எல்லாரும் அடிக்கடி பதிவர் சந்திப்பெல்லாம் நடத்துறாங்க. நமக்குத்தான் அதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லியே! தனியா இந்தத்தீவுல உட்கார்ந்து பொலம்பிக்கிட்டு இருக்காம கற்பனையிலாவது ஒரு பதிவர் சுற்றுலா நடத்துவோமேனு நடத்திட்டேன்.ஹி ஹி :-)
பதிவர் சந்திப்பு
நாள்: பிப்ரவரி 31 2011
இடம்: ப்ளாக் தீம் பார்க், இடுகையூர்.
எல்லோரும் இடுகையூர் சந்திப்பில் சந்தித்து அங்கிருந்து தீம் பார்க் போவதாக ப்ளான்.
வசந்த் எல்லோருக்கும் முன்பாகவே வந்து காத்திருக்கிறார். கூடவே ஒரு ரோபோவும் இருக்கிறது.
ஜலீலாக்காவும் வழக்கம் போல அட்டகாசமான சாப்பாட்டு ஐட்டங்களோடு வந்து இறங்குகிறார். இந்த முறை கூடவே சமைத்து அசத்தும் ஆசியாவும்.
வசந்த்: என்னக்கா மூட்டை முடிச்செல்லாம் பெரிசா இருக்கு?
ஜலீலா: நான் எங்க போனாலும் எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துட்டுதான் வருவேன். என் கையால சமைச்சுக் கொடுத்தாத்தான் எனக்கு திருப்தி ஹி ஹி
ஆசியா: என்ன வசந்த் ஒரு பொம்மையையும் கூடவே எடுத்துட்டு வந்திருக்கீங்க. சின்ன வயசு ஞாபகம் இன்னும் போகலியா?
வசந்த்: அய்யோ நல்லா பாருங்க அது ரோபோ. என்ன வேலை சொன்னாலும் செய்யும். உங்க மூட்டை முடிச்சு எல்லாத்தையும் அதுவே தூக்கிட்டு வரும்.
ஜலீலா: அதுசரி நாஞ்சில் தம்பி எங்கே இன்னும் காணோம்?
வசந்த்: அங்கே பாருங்க ஒருத்தர் கன்னத்துல கை வச்சுட்டு போஸ் கொடுத்துட்டே ஒருத்தர் வரார். அவர் நாஞ்சில்னுதான் நினைக்கறேன்.
ஜலீலா: கன்னத்துல கை வச்சுட்டு வர்றாரா? அப்போ கண்டிப்பா அது நாஞ்சிலாரேதான்
நாஞ்சில் பிரதாப்பும் வந்து சேர்கிறார்.
ஜெய்லானி மூக்கு சிவக்க கண்கலங்க வருகிறார்.
ஜலீலா: என்னாச்சு? ஏன் அழறீங்க ஜெய்லானி?
ஜெய்லானி: ஒண்ணுமில்லக்கா. ஒழுங்கா சுடுதண்ணி சமைக்கலேங்கறதுக்காக எங்க வீட்டுல பூரிக்கட்டை கைதவறி என் மண்டையில் விழுந்திடுச்சு அதான் அவ்வ்வ்வ்வ்வ்
நாஞ்சில்: சரி விடுங்க தல... குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இனிமே ஹெல்மெட் போட்டுக்கிட்டே சமையல் பண்ணுங்க
அப்போது மரத்தின் மீது ஏதோ சலசலப்பு... எண்ணம் அயகானால் எல்லாம் அயகாகும் அப்ப்டீன்னு ஒரு பூஸ் மியாவ் மியாவ்னு தலையில் கவசம் கையில் கோடரியோடு உட்கார்ந்திருக்கு.
ஆசியா: ஹேய் அதீஸ் பூஸ் என்ன இன்னும் மரத்து மேல உட்கார்ந்திருக்கீங்க. அதான் கவசமெல்லாம் போட்டிருக்கீங்கல்ல கீழே வாங்க
அதிரா@பூஸ்@அதீஸ்: ம்ஹூம். எனக்கு அ.கோ.மு. தந்தாதான் வருவேன்.
ஜெய்லானி: முடியாது முடியாது அ.கோ.மு. எல்லாம் எனக்குத்தான்
அது என்னடா அ.கோ.மு.ன்னு மற்ற எல்லாரும் திரு திருன்னு முழிக்கறாங்க.
அந்த நேரம் யாரையோ திட்டிக்கிட்டே கவிசிவா வர்றாங்க.
நாஞ்சில்: என்னாச்சு கவி இன்னைக்கு யாரைத் திட்டறீங்க? யாராச்சும் பல்பு கொடுத்துட்டாங்களா?
கவிசிவா: எல்லாம் இந்த ஏர் இந்தியாக்காரனைத்தான் திட்டிக்கிட்டு வரேன். இவனுங்க லேட்டாத்தான் கிளம்புவானுங்கன்னு தெரிஞ்சுதான் நேற்றே வந்து சேர்ந்துடணும்னு 5நாளைக்கு முன்பு உள்ள ஃப்ளைட்லயே புக் பண்ணினேன். பாழாப்போனவனுங்க 5நாள் தாமதமா புறப்பட்டு இப்பதான் வந்து சேர்ந்தானுங்க.
நாஞ்சில் பிரதாப்: இதுக்கெல்லாமா டென்ஷன் ஆவாங்க. சரி சரி விடுங்க
அதீஸ்: எனக்கு அ.கோ.மு வேணும்.
ஆசியா: அது என்னப்பா அ.கோ.மு. அதைத் தூக்கிப் போடுங்க பூஸ் கீழ வரட்டும்.
கவிசிவா: அது ஒண்ணுமில்ல ஆசியா. அவிச்ச கோழி முட்டையைத்தான் ஜெய்லானியும் அதிராவும் அப்படி அ.கோ.மு. ன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதுக்காக எப்ப பாரு ரெண்டு பேருக்கும் சண்டைதான்.
ஆசியா: இவ்வளவுதானா. அதான் நான் நிறைய கொண்டு வந்திருக்கேனே. சுடச்சுட முட்டை பஜ்ஜி போடலாம்னு நினைச்சு எடுத்துட்டு வந்தேன். இதோ பிடியுங்க.
பூஸ் முட்டையை முழுங்கிக் கொண்டே கீழே இறங்கி வருகிறது.
மேலே ஒரு ஃப்ளைட் வரும் சத்தம் கேட்கிறது. அவ்வளவுதான் கூட ஐந்தாறு முட்டையை அபேஸ் பண்ணிக்கிட்ப்டு பூஸ் ரோபோவின் பின்னே போய் ஒளிந்து கொள்கிறது.
எல்லோரும் சிரிக்க ஃப்ளைட்டிலிருந்து ஹைஷ் அண்ணாவும் ஜீனோ, இறங்கி வருகிறார்கள். ஜீனோவுக்கு ரோபோவைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை. உடனே என் இனிய இயந்திரா மொழியில் ரோபோவுடன் கதைக்க ஆரம்பித்து விட்டது.
அப்போது ரோபோவின் பின்னிருந்து கர்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம். ஜீனோ சுற்றும் முற்றும் தேடிப்பார்த்து பூஸ் அக்காவைக் கண்டதும் சந்தோஷம் தாங்காமல் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டது
தூரத்தில் எல் போர்ட் மாட்டி சீரியசாக ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.
பார்த்தவடன் எல்லோருக்கும் புரிந்து விட்டது.
எல்லோரும் கோரசாக: ஹேஏஏஏஏஏய் சந்தூஊஊஊஊ
சந்தூ@எல்போர்ட்: (இதுக்கு என்னான்னு ரியாக்ட் பண்ணனும்னு தெரியலன்னு சொல்லிக்கிட்டே) ஹாஆஆஆஆய்
நாஞ்சில்: லேட்டாச்சுப்பா கிளம்ப வேணாமா?
கவிசிவா: இன்னும் இமா வானதி இவங்கல்லாம் வர்றேன்னு சொன்னாங்க இன்னும் காணோமே.
அப்போது இமா கையில் பல பூக்கள் காய்களின் ஃபோட்டோக்களோடு வருகிறார். கூடவே ஆமையாரும்.
இமா: இது நான் நியூஸிலாந்தில் காட்டுக்குள் மாட்டிக்கிட்டபோது எடுத்த படங்கள். இதெல்லாம் என்ன பூ காய்னு யாருக்காவது தெரியுமா?
வசந்த்: ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க
அப்போது வானதி கேமரா மைக் எல்லாம் எடுத்துட்டு வர்றாங்க
ஜெய்லானி: என்னாது இதெல்லாம்?
வானதி: ஹி ஹி இங்கேயே சமையல் போட்டியும் நடத்திடலாம்னு..
நாஞ்சில்(மனதுக்குள்):அடடா தெரியாம இந்த கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டோம் போல இருக்கே! நம்ப பங்காளிக யாராவது வந்தாலூம் கும்மி அடிக்கலாம்.
அந்த நேரம் பார்த்து "நாடோடி" ஸ்டீபன் வருகிறார்
நாஞ்சில்: மக்கா நீயாவது வந்தியே! இங்க எல்லாம் ஒரு கேங்கா இருக்காங்க. அது சரி ஏன் லேட்டு?
ஸ்டீபன்: ஹி ஹி அது பக்கத்து வீட்டு மதிலேறி குதிச்சு மாங்கா பறிக்கும் போது மாட்டிக்கிட்டேன். அதான் அங்க இருந்து மாங்காயோட எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆக லேட்டாயிடுச்சு
எல்லோரும் கிளம்பி தீம் பார்க் போறாங்க. இனி தீம் பார்க்கில்...இவர்களோடு இன்னும் சிலரையும் சேர்த்து தீம் பார்க்கில் சந்திக்கலாம்....
அய்யோ பாவம் புள்ளைய தனியா புலம்பு வுட்டாய்ங்களே....:))
ReplyDeleteஎல்லாரும் இந்தோனேசிவுக்கு டிக்கெட் போடுங்கப்பா...ஒரு பதிவர் சந்திப்பை நடத்திட்டுத்தான் மறுவேலை...
//ஸ்டீபன்: ஹி ஹி அது பக்கத்து வீட்டு மதிலேறி குதிச்சு மாங்கா பறிக்கும் போது மாட்டிக்கிட்டேன்//
ReplyDeleteஸ்டீபன் மாங்கா திருடன மேட்டரையெல்லாம் உங்க பதிவுல போடாதீங்கன்னு சொன்னா கேட்கனும்...இதுதேவையா --??
ஹா ஹா கவி அசத்தல் ..அடுத்த பதிவை சீக்கிரம் தொடருங்கள்..அடுத்த பதிவர் சந்திப்பு இந்தோனேசியாவில் தான்...
ReplyDelete//இவனுங்க லேட்டாத்தான் கிளம்புவானுங்கன்னு தெரிஞ்சுதான் நேற்றே வந்து சேர்ந்துடணும்னு 5நாளைக்கு முன்பு உள்ள ஃப்ளைட்லயே புக் பண்ணினேன்//
ReplyDeleteஉங்க கடமை உணர்ச்சியை நினைச்சா அப்படியே புல்லரிக்குது..
//பாழாப்போனவனுங்க 5நாள் தாமதமா புறப்பட்டு இப்பதான் வந்து சேர்ந்தானுங்க.//
ReplyDeleteநல்லா பார்த்தீங்களா அது பேசஞ்சர் ப்ளைட்டுதானா!!!!! .. எனக்கு என்னவோ உங்களை பிளைட்டுனு சொல்லி கூட்ஸ் வண்டில ஏத்திட்டானுங்கனு நினைக்கிறேன்... :)
//ஸ்டீபன்: ஹி ஹி அது பக்கத்து வீட்டு மதிலேறி குதிச்சு மாங்கா பறிக்கும் போது மாட்டிக்கிட்டேன். அதான் அங்க இருந்து மாங்காயோட எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆக லேட்டாயிடுச்சு//
ReplyDeleteஎதுக்கு பறிச்சேனு சொல்லாம விட்டுடீங்க.. அதனால நான் சொல்லுறேன்.
வானதி சகோ நடத்தப்போற சமையல் போட்டில, ஆசியா அக்கா தான் நான் பறிச்சி வந்த திருட்டு மாங்காய் வைச்சு பச்சடி செய்ய போறாங்க.. :)
//நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஸ்டீபன்: ஹி ஹி அது பக்கத்து வீட்டு மதிலேறி குதிச்சு மாங்கா பறிக்கும் போது மாட்டிக்கிட்டேன்//
ஸ்டீபன் மாங்கா திருடன மேட்டரையெல்லாம் உங்க பதிவுல போடாதீங்கன்னு சொன்னா கேட்கனும்...இதுதேவையா --?? //
விடுங்க தல இவங்க எப்பவுமே இப்படித்தான் .. இதுக்கெல்லாம் பயந்தா பதிவு எழுத முடியுமாஆஆ.........
நல்லாயிருக்கு கற்பனை. ..வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனக்கு ஏன் தகவல் தரல கவிசிவ?? பிப்ரவரி 31 2011 நடக்கும் இந்த பதிவர் கூட்டதுக்காவது ஒரு ஓலை அனுப்புங்க ஹி.. ஹி..
ReplyDeleteம். ;) நடத்துங்க, நடத்துங்க. இந்த வாரம் ஒரே சிரிப்பு வாரமா இருக்கு. ;)
ReplyDeleteஅண்ணாக்கும் அம்பிக்கும் நல்ல இருந்திச்சு அறிமுக ஸீன். டாம் குரூஸ், பிராட் பிட் போல ப்ளேனிலை வந்து ( தொங்கி கொண்டு அல்ல ) இறங்கினாங்க.
ReplyDeleteஅதீஸ் பாவம். மரத்து மேலே ஹிஹி...
என்னை ஏன்ன்ன்ன் மைக் மோகன் ரேஞ்சுக்கு இப்படி அறிமுகம். நல்லாவே இல்லை அவ்வ்வ்வ்....
இமா, அந்த காட்டுப் பூக்களை விடவே மாட்டாங்களா???
சந்தூவை ஏன் இப்படி??? சரி போகட்டும்.
SUPER!
அட இது கூட சூப்பரு... எப்புடித்தான் யோசிக்கிறாங்களோ...
ReplyDeleteஉ
ReplyDeleteஅடடே! நான் இல்லாம பேட்டேனே!
பருப்பு இல்லாம கல்யாணமா!
பீர் இல்லாத பார்ட்டியா!
அடுத்த கெட் 2கெதர்ல என்னையும் சேத்துகோங்கோ!
அப்பரம் ஜீனோவுக்கு ஒரு ஹாய்!
//ம். ;) நடத்துங்க, நடத்துங்க. இந்த வாரம் ஒரே சிரிப்பு வாரமா இருக்கு. ;) //
இமா மேம் நீங்க இவ்ளோ பெரிசா பேசுவேளா!
அப்படியே வந்து என் பிளாக்குள் ஒரு ஸ்மைல் பண்ணுங்கோ!
அப்போதான் நேக்கு பெருமை!
நான் ஒரு பெருமை பீத்தரசி! ஹிஹிஹிஹி!
ஆஹா.. பதிவர் மீட்டிங் சூப்பர்..
ReplyDeleteஅடுத்து தீம் பார்க்-ல நடக்க போற விசயங்களும் தெரிய ஆசைங்க..
சீக்கிரம் போடுங்க.. நல்ல இருக்குங்க.. ;-))
(என்ன இருந்தாலும்... என்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்...
இட்ஸ் ஒகே.. இட்ஸ் ஒகே.. )
//பதிவர் சந்திப்பு
ReplyDeleteநாள்: பிப்ரவரி 31 2011//
கிகிகிகி
//வசந்த்: அய்யோ நல்லா பாருங்க அது ரோபோ. என்ன வேலை சொன்னாலும் செய்யும். உங்க மூட்டை முடிச்சு எல்லாத்தையும் அதுவே தூக்கிட்டு வரும்.//
ReplyDelete;)
//எண்ணம் அயகானால் எல்லாம் அயகாகும்//
ReplyDelete:))))))))))
பூஸ் யாருங்கோ?
//கவிசிவா: எல்லாம் இந்த ஏர் இந்தியாக்காரனைத்தான் திட்டிக்கிட்டு வரேன். இவனுங்க லேட்டாத்தான் கிளம்புவானுங்கன்னு தெரிஞ்சுதான் நேற்றே வந்து சேர்ந்துடணும்னு 5நாளைக்கு முன்பு உள்ள ஃப்ளைட்லயே புக் பண்ணினேன். பாழாப்போனவனுங்க 5நாள் தாமதமா புறப்பட்டு இப்பதான் வந்து சேர்ந்தானுங்க. //
ReplyDeleteஉயிரோட கொண்டு வந்து சேர்த்தாங்கன்னு சந்தோஷப்படுவீங்களா அத விட்டுப்போட்டு பொலம்புறீங்க!
//சந்தூ@எல்போர்ட்: (இதுக்கு என்னான்னு ரியாக்ட் பண்ணனும்னு தெரியலன்னு சொல்லிக்கிட்டே) ஹாஆஆஆஆய்//
ReplyDeleteஅது சரி
ஹா ஹா தமாஷு தமாஷு
ReplyDeleteநல்ல கற்பனை. ..வாழ்த்துக்கள்
ReplyDelete//நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஅய்யோ பாவம் புள்ளைய தனியா புலம்பு வுட்டாய்ங்களே....:))//
உங்களுக்காவது புரிஞ்சுதே நான் எம்பூட்டு பாவம்னு :)
நன்றி மேனகா. வாங்க வாங்க எல்லாரும் இந்தோனேஷியாவுக்கு வாங்க
ReplyDelete@நாடோடி
ReplyDelete//உங்க கடமை உணர்ச்சியை நினைச்சா அப்படியே புல்லரிக்குது.. //
ஹி ஹி
//நல்லா பார்த்தீங்களா அது பேசஞ்சர் ப்ளைட்டுதானா!!!!! .. எனக்கு என்னவோ உங்களை பிளைட்டுனு சொல்லி கூட்ஸ் வண்டில ஏத்திட்டானுங்கனு நினைக்கிறேன்... :)//
அப்படியும் இருக்குமோ :(
நன்றி மதுரை சரவணன்
ReplyDelete@அப்துல் காதர்
ReplyDeleteகடைசி வரியை படிச்சீங்களா...அடுத்த பதிவில் இன்னும் சிலரோடு தீம் பார்க்கில்...அந்த சிலரில் நீங்கலும் இருக்கீங்க :)
நன்றி இமா ;))))
ReplyDelete@ வானதி
ReplyDeleteஅண்ணனையும் தம்பியையும் நான் கூட அந்த ரேஞ்சுக்கு யோசிக்கலை. இனி தம்பியை கையில் புடிக்க முடியாதே துள்ளிகிட்டே இருப்பாரே :)
ஹாஹா வானதி என்னை சிரிக்க வைக்கறீங்க, இப்பதான் உங்களை மைக் மோகன் ரேஞ்சுக்கு யோசிக்கறேன். சிரிப்பு சிரிப்பா வருது. ஆனா என்ன மைக்குக்கு பதிலா உங்க கையில் உங்க கணவர் வாங்கிட்டு வந்த கத்திரிகாய் இருக்குது ஹா ஹா ஹா
@ரியாஸ்
ReplyDeleteஎல்லாம் ரூம் போட்டுத்தான் யோசிக்கறோம்(?!) :)
@மோகனா ரவி
ReplyDeleteமாமி எப்பவும் உங்களுக்கு அந்த நினைப்புதானா?!
கவலைப்படாதீங்க அடுத்த கெட் டுகெதர் அருப்புக் கோட்டையில் வச்சிடுவோம் :)
@ஆனந்தி
ReplyDeleteசும்மா அழக் கூடாது. தீம் பார்க்கின் "தீமே" நீங்கதான். அப்புறம் அவந்து என்னை ஏன் கெட் டுகெதர்ல சேர்த்தீங்கன்னு கேட்கக் கூடாது சொல்லிட்டேன் :)
@பிரியமுடன் வசந்த்
ReplyDelete:)))
பூஸ் யாருன்னு தெரியதா? "என் பக்கம்" அதிராதான் எங்கட பூஸ்.
//உயிரோட கொண்டு வந்து சேர்த்தாங்கன்னு சந்தோஷப்படுவீங்களா அத விட்டுப்போட்டு பொலம்புறீங்க!//
அது பாய்ண்டு :)
நன்றி காயத்ரி!
ReplyDeleteநன்றி வெறும்பய!(சாரி உங்க பெயர் எனக்கு தெரியலை)
///சும்மா அழக் கூடாது. தீம் பார்க்கின் "தீமே" நீங்கதான். அப்புறம் அவந்து என்னை ஏன் கெட் டுகெதர்ல சேர்த்தீங்கன்னு கேட்கக் கூடாது சொல்லிட்டேன் :) ///
ReplyDeleteஹ்ம்ம்..ஓகே ஓகே.. அழ மாட்டேன்.. (எவ்ளோ வலிச்சாலும் அழாம மெயின்டைன் பண்றேன்..)
:-))
நாஞ்சில் பிரதாப்பும் வந்து சேர்கிறார்///பின்னாடி ஒளி தெரிகிறதா
ReplyDeleteஎன்னை விடாம பூரி கட்டையோட ஏன் தொறத்துறீங்கன்னு இன்னும் புரியலையே..
ReplyDeleteபூஸ் இல்லாம வடை சட்னி சண்டை சரியாகலையே.. பூஸை கண்டு பிடித்து தருபவர்க்கு என்னைடம் இருக்கும் மீதீ அ கோ மு ஃபிரியா தரப்படும்
ReplyDeleteநல்லா ஜோக்கா இருக்கு தொடருங்க....!! :))
ReplyDeleteஇமாமாமீ கிட்ட ஒரு ஆமைதான் இருந்துச்சா நல்லா பாத்தீங்களா கவி..!!!
ஜெய்லானி: ஒண்ணுமில்லக்கா. ஒழுங்கா சுடுதண்ணி சமைக்கலேங்கறதுக்காக எங்க வீட்டுல பூரிக்கட்டை கைதவறி என் மண்டையில் விழுந்திடுச்சு அதான் அவ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteநாஞ்சில்: சரி விடுங்க தல... குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இனிமே ஹெல்மெட் போட்டுக்கிட்டே சமையல் பண்ணுங்க
ஹாஹ்ஹா.. ஜூப்பர் கவி..
//அந்த நேரம் யாரையோ திட்டிக்கிட்டே கவிசிவா வர்றாங்க.//
ReplyDeleteஎன்ட்ரி சீன் சூப்பர் கவி.. :))
கவி! ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க.. ரொம்ப காமெடியா இருக்கு.. அடுத்த ரிலீஸ் எப்போ??!!
ReplyDeleteஹேய்க்கு பதிலா ஹாய்யா? :))
ReplyDelete//ஐந்தாறு முட்டையை அபேஸ் பண்ணிக்கிட்ப்டு பூஸ் ரோபோவின் பின்னே போய் ஒளிந்து கொள்கிறது.//
ஐந்தாறு போதுமா? :))
வானதி மைக் மோகனா?? ஹாஹ்ஹா..
ReplyDeleteகவி..இப்படி கலாய்க்கிரிங்களே பா..உணர்ச்சிவசப்படும் கவிதிலகம் கவி யா இது..ராக்கிங் யு கவி..ஜமாயுங்க..
ReplyDelete@ Ananthi
ReplyDelete//(எவ்ளோ வலிச்சாலும் அழாம மெயின்டைன் பண்றேன்..)
:-)) //
இவங்க ரொம்ப்ப்ப்ப்ப நல்லவங்க :)
@சௌந்தர்
ReplyDeleteநாஞ்சிலார் மேல என்ன கோபம்? பாவங்க அவரு விட்டுருங்க :)
நன்றி ஜெய்லானி
ReplyDeleteஅது வேற ஒன்னுமில்லீங்க. உங்க பேரைக் கேட்டாலே சுடுதண்ணி, சந்தேகம், பூரிக்கட்டை இதெல்லாம்தான் முதலில் ஞாபகத்துக்கு வருது :)
இமா கையில் இன்னொரு ஆமையும் இருந்துச்சா அய்யோ என் கண்ணில் படாம தப்பிச்சிடுச்சே :)
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி சந்து. அடுத்த பகுதியில் உங்களோட சைக்கிளும் வரலாம் :)
ReplyDeleteநன்றி இலா! அடுத்த பகுதி வெகு விரைவில். நீங்களும் கலந்துக்கறீங்க :)
ReplyDeleteநன்றி ஆனந்தி! அது வேஏஏஏஏற கவி இது வேஏஏஏஏற கவி :)
ReplyDeleteபிப்ரவரி 31 2011 - உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லையா அம்மணி? ஹ ஹ ஹ... சூப்பர் சந்திப்பு கவி... ஹ ஹ ஹ
ReplyDeleteகலக்கிட்டிங்க கவி. எப்படியோ என்னை மறந்துட்டிங்க பதிவர் அழைப்புக்கு. சரி அழைக்கவிட்டாலும் இந்த விஜி கடைசியிலாவது வந்துட்டேன்.
ReplyDeleteநன்றி தங்க்ஸ்! அடுத்த பார்ட்டில் நீங்கதான் கலக்கியிருக்கீங்க :)
ReplyDeleteவிஜி நீங்க விழாக்கல் எல்லாம் முடிஞ்சு டயர்டா இருந்தீங்கள்ல. அதான்...ஹி ஹி.
ReplyDeleteபகுதி2ல் எல்லாரையும் பாட்டு பாடி சந்தோஷப் படுத்திட்டீங்களே :)
வணக்கம்...
ReplyDeleteஅருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...
கவி இன்று வலைச்சரத்தில் இந்த சுவாரஸ்யமான இடுகையை பகிர்ந்துள்ளேன்.நன்றி.
ReplyDeleteநன்றி தனபாலன் சார்!
ReplyDeleteநன்றி ஆசியா!