Wednesday 29 September 2010

திசைதிருப்பும் தீர்ப்பு

60 வருஷமா நீண்ட வழக்கின் தீர்ப்பு நாளைக்கு சொல்லப் போறாங்களாம். அடேங்கப்பா என்னா வேகம்!  சரி ஒரு வழியா தீர்பை சொல்லப்போறோம்னு வழிக்கு வந்துட்டாங்க. ஆனா இந்த தீர்ப்பு இப்போ வரக்காரணம் என்ன? வழக்கம் போல் மக்களை திசை திருப்பும் முயற்சியோ?!

என்னங்க பண்றது காலங்காலமா நம்ப நாட்டுல அது தானே நடக்குது. ஒரு பிரச்சினையை அமுக்க இன்னொன்றை முன்னாடி கொண்டு வரதுதானே இந்த அரசியல்வியாதிங்க பொழப்பே! மாவோயிஸ்ட் பிரச்சினையின் சலசலப்பை அடக்க உணவு தானிய பிரச்சினை. உணவுதானிய பிரச்சினையை சமாளிக்க காமன்வெல்த் பிரச்சினை. இப்போ அதை மறக்கடிக்க இந்த தீர்ப்பு.  மக்களாகிய நம்ம பழக்கமும் அதுதானே புதுசு கிடைச்சிடுச்சுன்னா பழசை மறந்துடுவோமே!

என் சந்தேகம் வலுக்கக் காரணம்... காமன்வெல்த் விளையாட்டை காரணம் காட்டியே தீர்ப்பை தள்ளி வைக்கணும்னு அபிப்ப்ராய பட்ட ஆளும் கட்சி இப்போ அந்தர் பல்டி அடிச்சிருக்கு. இப்போ உனக்கு சந்தேகம் வலுத்தா என்ன இல்லன்னா என்ன ஒன்னும் ஆகப்போறதில்லைன்னு சொல்றீங்களா அதுவும் சரிதான் :(

எது எப்படியோ தீர்ப்பை காரணம் காட்டி மக்கள் அடிச்சுக்காம இருந்தா சரி.

17 comments:

  1. //எது எப்படியோ தீர்ப்பை காரணம் காட்டி மக்கள் அடிச்சுக்காம இருந்தா சரி//

    சரிதான்.

    எனக்கு இந்த தீர்ப்புல ஆர்வமே இல்ல கவி.. ஏன்னு தெரியல :)

    ReplyDelete
  2. என்னால அடிச்சு சொல்லமுடியும், இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்னு. இங்கே வெளியிட விரும்பவில்லை. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.

    தான் ஒரு மதசார்பு அற்ற கட்சின்னு முகமுடி அணிந்து மதங்களுக்குள் உள்புசலை உண்டாக்கும் கேடுகெட்ட காங்கிரஸ் ஆட்சியில்
    தீர்ப்பு யார்பக்கம் இருக்குமென்று பத்தாங்கிளாஸ் படிக்கும் பையன்கூட சொல்லுவான்.

    இதுக்கெல்லாம் ஒரு கோர்ட், நீதிபதிகள் அதுக்கு வாயைப்பொள்ந்துகிட்டு காத்துநிற்கும் அறிவுமழுங்கடிங்கப்பட்ட அப்பாவி ஜனங்கள்...:(

    ReplyDelete
  3. Kavi! Is everything okay ?
    I saw the news on Earthquake in the eastern part of Indonesia. Keep Us posted ma !

    Hope you are well !

    ReplyDelete
  4. இலா இங்கு பிரச்சினை ஒன்றும் இல்லைமா! நான் இப்பதான் எழும்பினேன். இனிமேல்தான் செய்திகளைப் பார்க்கணும். நன்றி இலா!

    ReplyDelete
  5. கூல் பிரதாப் கூல். அறுபது வருஷமா நாட்டை ஆளறோம்னு மக்களுக்குள் பிரச்சினையை உண்டாக்கி விட்டு குளிர் காய்ஞ்சுக்கிட்டு இருக்கானுங்க. இதை என்னிக்கு மக்கள் புரிஞ்சுக்கப் போறங்கன்னு தெரியலை :(.

    ReplyDelete
  6. நன்றி சந்தூ. நான் அப்படித்தான் இருந்தேன். ஆனா நேத்து வரைக்கும் கல்மாடியை கிழிச்சுக்கிட்டு இருந்தவனுங்க அதை அம்போன்னு விட்டுட்டு இன்னிக்கு எந்த நியூஸ் சேனலை திருப்பினாலும் இந்த தீர்ப்பை பற்றிதான் கும்மி அடிச்சுக்கிட்டு இருந்தாங்க! எனக்கு என்னவோ மக்களை திசைதிருப்பும் முயற்சியாகவே தெரியுது :(

    ReplyDelete
  7. எது எப்படியோ தீர்ப்பை காரணம் காட்டி மக்கள் அடிச்சுக்காம இருந்தா சரி////

    இது தான் ரொம்ப சரி

    ReplyDelete
  8. திசை திருப்பும் முயற்சின்னு எனக்குத் தோணலை. இது மீடியாக்களின் இயல்பான குணம். அடுத்த விஷயம் கிடைக்கிற வரை, கையில இருக்கிற செய்தியை அலசிப் பிழிஞ்சு கிழிச்சு தோரணம் கட்டுறது; அடுத்தது கிடச்சதும் இதை அம்போன்னு விடறது வாடிக்கைதானே மீடியாக்களுக்கு!!

    ReplyDelete
  9. கவி..தேவையில்லாத பீதிய காமிச்சு பயமுறுத்திற லொள்ளு இருக்கே..அது தான் கொடுமை..கர்நாடகாவில் ரெண்டுநாள் லீவு..மதுரையில் எல்லா கேபிள் நெட் வொர்க் க்கும் காலையில் இருந்து தெரில..எப் எம் கூட எடுக்க மாட்டேங்குது..எங்க பார்த்தாலும் ஒரே டென்ஷன்..நான் கூட இவரை காரை வீட்டில் வச்சுட்டு ஆபிஸ் க்கு பைக் எடுத்துட்டு போங்கனு சொன்னேன்..ஆபீசே கூட மதியம் ஓட க்ளோஸ் பண்றாங்கன்னு சொல்றாங்க..பெங்களூர் இல் நாங்க இருக்கும்போது இது மாதிரி காவேரி பிரச்சனையில் பயந்துருக்கோம்(நாம தான் தமிழர் ஆச்சே...ம்ம்)இங்க உள்ள நிலவரம் தான் ஓவரா படம் காமிக்கிற மாதிரி இருக்கு...காலையில் இருந்து ஆங்கில நியூஸ் சேனல்களில் அமிதாபச்சன்,கனிமொழி,ஷாரூக் மாதிரி பெரிய ஆளுங்க நாமெல்ல சகோதரர்கள்னு சொல்லிட்டே இருக்காங்க..ம்...கேவலமா இருக்கு நம்ம நாடு போற நிலைமையா பார்த்தால்..!!

    ReplyDelete
  10. நன்றி ஹுசைனம்மா! ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் அப்படி தோன்றவில்லை. இதில் மீடியாக்களின் தவறு எல்லாவற்றையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பது (அது அவர்களின் வேலையும் கூட). ஆனால் அரசியல்வியாதிகளும் ஆன்மீகவியாதிகளும் வாயை மூடிக் கொண்டிருந்தாலே முக்கால்வாசி பிரச்சினையும் தீர்ந்து விடும்.

    ReplyDelete
  11. உண்மைதான் ஆனந்தி! இப்போது தீர்ப்பை மீடியாக்களுக்கு ப்ரெஸ்மீட் வைத்து தெரிவிக்க மாட்டோம்னு சொல்லியிருக்காங்க. இதை முதலிலேயே செய்திருக்கலாமே! இன்னிக்கு சொல்றோம் இல்லை அடுத்த வாரம் சொல்றோம்... எதுக்கு இத்தனை பில்ட் அப். சும்மா இருப்பவனின் டென்ஷனையும் ஏத்தி விட்டுட்டு... என்னமோ போங்க எதுவும் சரியில்லை :(

    நன்றி ஆனந்தி!

    ReplyDelete
  12. திசை திருப்பும் தீர்ப்பு. நல்ல ஒரு தலைப்பு.மறதி ஒன்றே மனிதனுக்கு இறைவன் வழங்கியஒரு கொடை. அதை சரியாக புரிந்து மக்களின் மறதியை பயன்படுத்திகொள்பவன் அரசியல் வாதி.தீர்ப்பும் வந்துவிட்டது எதிர்பார்த்த தீர்ப்பு. இனி அமைதி காப்போம்.

    ReplyDelete
  13. முதல் பின்னூட்டத்திற்கு நன்றி அப்பா :)

    மக்கள் இனியாவது பிரிவினை சக்திகளுக்கு மயங்காமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  14. தீர்ப்பு வந்தாச்சு. எல்லா தரப்பும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். இனியும் பிரச்சினையை விடாமல் இழுத்துக் கொண்டிருக்க வேண்டாமே! நாட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது. அதில் நம் கவனத்தை செலுத்தலாமே!

    ReplyDelete
  15. //எது எப்படியோ தீர்ப்பை காரணம் காட்டி மக்கள் அடிச்சுக்காம இருந்தா சரி.//
    மக்கள் அடித்துக் கொள்ளாமல் இருந்தால் அதுவே பெரிய நிம்மதி. அடிதடி, பிறகு பஸ், ட்ரெயின், லாரி இப்படி எதையாவது எரித்து விட்டு, வேடிக்கை பார்ப்பது.

    ReplyDelete


  16. நல்லவேளை குருவே!

    கலவரம் வல்லை!

    அதுவே நிம்மதி!

    ReplyDelete
  17. கவிசிவா... எப்பவோ சீதாலஷ்மி சொல்லி இந்த பக்கம் வந்தேன்... வெகு நாட்களுக்கு பின் மீண்டும். எனக்கு புரியாத விஷயம் இங்கு அதிகம்... ;) புரிஞ்சுக்க முயற்சி செய்யறேன் :D - வனிதா

    ReplyDelete