நேற்று ஒரு மலையாள சேனலில்(அம்ரிதா டிவி) பார்த்த ஒரு நிகழ்ச்சி இப்படி கூடவா மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் இருப்பார்கள் என்று கோபப்பட வைத்தது.
அது 'கதையல்ல நிஜம்' போன்றதொரு நிகழ்ச்சி. பல பிரச்சினைகளுக்கும் இரு தரப்பினரையும் அழைத்து ஒரு லீகல் பேனல்(Legal pannel) முன்பு வைத்து பேசி சுமூகமான முடிவை எட்ட உதவுகிறார்கள். சில எபிசோடுகளில் சுமூக முடிவை எட்டாமல் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறோம் என்று பிரிவதும் நடக்கிறது.
நேற்று நடந்த நிகழ்ச்சியின் சுருக்கம் இதோ.
24வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த ஆறாவது வாரத்தில் ரத்தப்போக்கு ஏற்படவே உடனே கணவரும் மாமியாரும்(கணவரின் அம்மா) சேர்ந்து பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கர்ப்பம் கலைந்து விட்டதாகவும் டி அண்ட் சி செய்யவேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்கள். கணவரும் சம்மதித்து அட்மிட் செய்திருக்கிறார்.
திடீரென்று ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து நர்சுகளும் டாக்டரும் உள்ளே போவதும் வருவதுமாக பரபரப்பாக இருந்திருக்கின்றனர். ஒருவர் வந்து அந்த பெண்ணின் கணவருக்கு ப்ளட் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூட்டிக் கொண்டு போய் ரத்த சாம்பிள் எடுத்திருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து கணவரின் சகோதரியை அழைத்து பலரின் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு ஹெச் ஐ வி பாசிட்டிவ் எனவும் பயப்பட வேண்டாம் இன்னும் 20வருடங்கள் உயிரோடு இருப்பார் எனவும் சொல்லியிருக்கிறார். குடும்பத்தினருக்கு பயங்கரமான அதிர்ச்சி. இதற்கிடையே கணவரின் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் வரவும் அவருக்கு நெகட்டிவ் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
மருத்துவனை ஊழியர்கள் பலரும் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் போவதும் அந்த பெண்ணை எட்டிப் பார்ப்பதுமாக இருந்துள்ளனர். ஆனால் அப்பெண்ணோ சுயநினைவற்ற நிலையில்(அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டிரூப்பதால்). அந்த பெண்ணின் மாமியார் பொறுக்க முடியாமல் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் நுழைந்ததும் அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்துள்ளது. அந்த பெண்ணின் மீது எந்த துணியும் இல்லாமல் அப்படியே படுக்க வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான பலரும் (ஆண்கள் உட்பட) வந்து எட்டிப் பார்த்து விட்டு போயிருக்கின்றனர். எந்த ஒரு நர்சும் அந்த பெண்ணின் மீது ஒரு போர்வையை எடுத்துப் போடக் கூட மனமற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். அருகில் செல்லவே தயங்கியிருக்கின்றனர்.
அந்த மாமியாரும் அவரது பெண்ணும் சேர்ந்து இந்த பெண்ணுக்கு உடை போட்டு விட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து நடந்து மூன்று கட்ட பரிசோதனைகளிலும் அந்த பெண்ணுக்கு ஹெச் ஐ வி நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளது. அந்த மூன்று டெஸ்ட்களும் முடிந்து ரிசல்ட் வரும் நாள் வரை அந்த பெண்ணுக்கு உற்ற துணையாக இருந்து கவனித்துக் கொண்டது கணவரும் மாமியாரும்தான். அந்த பெண்ணின் தாய்க்கு தகவல் தெரிவித்து அவரையும் கலங்கச் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை. ஒருவேளை பாசிட்டிவ் ஆக இருந்தால் மூவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.
இதன் பின்னர் முதலில் சென்ற மருத்துவமனையை தொடர்ந்து விளக்கம் கேட்டதற்கு சரியாக பதிலளிக்காமல் இழுத்தடிதிருக்கின்றன்ர். நேற்றைய நிகழ்ச்சிக்கும் அவர்கள் வரவில்லை. மருத்துவமனைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க எல்லா விதத்திலும் உதவுவதாக அம்ரிதா டிவி உறுதியளித்துள்ளது .
எனக்குத் தோன்றிய சந்தேகங்கள்
1. ஹெச் ஐ வி டெஸ்ட் ரிசல்ட்டின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
2. டி அண்ட் சி செய்யப்படும் பெண்ணுக்கு அவரது அனுமதியில்லாமலேயே ஹெச் ஐ வி டெஸ்ட் செய்ய வேண்டியதின் அவசியம் என்ன?
3. முதல் டெஸ்டில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தால் அடுத்த இரண்டு கட்ட சோதனைகளுக்கு பின்னர் மட்டுமே பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
4. ஹெச் ஐ வி தொடுவதால் தொற்றுவதில்லை என்பது மருத்துவருக்கும் அங்கு வேலை பார்க்கும் நர்சுகளுக்கும் தெரியாதா?
5. அந்த கணவரும் மாமியாரும் கொஞ்சம் விவரம் உள்ளவர்களாக இருந்ததால் அந்த பெண்ணை அங்கேயே நிராதரவாக விட்டுச் செல்லாமல் வேறுமருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தாலும் அந்த குடும்பத்தினர் அனுபவித்த மனவேதனைகளுக்கு யார் பரிகாரம் செய்வார்கள்?
இதுபோன்ற மருத்துவர்கள் உண்மையிலேயே மருத்துவம் படித்தவர்கள்தானா? முதலில் அவர்கள் மனிதர்கள்தானா?
இந்த லட்சணத்தில் அந்த மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதாம் :(. அங்கீகாரம் கொடுப்பதற்குத்தான் கேதன் தேசாய் போன்றவர்கள் இருக்கின்றனரே! இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த அஞ்சி பாயிண்டும் மிக சரியான பாயிண்டுதான் ..
ReplyDeleteமுதல்ல இந்த டாக்டர்ரிலிருந்து டெக்னீஷியன் வரை எல்லோருடைய சர்டிபிகேட்டை செக் பண்ணனும்.. இல்ல குஞ்சுமணிக்கு குடுத்த தண்டனைதான் இவங்களுக்கு இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு..தீர்ப்ப்ப்பு.. .தீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பூஊஊஉ . ஹும் இப்பவே மூச்சு வாங்குது..யப்பா..கொடுமைடா சாமீஈஈஈ
ஏங்க, ஹெச்.ஐ.வி. டெஸ்ட் ரிசல்ட் ஒரு மணிநேரத்துலயே (ஆப்பரேஷன் நடக்கிற நேரத்துக்குள்ள) கிடைச்சிருமா என்ன?
ReplyDeleteஆஸ்பத்திரி பேரைச் சொன்னா நாங்களும் தப்பிச்சுக்குவோம்ல? (நிகழ்ச்சியில சொன்னாங்கதானே?)
அருமை....
ReplyDeleteஇப்படியும் நடக்கிறதா?.. அங்கு நடந்தது உண்மைதானா? என்று எனக்கு சந்தேகம் வருகிறது.. இந்த டீவி ஷோக்களின் நம்பகதன்மையை வைத்து தான் கேட்கிறேன்... :)
ReplyDeleteம்ம்.. கவி.. அஞ்சு பாயிண்டுமே சரியானவை தான்.. ஆனா எந்தளவு உண்மையானவைன்னும் தெரியல.. இதுகூடத் தெரியாமயா ஆஸ்பத்திரி நடத்துவாங்கன்னு இருக்கு :) பேஷண்ட்க்கு உரிய உரிமைகள நம்ம மருத்துவமனைகள் சரியா செயல்படுத்தறதில்ல.. இங்க அந்த விஷயத்துல ரொம்பவே பார்ப்பாங்க..
ReplyDeleteசில சமயம் பணம் பிடுங்குவதற்காகவும் நடந்தத ரொம்பவே மிகைப்படுத்தி சொல்றவங்களும் உண்டு.. மூன்று பேரும் (மாமியாரையும் சேத்து :)) ) தற்கொல பண்ணிக்குவோம்ன்னு சொல்லியிருக்காங்க.. இது கொஞ்சம் ஓவராப் படுது.. மருத்துவமனைத் தரப்புல இருந்து ஏன் வரலன்னு தெரியல.. என்ன நடந்ததுன்னு அவங்ககிட்டயும் விசாரிக்கனும்..
ReplyDeleteகவி, இதை வாசிக்க எனக்கு ரத்தம் எல்லாம் கொதித்ததுபோலாகிவிட்டது. உண்மையிலேயே சகிக்க முடியவில்லை, அப்போ அந்தப் பெண்ணுக்கும், அக் குடும்பத்துக்கும் எப்படி இருக்கும். அவர்களுக்கு ஆண்டவன் நல்ல தைரியத்தைக் கொடுக்கட்டும். இப்படி பல பல சம்பவங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ReplyDeleteஎல்லாம் பணத்துக்காகவும், இப்படியான சந்தர்ப்பங்களில் சில மனிதர்கள், தவறு செய்தவர்களை, ஏதோ புழு பூச்சியைப் போல பார்ப்பதும், தாம் ஏதோ கடவுளின் அஸிஸ்டெண்ட் ... தவறே செய்தாவர்கள் என்பதுபோல முகம் சுழிப்பதும்தான் என்னால் அதிகம் பொறுக்கமுடியாமலிருக்கும்.
புத்திசாலித்தனமான கேள்விகள். இந்த சம்பவம் ஊடகம் வரைக்கும் வந்ததே பெரிய விசயம். இதுபோன்ற பல சம்பவங்கள் புதைக்கப்படுகின்றன.
ReplyDeleteஒவ்வொன்றுக்கும் கவுன்சில்,ஆணையம், கட்டுப்பாடு வாரியம் ஆயிரம் இருந்தும் இந்தியாவில் மட்டுமே பலதுறைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இந்தியாவுல பொறந்த நமக்கு நாமே பாதுகாப்பு.
அந்த மருத்துவமனையை நினைத்து கோபம் வந்தாலும்..அந்த குடுப்பதை நினைத்து பெருமை படுகிறேன்
ReplyDeleteகவி சிவா..நான் அறுசுவை ananthi5 ..உங்க ப்ளாக் சமீபமாக படிக்க ஆரம்பிச்சுருக்கேன்..எல்லாமே நச்சு..நச்சுனு முகத்தில் அறையிற மாதிரியான சமூக கோவங்களை உங்கள் எழுத்துக்களில் காட்டுறிங்க..விஸ்வநாதன் ஆனந்த் தலையங்கத்தில் இருந்து தான் படிக்க ஆரம்பிச்சேன்..பதிவு போட முடியலே..இப்போ இந்த மருத்துவர்களின் திமிரு போக்கு..நிகழ்ச்சி ரொம்பவே அதிர்ந்துட்டேன்..நீங்கள் இதெல்லாம் பங்கு போடுவதற்கு பிடியுங்கள் உங்கள் வாழ்த்துக்களை!!உங்கள் எழுத்துக்களில் ஒரு கோவம்,புத்திசாலி தனம் தெரியுது கவிதா..
ReplyDeleteஅன்புடன்,
ஆனந்தி.
@ஜெய்லானி
ReplyDeleteநன்றி ஜெய்லானி. சர்ட்டிஃபிகேட்டை செக் பண்ணணுமா? அதெல்லாம் கரெக்டா இருக்கும். அவங்க பிட் அடிச்சு பாசானவங்களா இருப்பனுங்க :(
நன்றி ஹுசைனம்மா! முதல் கட்ட பரிசோதனை முடிவு ஒருமணிநேரத்துக்குள் கிடைத்து விடும். எனக்கு ஒரு மருத்துவமனையில் ரிசல்ட் கொடுத்தாங்கப்பா(முடியுமா இல்லையான்னு மருத்துவர்கள் விளகினால் நல்லா இருக்கும்)
ReplyDeleteஆனால் அதை மட்டும் வைத்து பாசிட்டிவ் என கன்ஃபர்ம் பண்ண முடியாது கூடாது.
மருத்துவமனை பெயரை வெளியிடுவதில் ஏதும் சிக்கல் வருமான்னு தெரியலை. அதனால்தான் சொல்லவில்லை. ஒரு தனியார் மருத்துவகல்லூரி மருத்துவ மனை. கோழிக்கோட்டில் இருக்கிறது. கண்டுபிடிச்சுக்கோங்க :)
நன்றி உலவு.காம்
ReplyDeleteநன்றி நாடோடி!. சில விஷயங்கள் வேண்டுமென்றால் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் சொல்லப்பட்ட சம்பவம் உண்மைதான்.
ReplyDeleteநன்றி சந்தூ! நம் நாட்டில் எதுவும் நடக்கும் :(. ஆனால் எல்லா மருத்துவ மனைகளும் அப்படியில்லை சந்து. அந்த நல்ல மருத்துவமனை பற்றிதான் அடுத்த பதிவு :)
ReplyDeleteமருத்துவமனை தரப்பு வந்து விளக்கம் கொடுத்திருந்தால் பிரச்சினையே இல்லையே. ஆனால் அவர்கள் ஓடி ஒழிவது ஏன்? அதனால்தான் சந்தேகம் வலுக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் லீகல் பேனலில் இரு தரப்பும் சம்மதித்து எடுக்கப் படும் முடிவை எந்த கோர்ட்டிலும் போய் மாற்ற முடியாத அதிகாரம் உள்ள பேனல் KERALA STATE LEGAL SERVICES AUTHAORITY, INDIA தான் அந்த பேனல்.
நன்றி அதீஸ்! சில மருத்துவமனைகளில் நோயாளிகளை நடத்தும் விதத்தைப் பார்த்தால் அவ்வளவு கோபம் வரும்.
ReplyDeleteநன்றி பிரதாப். என்ன கவுன்சில் வாரியம் ஆணையம் இருக்கட்டும் அதிலும் ஆயிரம் ஓட்டைகள். நம்மால் கோபப்பட மட்டுமே முடிக்றது என்று வெட்கமாகவும் இருக்கிறது :(
ReplyDeleteநன்றி சௌந்தர்! உண்மைதான் அந்த மாமியாரை மனதார பாராட்ட வேண்டும்.
ReplyDeleteவாங்க ஆனந்தி! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :-).
ReplyDeleteதொடர்ந்து வாங்க :)
இவங்கள எல்லாம் சொல்லி என்ன பயன்.. மக்களுக்கு அடிப்படை மனிதாபிமானமே இல்லாமல் போய்விட்டுஇருக்கு...
ReplyDeleteஒரு 10 நிமிஷத்துக்கு முன்னே தான் எனக்கு தூபம் போட்டாங்க இங்க வந்து பாக்கலாமேன்னு... இப்ப ஒரே பயம் பிடிச்சிகிச்சி... இங்கயும் அப்படியான நிகழ்வுகள் இருக்கு. ஆனா மக்கள் ( ஆசுபத்திரில) கொஞ்சம் அன்பா இருப்பாங்க :))
வாங்க இலா! ஆனால் எல்லா மருத்துவர்களும் இப்படி மோசம் இல்லைன்னுதான் நம்பறேன். எதற்கும் நாம் கவனமாக இருப்பது நல்லது. எந்த வகை ட்ரீட்மெண்ட் என்றாலும் செகண்ட் ஒப்பீனியன் கேட்பது எப்போதுமே நல்லது. ஆனால் எமர்ஜென்சி என்று வரும் போது அவர்களை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது
ReplyDeleteஎங்கே போவது??யாரை நம்புவது??
ReplyDeleteஉலகத்தில் மனிதம் செத்து ரொம்ப நாட்களாகின்றன கவி! சுயநலமும் பணத்தாசையும்தான் உலகை ஆட்டிப்படைக்கிறது. அதனால்தான் இப்படியெல்லாம் தவறுகள் நடக்கின்றன! பதிவு ரொம்பவும் யோசிக்கவும் குமுறவும் வைக்கிறது!!
ReplyDeleteஉ
ReplyDeleteஇதே போல் மத்ரையில் என் தம்பி மனைவிக்கும்
போனது வேர ஒன்னுக்கு!
டெஸ்ட் பண்ண சொன்னது வேர ஒன்னுக்கு!
என்ன கொடுமை இது!
இவால்லாம் மருத்துவ ஒலகுக்கு வந்த சாபம்!
நன்றி காயத்ரி! யாரை நம்புவது... அது கண்டுபுடிக்கறது கொஞ்சம் கஷ்டம்தான் :(
ReplyDeleteவாங்க மனோம்மா! இப்படி சம்பாதிக்கும் பணத்தில் இவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா?
ReplyDeleteகருத்திற்கும் வருகைக்கும் நன்றி மனோம்மா!
வாங்க மாமி! தேடிப்புடிச்சு வந்துட்டீங்களா?! எல்லா இடத்துலயும் இப்படிப்பட்ட ஆட்கள் இருக்காங்க மாமி. சில விதிவிலக்குகளும் இருக்கு. அப்படிப்பட்ட நல்ல மருத்துவர்களை நாம் தான் தேடிக் கண்டு பிடிக்கணும் :). நன்றி மாமி
ReplyDeleteஹாய் ஆனந்தி... நானும் அந்த ப்ரோக்ராமை பார்த்தேன். இந்தமாறி நாம பத்துல ஒன்னை மட்டும் தான் கேள்விப்படறோம். இன்னும் நிறைய இருக்கு என் மாமனாரை கூட ரொம்ப முடியாம கேரள மாநிலம் திருவள்ளான்னு ஒரு இடத்துல சேர்த்திருந்தோம். அவர் ரொம்ப முடியாம தான் இருந்தாரு டயாலிசிஸ் பன்னினாங்க முதல் முறை அப்பவே அவர் உடல்நிலை ரொம்ப மோசமாருந்துச்சு. ஆனா அதை கண்டுக்கவே இல்லை மறுபடியும் பன்னினாங்க அப்பவே அவர் இறந்துட்டாரு ஆனா அதை எங்ககிட்ட சொல்லாமலே ரெண்டு நாள் வெச்சு எங்களை ஏமாத்திட்டாங்க. அதுமட்டும் இல்லாம எல்லா பில்லையும் பே பன்னினா மட்டும் தான் அவர் உடலை குடுக்கமுடியும்னு வேற சொல்லிட்டாங்க நாங்களும் எல்லாத்தையும் முடிச்சு போனோம். இதெல்லாம் அங்க ஒரு பொண்ணு சொல்லிதான் எங்களுக்கு தெரிஞ்சது... அது மெடிக்கல் காலேஜ் எல்லாருக்கும் க்ளாஸ் எடுத்துருப்பாங்க போல என் அப்பாவை வெச்சு... தெரிஞ்சப்ப எங்க மனசெல்லாம் பட்ட பாடு..... சொல்லனுமா என்ன.
ReplyDeleteநன்றி வினீத்! ஆமாம் சில மருத்துவமனைகளும் மருத்துவர்களும் மனிதத்தன்மையற்று நடந்து கொள்கின்றனர். என்ன்றுதான் திருந்துவார்களோ தெரியலை :(
ReplyDeleteரெம்ப அநியாயம்பா இது... ச்சே
ReplyDelete