Monday 2 August 2010

மீண்டும் ஒரு பல்பு

நான் வாங்கிய பல பல்புகளில் இதுவும் ஒண்ணு :-(

பள்ளியில் படிக்கும் போது கம்பன் கழகம் பல்பு கொடுத்துச்சுன்னா கல்லூரியில் என் ஆசிரியரே கொடுத்தார் :-(. என்னைப்பார்த்தாலே அவங்களுக்கெல்லம் பல்பு கொடுக்கணும்னு தோணுமோ என்னவோ :-(

கொசுவத்தியை மூஞ்சிக்கு முன்னாடி வச்சு சுத்துங்கோ....

காலேஜில் அப்போ செகண்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்தேன்(காலேஜில் படிச்சேன்னு சொல்றதை நீங்க நம்பித்தான் ஆகணும் வேற வழியில்லை). ஒரு நாள் எங்க கணித விரிவுரையாளர் வகுப்பில் ஒரு விஷயம் அறிவிச்சார். இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இந்த செமஸ்டரில் கணித பாடத்தில் சென்டம்(அதாங்க நூற்றுக்கு நூறு...ஜெய்சங்கர் பட தலைப்புன்னு லொள்ளு பண்ணக்கூடாது சொல்லிட்டேன்) வாங்கறவங்களுக்கு சிறப்பான பரிசு வழங்கப்படும் அப்படீன்னார். நமக்கு கணக்குன்னா ரொம்ப இஷ்டம். எப்பவும் தொண்ணூறு மார்க்குக்கு குறைச்சலா வாங்கினதில்லை. இருநூறு மார்க்குக்குக்கு தொண்ணூறான்னு நீங்க கேட்கறதெல்லாம் எனக்கு நல்லாவே கேட்குது. அப்படீல்லாம் சந்தேகப்படக் கூடாது. அழுதுடுவேன் :-(

எக்ஸாம் முடிஞ்சு ரிசல்ட்டும் வந்திடுச்சு. (எக்சாம் எழுதினாத்தான் ரிசல்ட் வரும்னு லூசுத்தனமா தத்துவம்லாம் சொல்லப்படாது). நான் நூற்றுக்கு நூறும் வாங்கிட்டேன்(இதையும் நீங்க நம்பித்தான் ஆகணும்). காலேஜில் நானும் சிவில் டிப்பார்ட்மெண்டில் ஒரு பையனும் சென்டம் வாங்கியிருந்தோம்.

கம்பன் கழகம் சொன்ன மாதிரியே இங்கயும் விழா நடத்திதான் பரிசளிப்போம்னு சொல்லிட்டாங்க. அப்பவே எனக்கு கம்பன் கழகம் கொடுத்த பல்பு மண்டையில பளீர்னு எரிஞ்சுது. சரி காலேஜ் டேயில் தான் கொடுப்பாங்கன்னு இருந்துட்டேன். ஆனால் அதுக்கு முன்னாடியே இந்த ஃபர்ஸ்ட் இயர் பலியாடுகள் சே சே மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி காலேஜில் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. எங்க சேர்மனுக்கு காசு கொடுத்து சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் முன்னாடி காலேஜின் பிரதாபத்தை (கவனிக்கவும் பிரதாப்பை இல்லை) காண்பிக்க எங்களை பலியாடா பயன்படுத்த முடிவு பண்ணிட்டார் :-(

எங்க விரிவுரையாளரும் வந்து இன்னிக்குத்தான் சேர்மன் உங்களுக்கு பரிசு கொடுக்கப் போறார். எஸ்கேப் ஆகி ஊர் சுத்த போயிடாதீங்கன்னார். சரின்னு நாங்களும் வெயிட் பண்ணினோம். ஆனா ரெண்டுமணிநேரமாகியும் விழா ஆரம்பிக்கப் போறதா தெரியல. என்னோட துணைக்கு ஒருத்தியை மட்டும் விட்டுட்டு மற்றவங்க எல்லாம் எஸ்கேப் ஆயிட்டாங்க. பாவம் எனக்காக அவளும் தேவுடு காத்துக்கிட்டு இருந்தா.

ஒருவழியா விழா ஆரம்பிச்சு காலேஜின் சிறப்புக்களையெல்லாம் அள்ளி விட்டுட்டு இருந்தார் சேர்மன். இந்தப் புளுகு புளுகறாங்களேன்னு மனசுக்குள்ள நொந்துக்கிட்டோம். ஒருவழியா எங்களை அவங்க முன்னாடி அறிமுகம் செய்து வைத்தார். ஏதோ அவரே வந்து பரீட்சை எழுதி அதனால் நாங்க மார்க் வாங்கினோம்ங்கற மாதிரி காலேஜைப் பற்றி பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தார். (நூறு மார்க் எடுத்தது ரெண்டு பேர்னா ஃபெயிலானது 50பேருக்கும் மேல அவங்களை கூட்டி வந்து இவங்க முன்னாடி நிக்க வைக்கணுனு இருந்துச்சு ஆனா முடியாதே)

அடுத்து பரிசளிப்பு என்னும் பல்பு வழங்கும் நிகழ்ச்சி. நல்லா கிஃப்ட் பேப்பரில் சுத்தி ஒரு பொட்டலம்தான் பரிசு. அதை கையில் வாங்கினப்பவே புரிஞ்சிடுச்சு இது பல்புதான்னு(பின்னே எத்தனை பல்பு வாங்கியிருக்கோம் அந்த அனுபவம் கைகொடுக்காதா என்ன). விட்டா போதும்னு ஹாஸ்டலுக்கு தோழியின் ரூமுக்கு போயிட்டோம். என்ன பரிசுன்னு எல்லாரும் சேர்ந்து பேப்பரை பிரிச்சா பெரிய பல்பு பளிச்சுன்னு எரிஞ்சுது.

கண்ணாடிப் பொட்டிக்குள்ள நடுவுல ஒரு ப்ளாஸ்டிக் பூவும் ரெண்டு பக்கமும் வாத்தும் இருக்குமே அதே அதே அந்த கண்ணாடிப் பொட்டிதான் பரிசு. என்னோட துணைக்கு நின்ன ஃப்ரெண்டுதான் நொந்து போயிட்டா. அடிப்பாவி இதுக்காகவா அந்த ரம்ப பேச்சைக் கேட்டுக்கிட்டு காத்திருந்தோம். அதுக்கப்புறம் என்ன எல்லாருடைய கிண்டலையும் கேலியையும் கேட்டுக்கிட வேண்டியதுதான்.

அதுக்கப்புறம் அவர் எல்லா செமஸ்ட்டர் ஆரம்பிக்கும் போதும் பரிசு தரப்படும்னுதான் சொல்லுவார். ஆனா நாங்க யாரும் அதுக்கப்புறம் நூறு மார்க் வாங்கவே இல்லையே! எத்தனை வாட்டிதான் பல்பு வாங்கறது? எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது அவ்வ்வ்வ்வ்வ்வ்

45 comments:

  1. ஹஹஹ... வாங்குனது பல்பு அதுல இவ்ளோ பெருமையா... ஒருவேளை என்னமாதிரி
    ஸ்டேட் ராங்க் வங்கிருந்ததா... ?? :))

    ReplyDelete
  2. பூவுக்கு ரெண்டு பக்கமும் வாத்து இருக்கற கிஃப்டை எவன் கண்டுபிடிச்சான்னு தெரில...

    நல்ல மார்க்கு வாங்குனாலும் அதைத்தான் குடுக்குறான், பிறந்தநாளுக்கும் அதைத்தான் குடுக்குறான்,
    கல்யாணத்துக்கும் அதைத்ததான் கிப்பை கொடுக்குறானுங்க... என்ன கொடுமைங்க இது

    ReplyDelete
  3. நீஙக பல்பு வாங்குன பிரதாபத்தை சொல்றேன்னு சைக்கிள் கேப்புல என்னையும் போட்டுத்தாக்கிட்டிங்க.... :((

    ReplyDelete
  4. pls collect ur award from my blog

    http://sashiga.blogspot.com/2010/08/blog-post_02.html

    நம்மளை நல்லா ஏமாத்துறாங்கப்பா..ம்ம்ம்

    ReplyDelete
  5. //நல்ல மார்க்கு வாங்குனாலும் அதைத்தான் குடுக்குறான், பிறந்தநாளுக்கும் அதைத்தான் குடுக்குறான்,கல்யாணத்துக்கும் அதைத்ததான் கிப்பை கொடுக்குறானுங்க...//

    இப்படி மனச பொசுக்குன்னு உட்டுப்புடாதீயவ புள்ளைளுவலா. பெரியப் படிப்பெல்லாம் படிச்சி கிரியவ. அங்கிட்டு மேனகாசத்தியாக்கா, கூப்பிடுதாஹல்ல, போயி நல்ல பரிசா செலக்ட் செஞ்சு எடுத்தாங்க!!புரிஞ்சுதா ஹா..ஹா.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கவி , நீங்க எப்ப அவார்ட் பல்ப் வாங்கி பதிவு போட்டாலும் உடனே ஒரு விருது கிடைக்குதே அந்த ரகசியம் என்னன்னு கொஞ்சம் சொல்றீங்களா..


    இப்ப மேனகாக்கா குடுத்திருக்காங்க ..!!

    ReplyDelete
  7. ஹாஹ்ஹா.. நாங்கூட ஏதாச்சும் பலகையில உங்க பேர பொன்னெழுத்துக்கள்ல பதிச்சு பல்பு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சேன் :)) பூவும் ரெண்டு வாத்துமா? :))

    சேர்மன் கையால அத்தன பேர் முன்னாடி மேடை மேல ஏறி (இம்புட்டு பில்டப் போதும?) பரிசு வாங்கறது தான் முக்கியம்.. பரிசா முக்கியம்? அப்பிடின்னெல்லாம் நான் எதுவுமே சொல்லல.. :))))))))

    ReplyDelete
  8. ah...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...இது எல்லாம் சகஜம் அப்பா..இது பல்பு என்று நீங்க சொன்னால் நான் வாங்கிய பல்புகளை சொன்னால அவ்வளவு தான் போல...

    ReplyDelete
  9. @பிரதாப்

    ///பூவுக்கு ரெண்டு பக்கமும் வாத்து இருக்கற கிஃப்டை எவன் கண்டுபிடிச்சான்னு தெரில...///

    ஹா ஹா ஹா.. ரொம்ப கரெக்ட் பிரதாப்.. எனக்கு இந்த கேள்வி தோணிருக்கு..

    ReplyDelete
  10. @பிரதாப்

    ஹா ஹா ஹா.. ரொம்ப கரெக்ட் பிரதாப்.. எனக்கும் இந்த கேள்வி தோணிருக்கு..

    ReplyDelete
  11. @கவி

    அடடா... பாவங்க நீங்க.. எத்தன தரம் தான் இந்த வாத்தையே வாங்குறது..
    சரி சரி விடுங்க.. நோ பீலிங்க்ஸ்...

    ReplyDelete
  12. ந‌ம‌க்கும் இந்த‌ அனுப‌வ‌ம் இருக்குங்கோ... உங்க‌ளுக்கு க‌ணித‌ம்.. ந‌ம‌க்கு த‌மிழுக்கு ந‌ட‌ந்த‌து ப‌த்தாம் வ‌குப்பில்.... காமெடியோ... காமெடி..

    ReplyDelete
  13. வாத்து இல்லையென்றால் ஓரு பேனா.. தருவாங்க நம்ம நாஞ்சில் கிண்டல் செய்யாம பதிவே கிடையாது போல...

    ReplyDelete
  14. ஓ, இதுனால தான் நல்லா படிக்கிறவங்களுக்கெல்லாம் வாத்தியாரையும் காலேஜையும் பத்தி பேச்செடுத்தாலே எரிச்சலா வர்தா...?
    :)

    ReplyDelete
  15. @நாஞ்சில் பிரதாப்

    ஓஹ் நீங்க ஸ்டேட் ராங்க் ஹோல்டரா?!
    (சத்தியமா பல்ப் ஹோல்டரைப் பத்தி எனக்கு ஞாபகமே வரலை :D) சொல்லவே இல்லை
    நல்ல மார்க்கு வாங்குனாலும் அதைத்தான் குடுக்குறான், பிறந்தநாளுக்கும் அதைத்தான் குடுக்குறான்,
    கல்யாணத்துக்கும் அதைத்ததான் கிப்பை கொடுக்குறானுங்க... என்ன கொடுமைங்க இது//

    ஆஹா இந்த வாத்தை நிறையா பேர் கிஃப்டா வாங்கியிருப்பாங்க போலிருக்கே! கண்டுபுடிச்சவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்... ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்ல வந்தேன் :-(

    ReplyDelete
  16. நன்றி மேனகா. ஒவ்வொரு வாட்டி நான் பரிசு பல்ப் வாங்கினதும் ஆறுதல் படுத்த அவார்ட் கொடுத்தடறீங்க. ஃப்ரெண்ட்னா இப்படித்தான் இருக்கணும்.

    அவார்டுக்கு நன்றி மேனகா. வந்து எனக்குப் பிடிச்சதை தூக்கிட்டு வந்துடறேன்

    ReplyDelete
  17. நன்றி அப்துல் காதர். இப்போ போய் தூக்கிட்டு வந்துடறேன்

    ReplyDelete
  18. //கவி , நீங்க எப்ப அவார்ட் பல்ப் வாங்கி பதிவு போட்டாலும் உடனே ஒரு விருது கிடைக்குதே அந்த ரகசியம் என்னன்னு கொஞ்சம் சொல்றீங்களா..


    இப்ப மேனகாக்கா குடுத்திருக்காங்க ..!!//

    ஜெய்லானி ரெண்டுவாட்டியும் மேனகாதான் கொடுத்திருக்காங்க. அதான் ஃப்ரெண்ட்ஷிப் :D.

    ReplyDelete
  19. @ எல் போர்ட்
    //பரிசு வாங்கறது தான் முக்கியம்.. பரிசா முக்கியம்? அப்பிடின்னெல்லாம் நான் எதுவுமே சொல்லல.. :))))))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். யூ டூ சந்தூ :-(

    ReplyDelete
  20. நன்றி கீதா! ஓஹ் நீங்களும் நிறைய பல்பு வாங்கியிருக்கீங்களா? சிலதையாவது சொல்லுங்க ஆறுதல் பட்டுக்கறோம் :-)

    ReplyDelete
  21. நன்றி ஆனந்தி. இந்த வாத்து கிஃப்ட் மட்டும் இல்லை கிஃப்ட்டுக்குன்னே நம்ம ஊர்ல சில ஐட்டங்களை மக்கள் செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க. க்ளாக், மில்க் குக்கர், தண்ணி குடிக்கற வாத்து(இந்த வாத்து மேல அவிங்களுக்கு என்னதான் ஆசையோ தெரியல) இதெல்லாம் கூட அந்த லிஸ்ட்டில் இருக்கு

    ReplyDelete
  22. வாங்க நாடோடி! உங்களுக்குமா?!

    ReplyDelete
  23. நன்றி சௌந்தர்! கிண்டல் செய்யாத நாஞ்சிலா? நோ நோ அவரோட ட்ரேட் மார்க்கே அதுதானே! ஆனால் மனதை கஷ்டப்படுத்தாத ரசிக்க வைக்கும் கிண்டல்

    ReplyDelete
  24. வாங்க வார்த்தை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    நீங்க எங்களை எல்லாம் நல்லா படிக்கறவங்க லிஸ்டில் சேர்க்கக் கூடாது! என்னது நீங்க என்ன சொல்லலியா ஒகே ஒகே அண்டர்ஸ்டேண்ட் :D

    ReplyDelete
  25. (காலேஜில் படிச்சேன்னு சொல்றதை நீங்க நம்பித்தான் ஆகணும் வேற வழியில்லை). /// நம்புறோம்:, பல்பு வாங்கிய கதையை பப்ளிக்கில சொன்னபிறகும் நம்பமாட்டமே என அடம்புய்க்கமாட்டோம்:))).

    இருந்தாலும் அப்ப வாங்கின பல்பு, இப்பவும் நல்லாத்தானே எரியுது?, வாழ்க.... இன்னும் பல வாங்கி வளர்க!!!!, நான் பல்பைச் சொன்னேன்:).

    ReplyDelete
  26. சேர்மன் கையால அத்தன பேர் முன்னாடி மேடை மேல ஏறி (இம்புட்டு பில்டப் போதும?) பரிசு வாங்கறது தான் முக்கியம்.. பரிசா முக்கியம்? அப்பிடின்னெல்லாம் நான் எதுவுமே சொல்லல.. :))))))))
    //// சந்துக்கு..... இண்டைக்குத்தான் கிட்னி ஒயுங்கா வேர்க் பண்ணுதூஊஊஊ.... ரிப்பீட்டு கவி.

    ReplyDelete
  27. //இருந்தாலும் அப்ப வாங்கின பல்பு, இப்பவும் நல்லாத்தானே எரியுது?, வாழ்க.... இன்னும் பல வாங்கி வளர்க!!!!, நான் பல்பைச் சொன்னேன்:). //

    பல்பை சொன்னீங்களா? நான் என்னைத்தான் சொன்னிங்களோன்னு நினைச்சேன். தப்பிச்சீங்க
    கர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  28. என்ன இருந்தாலும் பூஸோட கிட்னிக்கு ஈடாகுமா? என்ன இன்னும் தொடர்பதிவைக் காணோம்? சீக்கிரம் இல்லேன்னா ப்ரித்தானியாபுரத்தில் பூஸாரின் வீட்டுக்கு மேல் ப்ளேன் பறக்கும். ப்ளேன் ட்ரைவர் ஹைஷ் அண்ணான்னு சொல்லணுமா என்ன? பூஸ் கட்டிலுக்கு கீழ பதுங்கினாலும் விடமாட்டோம்ல

    ReplyDelete
  29. என்ன இன்னும் தொடர்பதிவைக் காணோம்? சீக்கிரம் இல்லேன்னா ப்ரித்தானியாபுரத்தில் பூஸாரின் வீட்டுக்கு மேல் ப்ளேன் பறக்கும். ப்ளேன் ட்ரைவர் ஹைஷ் அண்ணான்னு சொல்லணுமா என்ன?/// அப்பப்பா ஒரு பேபி பூஸை எப்பூடியெல்லாம் மிரட்டீனம்....:)). கட்டிலுக்குக் கீழ வெளிச்சம் குறைவா இருக்கு:), அதுதான் பதிவு கொஞ்சம் பிந்துது:)... ஆ.... பிளேன் றைவர் அதே ஆள்தானோ? அப்போ ஹெல்மெட்டைப் போட்டு, கோடாரியைத் தூக்கிட வேண்டியதுதான்:).

    ReplyDelete
  30. //இந்த வாத்து கிஃப்ட் மட்டும் இல்லை கிஃப்ட்டுக்குன்னே நம்ம ஊர்ல சில ஐட்டங்களை மக்கள் செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க. க்ளாக், மில்க் குக்கர், தண்ணி குடிக்கற வாத்து(இந்த வாத்து மேல அவிங்களுக்கு என்னதான் ஆசையோ தெரியல) இதெல்லாம் கூட அந்த லிஸ்ட்டில் இருக்கு..........:)))))


    அடடா... பாவங்க நீங்க.. எத்தன தரம் தான் இந்த வாத்தையே வாங்குறது..
    சரி சரி விடுங்க.. நோ பீலிங்க்ஸ்... //:)))

    //அப்ப வாங்கின பல்பு, இப்பவும் நல்லாத்தானே எரியுது?, வாழ்க.... இன்னும் பல வாங்கி வளர்க!!!!// நான் எதை சொல்றேனு தெரியுதா???

    ReplyDelete
  31. என்ன கவி நலமா என்று கேட்காமல் இருக்க முடியல்லை. எப்படி இருக்கிங்க. இந்த பல்ப் விஷயம் எனக்கும் தோன்றியிருக்கு. ஆனால் பல்ப் இருக்கிற பவர் வேற எதுக்கும் இல்லை கவி. பல்ப் என்று ஒன்று இல்லை என்றால் என்ன ஆவது. மேலும் பல ப்ல்பு வாங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. ஹைஷ் அண்ணா நல்லாவே புரியுது அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  33. விஜி எத்தனை பல்பு வாங்கினாலும் நாங்க ரொம்ப ஸ்ட்ராங்கு :). இன்னும் பல்பு வாங்கணுமா?????????
    வாங்க வாங்க வந்து கொடுத்துட்டு போங்க :(

    ReplyDelete
  34. அய்யோ இதுவரைக்கும் நான் எந்த குறிப்பும் கொடுக்கலியே :(. வாழ்த்துக்கு நன்றி.
    உங்க வீட்டுக்கு வரேனுங்க.

    ReplyDelete
  35. அட செம காமெடி,இரண்டு வாத்து ப்ளாஸ்டிக் பூ அப்படியே கண்முன்னாடி வந்திட்டு போகுது,நம்மூரில் சில வீட்டு ஷோகேஸில் பார்த்து இருக்கேன்,இது மாதிரி பரிசு வாங்கியதாய் இருக்குமோ?

    ReplyDelete
  36. நன்றி ஆசியா! எங்க வீட்டுல அந்த வாத்து எங்கோ பரண் மேல் கிடக்குதுன்னு நினைக்கறேன்.

    ReplyDelete
  37. கவிசிவா தங்களை விருது பெற அன்புடன் அழைக்கிறேன்.
    http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html

    ReplyDelete
  38. //அய்யோ இதுவரைக்கும் நான் எந்த குறிப்பும் கொடுக்கலியே//

    இதுதான் பல்ப்பிலேயே பெரிய பல்ப் ஹா...ஹா....

    ReplyDelete
  39. ஆசியா விருதை வீட்டில் மாட்டி வச்சுட்டேன் :).

    ReplyDelete
  40. //ஜெய்லானி said...
    //அய்யோ இதுவரைக்கும் நான் எந்த குறிப்பும் கொடுக்கலியே//

    இதுதான் பல்ப்பிலேயே பெரிய பல்ப் ஹா...ஹா.... //

    எனக்கு இந்த பல்பு வேணாம் நான் வாங்க மாட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  41. அன்புள்ள கவிசிவா... நலம் நலமறிய ஆவல்..

    உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

    என்றும் அன்புடன்
    உங்கள் ஸ்டார்ஜன்.

    http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

    ReplyDelete
  42. நன்றி ஸ்டார்ஜன். இதோ வந்து பெற்றுக் கொள்கிறேன். பல்பு வாங்கியே அசறாதவங்க நாங்க, விருது வாங்க கசக்குமா என்ன :)

    ReplyDelete
  43. நூத்துக்கு நூறு...நீங்க... எவ்ளோ தான் நம்பறது... போய் அளவு கடந்து போயிட்டு இருக்கு போல... சரி சரி... நம்பறோம்...

    //ரெண்டு பக்கமும் வாத்தும் இருக்குமே //
    ஹா ஹா ஹா ஹா...ஹா ஹா அஹ அஹ....வேற என்னமோ சொல்ல வாய் துடிக்குது... வேண்டாம்.... பாவம் நீங்களே ரெம்ப நொந்து போய் இருக்கீங்க .... ஹா ஹா ஹா

    நானும் ஒரு பல்பு பதிவு எழுதி வெச்சு இருக்கேன்... இப்போதைக்கு போடறதா இல்ல... இமேஜ் தற்சமயம் ரெம்ப டேமேஜ் ஆகி உள்ளதால் பின்னொரு நாளில் வெளி வரும்... ஹா ஹா ஹா

    ReplyDelete
  44. நன்றி அ(ட)ப்பாவி :)

    //நானும் ஒரு பல்பு பதிவு எழுதி வெச்சு இருக்கேன்... இப்போதைக்கு போடறதா இல்ல... இமேஜ் தற்சமயம் ரெம்ப டேமேஜ் ஆகி உள்ளதால் பின்னொரு நாளில் வெளி வரும்... ஹா ஹா ஹா//

    நமக்கெல்லாம் இமேஜ்னு ஒன்னு இருக்குங்கறீங்க?!

    ReplyDelete
  45. கவி ஒரு தனி ப்ளாக் வச்சு அசத்திட்டு இருக்கீங்க... க்ரேட்பா.. நடத்துங்க நடத்துங்க.. டைம் கிடைக்கும் போது பாக்குறேன்..

    ReplyDelete