Friday, 10 September 2010

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊஊ- பகுதி2

பகுதி1



எல்லோரும் கிளம்பி பஸ்ஸில் ஏறும் சமயம் ஓட்டமா ஓடி வருகிறார் இலா. கூடவே விஜியும்.

இலா: ஹி ஹி மயில் குட்டி போட கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதான் நானும் லேட்டு

ஜெய்லானி: அதை நீங்க சொல்ல வேற செய்யணுமா. எங்களுக்கே தெரியுமே!

விஜி: நானும் ஃபெட்னா விழாவெல்லாம் முடிச்சு டயர்டா இருந்தேனா அதான் லேட்டாயிடுச்சு.

எல் போர்ட்: எங்களுக்காகவும் பாட்டு பாடுவீங்கல்ல.

விஜி: உங்களுக்கு இல்லாமலா?

விஜியின் இனிமையான பாடலோடு பயணம் தொடர்கிறது.

தீம் பார்க்கில்....

இமா அங்கிருக்கும் செடிகள் பூக்களோடு கையில் இருக்கும் ஃபோட்டோக்களை வைத்துக் கொண்டு உற்று உற்று பார்க்கிறார்

ஹைஷ்: என்ன இமா என்ன ஆராய்ச்சி நடக்குது?

இமா: இது என்ன பூ காய்னு பார்க்கறேன்.

ஹைஷ்: அதுக்கெல்லாம் இவ்வளவு கஷ்டப் பட வேணாம். வேலையை பூஸ்கிட்ட விட்டுடுங்க. வேலை கச்சிதமா முடிஞ்சிடும் :)

எல் போர்ட்: இமா இப்படிப் பார்த்தா ஒண்ணுமே புரியாது. அப்படியே ஒரு ஃபோட்டோவை செலக்ட் பண்ணிட்டு இப்போ பாருங்க எல்லாமே தெளிவா தெரியும் புரியும் :)

வானதி: ஹேஏஏய் இந்த லொகேஷன் நல்லா இருக்கு. இங்கயே சமையல் போட்டி நடத்திடலாம்.

கவிசிவா: நாட்டாமை அப்துல்காதர் இன்னும் வரலை. அதனால அந்த கத்திரிக்காய் மைக்கை உள்ளே வச்சுட்டு வாங்க. இல்லேன்னா 10கிலோ கத்திரிக்காய் வீட்டுக்கு அனுப்பிடுவோம்

நாஞ்சில்: ஆஹா இந்த இடத்தை பார்த்தவுடனேயே கவுஜ எழுதணும்னு தோணுதே!

ஜலீலா: ஏன் தம்பி ஏதாச்சும் பிலிப்பினோ பொண்ணு இந்தப் பக்கமா போச்சுதா?!

நாஞ்சில்: ஏங்க்கா நான் எங்க போனாலும் விடாம நானே மறந்து போன ஃபிலிப்பினோ பொண்ணை ஞாபகப் படுத்தறீங்க?

ஸ்டீபன்: அது ஒண்ணுமில்ல தல...அவங்க எல்லாம் அப்படித்தான். ஏதாச்சும் ஒரு வார்த்தை நம்ப வாயில இருந்து தப்பித் தவறி வந்திடுச்சுன்னா ஆயுசுக்கும் அதை வச்சே ஓட்டுவாங்க. அதுக்காக நாம நினைக்கறதை சொல்லாம இருக்க முடியுமா இல்ல பதிவு போடாமத்தான் இருக்க முடியுமா?

ஜலீலா: தம்பிங்கன்னா அப்படித்தான் கிண்டல் பண்ணுவோம். ஏற்கெனவே நாங்க மொட்டமாடி கவிஜ படிச்சு நொந்து போயிருக்கோம். இப்போ இன்னொரு கவிதையும்னா... தாங்க மாட்டோம். அதான் உங்களை டைவர்ட் பண்ண... ஹி ஹி

அப்படியே எல்லாரும் நடந்து போய்கிட்டு இருக்கும் போது ஒரு இடத்தில் கொஞ்சம் சைக்கிள்கள் வரிசையா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

எல் போர்ட்: அய்யோ என் சைக்கிள் இப்போ எப்படி இருக்கோ தெரியலியே :(. என் ஃப்ரெண்ட் அதை நல்லா கவனிச்சுக்கறாங்களோ இல்லையோ...

இலா: டேக் இட் ஈசி சந்து. தூசு படிஞ்சு போய் உங்ககிட்ட இருந்ததை விட சைக்கிள் இப்போ சந்தோஷமாவே இருக்கும்.

எல் போர்ட்: ?!?!?!?!

அப்படியே எல்லோரும் வேவ் பூல் பக்கம் வராங்க. பூலில் இருந்து யாரோ ஒருவர் நம் பதிவர்களைப் பார்த்து ஹாய் ஹாய்னு சொல்ற மாதிரி கையை ஆட்டறாங்க. எல்லோரும் திரும்பி ஹாய்னு சொல்றாங்க.

தண்ணீரைப் பார்த்ததும் பூஸ் அக்காவும் ஜீனோ தம்பியும் பயந்து நடுங்குகிறார்கள்

ஜீனோ: அக்கா அக்கா எனக்கு பயமா இருக்கு

பூஸ்(அழுகையை அடக்கியபடி): தம்பி அக்கா இருக்கறபோ பயப்படப்படாது. அக்கா மாதிரி தெகிரியமா இருக்கோணும். வா நாம அந்த சேருக்கு கீழே போய் உட்கார்ந்துக்கலாம்.

ஜீனோ: அக்கா நான் தண்ணியை பார்த்து பயப்படலை

பூஸ்: அப்புறம் தம்பி எதுக்கு நடுங்கற?

ஜீனோ: டோரா புஜ்ஜிக்கிட்ட பெர்மிஷன் வாங்காம வந்துட்டேன். இப்போ வீட்டுக்கு போனா என்னை வெளுத்து வாங்கிடும். அதான் அவ்வ்வ்வ்வ்

பூஸ்: சரி சரி நீ அடி வாங்கின அப்புறம் கண்ணை தொடைச்சுக்க ஒரு பாக்ஸ் டிஷ்யூ இமா தருவாங்க. நான் உனக்கு தைலம் வாங்கித் தரேன். அக்கா இருக்கறப்போ தம்பி இப்பூடி பயப்படப்படாது.

அப்போது வேவ் பூலில் இருந்து கை ஆட்டிய அந்தப் பெண் தட்டுத் தடுமாறி கரைக்கு வந்து...

ஆனந்தி: அடப்பாவிங்களா தண்ணிக்குள்ள மூழ்கிக்கிட்டு இருக்கேன் வந்து காப்பாத்துங்கன்னு கையை ஆட்டுனா கூலா ஹாய்னா சொல்றிங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸுங்கப்பா நீங்க எல்லாம்

ஆசியா: இன்னுமா நீங்க நீச்சல் கத்துக்கல?

ஆனந்தி: ஹி ஹி நீச்சல் தெரியும் ஆனா திடீர்னு மறந்து போச்சு

ஆசியா: நீங்க தனியாவா வந்தீங்க?

ஆனந்தி: இல்ல அப்பாவி தங்ஸும்,காயத்ரியும் வந்திருக்காங்க
கவிசிவா: அவங்க எல்லாம் எங்க?

ஆனந்தி: அதோ அங்க இருக்காங்க. காயத்ரியை யாரோ ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டானாம். அவன அடிக்க துரத்திக்கிட்டு இருக்காங்க

பையன் எஸ்கேப்பாகி விட தளர்ந்து போய் காயத்ரி வருகிறார்

காயத்ரி: என்னை பார்த்து ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டான். என்ன தீம் பார்க் வந்து... என்ன பிரயோஜனம்... என்ஜாய் பண்ண முடியாம பண்ணிட்டானே!

வசந்த்: ஆமாமா பாட்டியைப் பார்த்து ஆண்டின்னு கூப்பிட்டா கோபம் வரத்தான் செய்யும்.

காயத்ரி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்பாவியும் வந்து சேர்கிறார்.

அப்பாவி: எல்லாரும் எப்படி இருக்கீங்க?

மைண்ட் வாய்ஸ்: இவ்வளவு நேரம் நல்லாத்தான் இருந்தாங்க. இப்பதான நீ வந்திருக்க. இனிமே கஷ்டம்தான்.

அப்பாவி: அப்பப்பா எங்க போனாலும் இந்த மைண்ட் வாய்ஸ் தொல்லை ரொம்ப ஜாஸ்தியா போச்சு

மைண்ட் வாய்ஸ்: ஏன் சொல்ல மாட்ட... உன்னோட பிளாகுக்கு நிறைய பேர் வர்றதே மைண்ட் வாய்சை படிக்கத்தான். அது என்னிக்குத்தான் உனக்கு புரியப்போகுதோ

அப்பாவி: சரி சரி ஒத்துக்கறேன். இப்போ என் இமேஜை டேமேஜ் பண்ணாதே ப்ளீஸ்

மைண்ட்வாய்ஸ்: அது நல்ல பிள்ளைக்கு அழகு

ஜெய்லானி: இந்த குளத்தில் இருக்கும் தண்ணி பச்சைத் தண்ணியா சுடு தண்ணியா

வசந்த்: பச்சைத்தண்ணிதான். ஏன் சுடுதண்ணி சமைக்கப் போறீங்களா?

ஜெய்லானி: பச்சைத் தண்ணியா? அப்போ ஏன் இது பச்சை நிறத்தில் இல்லை? பச்சை நிறத்தில் இல்லாததை ஏன் பச்சைத் தண்ணின்னு சொல்லணும்?

கவிசிவா: அடடா ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டாரு. இனி வரிசையா சந்தேகம் வருமே. வாங்க வாங்க இங்க இருந்து போயிடலாம். இல்லன்னா சந்தேகம் கேட்டே நம்மளக் கொன்னுடுவார்.

ஜெய்லானி: ஏன் நான் அடுத்த இடத்துக்குப் போனா எனக்கு சந்தேகம் வராதா? அப்படீன்னா ஏன் வராது? இங்கன்னா மட்டும் ஏன் சந்தேகம் வருது?

நாஞ்சில்: இது வேலைக்காகாது. ரெண்டு மூணு அ.கோ.மு. வை வாயில் வச்சு அமுக்குங்கப்பா.

ஜெய்லானி: என் வாயிலயா? உங்க வாயிலயா?

நாஞ்சில்: மக்கா ஸ்டீபா என்னை காப்பாத்தூஊஊஊஊ

வசந்த் ஜெய்லானியை திசை திருப்பும் விதமாக சிறிய விளையாட்டுப் போட்டியை நடத்துகிறார். இரண்டு படங்களைக் காட்டி அதற்கான வார்த்தையை கண்டு பிடிக்க சொல்கிறார்.

நாஞ்சில்: தல எனக்கு தூக்கம் வருது. அப்புறமா வந்து விடை சொல்றேன்

ஸ்டீபன் சரியான விடையை சொல்லி பரிசைத் தட்டி செல்கிறார்.

தூரத்தில் ஒருவர் மேஜை அடுப்பு எல்லாம் ரெடியா வைத்து கையில் சுத்தியோடு காத்திருக்கிறார். யாருன்னு பார்த்தா... நாட்டாமை அப்துல் காதர்.

அப்துல்காதர்: வானதி அக்கா சொன்ன மாதிரி இங்கேயே சமையல் போட்டியும் நடத்திடலாம்.

நாஞ்சில்: இது வேறயா?

ஸ்டீபன்: ஆசியாக்கா இந்தாங்க நீங்க கேட்ட மாங்காய். திருட்டு மாங்காய்தானே ருசிக்கும் அதான் பக்கத்து வீட்டில் திருடிக் கொண்டு வந்தேன். வெற்றி உங்களுக்குத்தான்.

மற்ற போட்டியாளர்களும் சமையலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க அப்பாவி ஒரு பெரிய பார்சலை எடுத்து மேசை மேல் வைக்கிறார்.

அப்துல்காதர்: அது என்ன இவ்ளோ பெரிசா எடுத்துட்டு வந்திருக்கீங்க

அப்பாவி: இட்லி குண்டானும்,நானே அரைத்த இட்லி மாவும்

மற்ற எல்லோரும்: என்னது அப்பாவி இட்லி சமைக்கப் போறாங்களா...... எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏஏப்...................

எல்லோரும் மறைந்து விட அப்பாவியாக தங்கமணி தான் கொண்டு வந்த மாவில் இட்லி செய்து சோகமாக தண்ணீரில் எறிந்து கொண்டிருக்கிறார்.

மைண்ட் வாய்ஸ்: எதுக்கும் கொஞ்சம் மெதுவாவே இட்லியை வீசு. இல்லேன்னா பாவம் தண்ணியில் உள்ள மீனெல்லாம் அடிபட்டு செத்துப் போகும்.

அப்பாவி: ?!?!?!?!

50 comments:

  1. அப்பாவி ?!?! எப்ப இருந்து இப்படி?எல்லா மேட்டரும் சூப்பர்.

    ReplyDelete
  2. மனசு சரியில்லாததால் ஏதும் கமெண்ட் அடிக்க முடியவில்லை:(

    நன்றாக இருக்கிறது.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. நன்றி ஆசியா! அப்பாவி ?!?! அப்ப இருந்தே அப்படித்தேன் :)

    ReplyDelete
  4. என்னாச்சு ஹைஷ் அண்ணா?! என்ன பிரச்சினை என்றாலும் விரைவில் சரியாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.

    ReplyDelete
  5. நாஞ்சில்: தல எனக்கு தூக்கம் வருது. அப்புறமா வந்து விடை சொல்றேன்////

    வைரஸ் தாக்கினா அப்படி தான் இருக்கும்

    ReplyDelete
  6. வாங்க சௌந்தர்! விடாம நாஞ்சிலைப் போட்டு வாரறீங்க என்னாச்சு?!

    ReplyDelete
  7. kavisiva said...
    வாங்க சௌந்தர்! விடாம நாஞ்சிலைப் போட்டு வாரறீங்க என்னாச்சு?!////

    அட ஒன்னும் இல்லை அவர் நண்பர் என்பதால் அப்படி

    ReplyDelete
  8. ஜலீலாக்கா பின்னாடி ஒளிஞ்சுகிட்டு என்னை போட்டுத்தாக்கிட்டிங்க...எத்தனை நாளா இதுக்கு பிளான் பண்ணிங்க....:))

    நீங்க பதிவர் சந்திப்பு எழுதுனமாதிரியே தெரியல... எல்லாரையும் டேமேஜ் பண்ணனும்னு ஒருமுடிவோட எழுதுன மாதிரியே இருக்கு.... என்னா வில்ல(லி)த்தனம்...:)

    ReplyDelete
  9. அடேய் சௌந்தர் ஏரியா விட்டு ஏரியா வந்து வாரிவுடறியா.... இருடி உனக்கு இருக்கு....

    ReplyDelete
  10. எல்லோருடைய காலையும் நல்லா வாரிவிட்டீங்க.
    அதே சமயம் காமெடியை நல்லா வாரி
    வழங்கிட்டீங்க. ஸூப்பர்!

    ReplyDelete
  11. பதிவர் சந்திப்பு நல்லா நடந்துச்சுன்னு சொல்லுங்க :-)))).கடைசியில மீனை மாட்டிவுட்டுட்டு நீங்கல்லாம் இட்லிகிட்டேயிருந்து தப்பிச்சிட்டீங்களே :-)

    ReplyDelete
  12. இர‌ண்டாவ‌து ப‌ய‌ண‌மா?.. சூப்ப‌ரு க‌விசிவா? இந்த‌வாட்டியாவ‌து நீங்க‌ வ‌ந்த‌ பிளைட்டை(கூட்ஸ் வ‌ண்டியை) காட்டி த‌ருவீங்க‌ளா?.. :)

    ReplyDelete
  13. இன்னும் ஆசியா அக்கா அந்த‌ மாங்கா ப‌ச்ச‌டி செய்ய‌லிய‌?.. செய்து முடிச்சி சாப்பிட‌ கூப்பிட‌ ம‌ற‌ந்திராதிங்க‌.. :)

    ReplyDelete
  14. ஆஹா நான் என்ன செஞ்சேன்..இப்படி போட்டு தாக்குரீங்க்களே

    ReplyDelete
  15. கவி நானே இந்த நாஞ்சிலாருக்காகபெரிய பிலிப்பைனி பதிவு ஒன்று ஊருக்கு போகும் முன் ஆரம்பித்தேன். படங்கள் சூப்பரா போட்டு வைத்துள்ளேன் ,

    கூடிய விரைவில் வரும்

    ReplyDelete
  16. பதிவர் சந்திப்பு லொல்லு சூப்பர் கவி

    ReplyDelete
  17. ஓ இதுக்கு பகுதி இரண்டு வேற வருதா?

    ReplyDelete
  18. @நாஞ்சில் பிரதாப்

    நான் கொஞ்சமாத்தான் சொல்லியிருக்கேன். ஜலீலாக்கா உங்களுக்காக தனியா ஒரு பதிவு எழுதிக்கிட்டு இருக்காங்களாம் :)

    ReplyDelete
  19. நன்றி நிஜாமுதீன். நம் நண்பர்கள்தானேங்கற நம்பிக்கைதான் :)

    ReplyDelete
  20. @அமைதிச்சாரல்

    ஹி ஹி தங்ஸ் இட்லி பதிவுலகில் ரொம்ப பிரபலம் ஆச்சே :)

    ReplyDelete
  21. @நாடோடி

    ஆசியாக்கா மாங்கவை எடுத்திட்டு போயிட்டாங்க. இட்லி மாவைப் பார்த்ததும்தான் எல்லாரும் ஓடிட்டாங்களே அப்புறம் எப்படி சமைக்கிறது :)

    ReplyDelete
  22. ஹாஹா காயத்ரி நீங்க எதுவுமே செய்யலை. எல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ :)

    ReplyDelete
  23. ஜலீலாக்கா சீக்கிரமா அந்த பதிவை போடுங்க. நிறைய பேர் காத்திருக்கோம் :)
    நாஞ்சில் வரதுகுள்ள மீ....எஸ்கேஏஏஏப் :)

    ReplyDelete
  24. கவி, சூப்பர். நாடோடியின் டயலாக் சூப்பர். நானும் தேவையில்லாமல் கத்தரிக்காய் பற்றி வாயே திறந்திருக்க கூடாது அவ்வ்வ்வ்.

    ReplyDelete
  25. வாங்க வானதி! கத்திரிக்காயை பார்த்தாலே எனக்கு இப்போ உங்க ஞாபகம்தான் வருது :)

    ReplyDelete
  26. ஹாஹ்ஹா.. நல்லாயிருந்தது.. இன்னும் கொஞ்சம் கோர்வையா சம்பவங்கள எழுதியிருக்கலாம்.. (இப்பிடி எழுதறது எம்புட்டு கஷ்டம்ன்னு தெரிஞ்சுகிட்டே சொல்றேன் :) )

    //இது வேலைக்காகாது. ரெண்டு மூணு அ.கோ.மு. வை வாயில் வச்சு அமுக்குங்கப்பா.// நல்ல ட்ரீட்மென்ட்.. இனிமே இப்படி செஞ்சிடலாம்.

    ReplyDelete
  27. ஹா ஹா ஹா... சூப்பர் கவி... செம செம... :-))
    இன்னும் சிரிச்சு முடியலப்பா.... :-))

    ///எல்லோரும் மறைந்து விட அப்பாவியாக தங்கமணி தான் கொண்டு வந்த மாவில் இட்லி செய்து சோகமாக தண்ணீரில் எறிந்து கொண்டிருக்கிறார்///

    நல்லா வேலை நா தண்ணிக்கு உள்ள இருந்து வெளில வந்துட்டேன்... ஜஸ்ட் மிஸ்.. :D :D :D

    ReplyDelete
  28. //ஆனந்தி: இல்ல அப்பாவி தங்ஸும்,காயத்ரியும் வந்திருக்காங்க///
    ஆஹா...தங்க்ஸ்.. கூட்டிட்டு வந்ததே.....பிளான் பண்ணி தானா??

    //கவிசிவா: அவங்க எல்லாம் எங்க?

    ஆனந்தி: அதோ அங்க இருக்காங்க. காயத்ரியை யாரோ ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டானாம். அவன அடிக்க துரத்திக்கிட்டு இருக்காங்க//

    ஹா ஹா ஹா.. என்னமா கலக்குறீங்க.. சூப்பர்:-)))

    ReplyDelete
  29. நன்றி சந்து! எனக்கும் அப்படி தோணுச்சு. எடிட்டிங் சரியில்லை :(. எடிட் பண்ணாம போடணும்னா பார்ட்3யும் போட வேண்டி வரும் அதான் சுருக்கிட்டேன் :)

    ReplyDelete
  30. நன்றி ஆனந்தி!

    //நல்லா வேலை நா தண்ணிக்கு உள்ள இருந்து வெளில வந்துட்டேன்... ஜஸ்ட் மிஸ்.. :D :D :D //

    இதோ அப்பாவி வந்துக்கிட்டே இருக்காங்க :)

    ReplyDelete
  31. கவி என்றால் கொக்கா? சூப்பரப் கலக்கிட்டிங்க.
    சொன்னாபோல் 2- ம்பாகத்தில் . ம்.. gr8.
    ஒரே சந்தோஷமா இருக்கு எல்லாரையும் ஒரே இடத்தில் கூட்டிங்க. சலாம் கவி.

    ReplyDelete
  32. அடபாவிங்களா... உலகமே நமக்கு எதிராதான் இருக்கா? ஹும்...

    //நன்றி ஆசியா! அப்பாவி ?!?! அப்ப இருந்தே அப்படித்தேன் :) //
    ஏன் இந்த கொலை வெறி அம்மணி?

    //நல்லா வேலை நா தண்ணிக்கு உள்ள இருந்து வெளில வந்துட்டேன்... ஜஸ்ட் மிஸ்.. :D :D :D //
    ஆனந்தி மேல வெச்ச குறி தப்பிடுச்சே... ச்சே... ஆனந்தி ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் குறி தப்பாம விழும் பாருங்க...ஹா ஹா ஹா

    ha ha ha...sema karpanai kavi... hats off

    ReplyDelete
  33. ////நல்லா வேலை நா தண்ணிக்கு உள்ள இருந்து வெளில வந்துட்டேன்... ஜஸ்ட் மிஸ்.. :D :D :D //
    ஆனந்தி மேல வெச்ச குறி தப்பிடுச்சே... ச்சே... ஆனந்தி ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் குறி தப்பாம விழும் பாருங்க...ஹா ஹா ஹா///

    ....அப்படி எல்லாம் பிளான் பண்ணப் பிடாது.. நாம அப்படியா பழகி இருக்கோம்..
    தப்பிசிட்டேன்னு சொன்னது குத்தமா....நோ வயலன்ஸ்...!!

    ReplyDelete
  34. //அடபாவிங்களா... உலகமே நமக்கு எதிராதான் இருக்கா? ஹும்... //

    ஹா ஹா அப்பாவி உலகமே உங்களுக்கு எதிரா இல்ல. இட்லியும் உங்க மைண்ட்வாய்சும் மட்டும்தான் அப்படி :)

    நன்றி தங்க்ஸ்!

    ReplyDelete
  35. தப்பிச்சுட்டேன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா! அப்பாவி! பாவம் ஆனந்தி விட்டுடுங்க. இட்லியால அடிச்சா காயம் பட்டுடும். உங்களோட ஒரே ஒரு இட்லிய மட்டும் சட்னி சாம்பார் இல்லாம ஆனந்திய சாப்பிட வச்சுடலாம் :)

    ReplyDelete
  36. தெரியாத் தனமா உள்ளே வந்துட்டேனா..?நல்ல அரட்டை போகிறது போல...

    ReplyDelete
  37. கவிசிவா, நலமா? உங்க சந்திப்பு நல்லா இருக்கு கவி!

    ReplyDelete
  38. ரொம்ப நல்லா இருக்கு கவிசிவா

    ReplyDelete
  39. பிரண்ட்ஸ்சோட சேர்ந்து நல்லா அரட்டைப்போல இருக்கு! காமெடியா இருக்கு தோழி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  40. வாங்க பிரகாஷ்! தெரிஞ்சுக்கிட்டும் உள்ள வரலாம் :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  41. வாங்க அஸ்மா! நான் நல்லா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க? அறுசுவையில் பார்க்கவே முடியல?!

    ReplyDelete
  42. நன்றி சினேகிதி!

    ReplyDelete
  43. நன்றி "என்னது நான் யாரா?" எல்லா அரட்டையும் கற்பனையில்தான் :)

    ReplyDelete


  44. //அ.கோ.மு.//னா என்ன குருவே!

    ஆனா ஒன்னு ! ஒங்க நகை சுவை ரொம்ப நன்னாருக்கு!

    ஆனந்தியை விட்டுருந்தா அப்படியே மூழ்கிருப்பாங்கோ!

    மத்ரை தப்பிச்சுருக்கும்!

    ReplyDelete
  45. உங்க எல்லாருக்குமே நகைச்சுவை சூப்பராவருதே. எனக்கு ரசிக்கமட்டுமே தெரியும்பா. சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  46. வாங்க கோமு. நம்ம தோழிகள் எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. சந்தோஷமா இருக்கு :)
    நன்றி கோமு!

    ReplyDelete
  47. அப்படியே நம்ம பக்கமும் எட்டிப்பாக்கரது?!!!!!!!!!!!!!!1

    ReplyDelete