இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த (மாட்டி விட்ட) பிரியமுடன் வசந்த்துக்கு நன்றி :-)
வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-).
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
அதான் எல்லாருக்குமே தெரியுமே கவிசிவா ன்னு (என்னா விவரமா கேட்கறாங்கப்பா)
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இந்த கேள்விக்கு கண்டிப்பா உண்மைய சொல்லணுமா? சொல்லிடறேன். என் உண்மை பெயரில் பாதிதான் பதிவில் தோன்றும் பெயர். எங்கப்பா புள்ள வளந்து நல்ல கவிதையெல்லாம் எழுதணும்னு நினைச்சுதான் இந்த பேர் வச்சார். ஆனா எனக்கு மொக்கைதான் போட வருது. அதுகூட உருப்படி இல்லை :-(
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
என் தனிமையை விரட்ட நெட்டில் உலவிக் கொண்டிருக்கும் போது அறுசுவை அறிமுகம். அங்கே எல்லோருடனும் பேசி கலாய்த்துக் கொண்டிருக்கும் போது சிலர் திடீர்னு காணாம போய்ட்டாங்க :(. அப்போ ஜலீலாக்கா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டு அவங்க பக்கத்துக்கு வந்தேன். பார்த்தா என் காணாமல் போன தோழிகள் எல்லாரும் இங்க சுத்திக்கிட்டு இருந்தாங்க. அவங்க எல்லார் பதிவையும் சத்தமில்லாம கொஞ்ச நாள் வாசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் சுபயோக சுப நாளில் நானும் ப்ளாக் ஆரம்பிக்கணும்னு ஆரம்பிச்சு இதோ இப்ப உங்களையெல்லாம் மொக்கை போட்டு கொன்னுக்கிட்டு இருக்கேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
இன்னும் பிரபலமாகவில்லை. பிரபலம் ஆகும்னு நினைக்கவும் இல்லை. நம்ம எழுத்தைப் பற்றி நமக்குத் தெரியாதா :-)? பெருசா எதுவும் செய்யலை. நாஞ்சில் ப்ரதாப் மற்றும் ஜலீலாக்கா சொன்ன மாதிரி பிறருக்கு பின்னூட்டங்கள் இட்டேன் அப்புறம் தமிழிஷில் இணைத்தேன். அவ்வளவுதான். அதற்காக ரொம்ப மெனக்கெடவெல்லாம் இல்லை(மெனக்கெட்டுட்டாலும்...).
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆமா... பல பதிவுகளும் சொந்த புலம்பல்கள்தானே :-) பெருசா எந்த விளைவுகளும் இல்லை.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவுலகம் மூலம் சம்பாதிச்சு சிங்கையில் ஒரு காண்டோமினியம் வாங்கிப் போட்டிருக்கிறேன் :-). வெளிய சொல்லிடாதீங்க இன்கம்டேக்ஸ் காரன் வந்துடப் போறான் :-)
பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லை சில நேரம் மனக்குமுறல்களைக் கொட்டவும் பதிவுகள் எழுதுகிறேன்.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு. இன்னொன்னு ஒப்புக்கு சப்பாணியா டெம்ப்ளேட் மாற்றங்கள் பரீட்சித்துப் பார்க்க
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம்... அது என்னோடவே பிறந்தது. தவறாக கண்ணில் படும் எதுவும் என்னைக் கோபப்படுத்தும். அடுத்தவர் மனதை நம்பிக்கைகளைப் பாதிக்கும் சில பதிவுகள் என்னை கோபப்படுத்தியிருக்கின்றன. பொறாமை வந்ததில்லை. வியந்திருக்கிறேன் நிறையபேரைப் பார்த்து. பல விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பாராட்டுற மாதிரி நான் எந்த பதிவும் போடலை. அறுசுவை தோழிகள் விஜிசத்யா, மேனகாசத்யா,ஆசியா, ஜலீலாக்கா, அதிரா அப்புறம் ஜெய்லானி, நாஞ்சில் ப்ரதாப், பிரியமுடன் வசந்த் இவங்கதான் எனக்கு பின்னூட்டங்கள் மூலம் முதலில் ஊக்கமளித்தவர்கள்.
10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ஊழலற்ற வளமான இந்தியாவைக் கனவு காணும் எண்ணற்ற பேரில் நானும் ஒருத்தி. மற்றபடி பெருசா ஒண்ணுமில்லை
அதிரா, ஆசியாஓமர், கீதா ஆச்சல், மேனகாசத்யா ஆகியோரை இந்த தொடர்பதிவுக்கு அழைக்கிறேன். பூஸை மாட்டி விட்டதும் மனசுக்கு என்னா சந்தோஷமா இருக்குது :-)))
//நான் எப்படிப் பட்டவன்...நாட்டுக்கு ரொம்ப தேவை//
ReplyDeleteஎன்ன அப்படிச்சொல்லிட்டிங்க.... நமக்கு வரலாறு முக்கியம் மன்னா.... :))
நல்லாத்தான் வந்திருக்கு..
ReplyDeleteசொல்லாம கொள்ளாம காணாமல் போனவர்களில் நானும் ஒருத்தி.. மன்னிக்கனும் கவி.. புதுத் தளம் வந்த போது எட்டிப்பாத்து நல்லாருக்குன்னு அண்ணாக்கு மெயில் பண்ணுனேன்.. நேரம் கூடி வரும் போது அங்க மறுபடியும் போவேன்..
சரித்திர புகழ்பெற்ற உங்கள் வலைப்பதிவின் வளர்ச்சிக்கு நானும் ஒரு நொஙகு ச்சீ..பங்கு வகித்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...
ReplyDeleteவாழ்க உங்கள் பிளாக் வளர்க பல மொக்கை பதிவுகளுடன்... :))
@ நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteவரலாறு ரொம்ப முக்கியம்ல. கல்வெட்டுக்கு ஆர்டர் கொடுத்திட்டேன். பில்லை உங்களுக்கு அனுப்பச் சொல்லிட்டேன். செட்டில் பண்ணிடுங்க :-)
சந்தூ எல்லாரையும் இங்க வந்துவுடனேயே கண்டுபிடிச்சுட்டேன்(சிபிஐ ரேஞ்சுக்கு பில்டப்ப பாரு)
ReplyDeleteநீங்க எல் போர்ட் மாடி சுத்திக்கிட்டு இருந்தீங்களா உங்களை கண்டுபிடிக்கத்தான் கஷ்டப்பட்டுட்டேன்.
//ஊழலற்ற வளமான இந்தியாவைக் கனவு காணும் எண்ணற்ற பேரில் நானும் ஒருத்தி. மற்றபடி பெருசா ஒண்ணுமில்லை //
ReplyDeleteபகல்ல கனவு கானுங்க .ஒரு வேளை நடந்தாலும் நடக்கும் யாரு கண்டது..ஹி..ஹி..
@@@நாஞ்சில் பிரதாப்--//சரித்திர புகழ்பெற்ற உங்கள் வலைப்பதிவின் வளர்ச்சிக்கு நானும் ஒரு நொஙகு ச்சீ..பங்கு வகித்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்//
ReplyDeleteபெரிய ரிப்பிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்
நாஞ்சில் பிரதாப் ஐடியா எல்லாம் தருகிறாரா .....
ReplyDeleteஉங்க பதிவுலக வரலாற்றை நல்லாவே தெரிஞ்சுகிட்டேன்.
ReplyDeleteஎதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-). //// அப்பாஆஆஆ கவி, கொஞ்சம் இருங்க அ.கோ.மு சாப்பிட்டுவிட்டு வருகிறேன், இதயம் கொஞ்சம் தாங்கும் சக்தியைப் பெறட்டும்.
ReplyDeleteபதில்கள் நன்றாக எழுதியிருக்கிறீங்க.... கடைசிப் பந்தியைத் தவிர:)))).
இப்பூடி மாட்டிவிட்டுவிட்டீங்களே....
நான் இதைத் தொடர்வதாயின், எல்லாக் கேள்விக்கும் கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமோ என்பதை மட்டும் சொல்லிடுங்க.... என் இதயம் புஸுக் பூஸ்... புஸுக் பூஸ்.... என இப்பவே அடிக்குதேஏஏஏஏ....
@ஜெய்லானி
ReplyDeleteபகல்கனவு பலிக்குமா? அப்போ ராத்திரி கனவு பலிக்காதா? சாயங்கலம் கனவு கண்டா என்னாகும்?
பூஸை மாட்டி விட்டதும் மனசுக்கு என்னா சந்தோஷமா இருக்குது :-))) ///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....:))))).
ReplyDelete@சௌந்தர்
ReplyDeleteநாஞ்சில் ஐடியா கொடுப்பாராவா? என்ன இப்படி கேட்டுட்டீங்க? உங்களுக்கு என்ன ஐடியா வேணுனாலும் அவர்கிட்ட கேளுங்க. ஆனா விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது :-)
நன்றி தமிழ் உதயம்!
ReplyDeleteஅதீஸ் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லோணும்.
ReplyDeleteஓஹ் பூசின் இதயம் புஸுக் புஸுக்னு தன் அடிக்குமா. தகவலுக்கு நன்றி அதீஸ்.
//பூஸை மாட்டி விட்டதும் மனசுக்கு என்னா சந்தோஷமா இருக்குது :-))) ///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....:))))). //
ReplyDeleteஹா ஹா ஹா
ஏய்...என்னை வச்சு யாருப்பா அங்க காமெடி பண்றது....
ReplyDeleteசத்தியமா நான் இல்லீங்கோ!
ReplyDelete//பகல்கனவு பலிக்குமா? அப்போ ராத்திரி கனவு பலிக்காதா? சாயங்கலம் கனவு கண்டா என்னாகும்?//
ReplyDeleteஇருங்க சுவாமி ஜெய்லானந்தா வந்த்தும் கேட்டு சொல்றேன்..
//நான் இதைத் தொடர்வதாயின், எல்லாக் கேள்விக்கும் கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமோ என்பதை மட்டும் சொல்லிடுங்க..//
ReplyDeleteஆமா கண்டிப்பா உண்மான பதில் வரனும் .சரியில்லாட்டி தொடர்ந்து 700 வித பின்னூட்டம் வரும் அதுக்கு பதில் குடுக்க ரெடியா இருங்க...ஹி....ஹி..
எல்லாம் பதில்களும் கலக்கல்... எனக்கொரு சந்தேகம் மொக்கை ன்னு சொல்றாங்களா அப்பிடின்னா என்ன..?
ReplyDeleteநன்றி ரியாஸ்!
ReplyDeleteமொக்கைன்னா என்னான்னு தெரியாம பதிவுலகில் ஒருத்தரா?! வந்து என்னான்னு கேளுங்கப்பா.
ஒண்ணுமே இல்லாத சப்பை மேட்டரை ஏதோ பெரிய விஷயம் மாதிரி பில்டப் பண்ணி எழுதறதுதான் மொக்கை. அப்புறம் சப்பை மேட்டர்னா என்னான்னு வந்து சந்தேகமெல்லாம் கேட்கக்கூடாது சரியா
ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்.....
ReplyDeleteஅறுசுவையில பல பேர் அட்டகாசப்படுத்துறாங்க போல...!
ReplyDeleteகனவு பழிக்க ஏதாவது எந்திரம் எங்க கிடைக்கும்ன்னு சொல்லுங்க உங்களுக்கு 10% கமிஷன் தாரேன்...!
ஹும்!
எதுக்கு இத்தனை ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்...
ReplyDelete//உங்களுக்கு 10% கமிஷன் தாரேன்...!//
கண்டிப்பா கனவு பலிச்சிடும் :-(
அறுசுவை போய் பாருங்க. இன்னும் நிறையபேர் அங்க கலக்கிக்கிட்டு இருக்காங்க
ReplyDeleteஇந்தியன்ல செந்தில் கவுண்டமணிகிட்ட சொன்ன ர்ர்ர்ர்ர் போல ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள் விட்டுட்டீங்க தலைப்புல ...
ReplyDelete:(
ஹா ஹா நல்ல இருக்கு..மொக்கை போட்றதும் ஒரு கலை தான்...வாழ்த்துக்கள்
ReplyDeleteஅம்பட்டுதானா? சின்ன டங்க் ஆஃப் த ஸ்லிப்... சே சே ஸ்லிப் ஆஃப் த டங்க்
ReplyDeleteநன்றி காயத்ரி!
ReplyDeletenanum athaithaan solkiren naattukku romba mukkiyam......
ReplyDeleteநன்றிங்க குரு.
ReplyDeleteஉங்க பதில் எல்லாம் சூப்பர்..
ReplyDeleteரசித்து படித்தேன்..
ரொம்ப அழகா இருக்கு உங்க எழுதுற விதம்.. :D :D
வாழ்த்துக்கள்.. கவி :-))
ஆஹா... ஒருவழியா தொடர்பதிவை முடிச்சாச்சா?... இன்னும் நீங்க பிரபலம் ஆகலியா?.. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க... நம்ம மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடிச்சி ஒட்டிருவோம் பிரதாப்பு செலவுல..
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்தி!
ReplyDelete// நம்ம மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடிச்சி ஒட்டிருவோம் பிரதாப்பு செலவுல..//
ReplyDeleteஇது நல்ல ஐடியாவா இருக்கே :-)
அடுத்து உங்கள் தொடர் பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.(விதி யாரை விட்டது :D)
//ஊழலற்ற வளமான இந்தியாவைக் கனவு காணும் எண்ணற்ற பேரில் நானும் ஒருத்தி. //
ReplyDeleteஆஹா அப்படியா? கனவு காண ஆரம்பிச்சாச்சா, எப்பத்திலிருந்து?? அருமையா எழுதி அசத்திப்புட்டீங்க மேடம்!! உங்க இடுகையே எல்லோருக்கும் ஒரு வழி காட்டியா (guide மாதிரி எடுத்துக்கலாம்) அமஞ்சு போச்சுங்க .. இதுக்கு மேல் வேறென்ன சொல்ல..ஹி ஹி
//உங்க இடுகையே எல்லோருக்கும் ஒரு வழி காட்டியா (guide மாதிரி எடுத்துக்கலாம்) அமஞ்சு போச்சுங்க .. இதுக்கு மேல் வேறென்ன சொல்ல..ஹி ஹி //
ReplyDeleteஇது வேறயா?! நன்றிங்க அப்துல் காதர்!
அதுசரி மிளகாய்ப் பொடி கேக் சாப்பிட்ட மயக்கம் தெளிஞ்சிருச்சா :-)
உங்கள் பதில்கள் ரசிக்கதக்கவையா இருக்கு கவி...என்னையும் மாட்டிவிட்டுட்டீங்க்ளே...ஏற்கனவே சில பதிவுகள் பாக்கில இருக்கு,நேரமிருக்கும் போது நிச்சயம் தொடர்வேன்...ஏன்னா என் பொண்ணும் இப்போ கீ போர்ட் தட்ட ஆரம்பித்தாச்சு அதான்..
ReplyDeleteகவி, நல்லா இருக்குப்பா. காண்டமினியம் வாங்கும் அளவுக்குத் தான் வருவாயா???? நான் அமெரிகாவில் பாதியை வளைச்சுப்போட்டாச்சு.
ReplyDeleteநம்ம பூஸார் பாவம்.
ஏன்ன்ன் நம்ம மேனகா??? பாவம்.
சூப்பராக எழுதி இருக்கின்றிங்க..தொடர் பதிவுக்கு அழைத்தற்கு மிகவும் நன்றி...கூடிய சீக்கிரத்தில் எழுதிவிடுகிறேன்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி மேனகா! நேரம் கிடைக்கும் போது தொடருங்க. ஷிவானி கீ போர்ட் தட்ட ஆரம்பிச்சுட்டாங்களா? அப்போ இனிமே அவங்கதன் உங்க ப்ளாகை எழுதுவாங்கன்னு சொல்லுங்க. குட்டிக்கு அன்பு முத்தங்கள்
ReplyDeleteநன்றி வானதி!
ReplyDelete//அமெரிகாவில் பாதியை வளைச்சுப்போட்டாச்சு//
வளைச்சுட்டீங்களாஅப்போ அமெரிக்காவில் எல்லா இடமும் வளைஞ்சுதான் நிக்குதா :-)
நன்றி கீதா! சீக்கிரமா எழுதுங்க
ReplyDelete