இந்தோனேஷியாவைப் பத்தி மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சேன்னு இந்த பதிவு
கல்யாணமாகி இங்க வந்த புதுசுல ரங்ஸ் துணை இல்லாம வெளியில் இறங்கவே எனக்கு பயம். அதனால் காலையில் அவர் கிளம்பியதும் பூட்டப்படும் வாசல் கதவு மீண்டும் அவர் வரும்போதே திறக்கப் படும். மெய்ட் மட்டும் பின்புற வாசல் வழியே தானே திறந்து வந்து வேலை செய்து விட்டு போவார்.
ஊரில் இருந்து அப்பா அம்மா எப்படீம்மா இருக்கேன்னு கேட்டால் எனக்கென்னப்பா தங்கக் கூட்டில் கிளி மாதிரி இருக்கேன்ப்பா அப்படீம்பேன் :-). சமையலைத் தவிர வேற வேலையே கிடையாது. அப்புறமென்ன டிவியை போட்டுட்டு சேனலை மாத்திக்கிட்டே இருக்க வேண்டியதுதான் வேலை.
சிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பப்படும் "வசந்தம் சென்ட்ரல்" மற்றும் மலேசியாவிலிருந்து "டிவி3" இதில் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் காலையில் ஒன்றரை மணிநேரம் டிவி3யும் மாலை இரண்டரை மணிநேரம் வசந்தத்திலும்(இப்போது 3மனி முதல் 11மணிவரை) வரும். எல்லாமே படு மொக்கையான நிகழ்ச்சிகளாகத்தான் இருக்கும். இப்பவும் அப்படித்தான் இருக்கு அதிக மாற்றம் ஒண்ணும் இல்லை. அதுவும் ஒரு திரைப்படத்தை 'தொடரும்' போட்டு இரண்டு நாட்களாக டிவி3யில் போடுவானுங்க.
ஆனாலும் அந்த மொக்கைகளையும் தமிழ்மொழியின் இனிமைக்காகவும் வேறு வழியில்லாததாலும் பார்ப்பேன் :-). மற்ற நேரங்களில் சேனல்கள் சும்மாவேனும் மாற்றிக் கொண்டு ஏதாவது புரியறமாதிரி நிகழ்ச்சி இருக்கான்னு தேடிக்கிட்டு இருப்பேன் :-(
இப்படி சேனல்கள் மாற்றும் போது ஒரு இந்தோனேஷியன் சேனலில் நம்ப பிரபுதேவாவும் ரோஜாவும் இந்தோனேஷிய மொழியில் பேசிக்கிட்டு இருந்தாங்க. அடடா நம்ம ஆளுங்க இந்தோனேஷிய சினிமாக்களில் கூட நடிக்கறாங்களான்னு வாயைப் பிளந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்புறம்தான் புரிஞ்சுது அது 'ராசையா' தமிழ்படத்தின் இந்தோனேஷிய டப்பிங்னு. எனக்கு சந்தோஷம் தாங்கல. உடனே என் மெய்டை கூப்பிட்டு எங்க ஊர்க்காரங்கன்னு பெருமையா காண்பிச்சேன். அப்போ அவங்க சொன்னாங்க டெய்லி அந்த சமயத்தில் இந்திய படங்கள் டப் பண்ணி அந்த சேனலில் போடுவாங்களாம். அவங்களைப் பொறுத்தவரை அது ஒரு ஹிந்தி படத்தின் மொழிமாற்று படம்.
அது எங்கள் தமிழ் மொழி படம்னு சொல்லி புரிய வைக்கறதுக்கு ரொம்ப கஷ்டப் பட்டேன். ஏன்னா இந்தியர்களின் மொழி ஹிந்தி என்பது இங்குள்ள பெரும்பாலானவர்களின் எண்ணம். இத்தனைக்கும் இங்கே தமிழ் பேசும் பூர்வீக இந்தியர்கள் உண்டு. அப்புறம் டயலாக் புரியுதோ இல்லியோ இந்திய முகங்களைப் பார்ப்பதற்காகவே தினமும் பார்க்க ஆரம்பித்தேன்.
இங்குள்ளவர்களிடையே அதிகம் பிரபலமான தமிழ்படம் 'தளபதி'. ரஜினியை தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களின் ஆல் டைம் ஃபேவரைட் 'குச் குச் ஹோத்தா ஹை'. இந்திய பெண்களை பார்த்தவுடன் அவர்கள் அந்த குச் குச் ஹோத்தா ஹை பாட்டை பாட ஆரம்பித்து விடுவார்கள். மொழி தெரியாவிட்டாலும் ஹிந்தி பாட்டுக்களை அருமையாக பாடுவார்கள். ரெஸ்ட்ராண்டுகளுக்கு போனால் அங்குள்ள ம்யூசிக் க்ரூப் நம்மைக் கண்டதும் கண்டிப்பாக ஒரு ஹிந்தி பாட்டு பாடுவார்கள். அந்நிய தேசத்தில் நமக்காக நம் தேசத்துப் பாடலை அவர்கள் பாடி கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
எந்த ஒரு இந்தோனேஷிய இளம்பெண்ணும் இந்தியரைப் பார்த்ததும் கேட்கும் கேள்வி ஷாருக்கான் உங்க ஊர்க் காரரான்னுதான். ஷாருக்கான்னா அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அடுத்தது ஹ்ருத்திக்ரோஷன். இந்திய நடிகைகளையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். நாங்களும் சும்மானாச்சுக்கும் ஷாருக்கானும் நாங்களும் ஒரே ஊர்தான் என்று டூப் அடித்து விடுவோம் :-)
ஆண்கள் கேட்கும் ஒரே ஒரு விஷயம் ஹிந்தியில் எப்படி ஐ லவ் யூ சொல்றதுன்னுதான். அவங்க கேர்ள் ஃப்ரெண்டிடம் சொல்லி அசத்துவதற்காம். நமக்கே ஹிந்தி சுத்தமா தெரியாது. நம் வாயில் என்ன வருதோ அதுதான் ஐ லவ் யூ க்கான ஹிந்தி மொழிபெயர்ப்பு :-)
இந்தியர்கள்னா அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவர்களின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்ற வரலாறு கொண்டவர்கள்.
இப்படி இந்தியர்கள் மீது தனி பாசம் கொண்டிருந்த மக்களுக்கு இப்போது கொஞ்சம் மனவருத்தம். சில இந்தியர்களுக்கும் இந்தோனேஷியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் :-(. விரைவில் எல்லாம் சரியாகனும்னு ஆசைப்படறேன். ஏன்னா எனக்கு இந்த மக்களை ரொம்பவே பிடிக்கும்.
இந்தோனேஷிய சினிமா தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் பூர்வீக இந்தியர்களுடையது என்பது பெருமையான விஷயம்.
அந்த பிரச்சினை பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்
//அதுவும் ஒரு திரைப்படத்தை 'தொடரும்' போட்டு இரண்டு நாட்களாக டிவி3யில் போடுவானுங்க.//
ReplyDeletehahahaha சிரிப்பை அடக்க முடில...படத்துக்கே தொடரும்போடுவானுங்களா....:))
//நமக்கே ஹிந்தி சுத்தமா தெரியாது. நம் வாயில் என்ன வருதோ அதுதான் ஐ லவ் யூ க்கான ஹிந்தி மொழிபெயர்ப்பு //
அப்ப ஊரை ஏமாத்திருக்கீங்க.... என்னா வில்லத்தனம்....:)) நான் இந்திதெரியாம வெளியுர் போனபோது முதல்ல கத்துகிட்ட வார்த்தைகள்ல இதுவும் ஒண்ணு....ஒருவேளை என்கிட்ட வந்து யாராவது சொன்னா...அதுக்குத்தான்:))
//நமக்கே ஹிந்தி சுத்தமா தெரியாது. நம் வாயில் என்ன வருதோ அதுதான் ஐ லவ் யூ க்கான ஹிந்தி மொழிபெயர்ப்பு :-)///
ReplyDeleteஆஹா!!!!!! உங்க புண்ணியத்துல எத்தனை பேரு அடிவாங்கினாங்களோ?....
//நாங்களும் சும்மானாச்சுக்கும் ஷாருக்கானும் நாங்களும் ஒரே ஊர்தான் என்று டூப் அடித்து விடுவோம் :-)//
இது வேறயா?.... ஹி..ஹி.. நல்லாயிருங்க..
//நம் வாயில் என்ன வருதோ அதுதான் ஐ லவ் யூ க்கான ஹிந்தி மொழிபெயர்ப்பு :-)//
ReplyDeleteமவுனராகம் ரேவதி மாதிரி ஏடாகூடமா ஏதாவது சொல்லிக்குடுத்தீங்களா:)
அட, ஷாரூக்கான் எங்க பக்கத்து வீட்டுக்காரர் தான்.. ஹ்ருதிக், எதிர்த்த வீடு :))
ReplyDelete//ஹிந்தியில் எப்படி ஐ லவ் யூ சொல்றது//
மைனே ப்யார் கியா (நான் காதலித்தேன்) அப்பிடின்னு சொல்லிவிடுங்க.. அடி வாங்கிட்டுத் திரும்பட்டும் :)
நல்ல வேளை அந்த ஒரே கேள்வியோட விட்டான்க ..ஹிந்தி தப்பிச்சுது...!!!
ReplyDeleteகவி, உங்கட “இந்தோனேசியப் பெட்டி” நன்றாக இருக்கு, ரசிச்சுப் படிக்கலாம், தொடருங்கோ.
ReplyDelete//அப்ப ஊரை ஏமாத்திருக்கீங்க.... என்னா வில்லத்தனம்....:)) நான் இந்திதெரியாம வெளியுர் போனபோது முதல்ல கத்துகிட்ட வார்த்தைகள்ல இதுவும் ஒண்ணு....ஒருவேளை என்கிட்ட வந்து யாராவது சொன்னா...அதுக்குத்தான்:))//
ReplyDeleteநன்றி பிரதாப். அதுசரி நீங்க முதன்முதல்ல கத்துக்கிட்ட இந்தி யூஸ் ஆச்சா இல்லையா?
நன்றி நாடோடி! எத்தனை பேர் அடிவாங்கினா நமக்கென்ன? ஹிந்தி தெரியாதுன்னு சொன்னா அப்போ உங்களுக்குன்னு பொதுவான மொழி கிடையாதான்னு அடுத்த கேள்விய போடுவானுங்க? ஏன்னா இங்கே ஒவ்வொரு வட்டாரத்திற்கும் சில மொழிகள் இருந்தாலும் ஒட்டுமொத்த இந்தோனேஷியர்களுக்கும் பொதுவான மொழி பஹாசா இந்தோனேஷியா. அதுமாதிரி நமக்கு என் இல்லேம்பானுங்க :(.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சின்ன அம்மணி!
ReplyDeleteஹி ஹி ஒரே ஒரு வாட்டி... "தும் குத்தா ஹை"ன்னு சொல்லிக் கொடுத்தேன். அடிவாங்கினானான்னு தெரியல :-)
நன்றி சந்தூ!
ReplyDelete//அட, ஷாரூக்கான் எங்க பக்கத்து வீட்டுக்காரர் தான்.. ஹ்ருதிக், எதிர்த்த வீடு :))//
அப்படியா?!
////ஹிந்தியில் எப்படி ஐ லவ் யூ சொல்றது//
மைனே ப்யார் கியா (நான் காதலித்தேன்) அப்பிடின்னு சொல்லிவிடுங்க.. அடி வாங்கிட்டுத் திரும்பட்டும் :) //
என்ன சொல்லிக் கொடுத்தாலும் நம்பிடுவாங்க. இதை கேட்கற பொண்ணுக்கும் இந்தி தெரியாதுங்கறதால பிரச்சினை இல்லை :)
நன்றி ஜெய்லானி! ஹி ஹி ஆமா ஹிந்தி தப்பிச்சிடுச்சு!
ReplyDeleteநன்றி அதிரா! பூசுக்கு பிடிச்சா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரிதான் :)
ReplyDeleteஉங்க தங்க கூடு அவஸ்தை கஷ்டம்தான்...
ReplyDeleteசுவாரஸ்யமா இருக்கு இந்தோனிஷியா... இன்னும் எழுதுங்க....
நன்றி வசந்த்.
ReplyDeleteஹி ஹி இன்னும் கூடு தங்கக் கூடாத்தான் இருக்கு. ஆன கிளிதான் கூட்டுக்குள் அடங்கி இருக்க மாட்டேங்குது. அடிக்கடி வேலையிருக்குன்னு சிங்கப்பூர் பறந்துடுது
//சுவாரஸ்யமா இருக்கு இந்தோனிஷியா... இன்னும் எழுதுங்க....//
ஹா ஹா என் மொக்கையை படிச்சு சகிச்சுக்க நீங்க இருக்கும் போது என்ன கவலை. எழுதிட வேண்டியதுதான் :-).
// கல்யாணமாகி இங்க வந்த புதுசுல ரங்ஸ் துணை இல்லாம வெளியில் இறங்கவே எனக்கு பயம்.//
ReplyDeleteஇப்ப ரங்ஸ்,, உங்க துணை இல்லாம வெளிய போக பயப்படுவாங்களே!! சரி தானுங்களா. ஹி..ஹி..
அது சரி இந்த "ரங்ஸ் ரங்ஸ்" சொல்றீங்களே அவங்களோட நிறங்களா இல்ல இதிலே வேற ஏதும் உள்ளர்த்தம் இருக்கா?? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..!
நன்றி அப்துல்காதர்!
ReplyDelete//இப்ப ரங்ஸ்,, உங்க துணை இல்லாம வெளிய போக பயப்படுவாங்களே!! சரி தானுங்களா. ஹி..ஹி.. //
இப்பூடி உண்மையெல்லாம் வெளிப்படையா சொல்லக் கூடாது :-)
ரங்ஸுக்கு அர்த்தம் தெரியாம பதிவுலகில் ஒருவரா? அப்பாவி தங்கமணி அக்கா என்னான்னு வந்து கேளுங்க
//நாங்களும் சும்மானாச்சுக்கும் ஷாருக்கானும் நாங்களும் ஒரே ஊர்தான் என்று டூப் அடித்து விடுவோம் //
ReplyDeleteஅதான... அவங்க என்ன ரேஷன் கார்டு ப்ரூப்ஆ கேக்க போறாங்க...ஹி ஹி ஹி
//வாயில் என்ன வருதோ அதுதான் ஐ லவ் யூ க்கான ஹிந்தி மொழிபெயர்ப்பு//
அடப்பாவமே எவ்ளோ பேரு வாழ்கை போச்சு...
//Kavisiva said...
ReplyDeleteரங்ஸுக்கு அர்த்தம் தெரியாம பதிவுலகில் ஒருவரா? அப்பாவி தங்கமணி அக்கா என்னான்னு வந்து கேளுங்க//
அடடா இவ்ளோ அப்பாவியா ரங்க்ஸ்க இந்த கலி காலத்துல இருக்காங்களா என்ன...
அப்துல்காதர் sir... நம்ம ஊட்டுக்கு (ப்ளாக் தாங்க) வாங்க... அங்க விலாவாரியா க்ளாஸ் எல்லாம் இருக்கு
நன்றி அப்பாவி தங்கமணி!
ReplyDelete//அடடா இவ்ளோ அப்பாவியா ரங்க்ஸ்க இந்த கலி காலத்துல இருக்காங்களா என்ன... //
ரங்ஸ் எல்லாம் அப்பாவிங்க இல்ல அப்படி நடிக்கறவுங்க!
///அதுவும் ஒரு திரைப்படத்தை 'தொடரும்' போட்டு இரண்டு நாட்களாக டிவி3யில் போடுவானுங்க.//
ReplyDeleteகலக்கல் போங்க . அப்படியே விட்ட இன்னும் இரண்டு தலைமுறைக்கு தொடரும் என்று போட்டாலும் போடுவானுக . பகிர்வுக்கு நன்றி
நன்றி சங்கர்! இங்க உள்ள தமிழ் டிவியில் வர மொக்கை நிகழ்ச்சிகளுக்கு இப்படி தொடரும் போட்டு படம் போடறதே நல்லது! அவ்வளவு மொக்கையா இருக்கும்.
ReplyDelete//ரங்ஸ் எல்லாம் அப்பாவிங்க இல்ல அப்படி நடிக்கறவுங்க!//
ReplyDeleteஎங்களுக்கெல்லாம் வெள்ள மனசு..... குழந்தைங்க மாதிரி.....
ஏன் இப்டி பொறாமைல பொசுங்குறீங்க....
கடவுள் தன்னால்,
ஒவ்வொரு ஆணையும் கவனித்துக்கொள்ள முடியாது என தாயை படைத்தான்....
ஒவ்வொரு பெண்ணையும் கவனித்துக்கொள்ள முடியாது என ரங்கமணியை படைத்தான்....