தானியக் கிடங்கில் தானியம் வீணாகி மக்கி நாசமாய்ப்போனாலும் பரவாயில்லை ஆனால் ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம் அப்படீங்கறாரு நம்ப உணவு அமைச்சரும் பிரதம மந்திரியும். அதிலும் 37 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கிறார்களாம். அதையும் அவருதான் சொல்றாரு.
ஏண்டா டேய் (மரியாதை கொடுக்க மனசு இல்லை) உங்களுக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒன்னு கிடையாதாடா? உங்களுக்கு சம்பள உயர்வு வேணும்ம்னு கேட்டு கூச்சல் போடுறீங்களேடா உன்னை ஓட்டு போட்டு அனுப்பினானே ஓட்டாண்டி அவனுக்கு வீணாகப் போகும் உணவுப் பொருளைக் கொடுக்கக் கூட உனக்கு என்னடா கஷ்டம்? அப்படி என்னடா பொல்லாத கொள்கை உங்களுடையது?
உங்களுக்கெல்லாம் கொள்கைன்னா என்னான்னு தெரியுமா? அதான் சீசனுக்கு சீசன் தேர்தலுக்கு தேர்தல் மாத்துறதுதானே உங்க கொள்கையெல்லாம். அப்புறம் ஏன் இந்த விஷயத்தில் இத்தனை பிடிவாதம்? வீணாகிப் போவதை பகிர்ந்தளிப்பதில் என்ன பிரச்சினை? அப்படி என்ன ஈகோ!
சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கும் எதிர்கட்சிகள் இதில் அதிகம் அலட்டிக் கொள்ளாதது ஏன்? ஏழைப்பங்காளர்கள் என்று சொல்பவர்கள் கூட பெரிதாக கண்டுகொள்ளவில்லையே ஏன்?
சரி இந்த பாழாப்போன அரசியல்வியாதிகளுக்குத்தான் அறிவு கிடையாது. ஐஏஎஸ் படிச்சு பெரிய பெரிய பதவியில் இருந்து பிரதமருக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகளுக்கு கூடவா அறிவு, மனிதாபிமானம் கிடையாது? அது எப்படி இருக்கும் அரசு செலவில் சுகிப்பவர்கள் அல்லவா நீங்கள். ஆட்சிக்கேற்ற, அரசியல்வாதிக்கேற்ற மாதிரி ஜால்ரா தட்டத்தானே உங்களுக்கெல்லாம் தெரியும். அங்கே பட்டினியால் மடியும் ஏழையைப் பற்றி உங்களுக்கென்ன கவலை? உணவுதானியங்கள் எலிகளுக்கு உணவானால் உங்களுக்கு என்ன கவலை? உங்கள் உணவில் எலி விழாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதானே?!
நடிக நடிகையரின் அந்தரங்கங்கங்களை தோண்டித் துருவும் ஊடகங்கள் இதில் அக்கறை காட்டாதது ஏன்? போணியாகாது என்பதாலா?
உன் தலைவனை ஏதோ சொல்லிட்டான்னு சொல்லி தீக்குளிக்க தயாராக இருக்கும் தொண்டனே உன் சக மனிதனுக்கு வீணாகும் உணவுப் பொருளைக் கூட கொடுக்க மறுக்கிறானே உன் தலைவன் ஏன்னு கேட்க மாட்டியா? அவ்வளவு பயமா? அப்புறமும் ஏன் அவனுக்கு கொடி பிடித்துக் கொண்டு அலைகிறாய்? உன் ரத்தைத்தை உறிஞ்சிக் கொண்டு உன்னையே கொள்ளையடிப்பவன் பின்னால் ஏன் போகிறாய்?
இவ்வளவும் இங்கு பேசும் நமக்காவது சொரணை இருக்கிறதா :(
திரும்பவும் புலம்ப ஆரம்பச்சிட்டிங்களா.....
ReplyDeleteஓட்டு போட்டிங்கல்ல நல்லா அனுபவிங்க...
நானும் புலம்ப வேணாம்னுதான் பாக்கறேன். ஆனா புலம்பாம இருக்க விட மாட்டேங்கறானுங்களே :( என்ன செய்ய?!
ReplyDelete//இவ்வளவும் இங்கு பேசும் நமக்காவது சொரணை இருக்கிறதா :( //
ReplyDeleteசொரனையா? அது எந்த கடையில் விக்குது..
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்.... அட போங்கையா..
உ
ReplyDeleteஎல்லாம் 5 ரூபாய் பிரியாணிக்காக அலையற கேசு!
நீங்க மனசை போடு அலட்டிக்காதீங்கோ !
நான் வேணா எலக்ஷன்ல நின்னு
ஜெயிச்சு(ஜெயிப்பேனா?!) ஒங்க ஆசையை தீத்து
வைக்கறேன்!
( அப்பாடி நேக்கு மட்டுமாவது சொரணை இருக்குனு
கவியை நம்ப வைக்க என்னாபிளானேலாம் பண்ண
வெண்டியிருக்கு!)
உ
ReplyDeleteஎன்னால முடிஞ்சது கூடுமான வரைக்கும்
சாப்பாடை வேஸ்ட் பண்ணாம பயன் படுத்தறது!
யாராவது பசின்னு சொன்னா அவாளுக்கு
சாப்பாடு வாங்கி கொடுக்கறது!
//ஐஏஎஸ் படிச்சு பெரிய பெரிய பதவியில் இருந்து பிரதமருக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகளுக்கு கூடவா அறிவு, மனிதாபிமானம் கிடையாது??//
ReplyDeleteகவி..கூல்..இதுதான் இப்போ நடைமுறை னு ஆய்டுச்சு..ஆலோசனையா...ஹீ..ஹீ..அடுத்த செகண்ட் வேலை போகும் அல்லது தண்ணி இல்லா காடு..இங்கே தமிழகத்தில் போன மாசம் இப்படி ஒருத்தர் அரசுக்கு ஆலோசனை சொல்லி..வீட்டுக்கு அனுப்பிட்டாங்க அவரை.ரோமாபுரியில் இருந்தால் ரோமனாய் மாறிவிடு..இது தான் ஒன் லைன். இது தான் வாழ்க்கை.
இந்தக்8ல்யாவில் மக்களை பற்றி சிந்திக்க எவனுமே இல்லை,என்பது பரிதாபகரமான உண்மை,,ஆளுங்கட்சியோ,எதிர்கட்சியோ,பத்திரிக்கையோ,சினிமாவோ,எவனுக்குமே அக்கறையில்லை,,
ReplyDeleteஅப்படியே ஒன்றிரண்டு பேர் அத்திபூத்தாற்ப்போல்
வ்ந்தாலும் அவர்களை அமுக்கிவிடுவார்கள் அல்லது போட்டுதள்ளி
விடுவார்கள்,,இதில்வேறு இரண்டாயிரத்து இருபதில்
வ்ல்லரசு கனவு(பகல் கன்வு) கண்டுக்கொண்டு இருக்கிறார்கள்,, இரண்டாயிரத்து இருபது இல்லை
இருபதாயிரத்து இருபதிலும் இவர்கள் வல்லரசு ஆக
முடியாது ,,இந்த கேடுகெட்ட அரசியல் இருக்கும்வரை,,காசுக்காக எந்த கயவாணிக்கும் ஓட்டு போடும்வரை,எதயுமே லஞ்சத்தால் ச்சதித்துவிடலாம் என்கிற நிலை இருக்கும்வரை,,
மாறாது பாரதம்,,ஜெய்ஹிந்த்
தலையங்கமே மன ஆதங்கத்தைச் சொல்கிறது சிவா.
ReplyDeleteஇப்படி கோபப்பட்டு மனநிலையில் விரக்தியின் உச்சிக்குசென்று.. மாறியவர்கள்தான் மாவோயிஸ்ட்கள்..
ReplyDeleteநக்ஸல்கள்.. நாம் பிளாக் எழுதினால் மட்டும் போதாது... இறங்கி சாலையில் போராடவேண்டும்.. அப்பவும் குண்டந்தடியால் நைய புடைவார்கள்.. அதையும் வாங்கிக்கொண்டு தான் நமக்கு ஒரு சமூகம் இந்த சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது.... அந்த சுதந்திரத்தை தாம் வாங்கிக்கொடுத்ததாக கூறிக்கொண்டு பணக்கார காங்கிரஸ்காரர்கள் இந்த குட்டிச்சுவரை சுரண்டிக்கொண்டு கொழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
@நாடோடி
ReplyDeleteஅதானே சொரணை கிலோ என்ன விலை? எந்த கடையில் கிடைக்கும்? :(
மாமி எலக்ஷன்ல நிக்கப் போறேளா?! பார்த்து மாமி வீட்டுக்கு ஆட்டோ வந்துடப் போகுது :)
ReplyDeleteஆனந்தி அதுதானே பிரச்சினையே! ஏன் இந்த அதிகாரிகள் இப்படி பூம் பூம் மாடு போல் ஆனார்கள். எல்லோரும் எதிர்த்து கேள்வி கேட்டால் எத்தனை பேரை இவனுங்க தண்ணியில்லா காட்டுக்கு மாத்துவானுங்க. சில அல்ப சொந்த லாபங்களுக்காகத்தானே தன்னை அவர்களிடம் அடகு வைக்கிறார்கள்.
ReplyDelete@moulefrite
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி. லஞ்சம் நாம் கொடுப்பதால்தானே அவன் வாங்கறான் முதலில் நாம் திருந்தணும். அவன் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்னு சொல்ற தைரியம் வரனும். நேர்மையான அதிகாரிகளுக்கு கூட லஞ்சம் கொடுக்க முயலும் மக்களை நான் பார்த்திருக்கிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ராஜா
ReplyDeleteமக்களிடையே விழிப்புணர்வு இல்லாத வரை எதுவும் வேலைக்காகப் போவதில்லை.
கவி! காலையிலே முதல் பதிவு பார்த்தேன்.. ரொம்பவே டென்ஷன் ஆகறீங்க. தனி மனிதனாய் திருந்தணும். அரசியல் சாயம் போய் தொண்டு நோக்கும் கொஞ்சமாவது வரணும். இன்னைக்கு கையெழுத்து போட தெரியாத ஒருவர் கவுன்சிலர் ஆக நினைக்கிறார் 50 ஆயிரம் செலவு பண்ணினால் எனக்கு கோடியில் சம்பாதிக்கலாம் என்று... சொன்னவர் நெருங்கிய உறவு. இவிங்க எல்லாம் ரோடு போட்டு அந்த ரோட்டில போனா அவ்வளவு தான்...
ReplyDeleteஇலா டென்ஷன் எல்லாம் எல்லை. ஒரு வித ஆதங்கம் வேதனை கோபம் எல்லாம் கலந்த உணர்வு. வீட்டில் கொஞ்சம் சாதம் வீணாவதைக் கூட மனம் ஏற்க மாட்டேங்குது, மூட்டை மூட்டையா வீணாகறதை பார்க்கும் போது ரொம்பவே கஷ்டமா இருக்கு.
ReplyDeleteநீங்க சொல்ற மாதிரி கவுன்சிலர்ல ஆரம்பிச்சு மேலிடத்தில் இருப்பவர்கள் வரை எல்லாமே கெட்டு குட்டிச்சுவராகி கிடக்கு :(
என்னத செய்ய கவி..இப்படி தான் நம்ம நாட்டில் எப்பொழுதுமே எல்லாம் நடக்குது...
ReplyDeleteunga aadhangam sariaanathuthaan...nammaal ethana seyya mudiuma?? padhivargal inandhu??? readya
ReplyDeleteகவி, நீங்கள் டென்ஷன் ஆகி ஒன்றுமே நடக்கப் போவதில்லை. லஞ்சம், ஊழல் இல்லாத நாடாக மாறினால் தான் வறுமை ஒழியும்.
ReplyDeleteஉ மாமிக்கே என் வோட்டு. உ மாமி வாழ்க! ( அட! எல்லோரும் கோஷம் போடுங்கப்பா)
உ
ReplyDeleteவானதி ! நான் அறுசுவைலேயே ஒங்க
எல்லாருக்கும் புடிச்சவளா மாறிட்டேன் !
அருப்புக்கோட்டைல முடியாதா!
கவி எலக்ஷன்ல நிக்க நான்ரெடி!
பட்டம் கொடுக்க நீங்க ரெடியா!
கவி , ஓவரா டென்ஷன் ஆகாதீங்க.... இது கூட அவரா சொன்னாரா இல்ல இத்தாலி மகராசி சொன்னதான்னு முதல்ல யோசிங்க ....
ReplyDeleteஇதுக்குதான் மாத்தியோசிக்கனுமின்னு சொலறது... அடுத்த பதிவுக்கு விஷயம் குடுத்துட்டேன்...!!!
தலைப்பை பார்த்தவுடன்.. எங்க பாரதி திரும்ப வந்துட்டார்ரோன்னு நினைச்சேன்.
ReplyDeleteஎன்ன கவி செய்ய முடியும்,முதல்ல நாம திருந்தினால் மட்டுமே எல்லாம் சாத்தியப்படும்...
ReplyDeleteஉங்களின் நெத்திலி மீன் அவியலை நான் கருவாட்டில் செய்து பார்த்தேன்,மிகவும் நன்றாகயிருந்தது.நன்றி கவி!!
http://sashiga.blogspot.com/2010/09/blog-post_09.html
என்ன செய்யறதுன்னு எனக்கும் தெரியல கீதா :(. முதலில் நாம் நம் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் முதல் படியை எடுத்து வைக்கணும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteகாயத்ரி ஊர் கூடி இழுத்தால் முடியாததா?! ஆனால் ஊர் கூடணுமே அங்கதானே சிக்கல் :(
ReplyDeleteநன்றி வானதி. டென்ஷன் எல்லாம் இல்லை. ஆதங்கம் அவ்வளவுதான்
ReplyDeleteமாமி இப்படி எலக்ஷன்ல நிக்கறதுக்கு முன்னாடியே பட்டம் கேக்கறீங்களே அப்புறம் நீங்களும் பாராட்டு விழாக்கள்னு ஆரம்பிசுட்டீங்கன்னா! :)
ReplyDeleteநன்றி ஜெய்லானி. இனிமே மாத்தி யோசிக்கறேன் :). இனிமே இப்படி கோபமா பதிவு போடக்கூடாதுன்னு தற்காலிகமா முடிவு பண்ணியிருக்கேன் . அதனால் நீங்க கொடுத்த லீட் வேஸ்ட்டாயிடுச்சு :(
ReplyDeleteநன்றி ரியாஸ்! பாரதி இப்போ வந்தாருன்னா அக்னி குஞ்சொன்று கண்டேன்னு பாடிக்கிட்டு இருக்க மாட்டார். செயல்ல காண்பிச்சிருப்பார் வருவாயா பாரதி?!
ReplyDeleteநன்றி மேனு! நாம்தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.
ReplyDeleteஉங்க கோபம் நியாயமானது
ReplyDeleteநன்றி சௌந்தர்! இப்பதான் நியூஸில் பார்த்தேன்.ஹரியானாவில் அரசு தானியக் கிடங்கில் 6லட்சம் மக்களுக்கு அடுத்த பத்து வருஷங்களுக்கு தேவையான தானிடங்கள் வீணாகிக் கிடக்கிறதாம். மூட்டை மூட்டையாக கருப்பு மணல் போல் கொட்டுகிறார்கள் கோதுமையை :(. வயிறு எரிகிறது
ReplyDeleteஏண்டா டேய் (மரியாதை கொடுக்க மனசு இல்லை) உங்களுக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒன்னு கிடையாதாடா?
ReplyDelete//
அத அடகுவச்சுதனுங்களே சீட்டே வங்குநாங்க
இப்ப திரும்ப அதயே கேட்டா எபொபடி?
//அத அடகுவச்சுதனுங்களே சீட்டே வங்குநாங்க
ReplyDeleteஇப்ப திரும்ப அதயே கேட்டா எபொபடி?//
அதுவும் சரிதான் :(. நன்றி பிரபு!