Friday, 16 July 2010

இந்திய விமான நிலையங்களில் பாஸ்போர்ட்டுகள் கவனம்

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி. ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு உதவட்டுமே என்றுதான் இந்த பதிவு.

நாம் பாஸ்போர்ட்டை இமிக்ரேஷன் ஆஃபீசர், அல்லது கஸ்டம்ஸ் அல்லது ஏர் இந்தியா ஊழியர்களிடம் கொடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். நம் பாஸ்போர்ர்ட்டை சேதப்படுத்திவிட்டு நம்மை சிக்கலில் மாட்டி காசு கறக்கப் பார்ப்பார்கள்.

எப்படீன்னா நாம இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு போகும்போது நாம் பாஸ்போர்ர்டை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு நாம் அசந்த சமயம் பார்த்து பாஸ்போர்ட்டில் ஏதேனும் பக்கத்தை கிழித்து விட்டு அல்லது சேதப்படுத்திவிட்டு exit stamp அடித்து தந்து விடுவார். நாமும் இது தெரியாமல் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு போய்விடுவோம். ஆனால் நம் பாஸ்போர்ட் பற்றிய எல்லா விவரங்களையும் ரெட் மார்க்கோடு சிஸ்டத்தில் ஏற்றிவிடுவார்.

அடுத்தமுறை நாம் இந்தியாவரும்போது ஆரம்பிக்கும் ஏழரை. விசாரணை ஆரம்பிக்கும். எவ்வளவு நாள் வெளிநாடுகளில் இருக்கிறார் அவரது வருமானம் இதைப் பொறுத்து பேரம் போலீஸ் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளால் பேரம் பேசப்பட்டு பணம் கறக்கப்படும். யாராவது நம்ம மேல தப்பு இல்லன்னுட்டு சண்டை போட ஆரம்பிச்சோம் அவ்வளவுதான் நம்ப எதிர்காலத்தையே நாசமாக்கிடுவானுங்க இந்த படுபாவிங்க.

அதனால பாஸ்போர்ட்டை இந்த படுபாவிங்கக்கிட்ட கொடுத்துட்டு தேமேன்னு நிற்காம நம் பாஸ்போர்ட்டில் எப்போதும் கவனம் வைத்திருக்க வேண்டும். இல்லேன்னா ஆப்புதான்.

இந்த செயல் அதிகம் நடக்கும் ஏர்போர்ட்டுகள் மும்பை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு. ஒரு மாதத்தில் 20 முதல் 30 கேஸ்கள் பதிவு செய்யப்படுகின்றனவாம் (இதுக்கு கூட டார்கெட் வச்சிருக்கானுங்க போல).

Aramaco's Arifuddin அப்படீங்கறவர் தன்னோட குடும்பத்தோட மொத்தம் 6பேர் ஜெட்டாவிலிருந்து இந்தியா வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் வந்திறங்கி ஒரு மாதம் தங்கி விட்டு அங்கிருந்து அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் இறங்கி அங்குள்ள இமிக்ரேஷன் கடக்க இருக்கும் போதுதான் மனைவி பாஸ்போர்ர்ட்டிலிருந்த அமெரிக்க விசா பக்கத்தை காணவில்லை என்பதை பார்த்திருக்கிரார். ஹைதராபாத்தில் இருக்கும் போது விசா இருந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் மொத்த குடும்பமும் இந்தியா திரும்பியிருக்கிறது. மும்பையில் இறங்கியதும் போலீஸ் அரெஸ்ட் செய்து இருக்கிறது. இப்போது கோர்ட்டுக்கும் இமிக்ரேஷன் அலுவலங்களுக்கும் இடையே கிடந்து அல்லாடுகிறார்.

மக்களே கவனமா இருங்க. நீங்களும் சிக்கலில் மாட்டிக்காதீங்க. நண்பர்களிடத்தும் தெரிந்தவர்களிடத்தும் சொல்லி உஷார்ப்படுத்துங்கள். மீடியாவில் வெளியிடப்பட்டால் மிக நல்லது.

பணத்திற்காக அப்பாவிகளை பாடாய்ப்படுத்தும் இந்த ஜென்மங்களை என்ன செய்வது.

16 comments:

  1. இந்த நியுசை படிச்சிருக்கேன்... திருவனந்தபுரத்துலயும் நடந்திருக்கிறதா கேள்விப்பட்டிருக்கேன்... அவனுங்க பாஸ்போட்டை வாங்கி சீல் வைக்கும்போது நமக்கு எங்க தெரியுது, கவுண்டர் கழுததுக்குமேல இருக்கு...உத்துப்பார்த்ததா கூட என்ன பண்றானுங்கன்னு தெரியாது...

    ஒருதடவை துபாய்க்கு திரும்ப வரும்போது என்னை தி.புரத்துல இமிக்ரேஷன்ல நிக்க வச்சு தீவிரவாதி மாதிரி விசாரிச்சானுங்க... பயப்படாம ரிவிட்டு அடிச்சேன்...சீல் அடிச்சு வுட்டானுங்க... கொஞ்சம் பெப்ப்பேன்னு நின்னா அவ்ளோதான்...

    ReplyDelete
  2. //அவனுங்க பாஸ்போட்டை வாங்கி சீல் வைக்கும்போது நமக்கு எங்க தெரியுது, கவுண்டர் கழுததுக்குமேல இருக்கு...உத்துப்பார்த்ததா கூட என்ன பண்றானுங்கன்னு தெரியாது... //

    உண்மை. நான் எப்பவுமே ஸ்டாம்ப் அடிச்சு வாங்கினதும் எல்லாம் சரியா இருக்கான்னு முக்கியமா விசா உள்ள பக்கங்கள் சரியா இருக்கான்னு செக் பண்ணிப்பேன். ஒருவாட்டி என்னோட இந்தோனேசியன் ஸ்டே பெர்மிட்டை திருப்பித் தரவே இல்லை. நல்லவேளையாக கவனித்ததால் கேட்டு வாங்கிட்டு வந்தேன்.

    //கொஞ்சம் பெப்ப்பேன்னு நின்னா அவ்ளோதான்... //

    100% உண்மை

    ReplyDelete
  3. எல்லா இடத்துலேயும் திருட்டுத்தனம் பண்ணனும்னே சிலர் இருக்காங்க.



    http://vaarththai.wordpress.com

    ReplyDelete
  4. //கொஞ்சம் பெப்ப்பேன்னு நின்னா அவ்ளோதான்... //உண்மைதான் :)

    பலருக்கு உதவியாய் இருக்கும்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. //கொஞ்சம் பெப்ப்பேன்னு நின்னா அவ்ளோதான்... //உண்மைதான் :)/// பெபே மட்டுமில்லை, உஷாரானவர்களும் மாட்டுப்படுவதுண்டு.... சாக்கிரதையாத்தான் இருகோணும்.

    நல்ல பதிவு கவிசிவா.

    ReplyDelete
  6. நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு

    ReplyDelete
  7. அட நம்ம பெப்பெப்பே இவ்ளோ பேமஸ் ஆயிருக்கா....:))

    ReplyDelete
  8. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    :)

    ReplyDelete
  9. அடப்பாவிங்களா ...எருமை மாடுகள் நல்லாதானே சம்பளம் வாங்குது. இன்னும் என்னா பண வெறி...அவனுங்க தலையில இடி விழ (( நமக்கு அவ்வளவுதாங்க திட்ட தெரியும் வேற என்ன சொல்ல )) அவ்வ்வ்வ்

    ReplyDelete
  10. //soundr said...
    எல்லா இடத்துலேயும் திருட்டுத்தனம் பண்ணனும்னே சிலர் இருக்காங்க.//

    திருடனாய்ப் பர்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது :(

    ReplyDelete
  11. நன்றி ஹைஷ் அண்ணா

    ReplyDelete
  12. நன்றி அதிரா.

    நன்றி செந்தில்குமார்

    ReplyDelete
  13. //நாஞ்சில் பிரதாப் said...
    அட நம்ம பெப்பெப்பே இவ்ளோ பேமஸ் ஆயிருக்கா....:)) //
    ரொம்ப ஃபேமசாயிடுச்சு :)

    ReplyDelete
  14. அப்டீங்களா ஸ்வேதா! தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  15. " அந்த எருமைங்க மேல இடி விழ" எனக்கும் இந்த அளவுக்குத்தான் திட்ட தெரியும் ஜெய்லானி :((

    ReplyDelete
  16. Enakku IRUMENI FRIENDS Group-la irunthum, En Pazhaiya Collegue NISHIM N KAHASIM -nnu kerala nanbar English-layum anuppiyirunthaanga! Athan Sari email-la MEDIA-vil veliyittaal nallathu-nnu pottirunthathaala pathivila eethi vitten!

    Enakku Neenga pathivittathu theriyaathu! AAnaa, sumaar 300-350 peru last 28 hrs -la intha pakathai paarthirukkaanga.(Ref:FEEDJIT realtime view-Menu)Antha vagayila niraiya makkalukku intha seithi poi sera udaviya thirupthi!
    Nanadri!

    ReplyDelete