எனது சொந்த அனுபவம்.
ReplyDeleteதீண்டாமை இப்ப தலைகீழா ஆயிடுச்சு...
நல்லாத்தான் யோசிகிரீக, இன்னொண்ண விட்டுடிகளே , அவுக ஜாதி காரவுக கம்மியா இருப்பதினால் எலெக்சன் சீட்டு கூட கிடைக்க மாட்டேங்குது
ReplyDelete//இதற்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால் இதுவும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது //
ReplyDeleteennai vida athiga mathippen edutha nanbanukku nalla college idamkidaikaamal ponapothu varutthappaten.
jathigal illaiyadi ena solikoduthu pinnaadiye jaathi chaandrithal kodukkavillai ena head master aandu muluvathum alaithu kettukkondu irunthaar
கவி.. டேஞ்சறஸ் சோன் க்கு வந்திருக்கீங்க.. தைரியத்த பாராட்டினாலும்.. ஒரு தோழியாயிருந்து - பாத்து.. கவனம்.. அங்க மாதிரியில்ல இங்க.. எதிர்ப்பலை கடுமையா இருக்கும்..
ReplyDelete// நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஉண்மைதான். முற்படுத்தப்பட்ட ஜாதினாலே ஏதோ கோடீஸ்வரன்னு இன்னும் நினைச்சுட்டு இருக்கானுங்க... நல்ல மார்க் இருந்தும், ஜஸ்ட் பாஸ் ஆன பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரியில் கொடுக்கும் இடங்களில் ஒரு இடம் கூட கிடைக்காது. இது எனது சொந்த அனுபவம்.
தீண்டாமை இப்ப தலைகீழா ஆயிடுச்சு...//
உள்ளுக்குள் உதறலோடதான் இந்த பதிவைப் போட்டேன். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பின் ஒரு நிம்மதி :-). நன்றி பிரதாப்!
பாதிக்கப்பட்ட பலரை நானும் பார்த்து வேதனைப்பட்டிருக்கிறேன். எல்லாவற்றின் வெளிப்பாடுதான் இந்த பதிவு.
// மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteநல்லாத்தான் யோசிகிரீக, இன்னொண்ண விட்டுடிகளே , அவுக ஜாதி காரவுக கம்மியா இருப்பதினால் எலெக்சன் சீட்டு கூட கிடைக்க மாட்டேங்குது
நன்றி அமைச்சரே! ஓட்டு இல்லேன்னா சீட்டும் கிடையாது
DHANS said...
ReplyDelete//ennai vida athiga mathippen edutha nanbanukku nalla college idamkidaikaamal ponapothu varutthappaten.
jathigal illaiyadi ena solikoduthu pinnaadiye jaathi chaandrithal kodukkavillai ena head master aandu muluvathum alaithu kettukkondu irunthaar//
இதுதான் யதார்த்தம் நண்பரே!
// எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
ReplyDeleteகவி.. டேஞ்சறஸ் சோன் க்கு வந்திருக்கீங்க.. தைரியத்த பாராட்டினாலும்.. ஒரு தோழியாயிருந்து - பாத்து.. கவனம்.. அங்க மாதிரியில்ல இங்க.. எதிர்ப்பலை கடுமையா இருக்கும்..//
அன்பான அக்கறைக்கு நன்றி சந்தனா! இதை அங்கு முடிந்ததுமே எழுதி விட்டேன். ஆனால் ரொம்பவே யோசித்து வருவது வரட்டும் மாடரேஷன் தான் இருக்குதேன்னு போட்டுட்டேன் :). இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை.
உங்கள் உணர்வுகளை கவிதையா கொட்டியது உணர்விற்கு மகுடம் வைத்தது போல.
ReplyDeleteநன்றி ஆசியா!
ReplyDeleteஒரு சின்ன கதை கேட்டுடுங்க.முற்படுத்தபட்ட ஜாதி,பிற்படுத்தப்பட ஜாதி இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல் நண்பர்கள்.இரண்டு நண்பர்களின் பிள்ளைகளும் ஒரே ஆண்டு பிள்ஸ் டூ எக்ஷாம் எழுதி..பிற்படுத்தபட்ட ஜாதியைச்சேர்ந்த அந்தபொண்ணு கவுன்சிலிங்கில் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர்ந்துவிட்டாள்.முற்படுத்தப்பட ஜாதியைச்சேர்ந்த மாணவியோ முன்னே குறிப்பிட்ட பெண்ணை விட அதிக அள்வில் மார்க் எடுத்தும் கேப்பிடேஷன் பீஸாக மட்டும் சுமார் ஆறு லட்சம் கொடுத்து அதே காலேஜில்,அதே பிரிவில் சேர்ந்து இருக்கிறாள்.இன்னொரு கொடுமை என்னன்னா பின்னாலே வர்ர பொண்ணோடு அப்பாவுக்கு முன்னவரை விட சம்பாத்தியமும் குறைவு.
ReplyDelete//முற்படுத்தப்பட ஜாதியைச்சேர்ந்த மாணவியோ முன்னே குறிப்பிட்ட பெண்ணை விட அதிக அள்வில் மார்க் எடுத்தும் கேப்பிடேஷன் பீஸாக மட்டும் சுமார் ஆறு லட்சம் கொடுத்து அதே காலேஜில்,அதே பிரிவில் சேர்ந்து இருக்கிறாள்.இன்னொரு கொடுமை என்னன்னா பின்னாலே வர்ர பொண்ணோடு அப்பாவுக்கு முன்னவரை விட சம்பாத்தியமும் குறைவு.//
ReplyDeleteஆறுலட்சம் கொடுக்க முடிஞ்சதால அந்த பொண்ணுக்கு விரும்பினதை படிக்க முடிஞ்சுது. ஆனா பணம் இல்லாத ஏழை மாணவனா இருந்தா அதிக மார்க் எடுத்தாலும் விரும்பியதைப் படிக்க முடிவதில்லியே! அதுதான் எனக்கு ரொம்ப கொடுமையா தெரியுது :(
கவி..உங்கள் கவி...தை அருமை. எனக்கு இதில் கருத்துச் சொல்லத் தெரியேல்லை, ஆனால் இந்த பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலைமை பூண்டோடு ஒழியோணும். அறிவுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
ReplyDelete//கவி..உங்கள் கவி...தை அருமை.
ReplyDeleteஅப்போ நான் எழுதியிருக்கிறது கவிதையா?!
கவி , மக்கள் ஜாதியை மறக்க நினைத்தாலும் , அரசியல் வாதிகள் மறக்க விடுவதில்லை இதுதான் இங்கு நிஜம், அமெரிக்காவில் கூட கருப்பர்-வெள்ளையர் உண்டு ஆனால் இந்தியாவில் ?????????
ReplyDelete//கவி , மக்கள் ஜாதியை மறக்க நினைத்தாலும் , அரசியல் வாதிகள் மறக்க விடுவதில்லை இதுதான் இங்கு நிஜம், அமெரிக்காவில் கூட கருப்பர்-வெள்ளையர் உண்டு ஆனால் இந்தியாவில் ?????????//
ReplyDeleteஎண்ணிலடங்கா பிரிவுகள் ஜாதிகள்... மக்கள் விழித்துக் கொள்ளும் வரை அனுபவிக்க வேண்டியதுதான்