Wednesday, 25 August 2010
எனக்கொரு சந்தேகம் நான் இந்தியரா?!
நான் கடந்த 10வருடமாக வெளிநாட்டில் இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இந்தியாவில் இருக்கிறேன். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது. அப்போ நான் இந்தியனா அல்லது நான் இந்தோனேஷியாவில் வாழ்வதால் இந்தோனேஷியனா?
எனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னா...
நம்ப செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரான்னு நம்ப மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு சந்தேகம் வந்திடுச்சாம் :-(. நம் நாட்டுக்காக விளையாடி நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். பத்ம விபூஷன் விருதால் சிறப்பிக்கப்பட்டவர். முதல் கேல் ரத்னா வாங்கியவர். எப்போதும் போட்டிகளில் விளையாடும் போதும் இந்திய கொடி வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறார். இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்.
விளக்கமான செய்திக்கு இங்கே சொடுக்கவும்
இம்பூட்டும் இருக்கறவர பார்த்தே நீ இந்தியனான்னு சந்தேகப்படும் போது நானெல்லாம் எம்மாத்திரம்?
எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்குதுங்கோ யாராச்சும் தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.
சோனியாகாந்தி இத்தாலியில் பிறந்தவர். இந்தியாவில் இருப்பவர் அவர் இந்தியரா இத்தாலியரா?
அவரின் தலைமையின் கீழ் ஆளும் கட்சியான காங்கிரஸ் இயங்குவதால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எந்த குந்தகமும் வந்து விடவில்லையா?
முக்கியமான சந்தேகம் வெளிநாட்டில் இருக்கும் நாமெல்லாம் இந்தியரா இல்லை நாடில்லாத நாடோடிகளா?
Labels:
குமுறல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
haahaa arumaiyaana kelvi...naadodi indhiyargal endru vaithukolvoma??
ReplyDeleteஅடகொடுமையே... ஏனுங்க அம்மணி இப்படி ஒரு டவுட்? இந்தியால பொறந்தா நாம எல்லாரும் எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரு சிடிசன்ஏ ஆனாலும்...we 're born Indians அம்மணி... சோ டோன்ட் வொர்ரி... பி ஹாப்பி... (நீங்க இப்படி எல்லாம் சொன்னா எனக்கு ஒரே ஓதரளா இருக்கு... நானே ஊர் பக்கம் போய் வருஷம் மூணு ஆக போகுது... ஏர்போர்ட்லையே நிறுத்தி வெச்சுடுவானொன்னு பயம் வந்துடுச்சு இப்போ...ஹும்...)
ReplyDeleteநாடோடி இந்தியர்கள்... நல்லாத்தான் இருக்கு :)
ReplyDeleteநன்றி காயத்ரி!
This comment has been removed by the author.
ReplyDeleteநாட்டுல நடக்கறத எல்லாம் பார்த்தா பயமாத்தான் இருக்கு அப்பாவி தங்க்ஸ்!
ReplyDeleteஎதுக்கும் சீக்கிரமா ஊருக்கு போயிட்டு வாங்க.
இந்தியாவிலும் சோஷியல் செக்கியூரிட்டி கார்ட் வர போகுதாம் அந்த போட்டோவுக்கு போஸ் குடுக்காதவங்க இந்தியர் இல்லையாம் :)))
ReplyDeleteநாங்கள் எல்லாம் எக்ஸ்பாட்ரியாட்ஸ் இங்கே அப்படிதான் சொல்றாங்க.
ReplyDeleteஹைஷ் அண்ணா அந்த சோஷியல் செக்யூரிட்டி கார்ட் வரும் போது எங்கள மாதிரி ஆட்களுக்கு என்ன ரூல் வச்சிருப்பாங்களோ தெரியல :(. இந்த முறை ஊரில் இருக்கும் போது ஒரு ஆப்பீசரிடம் இது பற்றி கேட்டேன். அவர் இன்னும் என் ஆர் ஐ சம்பந்தமா முடிவுகள் எடுக்கலைன்னு சொன்னார். இப்போ ஏதாவது முடிவுக்கு வந்துட்டங்களா?!
ReplyDeleteஆசியா அதை இங்கே இன்னும் ஸ்டைலாக "எக்ஸ்பாட்ஸ்" அப்படீங்கறாங்க. ஆனா அது இங்க மட்டும்தானே! இந்தியாவுக்கு போனா நாம யாரு?! போற போக்கைப் பார்த்தா NRI ன்னு கூட சொல்லிக்க முடியாது போல இருக்கே :(
ReplyDeleteஇந்த சந்தேகம் வர கூடாதுனு தான் முன்னரே நாடோடி என்று வைத்துவிட்டேன்.. :)
ReplyDeleteஅடக்கடவுளே ..!! கவி வர வர நீங்க என்னை மாதிரி சந்தேகம் கேக்க ஆரம்பிச்சிட்டீங்க ... ..
ReplyDeleteநாம துறவி மாதிரி ....!!!
அடடா! இதெல்லாம் ஒரு பிரச்சினையா? இந்தியாவில் பிறந்தால் இந்தியர்கள் தான். ஆனந்த் பல நாட்களாக வெளிநாட்டில் இருந்தாலும் பிறப்பால் அவர் ஒரு இந்தியர். இதெல்லாம் அரசியல்வியாதிகளுக்கு தெரிந்தாலும் ஏதாச்சும் பிரச்சினை கிளப்பி விட்டுட்டு வேடிக்கை பார்க்க ஒரு சாக்கு.
ReplyDeleteகவி, நீங்களும் இந்தியர் தான். உங்களின் குழந்தைகள் இந்தோனேஷியன்/இந்தியன் (Dual ) ஆக இருக்கலாம்.
அடுத்து புது பிரச்சனைய கிளப்புவோம் காந்தி இந்தியனா? இல்ல சவுத் ஆப்ரிகன??? எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகனும்.
ReplyDeleteதிரும்ப வருத்தம் தெரிவிச்சிருக்கார் கபில் சிபல் பட் அந்த கவுரவ டாக்டர் பட்டம் வேணாம்ன்னு சொல்லிட்டாராமே ஆனந்த்? அரசியல் வியாதிகள் இருக்குற வரைக்கும் இது மாதிரி எதுனாலும் நோவு வந்துட்டுத்தான் இருக்கும் :( ஹும்...
ReplyDeleteஅப்புடியே நாடு கடத்திடுவாங்களா நம்மள? ம்ம்..
ReplyDelete@நாடோடி
ReplyDeleteநீங்க புத்திசாலி ஸ்டீபன் :). நானும் என் பேரை மாத்தலாம்மான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் நாடோடி கவின்னு
@ஜெய்லானி
ReplyDeleteஎல்லாம் உங்க பதிவுகளை படிக்க ஆரம்பிச்சதுல இருந்துதான் எதுக்கெடுத்தாலும் சந்தேகம் வருது :(
நாம் துறவியா... பார்த்து ஜெய்லானி சத்தம் போட்டு சொல்லாதீங்க. தூக்கி உள்ள போட்டுடப் போறாய்ங்க :)
@வானதி
ReplyDeleteநீங்க நல்லா தெளிவாத்தான் சொல்லியிருக்கீங்க. ஆனா எனக்கு அரசியல்வியாதிகளையும் அதிகாரிகளையும் பார்த்தாதான் பயமாப் போயிடுது. எப்போ என்ன செய்து குட்டைய குழப்புவானுங்கன்னு தெரியாதே :(
@Phantom Mohan
ReplyDeleteஏய் யார்ரா அங்க...கூட்டுங்கடா பஞ்சாயத்த... காந்திஜி இந்தியரா சவுத் ஆப்பிரிக்கரான்னு விசாரிச்சிடுவோம் :(
நன்றி மோகன்!
@பிரியமுடன் வசந்த்
ReplyDeleteஎன்னதான் அமைச்சர் மன்னிப்பு கேட்டாலும் ஒருவனின் குடியுரிமையை சந்தேகப்படுவது என்பது மனதை மிகவும் பாதிக்கக் கூடிய விஷயம். இது என் நாடுன்னு நான் யோசித்து பெருமைப்படும் போது நீ இந்தியனான்னு சந்தேகமா இருக்குன்னு சொன்னா நிச்சயம் நமக்கு வருத்தம் கோபம் எல்லாமே வரும். அவர் டாக்டர் பட்டத்தை மறுத்தது சரியாகவே படுகிறது.
இந்த அரசியல்வியாதிகளை விடுங்க... அவனுங்க எப்பவும் அப்படித்தானே. ஆனால் அந்த அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கூடவா அறிவு கிடையாது?
சந்தூ ஏற்கெனவே நாம நாடு கடந்துதானே இருக்கோம். இனிமே இந்தியாவுக்கு உள்ள விசா இல்லாம விடுவானுங்களான்னுதான் யோசிக்கணும் :(
ReplyDeleteWe are not nadodi Indians. But Indian Refugees In Indian Country.
ReplyDeleteவாங்க வாடாமல்லி! என்னை விட கோபக்காரங்களா இருக்கீங்களே!
ReplyDeleteநன்றி வருகைக்கும் கருத்துக்கும்
என்னது இப்படி டென்ஷன் ஆகறீங்க.... அவங்களும் வேலைசெய்றாங்கன்னு காண்பிக்கனும்ல...அப்படியே ஒரு பப்ளிசிட்டியும் ஆச்சு...இதுக்குபோய்....
ReplyDeleteஎனக்கொரு சந்தேகம் நான் இந்தியரா?! /// கவி, சந்தேகத்தைத் தீர்த்து வைப்போர் சங்கத் தலைவர் இருக்கும்போது, எதுக்கிந்தக் கல:)வை???.
ReplyDelete@நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteசரி பெதாப்பு :) டென்ஷன் ஆகலை. உண்மைதான அவனுங்களும் வேலை செய்யறது நமக்குத் தெரிய வேணாமா. இதத்தான் மாத்தி யோசி ன்னு சொல்றாய்ங்களோ!
அதீஸ் சங்கத் தலைவர் நம்ப சந்தேகத்த தீர்த்து வைப்பார்னு பார்த்தா துறவி ஆயிட்டோம்னு சொல்ராரு என்னத்த சொல்ல :(
ReplyDeleteஉரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் .. இவை இரண்டுமே மன்னிக்க முடியாத செயல் ... இந்தியாவிற்க்க இந்தியக் கோடி ஏந்தி பங்கேற்கும் ஆனந்த்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை ... இவ்வளவு நாட்களும் இல்லாத திருநாளாக இப்பொழுது என்ன திடீர் சந்தேகம், ஆனந்த் இந்தியரா இல்லையா என்று .. மேலும் அறிய http://haripandi.blogspot.com/2010/08/blog-post_26.html
ReplyDeleteஎன்னப்பா... இது?? சூப்பர் டவுட்-போங்க.. :-))
ReplyDeleteரெண்டுக்கெட்டான்ஸ்....அப்படியா?
@Haripandi Sivagurunathan
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. உங்கள் இடுகையும் படித்தேன். நியாயமான கோபம் வருத்தம்.
@ஆனந்தி
ReplyDeleteஎன்ன ஆனந்தி இப்படி ரெண்டுங்கெட்டான் ஆக்கிட்டீங்க? ஒருவேளை அப்படித்தானோ :(
நன்றி ஆனந்தி
//அதீஸ் சங்கத் தலைவர் நம்ப சந்தேகத்த தீர்த்து வைப்பார்னு பார்த்தா துறவி ஆயிட்டோம்னு சொல்ராரு என்னத்த சொல்ல :( //
ReplyDeleteஅட இன்னுமா புரியல .. விவேகனந்தர் , சுபாஷ் சந்திர போஸ் மாதிரி>>>>>.ன்னு சொல்ல வந்தேன் .( நடுவில போட்ட ஏரோ மார்க்கு புரியுதா...!!!))
@ஜெய்லானி
ReplyDeleteநிறையா பல்பு வாங்கினாலும் நான் ட்யூப்லைட்டுங்கோ :-(. ஒன்னும் புரியல! வந்து விளக்கவுரை கொடுத்திடுங்கோ :)
kavisiva said...
ReplyDeleteஅதீஸ் சங்கத் தலைவர் நம்ப சந்தேகத்த தீர்த்து வைப்பார்னு பார்த்தா துறவி ஆயிட்டோம்னு சொல்ராரு என்னத்த சொல்ல :(
//// அப்பூடியா சொன்னார் கவி?
அங்க போட்டிருக்கும் கவிதையையும், அந்த அக்காவையும் பார்த்தால், இவர் துறவியானது உண்மைதான்:))), ஆனால் என்ன துறவி எண்டெல்லாம் ஆரும் கேட்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
//@ஆனந்தி
ReplyDeleteஎன்ன ஆனந்தி இப்படி ரெண்டுங்கெட்டான் ஆக்கிட்டீங்க? ஒருவேளை அப்படித்தானோ :(
//
ச ச.. அப்படி இல்லங்க.. நம்ம நிலைமை அப்படி..
இந்தியா போனா... அமெரிக்கா காரின்னு சொல்வாங்க... இங்க இருக்கறவங்க... நம்மள இந்தியன்ஸ்..ஆ பாக்கறாங்க..
அதான் அப்படி சொன்னேன்.. ஏன் சோகம்ஸ்... ஸ்மைல் ப்ளீஸ்..
@அதிரா
ReplyDelete//அங்க போட்டிருக்கும் கவிதையையும், அந்த அக்காவையும் பார்த்தால், இவர் துறவியானது உண்மைதான்:))), ஆனால் என்ன துறவி எண்டெல்லாம் ஆரும் கேட்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).//
ஹி ஹி ஹி. என்ன துறவின்னு நான் கேட்கவே இல்லை? ஆனா நீங்க வந்து பதில் சொல்லிடுங்கோ ஜெய்லானி :)
சோகமெல்லாம் இல்லை ஆனந்தி. ஒரு ஆதங்கம் நம் நாட்டு அரசியல்வியாதிகளும் அதிகாரிகளும் ஏன் இப்படீங்கற வேதனையும் ஆதங்கமும்தான்.
ReplyDelete