Thursday, 29 July 2010

இந்தோனேஷியவில் இந்தியர் தாக்கப்பட்ட விவகாரம்- மற்றொரு பக்கம்

இந்தோனேசியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே சின்ன பிரச்சினை வந்திடுச்சுனு போன பதிவில் சொன்னேனே அதைப் பற்றிதான் இந்த பதிவு.

இந்த நியூசை பெரும்பாலான இந்தியர்கள் படித்திருப்பீர்கள். "ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்" அப்படீன்னு இந்திய பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்தன. கண்டிப்பா அது இனவெறித் தாக்குதல் இல்லேன்னு இங்குள்ள உணர்ச்சிவசப்படாத நடுநிலையானவர்களுக்கு தெரியும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னன்னு பார்க்கணும். ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசர் பொறுப்பிலிருந்த ஒரு இந்தியர் தன் கீழ் வேலை பார்த்த இந்தோனேஷிய தொழிலாளியிடம் "முட்டாள் இதுகூடத் தெரியாதா" என்று திட்டி விட்டார். பிரச்சினையின் ஆரம்பம் இதுதான். இதனால் கோபமடைந்து இந்தோனேஷிய தொழிலாளிகள் அங்கு வேலை பார்த்த இந்தியர்களை தாக்கியும் அவர்களது வாகனங்களை அடித்தும் நொறுக்கினர்.

இவ்வளவையும் கேட்டவுடன் சக இந்தியன் இன்னொரு நாட்டவனால் தாக்கப்பட்டால் எல்லோருக்கும் எழும் இயல்பான கோபத்தைதான் நம் பத்திரிக்கைகளும் எழுதியது. ஆனால் உண்மையில் "முட்டாள் இது கூட தெரியாதா படிக்கவில்லையா" போன்ற வார்த்தைகள் இந்தோனேஷியர்களை மிகவும் கோபம் கொள்ளவைக்கக் கூடிய வார்த்தைகள். வீட்டில் வேலை செய்பவரிடம் "இது கூடத் தெரியாதா"ன்னு கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டாலே அழ ஆரம்பித்து விடுவார்கள். அவர்களை மிகவும் வேதனைப்பட வைக்கக் கூடிய வாரத்தைகள் இவை (நமக்கு மிக சாதாரணமானவையாக தோன்றினாலும்)

இங்கே வரும் வெளிநாட்டு ஊழியர்களிடம் அங்கு ஏற்கெனவே வேலை பார்ப்பவர்கள் இதைச் சொல்லி எச்சரிக்கையும் செய்வார்கள். அப்படியும் ஏதோ ஒரு வேகத்தில் நம்மவர் வார்த்தையை விட்டு விட்டார். அன்று இந்த வார்த்தையை சொன்னது இந்தோனேஷியனாக இருந்தாலும் அவரையும் தாக்கியிருப்பார்கள்.

இன்னொரு முக்கிய விஷயம் சம்பளத்தில் காட்டப்படும் வித்தியாசம். ஒரே வேலையை செய்யும் இந்தோனேஷியனுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட வெளிநாட்டு ஊழியர் வாங்கும் சம்பளம் 5 முதல் 6மடங்கு அதிகம். நம் நாட்டில் இந்த நிலை என்றால் நாம் சும்மா இருப்போமா? ஆங்கிலம் தெரியாதது மட்டுமே அவர்களின் மைனஸ் பாய்ண்ட். மற்ற படி இருவரும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள்.

உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார்கள். ஒரு கம்பெனியில் ஒரே வேலைபார்க்கும் ஒருவர் சொகுசான வாழ்க்கை வாழும் போது இன்னொருவர் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருப்பார். மால்களில் நாம் நம் பில்லுக்கான பணம் கொடுக்கும் போது அவர்களின் முகத்தில் ஒரு ஏக்கப் பார்வை இருக்கும். அவர்களின் ஒருமாதச் சம்பளத்தை நாம் ஒரே பில்லாக கொடுத்துக் கொண்டிருப்போம்.

நம்மவர்களில் சிலர் இந்தோனேஷியர்களை கொஞ்சம் மரியாதைக் குறைவாகவே நடத்துவார்கள் என்பது வேதனையோடு ஒத்துக் கொள்ளவேண்டிய விஷயம். என்னதான் நாம் அவர்களை விட அதிகம் சம்பாதித்தாலும் அது அவர்களுடைய நாடு என்பதை மறந்து விடுகிறார்கள்.

எல்லா வருத்தமும் சேர்ந்து நம்மவர்கள் மீது காட்டி விட்டார்கள். பாவம் அந்த இந்தியருக்கும் வேலை போய் விட்டது. இப்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அவர்களின் முகத்தில் முன்பிருந்த நட்புப் பார்வை இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். விரைவில் சரியாக வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

16 comments:

 1. ayyo unuru australia venaam...nan jakarta poiruken..migavum nalla manithargal indonesiargal..

  ReplyDelete
 2. இப்படியும் நடக்கிறதோ கவி. அவர்களிடத்தில் இருந்துகொண்டே, அவர்களைக் கீழே போட்டு மிதிப்பது போலல்லவா இருக்கு.

  ReplyDelete
 3. "முட்டாள் இதுகூடத் தெரியாதா"/// இது சொல்லும் விதத்திலும் தங்கியிருக்கு.... அன்பாகவும் சொல்லலாம், அடிப்பதுபோலவும் சொல்லலாம்:).

  ReplyDelete
 4. நன்றி காயத்ரி. நிச்சயம் இன்னொரு ஆஸ்திரேலியாவாக மாறாது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. ஆனால் மனக்கசப்பு நீங்க கொஞ்சம் நாட்கள் ஆகும்

  ReplyDelete
 5. இங்குள்ள சட்டம் அப்படி அதிரா! இவ்வளவு சம்பளம் கொடுக்கலேன்னா நம்மைப் போன்றவர்கள் இங்கு வந்து வேலை செய்யமாட்டோம். நாம் வரவில்லையென்றால் கம்பெனிகளும் இங்கே தொழில் நடத்த வரமாட்டார்கள். அதான் இப்படி.

  "குராங் அஜார்" இந்த வார்த்தை அவர்களை ரொம்பவே கோபப்படுத்தும். அதன் அர்த்தம் படிக்காதவன் முட்டாள் போன்ற பொருள் வரும். அதை எப்படிச் சொன்னாலும் :-(

  நன்றி அதிரா

  ReplyDelete
 6. இது கூடத் தெரியாதான்னு என்ன யாராவது கேட்டா எனக்கும் கூட கஷ்டமாகவும் கோபமாகவும் இருக்கும்.. இன்னிக்கு உனக்கு தெரிஞ்சது எனக்குத் தெரியல தான், ஆனா எனக்கு தெரிஞ்சதெல்லாம் உனக்கும் தெரியாதுன்னு நினைச்சுப்பேன்.. தவறான கேள்வியிது..

  அதிரா சொன்ன மாதிரி தான்.. இதுவே நண்பர்களப் பாத்து, இது கூடத் தெரியாமலயா இங்க இம்புட்டு நாள் குப்ப கொட்டுன அப்பிடின்னு ஜாலியா நக்கல் அடிக்கலாம்.. தப்பா எடுத்துக்க மாட்டாங்க.. ஆனா, கீழ வேல செய்றவங்க கிட்டச் சொல்லக்கூடாது..

  ReplyDelete
 7. உண்மைக‌ள் சில‌ நேர‌த்தில் ம‌றைக்க‌ப்ப‌ட்டு விடும்... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

  ReplyDelete
 8. கவி இதேதான் இன்னிக்கு கூட சந்த்யா போஸ்ட்ல படிச்சது உன்னால வண்டி ஓட்ட முடியாது உனக்கெல்லாம் தேவையான்னு கேட்டதுக்காக வண்டி அவன் முன்னாடியே ஓட்டிக்காட்டியிருக்காங்க...அங்க நல்ல விஷயம் நடந்திருக்கு...

  பட் இந்தோனிஷியால :((

  உனக்கு இது கூட தெரியாதான்னு கேட்குறது தப்புதான் டக்குன்னு புரொமோசன் வாங்கி ஸ்பீடா போயிட்டு இருக்குற என்னை ஸ்பீட் பிரேக் வச்சு கீழ கவுக்கணும்ன்னு இங்க இருக்கும் மலையாள நண்பர்கள் அப்போ அப்போ இதே மாதிரிதான் இது கூட தெரியாதான்னு சூடேத்துவாங்க நாம சூடானாலும் அவனுங்க வெட்கப்படற அளவு மறுநாள் அந்த வொர்க் முடிக்கிறதும் அவனுங்க பல்ப் வாங்குறதும் வழக்கமா போச்சு..

  நாம அத பாஸிட்டிவா எடுத்துகிறோம் இந்தோனிஷியாகாரவங்க நெகடிவ்வா எடுத்துகிடறாங்க போல ஒரு வேளை படிப்பறிவு இருந்திருந்தா அதுபோல கோபப்பட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ...

  ReplyDelete
 9. நன்றி நாடோடி! உண்மைதான்.

  ReplyDelete
 10. நன்றி சந்தனா! இந்தோனேசியர்களைப் பொறுத்தவரை அது மிகவும் கேவலப்படுத்தும் வார்த்தை. அதான் பிரச்சினை

  ReplyDelete
 11. உண்மைதான் வசந்த். ஆனால் எல்லோராலும் பாசிட்டிவ்வா எடுத்துக்க முடியறதில்லை.

  மல்லு... அவங்களைப்பத்தி என்னத்த சொல்ல?

  இந்தோனேசியர்களுக்கு 'குராங் அஜார்' என்ற வார்த்தை அவர்களை மிகவும் கேவலப்படுத்தும் வார்த்தை அதான் பிரச்சினையாயிடுச்சு. அதுவும் அவர்கள் நாட்டுக்கு வேலை செய்ய வந்த ஒருத்தர் வாயிலிருந்து கேட்கும் போது...
  சம்பவம் நடந்த இடம் நாங்கள் இருக்கும் தீவில் என்பதால் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நெருக்கமாக பழகியவர்களே சற்று விலகிப்போவதைப் போல் உணர்கிறோம்.

  ReplyDelete
 12. சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது.

  ReplyDelete
 13. அடக்கடவுளே... இந்த பிரச்சன இல்லாத இடமே இல்லையா... இது பெருசாகாம இருக்கணும்...அது தான் என்னோட வேண்டுதல்... நல்ல பதிவு கவி

  ReplyDelete
 14. ஒருத்தரை கேவலப்படுத்தும் வார்த்தைன்னு தெரிஞ்ச பின்னால் அதை எப்படி யூஸ் பண்ணினாலும் தப்புதான்.
  இது மன்னிக்க முடியாத செயல் . அது யாராக இருந்தாலும் .

  உண்மை சில நேரம் வெளி வருவதில்லை.

  ReplyDelete
 15. நன்றி அப்பாவி(?!).
  பிரச்சினை சுமூகமாயிடுச்சு. அதில் பெரும்பங்கு இங்குள்ள மீடியாக்களை(சிலவற்றைத் தவிர) சேரும். நடுநிலையா செயல்பட்டிருந்தாங்க

  ReplyDelete
 16. நன்றி ஜெய்லானி! நம் ஊடகங்களை குறை சொல்ல முடியாது. ஏன்னா இங்க உள்ளவங்க உணர்ச்சிப் பெருக்கில் அவர்களிடம் சொன்னது மட்டும்தான் அவர்களுக்கு தெரியும். உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லாமல் போனது

  ReplyDelete