இந்த ஏர் இந்தியா ஆட்களோட லொள்ளு தாங்க முடியலப்பா. திடீர்னு ஃப்ளைட்டை கேன்சல் பண்ணிடறானுங்க. இல்லேன்னா ஒருமணிநேரம் இரண்டு மணி நேரம் இல்லை ஒருநாள் இரண்டுநாள் தாமதமாகத்தான் புறப்படவே செய்யும். சரி அதையாவது பொறுப்பா பயனிகளுக்கு சொல்லுவானுங்களான்னு கேட்டா அதுவும் கிடையாது.
எனக்கென்னவோ இவனுங்க மற்ற ஏர்லைன்ஸுக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுக்கவே இப்படி செய்யறானுங்களோன்னு சந்தேகம்... இல்லை இல்லை உறுதியாவே சொல்லலாமோன்னு தோணுது :(. தாமதமாவதற்கு இவனுங்க சொல்ற காரணம் பைலட் இல்லை பைலட் வரலை பைலட்டுக்கு ட்யூட்டி டைம் முடிஞ்சிடுச்சும்பானுங்க. ஏன் இவனுங்களுக்கு முன்னாடியே ஃப்ளைட் ஷெட்யூல் எல்லாம் தெரியாதா? அதற்கேற்ற மாதிரி பைலட் ட்யூட்டி ஷெட்யூல் பண்ண முடியாதா? அப்படி பைலட் பற்றாக்குறைன்னா புதிய ஆட்களை எடுக்கணும். இல்லேன்னா பைலட் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி முதலிலேயே ஷெட்யூல் செய்யணும்.
இதையெல்லாம் விட்டுட்டு அவனுங்க பொறுப்பில்லாம பயணிகளை அலைக்கழிப்பானுங்களாம். சும்மா ஃப்ரீயாவா ஃப்ளைட்டுல ஏத்தறானுங்க. இதையெல்லாம் கேட்டா கோர்ட்டுக்குப் போவியா போ எனக்கொண்ணும் பிரச்சினை இல்லேன்னு தெனாவெட்டா பதில் சொல்றானுங்க.
என் அண்ணி இந்தியாவுக்கு போறதுக்காக சிங்கப்பூர் டூ திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட் புக் பண்ணியிருந்தாங்க. பயணத்திற்கு ஒருவாரம் இருக்கும் முன்பு எதற்கும் ஃப்ளைட் டைமை செக் பண்ணிக்கலாம்னு ஏர் இந்தியா வெப்சைட்டுக்குப் போய் தேதியையும் ஃப்ளைட் நம்பரையும் கொடுத்தா அன்னிக்கு ஃப்ளைட்டே இல்லேன்னு மெசேஜ் வருது. சரி நாம் ஃப்ளைட் நம்பரைத் தப்பா டைப் செய்துட்டோமோன்னு திரும்பவும் ட்ரை பண்ணினா அப்பவும் அதே மெசேஜ்தான் வருது.
இது என்னடா வம்பா போச்சுனு ஏர் இந்தியா ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணி கேட்டா நீங்க வெப் சைட்டிலேயே செக் பண்ணுங்க அப்படீன்னு பொறுப்பில்லாம பதில் சொல்லி வச்சிட்டானுங்க.
திரும்பவும் ஃபோன் பண்ணி வெப் சைட்டில் இல்லன்னுதான உங்களுக்கு ஃபோன் பண்றோம் அப்ப்டீன்னோம். அதுக்கு அந்த பொண்ணு ஏதோ அவங்க சொத்தையே நாங்க எழுதி கேட்ட மாதிரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னுட்டு 5நிமிஷம் கழிச்சு வந்து ஃப்ளைட் கேன்சல் மேடம் அப்படீன்னு கூலா சொல்லுது.
என்னங்க இது ஆன்லைன்ல புக் பண்ணினா ஃப்ளைட் கேன்சல் பத்தி ஒரு மெயில் கூட அனுப்ப மாட்டீங்களா நாங்க பாட்டுக்கு ஃப்ளைட் டைமை ரீ செக் செய்யாம ஏர்போர்ட் போய் நின்னா என்னங்க பண்றதுன்னு கேட்டா அதெல்லாம் நாங்க மெயில் பண்ண மாட்டோம். அது எங்க வேலை இல்லன்னு சொல்லிட்டு வேணும்னா டிக்கெட்டை ரீஷெட்யூல் பண்ணித்தரோம்னு சொல்லுச்சு.
சரின்னு அடுத்த ஃப்ளைட்டில் புக் பண்ணுங்கன்னு சொன்னா அது ஃபுல் ஆயிடுச்சு அதற்கடுத்த வாரம்தான் டிக்கெட் இருக்குதுன்னு சொல்லுது அந்த பொண்ணு. அப்ப்டீன்னா அண்ணியோட மொத்த பயணதிட்டத்தையும் மாத்தணும் அதனால டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுங்கன்னு கேட்டா அது முடியாது மேடம், ஃப்ளைட் ரீசெட்யூல் மட்டும்தான் பண்ணமுடியும்ங்கறாங்க.
ஏங்க இவங்க ஃப்ளைட்டுல போறவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கானுங்களா? இல்லை இவனுங்க மட்டும்தான் ஏர்லைன்ஸ் வச்சிருக்காங்களா? ஒருவாரம் பயணத்தை பின் தள்ளணும்னா அலுவலகத்தில் லீவை மாற்ற வேண்டும். இந்தியாவினுள் போய்வர எடுத்த ரயில் டிக்கெட்டுகளையெல்லாம் மாத்தணும் (டிக்கெட் வேறு கிடைக்காது). மொத்தத்தில் எல்லாமே குழப்படி ஆகும்.
இதையெல்லாம் கஸ்டமர் சர்வீசில் புகாராக சொன்னால் நீங்க வேணும்னா கோர்ட்டுக்குப் போங்க. அதான் நாங்க terms and conditions ல் தெளிவா எப்ப வேணும்னாலும் ஃப்ளைட் ஷெட்யூலை மாத்துவோம்னு சொல்லியிருக்கோமேங்கறாங்க. கண்ணுக்கு தெரியாத எழுத்துல ஒரு லைனை கண்டிஷன்னு போட்டு வச்சுக்கிட்டு என்ன வேணும்னாலும் செய்யலாமா? என்ன கொடுமை சரவணா இது :(.
அன்னிக்கே நான் முடிவெடுத்துட்டேன் ஏர் இந்தியாவில் போவதில்லைன்னு. சில்க் ஏரில் கொஞ்சம் காசு அதிகம்(150டாலர் வரை அதிகம்) ஆனாலும் பிரச்சினைகள் இல்லாமல் போய்வர முடிகிறது. இதுவரை ஒரே ஒரு முறைதான் ஃப்ளைட் தாமதமாகியிருக்கிறது. அதற்கு அந்த பணியாளர்கள் மன்னிப்பு கேட்ட விதம், ஹோட்டல் ரூம் சாப்பாடு என எந்த குறையுமில்லாமல் கவனித்துக் கொண்டதால் அந்த தாமதம் பெரிதாக தெரியவில்லை. ஆனால ஏர் இந்தியா ஊழியர்களின் அலட்சியம் பொறுப்பின்மை இதெல்லாம் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது.
எப்பதான் மாறுவாங்களோ?!
டிஸ்கி: வெளிநாட்டுக்குப் போயிட்டா உங்களுக்கெல்லாம் இந்தியாவை குறை சொல்றதே வேலையாப்போச்சுன்னு கும்ம வந்துடாதீங்க. தப்பை தப்புன்னு சொல்ல இந்தியாவில்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை.
//தப்பை தப்புன்னு சொல்ல இந்தியாவில்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை//
ReplyDeleteஇது பாய்ன்ட்...
டிஸ்கி: அதான் குறை சொல்லியாச்சே அப்பறம் என்ன
ReplyDeleteஅன்னிக்கே நான் முடிவெடுத்துட்டேன் ஏர் இந்தியாவில் போவதில்லைன்னு.///
ReplyDeleteநீங்க வருவது இல்லை அதான் ஏர் இந்தியா நஷ்டத்தில் இருக்கு
please cool down take it easy...
ReplyDeleteகவி..... நீங்க எங்கேயோஓஓஓஓ இருக்கவேண்டியவங்க.... மாறி இங்க இருக்கிறீங்க.... :).
ReplyDelete//டிஸ்கி: வெளிநாட்டுக்குப் போயிட்டா உங்களுக்கெல்லாம் இந்தியாவை குறை சொல்றதே வேலையாப்போச்சுன்னு கும்ம வந்துடாதீங்க. தப்பை தப்புன்னு சொல்ல இந்தியாவில்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. //// உஸ்ஸ்ஸ் மெதுவாக் கதையுங்கோ கவி....:)))
ithu unmaithan ,they cancelled flight without any information .this extends to middle east routes also.
ReplyDeletefor a comedy solution read this
http://senthil1426.blogspot.com/2010/08/neengal.html
உங்களுக்கு மட்டுமா?
ReplyDeleteஎனக்கும் இதுபோல் அனுபவம்
உண்டு. எல்லோருக்குமே
இந்த ஏர் இந்தியா அனுபவம்
இருக்குமென்று நினைக்கிறேன்.
///கண்ணுக்கு தெரியாத எழுத்துல ஒரு லைனை கண்டிஷன்னு போட்டு வச்சுக்கிட்டு என்ன வேணும்னாலும் செய்யலாமா? என்ன கொடுமை சரவணா இது :(. ///
ReplyDeleteஇது சொன்னிங்களே.. ரொம்பவும் கரெக்ட்.. :(
நிறைய பேரு.. இந்த கண்ணுக்கு தெரியாத எழுத்துல தான் காலமே ஓட்டுறாங்க..
///தப்பை தப்புன்னு சொல்ல இந்தியாவில்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை//
ReplyDeleteஅது...
ஒரு மாசம் முன்னாடி திருவனந்தபுரம் to கத்தார் இன்டியன் ஏர்லைன்ஸ் பிளைட்டுக்குள்ள 13 மணிநேரம் பயணிகளை உக்கார வச்சு அப்புறம் சாவகாசமா வந்து அது கேன்சல்ஆயிடுச்சுன்னு சொன்னானுங்க...கொடுமை...
இருக்கறதையே ஒழுங்கா ஓட்டமுடில....
இந்த லட்சணத்துல 111 விமானங்களை புதுசா வாங்கப்போறானுங்களாம்...
இதெல்லாம் நீங்க கேட்கவே மாட்டீங்களா...:))
ஏர் இந்தியா பற்றி அதை உபயோகிக்கும் அனைவருக்குமே தெரியும். இதுவரை அது சரியான நேரத்தில் கிளம்பியதும், வந்தடைந்ததும் மிக மிக அரிது..!
ReplyDeleteசரியான நேரத்தில் கிளம்பினாலும் சரியான நேரத்தில் சேர்வது மிக அரிது..!
பலமுறை "ஒரு நாள் தாமதமெல்லாம்" அதற்கு சர்வசாதாரணம்.
திடீர் திடீரென்று ரூட் மாத்தி விடுவது,
திடீர் திடீரென்று ரத்து செய்வது...(பைலட் லேட், பைலட் குடி போதையில் இருப்பதால், விமானக்கோளாறு அல்லது மினிஸ்டர் மகளுக்காக வெல்லாம்..!) என இதுவும் அடிக்கடி நடப்பதுதான்.
ஆறு மாதங்களுக்கு முன்னால் தமாமில் சுமார் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை விமானத்தில் சீட் இல்லை!!!
காரணம் : சென்னையிலிருந்து வந்தது சிறிய??? விமானம்!!!
பல முறை பல நாட்கள் விமானிகள் திடீர் வேலை நிறுத்தம்...
விமானத்தில் சில சமயம் எ/சி வேலை செய்யாமல் போய்விடுதல்...
சரியான உபசரிப்பு இல்லாமை...
வயதான ஏர் ஹோஸ்டஸ்(?)
என்று எவ்வளவோ பேருக்கு ஏர் இந்தியாவின் மீது வெறுப்பு இருகிறது.
இவை எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளலாம்.... சொல்லப்போனால் இவை எல்லாமும் ஒன்றுமே இல்லை...
ஆனால்...
ஒன்றே ஒன்றை மட்டும் மன்னிக்கவே முடியாது...
அதை சகித்துக்கொள்ளவே முடியாது...
கை மீறி போய் விட்ட அதை... நீங்கள் சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.
அது அந்த விமானிகள் நினைத்தால் மட்டுமே முடியும்...
(தொடரும்...part 2)
(part-2 continues...)
ReplyDeleteவிமானிகள் குடித்து விட்டு போதையில் விமானத்தை ஓட்டுவது... (???!!!)
கொடுமை...
மங்களூர் விமான விபத்து...
அவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள், 'இது சிறிய டேபிள் டாப் ரன்வே என்று தெரிந்தும்- பிரேக் கண்ரோல் கிடைக்காது என்று நன்கு அறிந்தும்' பாதி ரன்வேயில் இறக்குவார்களா? இரவாய் இருந்தால் பரவாயில்லை. விடியறகாலைதானே...
எவ்வளவுதான் விமான நிலையங்களை தொழில்நுட்பவசதி பெற்றதாக ஆக்கினாலும், விமானிகள் போதையின்றி தெளிவாக இருந்தால்தான் தொழில்நுட்பவசதிகள் அர்த்தம் உள்ளதாக அமையும்.
மங்களூர் பல டேபிள்டாப் ரன்வேக்கள் உலகில் உள்ளன. விமான நிலையத்தை மட்டும் குற்றம் சொல்வது போதாது...
சில ஆண்டுகளுக்கு முன், 'சென்னை சர்வதேச விமான நிலையம்' என்று தவறாக நினைத்து(?!) பக்கத்தில் உள்ள மிலிட்டரி ஏர் பேசில்(?) மிக மிக சிறியதூர மற்றும் குறுகிய ரன்வேயில் கச்சிதமாக, இதைவிட பெரிய 2x5x2 இருக்கை வசதி கொண்ட சவூதி ஏர்லைன்சை தரை இறக்கவில்லையா? (அதற்காக அவ்விமானிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டது வேறு விஷயம்...) "விழிப்புடன்" / "சுய உணர்வுடன்" இருந்தால் எவ்வளவு குறுகலான/நீளம் குட்டையான ரன்வேயிலும் தரை இறக்க முடியும் என்பதே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் இங்கே!
அது மட்டுமா....
(தொடர்ந்து படியுங்கள்...
பின்னூட்டத்தின் மூன்றாம் பகுதியை...
பயத்தில் உறைந்து விடுவீர்கள்...)
அக்டோபர் 21, 2009 அன்று மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு கிளம்பத் தயாராக இருந்த ஏர் இந்தியாவின் போயிங் 777-200. இந்த விமானம் மிகவும் மதிப்பு வாய்ந்த பெருமைக்குரிய விமானமாகக் 'கருதப்பட்டு' வந்தது. காரணம் இதுவரை ஒருநாள் கூட இந்த விமானம் தாமதமாகக் கிளம்பியதே இல்லையாம்.(அட அதிசயமே!!!)
ReplyDeleteமும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு எங்கும் நிற்காமல் செல்லும் 'நான் - ஸ்டாப்' விமானம் இது. 11 வெவ்வேறு 'டைம் ஸோன்'களை ஒரே மூச்சில் கடந்து செல்லும் இந்த விமானம், பயணிகளுக்காகக் கூட 5 நிமிடம் தாமதித்ததில்லையாம். இதனால் எப்போதும் இந்த விமானத்தில் இடம் பிடிக்க, இந்திய - வெளிநாட்டுப் பயணிகள் பெரிதும் விரும்புவார்களாம்.
ஆனால் முதல்முறையாக தனது விமானியால் தாமதத்துக்குள்ளாகியிருக்கிறது இந்த விமானம். இந்த குடிபோதை கமாண்டரின் பெயரை ஏர் இந்தியா வெளியிடவில்லை.
45 நிமிட தாமததுக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணிக்கு மாற்று விமானி ராமலிங்கம் வந்த பிறகு கிளம்பிச் சென்றதாம்.
இந்தியாவில் விமானிகள் குடித்துவிட்டு விமானத்துக்குள் ஏறக் கூடாது என்பது விதி. அதற்காகவே குடிபோதை அறியும் டெஸ்ட் வைக்கிறார்கள். (இதை பறப்பதற்கு முன்னர்தான் வைக்கிறார்கள். பறந்துவிட்டு வரும்போது வைப்பது கிடையாது இல்லையா? அதனால், பறக்கும் பொழுது குடிக்கிறார்கள்.) இந்த டெஸ்டில் முதல்முறை மாட்டுபவர்களை எச்சரித்துவிடும் ஏர் இந்தியா, மறுமுறை மாட்டினால் சஸ்பெண்ட் செய்கிறது.
ஆனால் கடுமையான தண்டனை என்று எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில் குடிபோதையில் பைலட்டுகள் தூங்கிவிட....
....மும்பையில் இறங்க வேண்டிய விமானம்
பாகிஸ்தானின் கராச்சி வரை போய்
திரும்பியதெல்லாம் நடந்திருக்கிறது.(?????!!!!!)
நல்லவேளை.. அத்துமீறி அவர்கள் வானில் பறந்ததால் சண்டாளர்கள் அவசரப்பட்டு நம் விமானத்தை சுடாமல் விட்டார்களே...!
அப்போதிருந்தே நான் ஏர் இந்தியா என்று ஒரு விமானம் இருப்பதையே மறந்து விட்டேனே...!
இதெல்லாம் அறிந்தும் இன்னும் ஏர் இந்தியாவில் பிரயாணிப்பவர்களை என்ன செய்யலாம்?
'தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்தாக' கைது செய்து உள்ளே போட்டுவிட வேண்டியதுதான்...!
இதை பத்தி நா ஒரு பதிவு போடலாமுன்னு இருந்தேன் . நீங்க போட்டுடீங்க . இது எல்லா வெளிநாட்டு சர்வீஸிலும் நடக்குது. அநியாயம்
ReplyDeleteநன்றி கெ.ஆர்.பி.செந்தில்!
ReplyDeleteநன்றி சௌந்தர்! நான் போகாததால் மட்டும் ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கணும்னு இல்லை. அதை அங்கு வேலை பார்ப்பவர்களே செய்து விடுவார்கள்.
நன்றி ரியாஸ்! எப்போதாவது தவறுகள் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தவறுகள் செய்வதே வாடிக்கையாகி விட்டால் ?! :(((((((
ReplyDelete//கவி..... நீங்க எங்கேயோஓஓஓஓ இருக்கவேண்டியவங்க.... மாறி இங்க இருக்கிறீங்க.... :). //
ReplyDeleteஅதீஸ் நான் மரத்து மேல எல்லாம் வரலை. எனக்கு உயரம்னா பயம் :(. நான் இங்கேயே இருந்துக்கறேன் :)
நன்றி அதீஸ்.
நன்றி செந்தில்1426! அதிக குழறுபடிகள் மிடில் ஈஸ்ட் ரூட்டில் தான் நடக்குதுன்னு நினைக்கிறேன்
ReplyDeleteநிஜாமுதீன் உங்களுக்குமா?! ஏர் இந்தியாவால் பாதிக்கப்படாதவர்கள் யாருமே இல்லேன்னு நினைக்கிறேன். நன்றி நிஜாமுதீன்!
ReplyDelete//நிறைய பேரு.. இந்த கண்ணுக்கு தெரியாத எழுத்துல தான் காலமே ஓட்டுறாங்க//
ReplyDeleteஇதைப்பற்றி தனி பதிவே போடலாம். அவ்வளவு இருக்கு குறிப்பா இந்த கிரெடிட் கார்ட் காரங்ககிட்ட கவனமா இருக்கணும். இல்லேன்னா நம்பளை திவாலாக்கிட்டுதான் விடுவானுங்க :(
நன்றி ஆனந்தி!
//ஒரு மாசம் முன்னாடி திருவனந்தபுரம் to கத்தார் இன்டியன் ஏர்லைன்ஸ் பிளைட்டுக்குள்ள 13 மணிநேரம் பயணிகளை உக்கார வச்சு அப்புறம் சாவகாசமா வந்து அது கேன்சல்ஆயிடுச்சுன்னு சொன்னானுங்க...கொடுமை...//
ReplyDeleteஅந்த நியூசும் பார்த்தேன்! கொடுமை வேறென்ன சொல்ல :(
//இருக்கறதையே ஒழுங்கா ஓட்டமுடில....
இந்த லட்சணத்துல 111 விமானங்களை புதுசா வாங்கப்போறானுங்களாம்...
இதெல்லாம் நீங்க கேட்கவே மாட்டீங்களா...:)) //
எனக்கு ஒரு ஃப்ளைட் வேணும்னு கேட்க சொல்றீங்களா?! :)).
நீங்க வேற பிரதாப் இவனுங்ககிட்ட உருப்படியா நாம எதுவுமே எதிர்பார்க்க முடியாது. முடிஞ்ச வரைக்கும் நம் பயணங்களை வேற ஏர்லைன்சுகளில் வச்சுக்கிட்டா பிரச்சினை இல்லை :). இல்லேன்னா புலம்ப வேண்டியதுதான் :(
நன்றி பிரதாப்!
ஹைய்யோ! பின்னூட்டத்தையே ஒரு பதிவு அளவுக்கு போட்டுட்டீங்க :). நன்றி UFO!
ReplyDelete//ஆறு மாதங்களுக்கு முன்னால் தமாமில் சுமார் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை விமானத்தில் சீட் இல்லை!!!
காரணம் : சென்னையிலிருந்து வந்தது சிறிய??? விமானம்!!!//
இந்த கூத்து வேற நடக்குதா?!
//'தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்தாக' கைது செய்து உள்ளே போட்டுவிட வேண்டியதுதான்...! //
சத்தம் போட்டு சொல்லதீங்க! இது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :((
நீங்கள் சொல்வது உண்மைதான்... கஸ்டமர் சர்வீஸ் சுத்தமாக இல்லை...
ReplyDelete//இதை பத்தி நா ஒரு பதிவு போடலாமுன்னு இருந்தேன் . நீங்க போட்டுடீங்க . இது எல்லா வெளிநாட்டு சர்வீஸிலும் நடக்குது. அநியாயம் //
ReplyDeleteஹை நான் முந்திக்கிட்டேனா?! அப்போ வடை எனக்கே எனக்கா :)
எல்லாரும் கிண்டல் பண்ற அளவுக்கு இருக்கு ஜெய்லானி!
ஒருமுறை அப்பா அம்மாவை ரிசீவ் பண்ணுவதற்காக ஏர்போர்ட்டுக்கு டேக்சியில் போய்க் கொண்டிருந்தோம். அப்பா அம்மா வந்து காத்திருக்க வேண்டியதாயிடக் கூடாதேன்னு ட்ரைவரிடம் கொஞ்சம் சீக்கிரம் போக முடியுமான்னு கேட்டேன். அவர் எந்த ஃப்ளைட் என்று கேட்டார். ஏர் இந்தியா என்றேன். கவலைப்படாதீங்க அது லேட்டாத்தான் வரும் அப்படீன்னு கூலா சொல்றார் :(. அவர் சொன்ன மாதிரியே ஃப்ளைட் 2மணிநேரம் தாமதமாகத்தான் வந்தது.
நன்றி ஸ்டீபன்! கஸ்டமர் சர்வீஸா கிலோ என்ன விலைன்னு கேட்பாங்க :(
ReplyDelete//அவர் எந்த ஃப்ளைட் என்று கேட்டார். ஏர் இந்தியா என்றேன். கவலைப்படாதீங்க அது லேட்டாத்தான் வரும் அப்படீன்னு கூலா சொல்றார் :(. அவர் சொன்ன மாதிரியே ஃப்ளைட் 2மணிநேரம் தாமதமாகத்தான் வந்தது. //
ReplyDeleteஹா..ஹா.. லோக்கல்ல விலை போகாத கத்திரிகாயா வெளி நாட்டில விலைபோயிடும்..? உண்மைதான்
@ஜெய்லானி
ReplyDelete:-))
ஃபிளைட்டுக்கு டயர் எப்படி மாத்துவாங்கன்னு நீங்க பாத்துருக்கீங்களா? நான் பாத்திருக்கேன் லைவ்வா திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில!! பிளைட்டுல ஏறினப்புறம் “டயர் பங்சர்”னு கீழே இறக்கிவிட்டு, எங்களை அங்கயே நிக்கவெச்சே மாத்துனாங்க!! இப்படியெல்லாம் மக்களுக்கு டெக்னிக்கல் நாலெட்ஜ் ஊட்டுற ஏர் இந்தியாவை நீங்க பழிக்கிறது நெம்பத் தப்புங்கோ!!
ReplyDeleteஇந்த கூத்தெல்லாம் வேற நடக்குதா?! கொடுமைடா சாமி! வேற என்னத்த சொல்ல :-(
ReplyDeleteநன்றி ஹுசைனம்மா!!!
பொதுவா கவர்ன்மெண்ட் சர்வீஸ்னாலே அலட்சியம்தான் ..ஏர் இந்தியா மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன?
ReplyDeleteஅதனாலதான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு மாறி வருவதை யாரலயும் பலமா எதிர்க்க முடியலை..
பேசாம ஏர் இந்தியாவ இந்தியன் ஏர்லைன்ஸோட இணைச்சுடலாம்
Hi,
ReplyDeleteIn my last 16 years (living in abroad - 9 yr in SE Asian Countries, 4 yr in Middle Eastern Countries and for the last 3 yr in Europe and travelled to 4 continents), I had only one time travelled in Air India (Bangkok to NDelhi with a hoppong in Kolkatta). It was horrble experiance of delay, no proper veg food (ordered before), no maintenance of air craft etc.
By GOD's grace, I have never experianced that again..
(enjoyed smoking in that flight since it was allowed by that time -1995)
file a case and sue them.
ReplyDelete//ப்ரியமுடன் வசந்த் said...
ReplyDeleteபொதுவா கவர்ன்மெண்ட் சர்வீஸ்னாலே அலட்சியம்தான் ..ஏர் இந்தியா மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன? //
உண்மைதான் வசந்த்! நீங்க சொல்றமாதிரி ஏர் இந்தியா தனியார் வசமாக்கப்படட்டும் இப்ப நடக்கும் குழறுபடிகள் அனைத்தும் காணாமல் போகும். நன்றி வசந்த்
நன்றி ஷங்கர்! நிறையபேர் முடிந்தவரை ஏர் இந்தியாவை தவிர்த்து விடுகிறார்கள் :(
ReplyDelete//என்.கே.அஷோக்பரன் said...
ReplyDeletefile a case and sue them. //
கோர்ட்டுக்கு போனாலும் நியாயம் கிடைக்காது. ஏன்னா அவனுங்கதான் terms&conditions ல் இதையும் ஒரு கண்டிஷனா போட்டிருக்கானுங்களே!
நன்றி அஷோக்பரன்!
எமிரேட்ஸ் விமானங்களில் பயணம் செய்யுங்கள்
ReplyDeleteகல்யாணம் ஆன கையோட (10 நாளில்) என்னைவிட்டுட்டு எங்க ஆள் தனியா ஜெனிவா போனார்... ஏர் இந்தியாவில் தான்... சூப்பரா மாட்டினார் 2 நாள் ஃப்ளைட் கேன்சல் ஆகி, எப்போ அடுத்த ஃப்ளைட்டுன்னு தகவல் இல்லாம.... "என்னை விட்டுட்டு போனா இப்படி தான்"னு சொன்னாலும் அந்த இரண்டு நாள் அவரை தொடர்பு கொள்ள முடியாம நாங்க தவிச்ச தவிப்பு... :(
ReplyDeleteஇது இப்படின்னா எமிரேட்ஸ் ஒரு படி மேலே... எப்பவாது எடுத்தாலும் கவனிப்பு ப்ளைட் உள்ள ஏர் இந்தியா நல்லாவே இருக்கும். எமிரேட்ஸ் எல்லாம் கடுப்படிக்குங்க. என்னவோ அவங்க அப்பன் சம்பாத்தியத்தில் நாம ஓசியில் பயணம் செய்யுற மாதிரி... பார்த்தாலே அப்பலாம்'னு தோணும்.
ஏன் கவி... நாம புலம்பாம புது ஏர்லைன்ஸ் துவங்கிட்டா என்ன???!!! எவ்வளவோ செய்துட்டோம்... இதை செய்ய மாட்டோமா???