Sunday, 28 March 2010

வேண்டாமே மதுவும் புகையும்


ரொம்ப நாளாக மனதுக்குள் வேதனைப்படுத்திக் கொண்டிருந்த விஷயம். யாரையும் குறை சொல்லணும்னோ இப்படித்தான் இருக்கணும்னோ சொல்றதுக்காக இல்லை. இப்படியும் இருக்கலாமேன்னு அன்பா சொல்றதுக்குத்தான் இந்த பதிவு.

சிங்கப்பூரில் நம் ஊரிலிருந்து வந்து வேலை பார்ப்பவர்கள் அதிகம். அதுவும் கட்டுமானத்துறையிலும் மற்றும் ப்ளூ காலர் வேலைகளிலும் இருப்பவர்கள் அதிகம். என்னதான் சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதாக சொன்னாலும் அவர்கள் வசிக்கும் இருப்பிடங்கள் நெருக்கடியானதுதான். திங்கள் முதல் சனி வரை காலை முதல் மாலை வரை பிழிந்தெடுக்கும் வேலை முடித்து இருப்பிடம் திரும்பி உணவு சமைத்து உண்டு உறவுகளை நினைத்து ஏங்கி களைப்பில் உறங்கி மீண்டும் காலையில் வேலைக்கு சென்று என்று வாரத்தில் 6நாட்களும் எந்திரமாக உழைத்து இருப்பவர்கள் ஞாயிறு விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பு.

ஆனால் சிலர் அந்த சந்தோஷம் சிகரெட்டிலும் மதுவிலும்தான் கிடைப்பதாக நினைத்து ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்த காசையும் வீணடித்து உடலையும் பாழ்படுத்திக் கொள்வதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. நான் அடிக்கடி செல்லும் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் ஒவ்வொரு சனி இரவுகளிலும் ஞாயிறுகளிலும் அதிகம் பார்க்கும் காட்சி இது. அங்குள்ள இந்திய சாமான்கள் விற்கும் கடையில் வார இறுதியில் இந்த இரண்டு பொருட்களின் விற்பனை மிக அதிகம். மனசுக்கு ரொம்பவே வேதனையா இருக்கும்னு சொல்றதை விட கோபம்தான் அதிகமாக வரும்.

இதற்காக இவர்கள் செலவளிக்கும் குறைந்தபட்ச தொகை வாரத்திற்கு 10லிருந்து 15டாலர் வரை இருக்கும். ஒரு மாதத்திற்கு 40லிருந்து 60டாலர் வரை. இந்திய மதிப்பில் 1200 முதல் 1800ரூபாய் வரை. இந்த பணத்தை ஏதேனும் பாதுகாப்பான பாலிசிகளில் முதலீடு செய்தால் உங்கள் எதிர்காலத்திற்கு உதவுமே சகோதரர்களே! இல்லை அந்த பணத்தை நல்ல சாப்பாட்டிற்காகவாவது செலவளிக்கலாமே!
யோசியுங்கள் சகோதரர்களே!

டிஸ்கி: புகை பிடிக்கும் மது அருந்தும் எல்லா சகோதரர்களுக்கும் சேர்த்தேதான் இந்த பதிவு.

10 comments:

  1. பதிவு என்னமோ நல்லாத்தாங்க இருக்கு... நான் யார் கேட்கறது-? யாரு திருந்தறது-? ஒண்ணும் பண்ணமுடியாது...

    கேட்டா எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க... இந்திரா காந்தி செத்துப்போனதுக்கு குடிக்கிறேன்னு சொன்னா என்னப்பண்ணுவீங்க-?

    ReplyDelete
  2. //கேட்டா எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க... இந்திரா காந்தி செத்துப்போனதுக்கு குடிக்கிறேன்னு சொன்னா என்னப்பண்ணுவீங்க-?//

    என்ன பண்றது ஒண்ணும் செய்ய முடியாது :(.
    "சொல்லிப் பாரு, தல்லிப்(அடிச்சு) பாரு, தள்ளி களை(தண்ணி தெளிச்சு விட்டுரு)" எங்க பாட்டி சொல்லும் பழமொழி இது. அப்படி போக வேண்டியதுதான்

    ReplyDelete
  3. இந்த பதிவை படித்து திருந்துபவர்கள் திருந்தினால் சந்தோஷம்தான் கவி...ஆனா திருந்தனுமே அவர்கள்...

    ReplyDelete
  4. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. துபாயில் இன்னென்னும் ஃபேமஸ் இருக்கு நீங்க விட்டுட்டீங்க!!. எப்படியோ மக்கள் திருந்தினால் சரி..>>

    ReplyDelete
  5. சமூக அக்கறையான பதிவு..

    ReplyDelete
  6. நன்றி மேனகா

    நன்றி ஜெய்லானி

    நன்றி ஜெரி

    ReplyDelete
  7. //வாரத்திற்கு 10லிருந்து 15டாலர் வரை இருக்கும். ஒரு மாதத்திற்கு 40லிருந்து 60டாலர் வரை. இந்திய மதிப்பில் 1200 முதல் 1800ரூபாய் வரை. இந்த பணத்தை ஏதேனும் பாதுகாப்பான பாலிசிகளில் முதலீடு செய்தால் உங்கள் எதிர்காலத்திற்கு உதவுமே சகோதரர்களே! இல்லை அந்த பணத்தை நல்ல சாப்பாட்டிற்காகவாவது செலவளிக்கலாமே!
    யோசியுங்கள் சகோதரர்களே!\\
    arumai

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்

    ReplyDelete
  9. //யாரையும் குறை சொல்லணும்னோ இப்படித்தான் இருக்கணும்னோ சொல்றதுக்காக இல்லை. இப்படியும் இருக்கலாமேன்னு அன்பா சொல்றதுக்குத்தான் இந்த பதிவு//

    இது பிடிச்சிருக்கு..

    அவங்க கிட்ட கேட்டுப் பாத்தா சொல்லுவாங்க - ரிலாக்ஸ் பண்ணறதுக்குன்னு... உண்மைதான்.. ஆனா இதுக இல்லாமயே வேறு விதங்கள்ல ரிலாக்ஸ் பண்ணலாம்ன்றத யாரும் ஏத்துக்கறதில்ல.. :))) உடம்ப கெடுத்துக்காம இதுகளுக்கு அடிமையாகாம இருந்துட்டா நல்லது..

    ReplyDelete
  10. நல்ல பதிவு. அன்று படித்தேன் பதில்போடும்போது எரராகி எனக்கு கோபமாகி விட்டுவிட்டுப்போயிட்டேன்.

    வருமுன் காப்போனாக இருப்பதுதான் நல்லது, ஆனால் நிறையப்பேர் வந்தபின் காப்போனாக இருக்கிறார்கள்(நோய்).

    ReplyDelete