Sunday 11 July 2010

குழந்தைகள்- ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஆசை

கடந்த வாரம் என் செல்ல மருமகளின்(நாத்தனார் மகள்) பிறந்தநாள். அதற்காக சிங்கப்பூர் போயிருந்தேன். அவளுக்கு என்ன கிஃப்ட் வாங்குவது என்று கடந்த இரண்டு மாதங்களாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டால் அதை அவங்க சொல்ல மாட்டாங்களாம். அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு நாங்களே யோசிச்சு அதை அவங்க பிறந்த நாளன்று சர்ப்ரைசாக கொடுக்கணுமாம். அவங்க அப்பா அம்மாவுக்கும் இதே ரூல்தான்.

நானும் என் அண்ணியும் மண்டையை பிச்சுக்கிட்டதுதான் மிச்சம். ரங்கமணிங்க பொண்ணை ஐஸ் வச்சு எஸ் ஆயிட்டாங்க. நாங்கதான் மாட்டிக்கிட்டோம். அப்புறமா என் மருமகளை ஐஸ் வைத்து கெஞ்சி கூத்தாடி(?!)...ஒருவழியா அவளுக்கு மீன்வளர்க்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னா. சரின்னு நானும் என் அண்ணியும் அவளை கூட்டிக்கிட்டு கடைகடையா அலைஞ்சோம். அவளுக்கு பிடிச்ச மாதிரி மீன்தொட்டி கிடைக்கவே இல்லை:( அதற்குள் பிறந்தநாளும் வந்துவிட்டது. அவளே பெரிய மனசு பண்ணி "பரவாயில்ல அத்தை எனக்கு பிடிச்சமாதிரி மீன் தொட்டி கிடைக்கறப்போ வாங்கிகலாம்" அப்படீன்னா. எனக்குத்தான் மனசு கேட்கலை. அய்யோ குழந்தை பிறந்தநாளுக்கு எதுவுமே கொடுக்கமுடியலியேன்னு வருத்தமாயிடுச்சு. அவளுக்கு பிடித்த கேக் மட்டும் வாங்கிக் கொடுத்தேன்.
ஊரில் இருந்து ஃபோன் செய்தவர்களிடம் எல்லாம் அத்தையும் அம்மாவும் எதுவுமே வாங்கித் தரலைன்னு கம்ப்ளெய்ண்ட் வேற :( அப்பாவுக்கும் மாமாவுக்கும் மேல எந்த தப்பும் இல்லையாம். இந்த கொடுமைய எங்க போய் சொல்றது

பிறந்தநாளுக்கு அடுத்த நாள் அவளிடம் "நீ தினமும் மீனுக்கு சாப்பாடெல்லாம் போட்டு கவனிச்சுக்குவியான்னு" கேட்டோம். அதற்கு அவள் பதில்... அத்தை எனக்கு மீன் வளர்க்க வேண்டாம். வேற ஏதாவது வாங்கித்தாங்க அப்படீன்னா... ஆஹா மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறிடுச்சேன்னு முழிச்சோம்.

கொஞ்ச நாளாக முயல் வளர்க்கணும்னு வேற சொல்லிக்கிட்டிருக்கா. அந்த ஆசை எப்போ மாறும்னும் தெரியலை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கிஃப்ட் வாங்குவது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. பர்ப்பிள் கலரில் எது வாங்கிக் கொடுத்தாலும் சந்தோஷம்தான். இப்போது வயது பன்னிரெண்டாகிறது. தினம் தினம் விருப்பங்களும் ஆசைகளும் மாறுகிறது.

இன்னும் அவளுக்குப் பிடித்த கிஃப்ட் வாங்கவில்லை. அடுத்த பிறந்தநாளுக்கு முன்னாடியாவது வாங்க முடியுமான்னு தெரியல :( உங்க யாருக்காவது ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க.

28 comments:

  1. ம் ராமாயணம், மகாபாரதம் ஏன் வந்தது? :)))

    வாழ்க வளமுடன்

    பி.கு://அப்பாவுக்கும் மாமாவுக்கும் மேல எந்த தப்பும் இல்லை//(யாம்.)

    ReplyDelete
  2. இந்த குழந்தைகளின் மனசை புரிஞ்சிக்கவே ஒரு கோர்ஸ் படிக்கனும் போல...குட்டி பொண்ணுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. ஐயம், எஸ்பிட்டால்....






    http://vaarththai.wordpress.com

    ReplyDelete
  4. போன்சாயி மரமொன்று வாங்கி கொடுங்கள்...

    ReplyDelete
  5. உண்மை தான்...அதுவும் குழந்தைகளை விரும்பத்தினை நிறைவேற்றுவது ஒரு பெரிய விஷயம்...//இந்த குழந்தைகளின் மனசை புரிஞ்சிக்கவே ஒரு கோர்ஸ் படிக்கனும் போல...குட்டி பொண்ணுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!//உண்மை தான்....

    ReplyDelete
  6. இந்த கேள்விக்கு விடைதெரியாமல் தான் நானும் முழித்துக்கொன்டிருக்கிரேன்

    ReplyDelete
  7. பிள்ளைகள் வளர வளர கிப்ட் வாங்கறது ரெம்ப கஷ்டம் தாங்க... நான் என்னோட friends பிள்ளைகளுக்கு வாங்கறதுக்கு இப்படி தான் மண்டை உடைச்சுப்பேன்... இப்பவெல்லாம் எதாச்சும் கடையோட கிப்ட் கார்டு வாங்கி குடுத்துடறது... அவங்க இஷ்டபடி வாங்கிகட்டுமுன்னு... நீங்களும் இந்த ஐடியா ட்ரை பண்ணி பாருங்க

    ReplyDelete
  8. ஆகா... கவிசிவா.. ஆப்பிழுத்த குரங்கின் நிலையாச்சே உங்க நிலை:). மீனா? முயலா? அல்லது இரண்டுமா?:), அடுத்த பிறந்தநாளுக்கு முன்,
    எந்தத் தப்பும் இல்லாத, அப்பாவையும் மாமாவையும் பிடித்து முடிவெடுக்கச் சொல்லிடுங்க:)//////அப்பாவுக்கும் மாமாவுக்கும் மேல எந்த தப்பும் இல்லையாம்/// // மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  9. //ம் ராமாயணம், மகாபாரதம் ஏன் வந்தது? :)))

    வாழ்க வளமுடன்

    பி.கு://அப்பாவுக்கும் மாமாவுக்கும் மேல எந்த தப்பும் இல்லை//(யாம்.)//

    ஹைஷ் அண்ணா எப்படி இப்படீல்லாம்? நன்றி!

    ReplyDelete
  10. நன்றி மேனகா. இந்த மருமகளுக்கான கிஃப்ட்டே இன்னும் வாங்கலை. அண்ணன் மகள் பிறந்தநாளும் நவம்பரில் வருகிறது. அவங்களோட இப்போதைய ஆசை செல்ஃபோன். அவங்க கேட்கற மாடல் விலை அதிகம் எல்லாம் இல்லை ஜஸ்ட் 600டாலர்கள்தான் :(

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி Chidambaram Soundrapandian . விரைவில் உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்.

    ReplyDelete
  12. வசந்த் யோசனை நல்லாயிருக்கு. ஆனா அவங்களுக்கு அதுவும் வேண்டாமாம் :(

    ReplyDelete
  13. நன்றி கீதா. ஆம்பளைப் புள்ளைங்களைக் கூட ஈசியா திருப்திபடுத்திடலாம்(ஏமாத்திடலாம்). இந்த பொம்பளைப் புள்ளைங்ககிட்டதான் எதுவுமே பலிக்க மாட்டேங்குது.

    ReplyDelete
  14. வாங்க காயத்ரி! நீங்களும் நம்ம கட்சிதானா!

    ReplyDelete
  15. அப்பாவி தங்கமணி கிஃப்ட் வவுச்சரெல்லாம் என் மருமகள்கிட்ட வேலைக்காகாது :(. எனக்கு என்ன புடிக்கும்னு தெரியாத நீங்களெல்லாம் ஒரு அம்மாவா ஒரு அத்தையான்னு டயலாக் எல்லாம் விடுவா :(

    ReplyDelete
  16. அதீஸ் சந்தடி சாக்குல என்னைய குரங்காக்கிட்டீங்களே :(. அப்பாவும் மாமாவும் ரொம்ப விவரம். உனக்கு எது பிடிச்சுருக்குன்னாலும் வாங்கிக்கோம்மா அம்மாவும் அத்தையும் வாங்கித் தருவாங்கன்னு எஸ் ஆயிடுவாங்க.

    ReplyDelete
  17. ///ஆம்பளைப் புள்ளைங்களைக் கூட ஈசியா திருப்திபடுத்திடலாம்(ஏமாத்திடலாம்). இந்த பொம்பளைப் புள்ளைங்ககிட்டதான் எதுவுமே பலிக்க மாட்டேங்குது./// கபி கபி மேரா தில் மே :)))

    ///எனக்கு என்ன புடிக்கும்னு தெரியாத நீங்களெல்லாம் ஒரு அம்மாவா ஒரு அத்தையான்னு டயலாக் எல்லாம் விடுவா ///ஹா ஹா வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கு :)))

    //அதீஸ் சந்தடி சாக்குல என்னைய குரங்காக்கிட்டீங்களே :(// இந்த பூஸே இப்படிதான் :)

    ReplyDelete
  18. உங்கள் நாத்தனார் குழந்தைக்கு எங்கள் ஆசியும் வாழ்த்துக்களும் .

    சிறுமியின் ஆசையைக்கூட புரிந்து கொள்ள முடியாத நாம் ,
    எல்லோரையும் எல்லாவற்றையும் புரிந்து கொண்டது போல் நடமாடிக்கொண்டிருக்கிறோம்....என்ற விஷயத்தையும் உணர்த்தியிருக்கிறாள்.

    ReplyDelete
  19. ஹைஷ் அண்ணா வீட்டுக்கு வீடு வாசல் படியா பெரிய முற்றமே இருக்குது.

    ReplyDelete
  20. நன்றி கோமா! நமக்குத்தான் அவர்களை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. அவர்கள் நம்பளை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க.

    ReplyDelete
  21. பதின் வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் உங்க மருமக.. அதுக்கான அறிகுறி தான் இதுன்னு தோனுது :)

    ம்ம்.. அவகிட்ட எதப் பத்தியாவது பேசுங்க.. உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா மாதிரி ஆச காட்டுங்க. அவளும் ஏமாந்து, அதே வேனும்ன்னு ஆசப்பட்டுக் கேக்கலாம்..

    இல்லாட்டி, கடேசியா ஒரு எருமைய வாங்கிக் கொடுங்க.. கண்டிப்பா பிடிக்கும் :)))))))

    ReplyDelete
  22. சந்தூ உண்மைதான். ஆனால் அவளிடம் இது நல்லாருக்கு அது பிடிச்சிருக்குன்னு சொல்லி ஏமாற்ற முடியாது(ரொம்ப சின்ன வயசிலேயே). அவளுக்கு பிடிச்சிருந்தாத்தான் வாங்குவா.

    எருமையை வாங்கிக் கொடுத்தா ந்நானும் என் அண்ணியும்தான் மேய்க்கணும் :(

    ReplyDelete
  23. போன்சாய் மரம் வேண்டாம்...வளரும் குழந்தைகளுக்கு அது மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஓரு அழகான நாய்குட்டி வாங்கிகொடுங்க... அப்புறம் பாருங்க உங்க மருகள் தினமும் எவ்ளோ சந்தோஷமா இருப்பாங்கன்னு... எனக்கு சின்ன வயசுல நாய்குட்டி கிடைச்சுது...அந்த சந்தோஷத்தை இதுலசொல்லமுடியாது.. ஆனா அது தெருநாய் போட்டக்குட்டி..:))
    நீங்க நல்லா பொமேரியன், ஜெர்மன் ஷெப்பர்ட் குட்டியா வாங்கிகுடுங்க...

    ReplyDelete
  24. ஆனா ஒண்ணு மட்டும் உண்மைங்க... இந்த பொண்ணுங்க இருக்காங்களே... அது எந்தவயசு ஆனாலும் சரி... அவங்க மனசுல இருக்கறதை கண்டுபிடிக்கறது ரொம்ம்ம்ம்மம்ப கஷ்டம்.... :))

    ReplyDelete
  25. ஆ.. இப்ப ஜஸ்ட் போட்ட பின்னூட்டம், புதிய இடுகைக்காக போட்டது.. மாத்திப் படிச்சுக்கோங்க கவி :)

    ReplyDelete
  26. ஏற்கனவே படிச்சது தான் கவி.. இருந்தாலும், திரும்ப நினைவு படுத்தினதுக்கு நன்றி.. உஷாராயிருந்துக்கறோம்..

    ReplyDelete
  27. நாய்க்குட்டி வளர்க்க ஆசைதானாம். ஆனா லீவுக்கு இந்தியா போகும் போது யார் பார்த்துக்குவாங்கன்னு குழப்பம்

    //ஆனா ஒண்ணு மட்டும் உண்மைங்க... இந்த பொண்ணுங்க இருக்காங்களே... அது எந்தவயசு ஆனாலும் சரி... அவங்க மனசுல இருக்கறதை கண்டுபிடிக்கறது ரொம்ம்ம்ம்மம்ப கஷ்டம்.... :))//

    ரொம்ப நொந்து போயிருப்பீங்க போல தெரியுதே! யார் அந்த பொண்ணு :)

    ReplyDelete
  28. படிச்சுட்டேன் சந்தூ

    ReplyDelete