Wednesday 11 August 2010

என்னைய பார்த்தா எப்படி இருக்கு :-(

என்னையப் பார்த்தாவே எல்லாருக்கும் கலாய்க்கணும்னு தோணுமோ என்னவோ தெரியல :-(.
இதுவும் காலேஜ் கொசுவத்திதான் :-). தைரியம் இருந்தா கீழே படியுங்கோ!

வகுப்பு நடந்துகிட்டு இருந்தது. ஹை வகுப்பு நடக்குமா எப்படீன்னு கலாய்க்க கூடாது அழுதுடுவேன். சரி மேல படியுங்கோ. உடனே முதல்லேருந்து படிக்கப்படாது. தொடர்ந்து படியுங்கோ

ப்யூன் வந்து கவிதா ப்ரின்சிபால் கூப்பிட்றாருன்னு சொன்னார். அய்யோ நாம் எதுவும் தப்புதண்டா பண்ணலியே எதுக்கு கூப்பிடறாறோனு பயந்துகிட்டே போனேன். அங்க பார்த்தா என்னோட ஜூனியர் ஒரு பொண்ணும் நின்னுக்கிட்டு இருந்தா. அய்யோ நாம ராகிங் கூட பண்ணலியே எதுக்கு இவளும் இங்க நிக்கறா என்ன ஏழரையோ தெரியலியேன்னு யோசிச்சுக்கிட்டே போனேன்.

பாழாப்போன ப்ரின்சி அரைமணிநேரம் காக்க வச்சுட்டு எங்களை உள்ள கூப்பிட்டார். ஜூனியர் பொண்ணு ஒருத்தியோட பேரைச் சொல்லி அவ எங்கன்னு கேட்டார். அந்த பொண்ணு எங்க கூட காலேஜ் பஸ்ஸில் வருவா. ரெண்டு நாளா வரலை. நாங்க திருதிருன்னு முழிச்சுக்கிட்டு(எப்பவும் அதை மட்டும் நல்லாவே செய்வோமே) தெரியல சார் அப்படீன்னோம்.

அந்த பொண்ணோட பேர் கொஞ்சம் வித்யாசமா இருக்கும். சட்டுன்னு புரியாது. அதனால் ப்ரின்சி அந்த பொண்ணோட பேர் என்னன்னு திருப்பி கேட்டார். எப்படியும் பேரைச்சொன்னா இவர் அதை தப்பாதான் சொல்லப்போறார் எதுக்கு வம்புன்னு அவளோடப் பேரை எல்கேஜி புள்ளைங்க மாதிரி ஒவ்வொரு எழுத்தா சொன்னேன்.

அப்போ அங்க இருந்த அறிவாளி ஒருத்தர் ஜூனியர் பேரை இவ்வளவு தெளிவா சொல்ற அவ எங்கன்னு கேட்டா தெரியாதுங்கற கதை வுடறியான்னார்? ஏங்க ஒரு புள்ளையோட பேரைச் சரியா சொல்றது ஒரு தப்பா? நாங்களே பிரச்சினை என்னான்னு புரியாம முழிச்சுக்கிட்டு நிக்கறோம் இதுல இவரு வேற கதை வுடறியான்னு கேட்டா கோபம் வருமா வராதா?

எப்படியோ கொஞ்சம் தைரியத்தை வர வச்சுட்டு அவ பேர் தெரியும்கறதால அவ எங்க போறான்னெல்லாம் கேட்டா எனக்கு எப்படி தெரியும்னு கேட்டேன். அப்பதான் ப்ரின்சி சொன்னாரு... அந்த பொண்ணு யாரோ ஒரு பையனோட போயிடுச்சாம். அவங்க அப்பா அம்மா காலேஜ்ல வந்து கேட்கறாங்களாம் அப்படீன்னார்.

எங்களுக்கு ரொம்ப ஷாக்காயிடுச்சு. ஏன்னா ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் அக்கா எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னு ஃபோட்டோல்லாம் காண்பிச்சிருந்தா. இப்போ எங்களுக்கு குழப்பம். அப்பா அம்மாவே முடிவு பண்ணின கல்யாணம்தானே அப்புறம் ஏன் இந்த பொண்ணு அவசரப்பட்டுச்சுன்னு. அப்புறம்தான் ப்ரின்சி விவரமா சொன்னார் அந்த பொண்ணு வீட்டுப்பக்கத்துல உள்ள ஏதோ வொர்க் ஷாப்புல உள்ள பையனோட போயிடுச்சுன்னு.

அதுசரி எதுக்காக எங்களைக் கூப்பிட்டு விசாரிச்சாருன்னு கேட்கறீங்களா? நாங்க இறங்குற பஸ் ஸ்டாப்பில்தான் அவளும் இறங்குவாளாம். அதனால் எங்களுக்கு தெரிஞ்சுதான் அவள் போயிருக்கணும்னு அவங்க நினைச்சாங்களாம். என்னா கண்டுபுடிப்பு!

ஏங்க ஒரே பஸ் ஸ்டாப்பில் இறங்கறோம்ங்கறதுக்காக அவங்க எல்லாரும் எங்க போறாங்க வாரங்கன்னா கவனிச்சுக்கிட்டு இருக்க முடியும்? இதைத்தான் ப்ரின்சிகிட்டயும் கேட்டேன்.
அதுக்கு அவரு சொல்றாரு "கவிதா நான் உன்னை சந்தேகப்படலை. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்குமோன்னு விசாரிச்சேன்"னார்.

இதுக்கு என்னங்க அர்த்தம். அவரு என்னை சந்தேகப்படலேங்கறாரா இல்லை எனக்கு தெரிஞ்சுதான் நடந்திருக்கும்னு சந்தேகப்பட்டாரா? இன்னிக்கு வரைக்கும் அதுக்கு அர்த்தம் என்னான்னு புரியலை.

ஒரே ஸ்டாப்பில் இறங்கினோம்ங்கறதுக்காக ஒரு விசாரணை. இதைத்தான் போலீசுக்காரங்களும் செய்யறாங்களோ :(

நம்மைப் பார்த்தாலே எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க :(

டிஸ்கி: படிப்பை பாதியில் விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் இப்போ தினம் தினம் கஷ்டப்படறான்னு கேட்கும் போது கஷ்டமா இருக்கு. ஏன் தான் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவு எடுக்கறங்களோ தெரியல.

41 comments:

  1. //வகுப்பு நடந்துகிட்டு இருந்தது. ஹை வகுப்பு நடக்குமா எப்படீன்னு கலாய்க்க கூடாது அழுதுடுவேன்//

    அழக்கூடாது..அது சரி வகுப்பு நடக்குமா...?

    ReplyDelete
  2. //Riyas said...
    அழக்கூடாது..அது சரி வகுப்பு நடக்குமா...? //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா எழுதறீங்க. படிக்க Interest a இருக்கு
    priya @ http://tipstoslim.blogspot.com/

    ReplyDelete
  4. அந்த‌ பொண்ணோட‌ அப்பா, அம்மா ம‌ட்டும் லாஜிக்கே இல்லாம‌ல் க‌லேஜில் போய் பிரின்சியை விசாரிக்கும் போது, பிரின்சி ம‌ட்டும் ஏங்க‌ உங்க‌ளை விசாரிக்க‌ கூடாது?... ‌

    ReplyDelete
  5. ஒரே ஸ்டாப்புல‌ இற‌ங்குற‌ பொண்ணு‌ மேட்ட‌ர் கூட‌ உங்க‌ளுக்கு தெரிய‌லை... ந‌ம்பிட்டோம். :)

    ReplyDelete
  6. ஆ.... கவி,
    தைரியம் இருந்தா கீழ படிங்க என ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க:), அதுக்காகவே ஒரு சொல்லும் விடாமல் முழுவது படிச்சேன்.... என் தைரியத்தை இப்படியாவது காட்ட வேண்டாமோ?:).. கொஞ்சம் இருங்க வாறேன்..

    ReplyDelete
  7. //வகுப்பு நடந்துகிட்டு இருந்தது. ஹை வகுப்பு நடக்குமா எப்படீன்னு கலாய்க்க கூடாது அழுதுடுவேன். சரி மேல படியுங்கோ. உடனே முதல்லேருந்து படிக்கப்படாது. தொடர்ந்து படியுங்கோ//

    லொல்லு ;)

    ReplyDelete
  8. //அந்த பொண்ணோட பேர் கொஞ்சம் வித்யாசமா இருக்கும். சட்டுன்னு புரியாது.//

    ஏன் அந்தப்பொண்ணுக்கு பின்நவீனத்துவப்பெயரா வச்சுருந்தாங்க?

    ReplyDelete
  9. // எல்கேஜி புள்ளைங்க மாதிரி ஒவ்வொரு எழுத்தா சொன்னேன்.//

    அப்போ அது காலேஜ் இல்ல எல்கேஜின்னு சொல்லுங்க

    ReplyDelete
  10. //அப்புறம்தான் ப்ரின்சி விவரமா சொன்னார் அந்த பொண்ணு வீட்டுப்பக்கத்துல உள்ள ஏதோ வொர்க் ஷாப்புல உள்ள பையனோட போயிடுச்சுன்னு.//

    எல்லாம் காதல் படுத்தும் பாடு

    ReplyDelete
  11. //இதுக்கு என்னங்க அர்த்தம். அவரு என்னை சந்தேகப்படலேங்கறாரா இல்லை எனக்கு தெரிஞ்சுதான் நடந்திருக்கும்னு சந்தேகப்பட்டாரா? இன்னிக்கு வரைக்கும் அதுக்கு அர்த்தம் என்னான்னு புரியலை.//

    சுத்தம் ..

    ReplyDelete
  12. // படிப்பை பாதியில் விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் இப்போ தினம் தினம் கஷ்டப்படறான்னு கேட்கும் போது கஷ்டமா இருக்கு. ஏன் தான் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவு எடுக்கறங்களோ தெரியல//

    தப்பா பேசாதீக காதல் எப்படியும் அவங்கள கஷ்டப்படாம வாழவைக்கும்...!அது உண்மையா இருக்கும் பட்சத்தில்

    ReplyDelete
  13. இதுக்கு என்னங்க அர்த்தம். அவரு என்னை சந்தேகப்படலேங்கறாரா இல்லை எனக்கு தெரிஞ்சுதான் நடந்திருக்கும்னு சந்தேகப்பட்டாரா? இன்னிக்கு வரைக்கும் அதுக்கு அர்த்தம் என்னான்னு புரியலை.
    //

    நாங்க சந்தேகப்படலை!!

    ReplyDelete
  14. என்னைய பார்த்தா எப்படி இருக்கு :-(/// kik..kik..kiiiiiiiii அது பார்த்தபிறகுதானே சொல்ல முடியும்? எப்ப படம் போடுறீங்க? பிறகுதான் சொல்லலாம் பிரின்சி சந்தேகப்பட்டது சரியா தப்பா என:))).

    ReplyDelete
  15. ஒரே ஸ்டாப்புல தான் இறங்குறிஙக... உங்களுக்கும் எப்படி தெரியாம இருககும்?:)) அந்தப்பொண்ணுக்கு நல்ல அட்வைஸ் பண்ணிருக்கலாம்... இப்படி பண்ணிட்டிங்களே....:)

    ReplyDelete
  16. ஆஹா என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு..யாரோ போனதுக்கு யாரையோ கேட்டா என்ன அர்த்தம்..

    ReplyDelete
  17. என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு..யாரோ போனதுக்கு யாரையோ விசாரிச்சா எப்படி??? நல்ல கதையா இருக்கே...

    ReplyDelete
  18. இதாவது பரவாயில்லை. என்னோடு ஸ்கூல்( 10th) படித்த பெண் ஒருவர் யார் கூடவோ ஓடிப்போய்ட்டார். அவர் ஓடிய பிறகே அவரின் பையை(ஏனோ தெரியலை அதைக் கொண்டு போகாமல் வகுப்பில் வைச்சுட்டு போய் விட்டார் ) சோதனை போட்டார்கள். அதில் ஏதோ கடிதம் இருந்ததாக கூறினார்கள். நான் அதைப் பற்றி துருவி துருவி கேட்கவில்லை ( கேட்டா மட்டும் சொல்லிட்டுத் தான் மறு வேலை பார்ப்பாங்க ). ஏன் தான் வாழ்வை இப்படி சீரழிக்கிறாங்களோ என்று நினைப்பேன்.

    ReplyDelete
  19. கவி,சீக்கிரமா உங்க போட்டோவைப் போடுங்க..பார்த்துட்டு சொல்லறோம்.:)

    நல்ல காமெடி..இத்தனை வருஷம் கழிச்சும் நீங்க மறக்காம இருக்கும்போதே தெரியுது,எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கீங்கன்னு!(சும்மா தமாஷுக்கு..ஹிஹி)

    ReplyDelete
  20. //இதுவும் காலேஜ் கொசுவத்திதான் :-).//

    ஓஹ்.அப்ப நீங்க காலேஜ் படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்களா..?

    // தைரியம் இருந்தா கீழே படியுங்கோ! //

    அப்பிடின்னா ..?அதெல்லாம் இல்லாத ஆளுன்னு தெரிஞ்சிகிட்டு இதென்ன கேள்வி..!!

    ReplyDelete
  21. நல்ல பகிர்வு.. படிப்பை பாதியில விட்டுட்டு போயி இப்போ கஷ்டமும் படுற அந்த பொண்ண நினைச்சா கஷ்டமாத் தான் இருக்கு...!

    Love is blind -nu chummavaa solraanga..

    ReplyDelete
  22. //priya said...
    ரொம்ப நல்லா எழுதறீங்க. படிக்க Interest a இருக்கு
    priya @ http://tipstoslim.blogspot.com/ //

    நன்றி ப்ரியா!

    எல்லாம் சரி நான் தான் என் ஃபோட்டொவையே போடலியே! எப்ப்படி நான் குண்டா குஷ்பு மாதிரி இருப்பேன்னு முடிவு பண்ணுனீங்க :(. நான் எப்பவுமே ஸ்லிமு ஸ்லிம்மு ஸ்லிம்ம்ம்மூஊஊஊஊ. நம்புங்கப்பா :)

    ReplyDelete
  23. //நாடோடி said...
    அந்த‌ பொண்ணோட‌ அப்பா, அம்மா ம‌ட்டும் லாஜிக்கே இல்லாம‌ல் க‌லேஜில் போய் பிரின்சியை விசாரிக்கும் போது, பிரின்சி ம‌ட்டும் ஏங்க‌ உங்க‌ளை விசாரிக்க‌ கூடாது?...//

    என்னமா லாஜிக் பேச்றாங்கப்பா?! கவி உஷாரா இருந்துக்கோ :)

    //ஒரே ஸ்டாப்புல‌ இற‌ங்குற‌ பொண்ணு‌ மேட்ட‌ர் கூட‌ உங்க‌ளுக்கு தெரிய‌லை... ந‌ம்பிட்டோம். :)//

    அப்பாடா நம்பிட்டாரு. நன்றி ஸ்டீபன்

    ReplyDelete
  24. //athira said...
    ஆ.... கவி,
    தைரியம் இருந்தா கீழ படிங்க என ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க:), அதுக்காகவே ஒரு சொல்லும் விடாமல் முழுவது படிச்சேன்.... என் தைரியத்தை இப்படியாவது காட்ட வேண்டாமோ?:).. கொஞ்சம் இருங்க வாறேன்.. //

    படிச்சுட்டீங்களா! இங்கயே உட்கார்ந்திருக்கேன். படிச்சுட்டு வாங்க.

    //என்னைய பார்த்தா எப்படி இருக்கு :-(/// kik..kik..kiiiiiiiii அது பார்த்தபிறகுதானே சொல்ல முடியும்? எப்ப படம் போடுறீங்க? பிறகுதான் சொல்லலாம் பிரின்சி சந்தேகப்பட்டது சரியா தப்பா என:))).//

    இத சொல்லத்தான் இருக்க சொன்னீங்களா :(. ஃபோட்டோதானே போடணும். போட்டுட்டேன்.... அய்யய்யோ உடைஞ்சு போச்சே :(

    ReplyDelete
  25. //ப்ரியமுடன் வசந்த் said...
    //வகுப்பு நடந்துகிட்டு இருந்தது. ஹை வகுப்பு நடக்குமா எப்படீன்னு கலாய்க்க கூடாது அழுதுடுவேன். சரி மேல படியுங்கோ. உடனே முதல்லேருந்து படிக்கப்படாது. தொடர்ந்து படியுங்கோ//

    லொல்லு ;) //

    அதே அதே :)

    ReplyDelete
  26. //ஏன் அந்தப்பொண்ணுக்கு பின்நவீனத்துவப்பெயரா வச்சுருந்தாங்க?//

    'பின்' நவீனத்துவமோ 'ப்ளேடு' நவீனத்துவமோ தெரியாது அவ பேரைச் சொன்னா புரியாது அம்ம்புட்டுதான் :)

    ReplyDelete
  27. //அப்போ அது காலேஜ் இல்ல எல்கேஜின்னு சொல்லுங்க //
    சொல்லலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. நன்றி தேவன் மாயம். முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி :)
    சந்தேகப்படலேல்ல அதான் வேணும். இங்க எல்லாமே சந்தேகபிரியாணியா இருக்கறாங்க :)

    ReplyDelete
  30. //நாஞ்சில் பிரதாப் said...
    ஒரே ஸ்டாப்புல தான் இறங்குறிஙக... உங்களுக்கும் எப்படி தெரியாம இருககும்?:)) அந்தப்பொண்ணுக்கு நல்ல அட்வைஸ் பண்ணிருக்கலாம்... இப்படி பண்ணிட்டிங்களே....:)//

    நான் அழுதுடுவேன். அவளுக்கு கல்யாணம் அப்பா அம்மா பேசி முடிச்சுடாங்க அப்படீன்னு சந்தோஷமா சொல்றவளை யாராச்சும் சந்தேகப்படுவாங்களா! திடீர்னு இப்படி செய்வான்னு யாரும் எதிர் பார்க்கலை.

    ReplyDelete
  31. //Gayathri said...
    ஆஹா என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு..யாரோ போனதுக்கு யாரையோ கேட்டா என்ன அர்த்தம்..//

    நீங்களாவது புரிஞ்சுக்கிட்டீங்களே! ஆனந்தக்கண்ணீர் வருது. நன்றி காயத்ரி

    ReplyDelete
  32. @வானதி
    //ஏன் தான் வாழ்வை இப்படி சீரழிக்கிறாங்களோ என்று நினைப்பேன்.//
    எல்லாம் காதல் மயக்கமும் அறியாமையும்தான். வேறென்ன சொல்ல!
    நன்றி வானதி

    ReplyDelete
  33. //Mahi said...
    கவி,சீக்கிரமா உங்க போட்டோவைப் போடுங்க..பார்த்துட்டு சொல்லறோம்.:)//

    ஏற்கெனவே பூஸ் சொல்றதைக் கேட்டு ஃபோட்டோவை போட்டு உடைச்சாச்சு. இப்போ நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்

    //நல்ல காமெடி..இத்தனை வருஷம் கழிச்சும் நீங்க மறக்காம இருக்கும்போதே தெரியுது,எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கீங்கன்னு!(சும்மா தமாஷுக்கு..ஹிஹி)//

    புரியுது புரியுது :)
    நன்றி மஹி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் :)

    ReplyDelete
  34. @ஜெய்லானி

    //ஓஹ்.அப்ப நீங்க காலேஜ் படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்களா..? //

    இப்படீல்லாம் பப்ளிக்ல கேட்டு மானத்தை வாங்கப்படாது. அ.கோ.மு. தரலாம்னு நினைச்சேன் இனி கிடையாது

    //அப்பிடின்னா ..?அதெல்லாம் இல்லாத ஆளுன்னு தெரிஞ்சிகிட்டு இதென்ன கேள்வி..!!//

    அப்போ படிக்காமலேயே ஓடிட்டீங்களா?! ஹா ஹா ஹா

    ReplyDelete
  35. நன்றி ஆனந்தி!
    //Love is blind -nu chummavaa solraanga..//
    ம்ம்ம்ம்

    ReplyDelete
  36. இதே நீங்க ஒரு பையனா இருந்தா உங்களை போலீஸ் வந்து கேட்டு இருப்பார்.....

    ReplyDelete
  37. //இதே நீங்க ஒரு பையனா இருந்தா உங்களை போலீஸ் வந்து கேட்டு இருப்பார்..... //

    இப்பூடி ஒன்னு இருக்கோ?! நல்ல வேளை நான் தப்பிச்சேன்.
    நன்றி சௌந்தர். இண்ட்லியில் இணைத்ததற்கும் நன்றி.

    ReplyDelete
  38. enaku schl daysla nadanuth irukku.. oru sema adi viluthuchu kannathila...

    ReplyDelete
  39. //LK said...
    enaku schl daysla nadanuth irukku.. oru sema adi viluthuchu kannathila...//

    ஓஹ் இதத்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம்னு சொல்லுவாங்களோ :(

    நன்றி எல்கே

    ReplyDelete
  40. உங்கள் பதிவு நன்றாக உள்ளது.Intersting story.Keep writing...
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
    Link:www.secondpen.com/tamil/what is jaiku?

    ReplyDelete


  41. ’’டிஸ்கி:’’ இது வா அந்த பொண் பேர்!

    விஸ்கின்னு படிச்சென்!

    நேக்கு அதே நெனைவுதான்!

    கவி சிவா நமக்கு ஒரு பெக் தருவாங்களேனு

    பாத்தா அது டிஸ்கினு இருக்க ஏமாந்து பேட்டேன்!

    ReplyDelete