Friday, 24 September 2010

கவிதை கவிதை

இது நான் ஒரு கவிதைப் போட்டிக்காக கிறுக்கியது. தலைப்பு "வாய்ப்பும் வியப்பும்"

யாம் பெற்ற இ(து)ன்பம் இவ்வையம் பெறுக :-)

பத்தாண்டு உணவு தானிய கையிருப்பு
பட்டினி ஏழைக்கும் வயிறு நிறையும் வாய்ப்பு
படித்த சீமான்களின் பழுதான கொள்கைப் பிடிப்பு
பசித்தவன் வாய்க்கு எட்டாது தடையானது வியப்பு!
பத்தாயத்து எலிகளுக்கு உணவாய்
பயனற்றுப் போனதில் மனம் நொந்த வெறுப்பு

பகல் கொள்ளை கல்வி கட்டணம்
சீரமைத்த அரசின் ஆணை
பரிதவித்த பெற்றோருக்கு கிடைத்த வாய்ப்பு
தடை விதித்து தன்னிருப்பை உணர்த்திய
நீதிமன்ற ஆணை கண்டு வியப்பு

பட்டிகாட்டு பட்டாம் பூச்சிகள்- பாங்காய்
படிக்க கிடைத்த சமச்சீர் கல்வி வாய்ப்பு
பகல் கொள்ளை பள்ளிகளின் முறையீட்டை
புறம் தள்ளிய நீதியின் கருணை கண்டு வியப்பு

இருமொழி கல்வி திட்டம்
இது தமிழக அரசு வழங்கிய வாய்ப்பு
இந்தியா முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு
இழந்தது தமிழர் கூட்டம் என்பது வியப்பு

தமிழில் கற்பவருக்கு வேலைவாய்ப்பில்-முன்னுரிமை
தருவதாக செப்பியது நல்ல வாய்ப்பு
தமிழில் கற்றவருக்கு கிடைத்த வேலையின்
தரம் என்னவோ கடைநிலையில்.. என்னே வியப்பு

சாதிகள் இல்லை என்று பெரியார்
சமத்துவபுரமாய் வந்தது வாய்ப்பு
கல்வியில் வேலையில் சாதி கேட்டு
கலங்க வைப்பது வியப்பு

பெண்களுக்கு முப்பத்திமூன்று சதவீத ஒதுக்கீட்டு
மசோதா கொண்டு வந்தது வாய்ப்பு
மன்றத்தில் அதனை நிறைவேற்றாத
மடமையை கண்டு வியப்பு

காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
கர்வத்தோடு பெருமை கொள்ள கிடைத்த வாய்ப்பு
கடமை மறந்த நிர்வாகிகளின் அலட்சியத்தால்
கர்வம் இழந்து தலைகுனியும் நிலை கண்டு வியப்பு.

அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்ட
அரசின் கொள்கைகள் கண்டு வியப்பு
அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ள
அருமையாய் அமைந்தது இந்த வாய்ப்பு.

26 comments:

 1. சாதிகள் இல்லை என்று பெரியார்
  சமத்துவபுரமாய் வந்தது வாய்ப்பு
  கல்வியில் வேலையில் சாதி கேட்டு
  கலங்க வைப்பது வியப்பு////

  இது ரொம்ப சூப்பர். உண்மை

  ReplyDelete
 2. நன்றி சௌந்தர்!

  ReplyDelete
 3. உங்களிடமிருந்து
  நல்ல கவிதை கண்டு வியப்பு
  அதற்க்கு பின்னுட்டம் போட
  எனக்கொரு வாய்ப்பு...

  :)

  ReplyDelete
 4. நன்றி மேனகா!

  ReplyDelete
 5. @வசந்த்

  பின்னூட்டக் கவிதையா? சூப்பர்.
  நன்றி வசந்த்! (உள்குத்து எதுவும் இல்லையே:D)

  ReplyDelete
 6. "சமுதாய சிந்தனைச் சொல் கலந்த கவிதைகள்..
  உங்கள் கையால் பூவாய் தூவிய விதைகள் ..!
  விதைத்தவை உரியவர்கள் நெஞ்சை தைக்குமா?
  முல்லாய் திரும்பி வந்து நம்மை வதைக்குமா??"

  கிறுக்கிய கவிதைக்கு வியப்போடு வாய்ப்பு
  வந்து "கவி" திக்கு முக்காட வாழ்த்துகள்..!!
  ஹா..ஹா..ஹா..ஹா...ஆஆஆஆஆஆ

  ReplyDelete
 7. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

  ReplyDelete
 8. அடடே... டென்ஷன்ல இப்போ கவிதையா வேற எழுதா ஆரமபிச்சட்டிங்களா..பலே பலே..:)

  ரொம்ப நல்லாருக்கு... பாரதிதாசன் பாடல்கள் படிச்சா மாதிரி இருக்கு.
  ஆ.வி.க்கு அனுப்பி வைங்க கண்டிப்பா வெளியிடுவாங்க...ஒட்டுமொத்த நாட்டுமக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது.

  ReplyDelete
 9. வாய்ப்பும், விய‌ப்பும் க‌விதையில் ந‌ல்லா தான் இருந்த‌து..

  ReplyDelete
 10. வாழ்த்துக்களுக்கு நன்றி அப்துல்காதர்!

  //விதைத்தவை உரியவர்கள் நெஞ்சை தைக்குமா?//

  அவை பாறாங்கல்லாகி விட்டனவே :(

  ReplyDelete
 11. வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி ஜெய்லானி!

  ReplyDelete
 12. @நாஞ்சில் பிரதாப்

  என்ன பண்ண தினம் தினம் நியூஸ் பார்த்தாலே டென்ஷன் எகிறுது :(. அதையெல்லாம் எங்க தீர்த்துக்கரது அதான் இப்படி :)

  ஆ.வி. க்கு அனுப்பவா? ம்ம்ம் அனுப்பி பார்க்கிறேன் :). நன்றி பிரதாப்!

  ReplyDelete
 13. நன்றி 'நாடோடி' ஸ்டீபன்!

  ReplyDelete
 14. என்ன குதிரைக்காரரே இப்பிடி சொல்லிட்டீங்க!! கவி, கவிதைக்கு ப்ரைஸ்லாம் வாங்கி இருக்காங்க.

  இங்க இருக்கு விபரம், பாருங்க.

  http://www.arusuvai.com/tamil/node/16033

  பாராட்டுக்கள் கவி. ;)

  ReplyDelete
 15. வியப்போடு வாழ்த்தறேன்.. கவி.. நடப்பிலிருக்கும் பிரச்சனைகளை வியப்பும் வாய்ப்புமா எழுதி இருக்கீங்க.. வெரி குட்..

  இன்னும் ஒன்னு - ஒரே மாதிரி எழுத்தில தொடங்கணும், முடிக்கணும் அப்படின்ற விதிமுறைல இருந்து வெளியே வந்து, வார்த்தைகளைக் கோர்த்து ப்ரீ ப்லோல இருந்தா இன்னமும் நல்லாயிருக்கும்னு தோணுது..

  ReplyDelete
 16. நன்றி ரியாஸ்!

  நன்றி வானதி!

  நன்றி இமா(ம்மா) :)!

  நன்றி சந்தூ! இப்பத்தானே எழுத ஆரம்பிச்சிருக்கேன். இந்த விஷயத்தையும் ஞாபகம் வச்சுக்கறேன் :))

  ReplyDelete
 17. கவியின் கவிதையை கேட்கவும் வேண்டுமா?அருமை.ரொம்ப tough ஆன கவிதை.

  ReplyDelete
 18. கவியின் கவி அருமை!

  ReplyDelete
 19. கவியின் கவிதை அருமை!

  ReplyDelete
 20. நன்றி ஆசியா!

  நன்றி சாதிகா அக்கா!

  நன்றி மனோம்மா!

  ReplyDelete
 21. ///சாதிகள் இல்லை என்று பெரியார்
  சமத்துவபுரமாய் வந்தது வாய்ப்பு
  கல்வியில் வேலையில் சாதி கேட்டு
  கலங்க வைப்பது வியப்பு////

  மொத்த வாய்ப்பும், வியப்பும் அருமை பா.. :-)))

  ReplyDelete
 22. அருமை.நான் ஜட்ஜ் ஆக இருந்தால் பரிசு நிச்சயம்.

  ReplyDelete
 23. நன்றி ஆனந்தி!

  நன்றி ஆசியா! நீங்களே ஜட்ஜா இருந்திருக்கலாம். பரிசு கிடைக்கலை :)

  ReplyDelete