போன சனிக்கிழமை காலையிலேயே எங்க வீட்டு ரங்கமணி கோல்ஃப் விளையாடப் போறேன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டார். அவரை அனுப்பி வச்சிட்டு மீண்டும் ஒரு குட்டித் தூக்கம் (பின்னே அதிகாலை 6மணிக்கெல்லாம் முழிச்சுக்கிட்டா என்னாவறது) போட்டுட்டு ஏழரைக்கு மீண்டும் முழிச்சு (ஏழரைக்கு முழிச்சதுனாலதான் அன்னைக்கு ஏழரையாயிடுச்சோ என்னவோ) குளிச்சு முடிச்சு... அப்பப்பா காலையிலேயே எம்பூட்டு வேலை...
ஒன்பது மணிக்கு ஒருவழியா லன்ச் சமைக்கலாமேன்னு கிச்சனுக்குள் போனேன். என்னது ஒன்பது மணிக்கே லன்ச் சமைப்பீங்களா அப்படீன்னு கேட்கக்கூடாது. ஏன்னா இந்த ரங்கமணிங்களுக்கு எல்லாம் பொதுவா ஒரு குணம் உண்டு. சீக்கிரம் சாப்பிட வருவேன்னு சொல்லிட்டு போனாங்கன்னா அன்னிக்கு ஒன்னு சாப்பிடவே வரமாட்டாங்க இல்லேன்னா மூணுமணிக்கு மேல வந்து நிப்பாங்க. லேட்டாகும்னு சொல்லிட்டு போனாங்கன்னா பதினோரு மணிக்கே வந்து 12மணிக்கு மீட்டிங் இருக்குதும்மா சாப்பாடு கொடுக்கறியான்னு வந்து நிப்பாங்க. இடையிலே ஒரு ஃபோனோ மெசேஜோ கூட இருக்காது. அதனால் இப்போ நிறையா தங்கமணிங்க உஷாராயிட்டோம். எப்போ வேணும்னாலும் வந்து சாப்பிடுங்க அப்படீன்னு பதினோரு மணிக்குள்ள சமைச்சு வச்சிடுவோம். ரங்கமணி எப்போ வர்றாங்களோ அப்போ திரும்பவும் சூடாக்கி கொடுத்திடுவோம் :)
ஆங்... எங்க விட்டேன்....சமைக்க கிச்சனுக்குள் போய் ஃப்ரிட்ஜை திறந்து(பின்ன மூடிட்டேவா எடுக்க முடியும்னு நீங்க முனுமுனுக்கறது கேக்குது) காய்கறிகளை எடுத்துட்டு திரும்பினா மிக்சி பக்கத்தில் ஒரு விருந்தாளி வந்து நிக்கறாங்க. எனக்கு அவங்களைப் பார்த்ததும் கையும் ஓடலை காலும் ஓடலை. உடனே ரங்கமணிக்கு ஃபோன் பண்ணினா... அவர் எடுக்கவே இல்லை. மனதுக்குள்ளே திட்டிக்கிட்டு வந்திருக்கவங்களுக்கு எதை வைச்சு கொடுக்கலாம்னு யோசிச்சேன். வீட்டில் உள்ளதை வைச்சு கொடுத்து(கொடுக்கவும் பயம்) அவங்களுக்கு போதலேன்னா பிரச்சினையாயிடுமே... (ஏன்னா வந்திருக்கறவங்க ரொம்ப கோபக்காரங்க) அப்படீன்னு யோசிச்சுட்டே(பயந்துக்கிட்டே) செக்யூரிட்டிக்கு ஃபோன் பண்ணி விருந்தாளி வந்திருக்கற விஷயத்தை சொன்னேன்.
உடனே செக்யூரிட்டிகளும் வீட்டுக்கு வந்து விருந்தாளியைப் பார்த்தாங்க. வந்த விருந்தாளி வயசு குறைஞ்சவங்களா இருந்ததால அவங்க கையில இருந்ததை வச்சே ஒன்னு கொடுத்தாங்க. விருந்தாளி மயங்கி கீழ விழுந்துட்டாங்க. பெரியவங்க யாராவது வந்திருக்காங்களான்னு வீட்டுக்குள்ள போய் தேடினாங்க. யாரும் இல்லை. அப்புறம் செக்யூரிட்டிகளே கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. இப்போதான் எனக்கு நிம்மதியாச்சு. அப்பாடா வந்த விருந்தாளிக்கு கோபம் வராதமாதிரி கவனிச்சு திருப்பி அனுப்பிச்சுட்டோமேன்னு நிம்மதியாச்சு.
சரி.. இவ்வளவு நேரம் விருந்தாளி விருந்தாளின்னு சொன்னேனே அவர் யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?! கண்டுபிடிச்சவங்களுக்கு சபாஷ். கண்டுபிடிக்காதவங்களுக்காக... வந்தது வேற யாரும் இல்லை....குட்டி பாம்பு தான். இரண்டு நாட்களாக பெய்த மழையில் மலையிலிருந்து அடித்துக் கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்
சாவகாசமா ரங்கமணி கோல்ஃபெல்லாம் விளையாடி முடிச்சுட்டு ஏம்மா ஃபோன் பண்ணினியாம்மான்னு எனக்கு ஃபோன் பண்றார். எனக்கு வந்த கோபத்தில்... ஒண்ணும் செய்ய முடியலை ஏன்னா ஆள் எதிரில் இல்லையே :(. அப்புறம் என்ன அன்னிக்கு சமையல் அம்புட்டுதான். ரங்க்ஸு பர்ஸுக்கு வேட்டுதான் :)
டிஸ்கி: பாம்பு ஃபோட்டோ எங்கேன்னெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா புத்தகத்துல பாம்பு படம் இருந்தா கூட அந்த புத்தகத்தையே தொடமாட்டேன். அவ்வளவு தைரியசாலி நான் :( இப்பவும் கிச்சனுக்குள் போகும்போது யாராவது இருக்காங்களான்னு நல்லா தேடிப்பார்த்துக்கிட்டுதான் போறேன்.
arumai.. paambuku paal kudthu irukkalamlaa
ReplyDeleteநல்ல தைரியம்தான்!! ஆனாலும் எல்கே சொன்னமாதிரி ஒரு கப் பால் கூட குடுக்காம “அனுப்பி” வச்சிட்டீங்களே!!
ReplyDeleteஎல்.கே. பாம்புக்கு பால் கொடுக்கவா...நானா... செக்யூரிட்டி வர்ற வரைக்கும் மயக்கம் போட்டு விழாததே பெரிய விஷயம்...
ReplyDeleteஅய்யோ நாஞ்சிலோட கமெண்டை பாம்பு தூக்கிட்டு போயிடுச்சு போல...
ReplyDelete//நாஞ்சில் பிரதாப் said
அதானே காலையில எந்திருச்சு குளிக்கறது எவ்வளவு பெரிய வேலை செம டார்ச்சர்...
குட்டிபாம்புக்கே இவ்வளவு பெரிய பதிவுன்னா பெரிய பாம்பு வந்திருந்தா?//
இதானே அந்த கமெண்ட்?
பெரிய பாம்பு வந்திருந்தா மொக்கை போட இன்னிக்கு நான் இருந்திருக்க மாட்டேன் அவ்வளவுதான் :)
ஹுசைனம்மா எல்கேக்கு சொன்னதுதான் உங்களுக்கும் :)
ReplyDelete//சரி.. இவ்வளவு நேரம் விருந்தாளி விருந்தாளின்னு சொன்னேனே அவர் யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?! கண்டுபிடிச்சவங்களுக்கு சபாஷ்.//
ReplyDeleteஅப்ப எனக்கும்தான்.. கண்டுபுடிச்சவங்களுக்கு 'வடை' தரமாட்டிங்களா..
ஐயோ கவி பாம்பு வந்ததா?? ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திப்பா..நானாயிருந்தால் பா பா பா ந்னு கத்திட்டே இருந்திரிப்பேன்...
ReplyDeleteஇதைப் படித்ததும் என் கருத்து.
ReplyDelete"அட, நல்ல பாம்பு, இல்ல இல்ல
நல்ல இடுகை"
கவி எப்படி சமாளிச்சிங்க,நான் என்றால் நினைத்து பார்க்க முடியலை.நல்ல அனுபவம்.
ReplyDeleteபாவம் அது அன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சுதோ..!!ஹி..ஹி...
ReplyDeleteஎல்லோருக்கும் பாம்பு என்றால் பயம் தானே...நீங்களாவது கொஞ்சம் தைரியமாக securityக்கு, கணவருக்கு போன் செய்து இருக்கின்றிங்க...நானாக இருந்தால் என்ன செய்து இருப்போன் என்று நினைக்கிறேன்.....
ReplyDeleteபாம்பா.. அட நாங்கூட கரப்பான் பூச்சின்னு நினைச்சேன் :)) (உங்க தைரியம் மேல அம்பூட்டு நம்பிக்கை :) )
ReplyDelete//பாவம் அது அன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சுதோ..!!ஹி..ஹி//
அதான? அண்ணாதைக்கு அடுத்த சந்தேகம் வந்துடுச்சுடோய்..
ஆமாம் பாம்பு என்ன பண்ணும்?
ReplyDeleteரியாஸ் வடை... அதை பாம்பு தூக்கிட்டு போயிடுச்சு :(
ReplyDeleteமேனகா தைரியமா...எனக்கா...ஹி ஹி. பா..பா..ன்னு நின்னுக்கிட்டு இருந்தா நம்மால ஒன்னும் செய்ய முடியாதுன்னு புரிஞ்சிடுச்சு. அதான் ரங்ஸுக்கு செக்யூரிட்டிக்கு ஃபோன் போட்டேன். இப்பவும் மிக்சியில் அரைக்கும் போது கொஞ்சம் தள்ளி நின்னுதான் அரைக்கிறேன் :)
நன்றி நிஜாமுதீன்
ஆ...ஆசியா நல்ல அனுபவமா? இப்பவும் சின்ன உதறல் இருக்கத்தான் செய்யுது :(
//ஜெய்லானி said...
பாவம் அது அன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சுதோ..!!ஹி..ஹி... //
ஐயோ மறுபடியும் சந்தேகமா?!
கீதா எனக்கு பாம்பு படத்தை பார்த்தாலே பயம் :(
சந்தூ இப்படி ரகசியத்தையெல்லாம் இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்கக் கூடாது :).
ஹைஷ் அண்ணா ஆமா பாம்பு என்ன செய்யும்? எனக்கும் தெரியல :)
வணக்கம். ரசிச்சி படிச்சேன்..! கண்டிப்பா கரப்பான், இல்ல மரப்பல்லி இது ரெண்டுல ஒன்னாதான் இருக்கணும்னு நெனைச்சிட்டே படிச்சேன்...ஆனா கடைசில வந்த ட்விஸ்ட் எதிர்பாக்கல...! உங்களுக்கு தைரியம் ஜாஸ்திங்க..!
ReplyDeleteஆ... கவி பாம்போ? என் நித்திரை போச்சே...
ReplyDeleteரங்கமணி தங்கமணி இங்கேயுமோ மணி? நல்லாவே சிரிக்க வச்சிட்டீங்க...
கதவை எப்பவுமே பூட்டியே வைத்திருங்கோ.... எனக்கு எங்கட நாட்டில பிடிச்ச விஷயங்களில ஒன்று, விஷப்பூச்சிகள் எதுவும் இங்கில்லையாம்...
ஆ.... என்னமோ கால்ல ஊர்வதுபோல இருக்கே எனக்கு..... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஹைஷ் அண்ணா ஆமா பாம்பு என்ன செய்யும்? எனக்கும் தெரியல :) /// இது கூடா தெரியாது கவி... கேள்வி கேட்டவரையும், பதில் சொன்னவரையும்... படமெடுத்து தன் புளொக்கில போடும்:)...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி லெமூரியன்.
ReplyDeleteஅதீஸ் உங்கட நாட்டில் விஷ ஜந்துக்கள் இல்லையா வேணும்னா ஒரு கண்டெய்னர் நிறைய அனுப்பி விடவா :)
ReplyDeleteகதவு எப்பவும் பூட்டிதான் இருக்கும். கதவிடுக்கு வழியே வந்திருக்கும்னு நினைக்கிறேன்.
//ஹைஷ் அண்ணா ஆமா பாம்பு என்ன செய்யும்? எனக்கும் தெரியல :) /// இது கூடா தெரியாது கவி... கேள்வி கேட்டவரையும், பதில் சொன்னவரையும்... படமெடுத்து தன் புளொக்கில போடும்//
அப்போ உங்களையும் படமெடுக்குமா?!
ஒருவேளை நீங்க சமைச்சு முடிச்சாச்சான்னு கேட்டுட்டு வரச்சொல்லி உங்க ரங்க்ஸ் அனுப்பி வெச்சிருப்பாரோ :-)))). ஆனாலும் ஒரு காபி, டீ, ஜூஸ்ன்னு கொடுக்காம அனுப்பி வெச்சுட்டீங்களே!!!!
ReplyDeleteபூஸூக்கு மட்டும் பெரிய கிட்னி இருக்கு என நிருபித்துவிட்டது. ஓம். பாம்பு படம்தானே எடுக்கும் :)))
ReplyDeleteஇந்த பதிவை வாசித்த நொடியில் என் அக்கா,சென்னை கிண்டி அண்ணா யூனிவர்சிடி ஸ்டாஃப் குவார்ட்டர்ஸில் 30 ஆண்டுகள்,பாம்பும் தேளுமே பக்கத்து வீட்டுக்காரிகளாய் வாழ்ந்தது நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஒரு சந்தோஷம் மான்கள் துள்ளி வரும் அழகில் பாம்பை மறந்து இருக்கப் பழகியிருந்தார்.
அமைதிச்சாரல் ஒருவேளை ரங்க்ஸ் அனுப்பினாலும் அனுப்பியிருப்பாரோ! விசாரணை ஆரம்பிச்சுட வேண்டியதுதான் :)
ReplyDeleteகாபி டீ ஜூஸா அன்னிக்கு அதுக்கப்புறம் கிச்சனுக்குள் போகவே இல்லியே :)
ஹைஷ் அண்ணா பாம்பு படம்தான் எடுக்குமா?! படத்துக்கு என்ன பேர்? அது எந்த தியேட்டரில் ரிலீசாகும்? திருட்டு விசிடி டிவிடி கிடைக்குமா? கிடைச்சா அது எங்க கிடைக்கும்?
ReplyDeleteசே ஜெய்லானியோட சந்தேகப்பதிவுகளை படிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து எனக்கும் நிரைய சந்தேகங்கள் வருதுப்பா :)
கோமா நாங்கள் இருக்கும் வீடு மலை மீது என்பதால் இவை எல்லாம் சகஜம். வீட்டிற்குள் இதுதான் முதல் விசிட் :)
ReplyDeleteHoly Cow. மலையில் இருக்கற வீட்டுக்கு வருமா? நிலத்தில் இருக்கற வீட்டுக்குத் தான் வரும் என்று நினைத்தேன். அவ்வ்வ்வ்
ReplyDeleteஅப்ப உங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்தா ஹெல்மட் போட்டுதான் வரணும் போல
ReplyDeleteவீட்டிற்குள் இதுதான் முதல் விசிட் :)
ReplyDeleteவிசிட் வரட்டும், ’பின்னூட்டம்’ போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
நகைசுவையான பகிர்வுங்க ரொம்ப நல்லா இருக்குங்க...
ReplyDeletethank u goma, anamika, manguni amaichar and kamalesh for ur feedbacks.
ReplyDeletenow i'm in singapore. athanaalathaan thanglish :)
mokkai will be continued from next week :)
//குட்டி பாம்பு தான்//
ReplyDeleteஎக்கா...தெய்வமே? என்ன இப்படி சாதரணமா சொல்லுறீக... நான் என்னமோ எலியோ கரப்பானோனு நெனச்சேன்... நானா இருந்தா விருந்தாளி தான் என்னை தூக்க செக்யூரிட்டிய கூப்பிட்டு இருக்கணும்... நீங்க வீர பெண்மணி போல.. சூப்பர்...
//ரங்கமணிங்களுக்கு எல்லாம் பொதுவா ஒரு குணம் உண்டு. சீக்கிரம் சாப்பிட வருவேன்னு சொல்லிட்டு போனாங்கன்னா அன்னிக்கு ஒன்னு சாப்பிடவே வரமாட்டாங்க இல்லேன்னா மூணுமணிக்கு மேல வந்து நிப்பாங்க. லேட்டாகும்னு சொல்லிட்டு போனாங்கன்னா பதினோரு மணிக்கே வந்து 12மணிக்கு மீட்டிங் இருக்குதும்மா சாப்பாடு கொடுக்கறியான்னு வந்து நிப்பாங்க//
ReplyDeleteசூப்பர் ... சூப்பர்...சூப்பர்... ஆயரத்தில் ஒரு வார்த்தை...
//சூப்பர் ... சூப்பர்...சூப்பர்... ஆயரத்தில் ஒரு வார்த்தை...//
ReplyDeleteஎல்லாம் அனுபவம்தான்
நான் வீரப் பெண்மணி எல்லாம் இல்லை. கூட யாரும் இல்லாததல எப்படியோ கொஞ்சம் தைரியம் வந்திடுச்சு.
கவி..என்னவோ திகில் கதை படிச்ச மாதிரி இருக்கு பா..பா...பா..பார்த்து பா!பா..பா..பாம்பு பாவம்..ஹீ..ஹீ..!!
ReplyDeleteநன்றி ஆனந்தி! என்னது பாம்பு பாவமா?! ம்ம்ம்
ReplyDelete