Monday, 28 June 2010

அமெரிக்காவில் 6வயது தீவிரவாதி

அமெரிக்காவின் ஒஹையோ வில் வாழும் இந்தியர் டாக்டர்.சந்தோஷ் தாமஸ். அவர் தன் குடும்பத்தோடு க்ளிவ்லாண்டிலிருந்து மினியாபொலீசுக்கு விமானத்தில் பயணம் செய்ய இருந்த போது அவரது 6வயது மகள் அலீசா தாமஸ் பெயர் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனத்தின் no-fly லிஸ்டில் இருப்பதாக கூறப்பட்டது.

அதிகாரிகளுக்கு என்னா ஒரு காமன் சென்ஸ். 6வயது குழந்தையின் பெயர் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர்களின் லிஸ்டில்! இப்போது அது விவாதமாகிவிட்டது. ஆனால் எதன் அடிப்படையில் அலிசாவின் பெயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டது என தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அமெரிக்க போலீசு நம்ப போலீசுக்கு அண்ணனா இருக்கானுங்களே!

இந்தோனேஷியாவில் இருக்கிறேன் என்ற காரணத்துக்காக அமெரிக்காவுக்கு விசிட் விசா அனுமதிக்க முடியாதுன்னு சொன்னப்போ இது என்னடா அநியாயமா போச்சுன்னு நினைச்சேன். 6வயசு குழந்தையை தீவிரவாதியா நினைக்கறவன் இந்தோனேசியாவில் இருக்கற எல்லாரும் தீவிரவாதின்னுதான் நினைப்பான் :(

15 comments:

  1. நியாயமான கேள்விதான்... அமெரிக்கா காரனுங்க அரண்டுப்போய் கிடக்குறானங்க... அவனுக்கு
    தாடிவச்ச சர்தார் கூட தீவிரவாதியாத்தான் தெரியிறான்...

    நீங்க எதுக்கும் அந்தபக்கம் போகாமலே இருங்க...?? :))

    ReplyDelete
  2. 6வயசு குழந்தையை தீவிரவாதியா நினைக்கறவன் இந்தோனேசியாவில் இருக்கற எல்லாரும் தீவிரவாதின்னுதான் நினைப்பான் :( /// அப்போ தீவிரவாதி இல்லையா???:), அடிக்காதீங்கோ... சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டிட்டேன்...:)))

    ReplyDelete
  3. இந்தத் தலைப்பைப் பார்த்தபின், குட்டீஷைப் பார்த்தாலும் பயம்மாஆஆஆஆஆஆஅக்கிடக்கே.... தீவிரவாதியோ என... என்னைப் பார்த்து முறைக்கிற முறைப்பு அப்பூடி எண்ண வைக்குது.:).

    ReplyDelete
  4. பிரதாப் என்னைய அந்த பக்கம் போக வேண்டாம்னா சொல்றீங்க :(. எனக்கு ரொம்ப நாளா அந்த நயாகரா ஃபால்சைப் பார்க்கணும்னு ஆசை. எல்லாமே கனவுலதான் போய் பார்க்கணுமோ :(

    ReplyDelete
  5. அதிரா பார்த்து கவனமா இருங்கோ யாரையும் நம்ப முடியலே... எனக்கு பேபி அதிராவைப் பார்த்தாக் கூட பயம் பயமா வருது

    ReplyDelete
  6. அதானே இந்த காலைல குளிக்கிறதை எவன் கண்டுபிடிச்சான்னு தெரில...பெரிய டார்ச்சர்...


    குட்டிப்பாம்புக்கே இவ்ளோ பெரிய பதிவுன்னா...பெரிய பாம்பு வந்திருந்தா... :))

    ReplyDelete
  7. அமெரிக்கன், நல்லா அரண்டுபோயி கிடக்கான்.
    பரிதாபப்படவேண்டியவங்க.

    ReplyDelete
  8. என்ன கொடுமை பாருங்கள்...ஒரு சின்ன குழந்தைக்கு போயி இப்படியா...ரொம்ப மோசம்...

    ReplyDelete
  9. :)))

    //எனக்கு ரொம்ப நாளா அந்த நயாகரா ஃபால்சைப் பார்க்கணும்னு ஆசை//

    போட்டோ போடவா? :))

    ReplyDelete
  10. ஏங்க ஊரில இல்லாத குளம் , குட்டையா...

    ReplyDelete
  11. நாஞ்சிலு கமெண்டை பாம்பு தூக்கிட்டு வந்து இங்க போட்டிடுச்சா!

    ReplyDelete
  12. //NIZAMUDEEN said...
    அமெரிக்கன், நல்லா அரண்டுபோயி கிடக்கான்.
    பரிதாபப்படவேண்டியவங்க//

    உண்மைதான் போல

    ReplyDelete
  13. சின்னக்குழந்தையை பார்த்து கூட பயப்படறாங்க கீதா. என்னத்த சொல்ல!

    ReplyDelete
  14. சந்தூ வேணாம் அழுதுடுவேன். அது என்னமோ சின்ன வயசுல இருந்து அப்படி ஒரு ஆசை.

    ReplyDelete
  15. ஜெய்லானி நம்ம ஊரு குளம் குட்டைக்கு ஈடாகாதுதான். ஆனாலும் ஒரு ஆசை.
    ஆசைப்படறது கூடவா தப்பு :(

    ReplyDelete