Friday, 30 July 2010

யுனிவர்சிட்டி வச்ச ஆப்பு

இது கொஞ்சம் பழைய மேட்டர்தான்.

நாம எதுக்குங்க படிக்கறோம்? என்னது... காது கேட்கலை அறிவை வளர்க்கவா? அது இருந்தாத்தானே வளர்றதுக்கு :-(
அடிச்சு புடிச்சி படிச்சு கிழிச்சு ஒரு வேலையைத் தேடி சம்பாதிக்கத்தானே? அதுக்கும் நம் ஊர்ல ஒரு பல்கலைக்கழகம் ஆப்பு வச்ச கதை தெரியுமா?

இப்படித்தாங்க எங்க காலேஜ்ல மொத்தம் 260பேர் படிச்சு கிழிச்சு பாசும் பண்ணிட்டோம். சிலருக்கு பல்கலைக்கழக ரேங்கும் உண்டு.
அப்புறம் நாம படிச்சதுக்கு அத்தாட்சியா டிகிரி(ஜீரோ டிகிரியா 100டிகிரியான்னு கேனத்தனமா கேக்கப்படாது சொல்லிட்டேன்) சர்ட்டிஃபிகேட் கொடுப்பாங்க. அங்கதான் எங்களுக்கு யூனிவர்சிட்டி வச்சது ஆப்பு.

ஆனா எங்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருப்பது தெரியாமலயே நாங்களும் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வந்து பத்திரமா பூட்டி வச்சுட்டோம். கூடப்படிச்சவனுக்கு காலேஜ்ல படிக்கற ஆசை இன்னும் தீரல. அதனால இன்னொரு காலேஜில் எம்பிஏ படிக்க அப்ளை பண்ணி இடமும் கிடைச்சு காலேஜில் சேரப் போனான். அப்பதான் யுனிவர்சிட்டி வச்ச ஆப்பு வேலையை காட்ட ஆரம்பிச்சுது.

சர்ட்டிஃபிகேட் எல்லாம் வெரிஃபை பண்ணும் போதுதான் தெரிஞ்சுது எங்களுக்கு கொடுத்த சர்ட்டிஃபிகேட்டில் யுனிவர்சிடி ரெஜிஸ்ட்ராரின் கையொப்பம் மற்றும் சீல் இல்லைன்னு. காலேஜில் சேர்க்க முடியாதுன்னு அவனைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

அவன் எங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி எங்க சர்டிஃபிகேட்டுகளை பார்க்கச் சொன்னான். அப்பதான் தெரிஞ்சுது ஆப்பு எல்லாருக்கும் வச்சிருக்காங்கன்னு. சரின்னு காலேஜ் போய் ப்ரின்சிப்பலை பார்த்து விஷயத்தைச் சொன்னோம். அவர் எங்களை நேரடியாக யுனிவர்சிட்டி போகச் சொல்லிட்டார்.

கொஞ்ச பசங்க மட்டும் நாங்க போய் என்னான்னு விசாரிச்சுட்டு சொல்றோம்னு சொல்லிப் போனாங்க. யுனிவர்சிட்டில சிம்பிளா "எப்படியோ விட்டுப் போச்சு(?!) கொடுங்க சீல் வச்சுத் தர்றோம்" னு சொல்லி சரிசெய்து கொடுத்தாங்களாம். அப்புறம் என்னா எல்லாரும் யுனிவர்சிட்டி போய் அவங்கவங்க சர்டிஃபிகேட்டை சரி செய்துக்கிட்டோம்.

அது எப்படி தெரியாம விட்டுப் போகும்? அவங்களை ரெண்டு தட்டு தட்டிட்டு சாரி தெரியாம நடந்திடுச்சுன்னு சொன்னா விட்டுடுவாங்களா? தொடர்ந்து படிக்கணும்னு நினைத்தவர்களுக்கு ஒரு வருடம் வீணானது. அந்த வருடத்தை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா?

சிலர் உடனே போய் சர்டிஃபிகேட்டை சரி செய்ய முடியாமல் 6மாதம் கழித்து சென்றபோது "இவ்வளவு நாள் என்ன செஞ்சீங்க"ன்னு வேற எகிறியிருக்கானுங்க. இவனுங்களை என்ன செய்யலாம்?

நல்ல வேளை இப்போ எல்லா பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா யுனிவர்சிட்டிக்கு கீழ கொண்டு வந்துட்டாங்க. ஆனா அங்கயும் என்னென்ன குழறுபடிகள் நடக்குதுன்னு தெரியல.

17 comments:

  1. ஹஹஹ.... எந்த காலேஜ்.. இந்து காலேஜா??
    யுனிவர்சிட்டி பேரைல்லாம் போடாதீங்க.... நல்லதில்லை...

    ReplyDelete
  2. யுனிவர்சிட்டி பெயரை நீக்கிடறேன். நன்றி பிரதாப்.

    இந்து காலேஜ் இல்லை. ஒரு பொறியியல் கல்லூரி.

    ReplyDelete
  3. ஹி..ஹி.. பிரின்சிபாலே இப்பிடின்னா அங்க வாத்திமாருங்க என்னா சொல்லி குடுத்துடு என்னா படிப்போ..ஹய்யோ..ஹய்யோ...((ஜெய்லானீஈஈஈஈ ஓடிடு நிக்காதே..!!!!!!))


    அதனாலதான் எனக்கு யூகேஜியை விட்டு போகவே மனசு வரமாட்டேங்குது

    ReplyDelete
  4. ஹி ஹி ஜெய்லானி எங்களுக்கு ஆப்பு வச்சது ப்ரின்சி இல்லை. யுனிவர்சிட்டி ஊழியர்கள்.
    ஆனாலும் எங்கள் ப்ரின்சியைப் பத்தி சொல்லணுமா நிறையா சொல்லலாம். குருவை குறை சொன்னா சாமி கண்ணை குத்தும் அதனால வேணாம் :-).

    "ஐ டாக் யூ டாக் நோ மிடில் மிடில் டாக்" ரகம் அவர் :-)

    ReplyDelete
  5. /அதனாலதான் எனக்கு யூகேஜியை விட்டு போகவே மனசு வரமாட்டேங்குது //



    தல ஜெய்லானி யூகேஜீ வரை படிச்சிருக்கீங்களா... அனேகமா நீங்கதான் பதிவுலகத்திலேய அதிகமாபடிச்சவரா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..நான் வெறும் எல்கேஜீதான்...

    ReplyDelete
  6. கவி... எல்லாரும் ரொம்ப படிப்பு படிச்சிருக்காங்க. நர்சரி ஸ்கூலுக்கு மேல நீ படிக்கலங்குற விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிடாத. எஸ்கேப் ஆயிடு..

    ReplyDelete
  7. ஆ.... கவி, இப்பவும் அந்தக் கொலீஜ் இருக்கும்தானே, இப்போது கொடுக்கப்படும் சேர்டிபிகடையும் முடிந்தால் ஒருதடவை வாங்கி செக் பண்ணுங்கோ.

    //அதனாலதான் எனக்கு யூகேஜியை விட்டு போகவே மனசு வரமாட்டேங்குது
    /// ஜெய்.... பப்ளிக்கில உப்பூடி உண்மையெல்லாம் உணர்ச்சிவயப்பட்டுக் கொட்டிடப்பூடாது கிக்.கிக்..கீஈ:)))

    ReplyDelete
  8. //தல ஜெய்லானி யூகேஜீ வரை படிச்சிருக்கீங்களா... அனேகமா நீங்கதான் பதிவுலகத்திலேய அதிகமாபடிச்சவரா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..நான் வெறும் எல்கேஜீதான்..//

    ///// ஜெய்.... பப்ளிக்கில உப்பூடி உண்மையெல்லாம் உணர்ச்சிவயப்பட்டுக் கொட்டிடப்பூடாது கிக்.கிக்..கீஈ:))) //



    யூ கே ஜில எத்தனை வருஷம் ன்னு சொல்லலையே...சொல்லலையே

    ReplyDelete
  9. ந‌ம்ம‌ ஊர்ல‌ ந‌ட‌ந்த‌ காமெடியா??... ஹி..ஹி... இதுவாது ப‌ர‌வாயில்லை சில‌ காலேஜ் அப்ருவ‌ர் இல்லாம‌ல் ந‌ட‌க்குது..

    ReplyDelete
  10. அதிரா புள்ளைங்க இப்பல்லாம் ரொம்ப உஷார். எங்கள் விவகாரம் தெரிந்து விட்டதால் எல்லோரும் கவனமா இருக்காங்க காலேஜிலும் செக் பண்றாங்க.

    ஜெய்லானி எப்பவும் அப்படித்தான் அப்பாஆஆஆஆஆவி :-)

    ReplyDelete
  11. நன்றி நாடோடி.

    //சில‌ காலேஜ் அப்ருவ‌ர் இல்லாம‌ல் ந‌ட‌க்குது..//
    இதைப்பற்றி எழுதணும்னா தொடரே ஆரம்பிக்கலாம் அம்புட்டு இருக்கு :-(

    ReplyDelete
  12. ஐயோ உண்மையாகவா...என்ன எல்லாம் நடக்குது பாருங்க...இது எல்லாம் பொறுப்பு இல்லாமல் இருப்பதால் நடக்கின்றது...

    ReplyDelete
  13. நன்றி கீதா! இன்னும் ஏகப்பட்ட குழறுபடிகள் அந்த யுனிவர்சிட்டியில் நடப்பதாக சொல்றாங்க :-(

    ReplyDelete
  14. ம்ம்.. தவறு தான் கவி.. மாணவர்களின் படிப்பை எப்படி பாதித்திருக்கிறது!! நாங்களெல்லாம் வெளியூரில் படித்தோம்.. இப்பிடி அலைந்து கொண்டிருக்க முடியாது...

    ReplyDelete
  15. உண்மைதான் சந்தூ. எங்கள் கல்லூரியிலும் பலர் வெளியூரைச் சேர்ந்தவர்கள். வெளிமாநில மாணவர்களும் உண்டு. அவர்களெல்லாம் சிரமப்பட்டுத்தான் போனாங்க :-(

    ReplyDelete
  16. பட்டதாரிகளை வேதனைப்பட்டதாரியாக்கிய சம்பவம்.

    ReplyDelete
  17. நன்றி நிஜாமுதீன். நல்லவேளை எங்களை திரும்பவும் படிச்சு பரீட்சை எழுதச்சொல்லாம விட்டானே அந்த வகையில் தப்பிச்சோம் :-)

    ReplyDelete