Sunday, 3 October 2010
காமன் வெல்த் விளையாட்டுகள் கோலாகலத் தொடக்கம்
முன்குறிப்பு: கொஞ்சம் பெரிய பதிவுதான். எடிட் பண்ணாமலேயே போட்டுட்டேன் :)
காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பல தடைகளையும் விமர்சனங்களையும் தாண்டி இன்று கோலாகலமாக நமது தலைநகர் புதுதில்லியில் துவங்கி விட்டது.
ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டது. வழக்கமான இந்திய பங்க்சுவாலிட்டியாகத்தான் இருக்கப் போகிறது என்ற எனது நம்பிக்கையை(?!) தவிடு பொடியாக்கி சரியாக ஏழு மணிக்கு விழா தொடங்கியது.
முதலில் பிரதமரும் அவரது மனைவியும் வந்தனர். அடுத்து இளவரசர் சார்லசும் அவரது மனைவியும் வந்தனர். தொடர்ந்து நமது ஜனாதிபதி வந்தார். இவர்கள் எல்லோருக்கும் முன்னரே நம் அன்புக்குரிய ஜனாதிபதி (ஜனாதிபதிகளை 'முன்னாள்' என்று சொல்லக் கூடாது என்று எங்கேயோ படித்த ஞாபகம் :D) அப்துல் கலாம் ஐயா வந்து விட்டார்.
முதலில் நம் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் அந்த ராட்சச ஹீலியம் பலூன் உயரே எழும்பியது. அதன் அடியில் கட்டப்பட்டிருந்த எட்டு பாவைகளும் (பல்வேறு கலாச்சார உடைகள் அணிந்திருந்தவை) உயர்ந்தன. அந்த பலூனே பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீனாகவும் அமைந்தது.
முதல் கலை நிகழ்ச்சியாக நம் நாட்டின் பல்வேறு பாரம்பரிய தாள வாத்தியக் குழுக்களின் (கேரளா, மணிப்பூர், பஞ்சாப், மேலும் சில மாநில குழுக்கள்) இசை நிகழ்ச்சி. உண்மையிலேயே எல்லோரையும் எழும்பி ஆட வைக்கும் தாளம். அதிலும் ஒரு சுட்டி மழலை மேதை 7வயது கேசவ் நடுநாயகமாக அமர்ந்து தபலா வாசித்த அழகே அழகு!
அடுத்து டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம்(ஸ்வாகதம்) அருமையிலும் அருமை. பாடகர் ஹரிஹரன் பாடலைப் பாட, வளையணிந்த கரங்கள் கை கூப்பி வணங்குவது போல் உருவம் வரும்படி மாணவர்கள் அணிவகுத்து நின்று நடனம் ஆடினர். நடனத்தின் இறுதியில் மேலே அணிந்திருந்த அங்கி போன்ற ஆடையை கழற்றியதும் சிவப்பு வெள்ளை பச்சை உடையணிந்த மாணவர்கள் மூவர்ணக் கொடியை உருவாக்கினர். அதை ரசித்து முடிக்கும் முன் திடீரென்று அவர்கள் மேல் பெரிய வெள்ளைத்துணியால் மூடினர். என்ன நடக்கிறது என்று ஆவலோடு பார்க்கையில் துணிக்கு அடியில் நின்ற மாணவர்கள் சிவப்பு வண்ணத்தால் அந்த துணியில் ஏதோ வரைய ஆரம்பித்தனர். ஒரு நிமிடத்திற்குள் அருமையான பிசிறில்லாத மெஹந்தி டிசைன் வரைந்து ஆச்சரியப் படுத்திவிட்டனர் மாணவர்கள்! இதற்காக அவர்கள் எத்தனை மாதங்கள் பயிற்சி எடுத்தனர் எனத் தெரியவில்லை. ஹேட்ஸ் ஆஃப் மாணவர்களே!
அடுத்து பங்குபெறும் 71 நாடுகளின் விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். பாகிஸ்தான் அணி வரும் போது பகைமை மறந்து ஆரவாரத்துடன் கூடிய வரவேற்பை ஸ்டேடியத்தில் இருந்த மக்கள் அளித்தனர். இறுதியாக நமது அணியினர் வரும் போது ஸ்டேடியத்தில் இருந்த அறுபதாயிரம் பேரும் ஆர்ப்பரித்து வரவேற்றனர். டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு இந்திய குடிமகனும் பிரச்சினைகளை மறந்து மனப்பூரவமாக வரவேற்றிருப்பான் என்பது உறுதி.
ஆனாலும் அந்த சுரேஷ் களவாணி ச்சே ச்சே சுரேஷ் கல்மாடி வரவேற்புரை வாசித்த போது(உண்மையிலேயே வாசிக்கத்தாங்க செய்தார்) காமெடியா இருந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பான்னு சொல்ற கவுண்டமணிய பார்க்கற மாதிரியே இருந்துச்சு :). எத்தனை பேருக்கு காசு கொடுத்து கூட்டிட்டு வந்தாருனு தெரியலை ஒன்னுமில்லாத்ததுக்கு எல்லாம் கைதட்டி விசிலடிச்சாங்க. ஒருவேளை அவரை கிண்டல் பண்ணினாங்களோ :)
அப்புறம் குத்துச்சண்டை வீரர் சுஷில் குமார் இளவரசர் சார்லசிடம் Queen's Batton ஐ கொடுத்தார். பின்னர் அவர் இங்கிலாந்து ராணியின் செய்தியை வாசித்தார். (மகாராணியார் இந்தியா வந்தால் அதுவே அவரது கடைசிப்பயணமா இருக்கும்னு யாரோ ஜோசியர் சொன்னாராம். அதான் அவர் வரலியாம். அங்கிட்டுமா ஜோசியத்தை நம்புறாக!)
அடுத்து நம்ம ஜனாதிபதி போட்டியை துவங்கி வைத்தார். அபினவ் பிந்த்ரா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்தன.
Tree of knowledge என்ற பெயரில் குரு சிஷ்ய கல்வி முறை பற்றிய விளக்கமும் தொடர்ந்து இந்திய நடனங்களின் தொகுப்பாகவும் ஒரு நடன நிகழ்ச்சி. பரதநாட்டியம், மோகினி ஆட்டம், மணிப்பூரி நடனம், ஒடிசி, கதக், குச்சுப்புடி என் இந்திய பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. அடுத்து பாரம்பரிய இந்திய கலையான யோகாசனங்களை செய்து காட்டினர்.
அடுத்து இந்திய ரெயில்வேயின் க்ரேட் இந்தியன் ஜர்னி நிகழ்ச்சி. இந்தியாவின் கலாச்சாரத்தை விளக்கும் வாகனங்கள் ஊர்வலமாக வந்தன கூடவே கிராமிய நடனக்கலைஞர்களின் நடனங்களும். அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்பதை சித்தரிக்கும் வாகனம் கூழைக் கும்பிடு போடும் அரசியல்வாதிகளோடும் ஏகப்பட்ட லவுட் ஸ்பீக்கரோடும் அமர்க்களமாக வந்தது :). இது எந்த புண்ணியவானோட யோசனைன்னு தெரியல ஆனா பார்த்து நல்லா சிரிச்சேன் :). மணல் ஓவியக்கலைஞர்கள் காந்திஜி மற்றும் இந்தியக் கொடியோடு பின் தொடரும் மக்களையும் மணலில் ஓவியமாக வரைந்தனர். அவர்கள் வரைய வரைய அது அப்படியே டிஸ்ப்ளே ஸ்க்ரீனில் வரும் போது பார்க்க ரொம்ப நல்லா இருந்தது.
இறுதியாக வந்தார் நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். காமென் வெல்த் விளையாட்டின் தீம் பாடலைத் தொடர்ந்து ஜெய் ஹோ பாடலைப் பாடும் போது ஸ்டேடியத்தின் பின்னணியில் வாணவேடிக்கைகள் விண்ணில் வர்ணஜாலம் காட்டியது. அதனுடன் காமென் வெல்த் விளையாட்டுப் போட்டியின் துவக்கம் இனிதே நிறைவடைந்தது.
புகைப்படங்கள் காண க்ளிக் செய்யவும்!
வீடியோ தொகுப்பு காண க்ளிக்கவும்!
Subscribe to:
Post Comments (Atom)
பகிர்வுக்கு நன்றி,படிச்சிட்டு வருகிறேன்.எனக்கும் மெயிலில் ஏகப்பட்ட அருமையான போட்டோஸ்(காமன்வெல்த் ஏற்பாடுகள் குறித்த ஸ்டில்ஸ்)வந்திருக்கு.அதனை பார்த்தவுடன் குறை சொல்லியவர்களை நினைத்து வருத்தமாக இருந்தது.
ReplyDeleteஇந்த நேரடி வர்ணனைக்கு குரல் கொடுத்தவர்.. ச்சே.. எழுத்துருவம் தந்தது "கவிசிவா" என்று முடிதிருக்கணும்!!
ReplyDeleteஅதை நேரடியாய் பார்க்காத எங்களை, நாங்களே உட்கார்ந்து பார்ப்பது போல் வர்ணித்து பகிர்ந்து கொண்டது sooopparo sooopper!!
ReplyDeleteசூப்பர் வர்ணனை கவி!! நேரில் பார்த்தமாதிரி உணர்வு..பகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteகவி! அருமையான விமர்சனம். என்னை போல பாக்காதவங்களுக்கு எங்கயாவது வீடியோவும் போடுங்க. முக்கியமா குழந்தைகள் செய்த அந்த மனித கோலங்களும் மணல் ஓவியங்களும்.
ReplyDeleteகவி.. பார்க்க ஆரம்பிச்சாச்சா? தொடருங்க..
ReplyDelete//அங்கிட்டுமா ஜோசியத்தை நம்புறாக!)//
ஹ்ஹஹா..
மெஹந்தி டிசைன் ஆச்சரியப்பட வைக்குது..
நேர்ல பாத்தா மாதிரி இருக்குது வர்ணனை.. குட்..
கேசவன் அவன் பேரு.. புதுச்சேரி பையனாமே..
ReplyDeleteநிகழ்ச்சி நெகிழவைத்தது.. இந்தியன் என பெருமை கொள்ளவச்சது.. அருமையான பதிவுக்கு நன்றி..கவிசிவா
// அடுத்து இளவரசர் சார்லசும் அவரது மனைவியும் வந்தனர். .//
ReplyDeleteஎதை வச்சு அவ்ளோ உறுதியா சொல்றீங்க அது சார்லஸ்சோட மனைவின்னு :) காமெடி பண்ணாதீங்க.
வர்ணனை ரொம்ப நல்லாருந்துச்சி...நன்றி... :)
நல்ல பதிவு
ReplyDeletehttp://denimmohan.blogspot.com/
போட்டியின் துவக்கவிழாவை சூப்பரா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்.
ReplyDeleteThanks 4 sharing this news
ReplyDeleteby
TS
Grand Opening Ceremony of Commonwealth Games 2010
நன்றி ஆசியா! நல்ல ஏற்பாடுகளை செய்திருந்தாலும் இப்படி கடைசி நேரம் வரை இழுத்தடித்து விமர்சனங்களுக்கு உள்ளாக்காமல் நேரத்தோடே செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உண்மையில் இங்குள்ள வெளிநாட்டவர்களின் கேலியில் தலைகுனிந்துதான் போனோம் :(. இப்போ துவக்க விழாவைப் பார்த்து குனிந்த தலையை புன்னகையோடு நிமிர்த்தியிருக்கிறோம்.
ReplyDelete//இந்த நேரடி வர்ணனைக்கு குரல் கொடுத்தவர்.. ச்சே.. எழுத்துருவம் தந்தது "கவிசிவா" என்று முடிதிருக்கணும்!!//
ReplyDelete:-))
நன்றி அப்துல்காதர்!
நன்றி மேனகா!
ReplyDeleteதொலைக்காட்சியில் நேரடி ஒளிபாப்பு பார்த்துதானே எழுதினேன் அதான் நேரில் பார்த்த மாதிரியே இருக்கு :)
நன்றி இலா! நானும் இணையத்தில் தேடிப்பார்த்து விட்டேன் அந்த மெஹந்தியும் மணல் ஓவியமும் கிடைக்க மாட்டேங்குது :(
ReplyDeleteசந்தூ பார்த்து முடிச்சாச்சு :). நன்றி சந்தூ!
ReplyDeleteசுட்டி மழலை மேதையின் பெயரை சொன்னதற்கு நன்றி முத்துலெட்சுமி! பதிவிலும் சேர்த்து விடுகிறேன். மீண்டும் நன்றி!
ReplyDelete@நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteடிவியில் வர்ணனை செய்தவர் அப்படித்தான் சொன்னார். அதான் நானும் மனைவின்னு எழுதிட்டேன் :). வர்ணனைய படிங்கன்னு சொன்னா உட்கார்ந்து ஆராய்ச்சியா பண்ணிக்கிட்டு இருக்கீங்க :)
நன்றி பிரதாப்!
நன்றி டெனிம்!
ReplyDeleteநன்றி நாடோடி!
ReplyDeleteநன்றி ஷங்கர்! நீங்கள் கொடுத்த சுட்டியை பதிவிலும் இணைத்து விடுகிறேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteஅழகான ஒரு நேரடி ஒலி ஒளி நிகழ்ச்சியை பார்த்தது போன்ற ஒரு அருமையான வருணனை. வாழ்த்து
ReplyDeleteகவி, இந்நிகழ்ச்சியைப் பார்க்க முடியாத எனக்கு வாசிக்கக் கிடைச்சது சந்தோஷம்!! நல்லா விவரிச்சு எழுதிருந்தீங்க!! நன்றி.
ReplyDelete@நாஞ்சில் பிரதாப்: சார்லஸ் 2005ல கமீலாவைக் கல்யாணம் பண்ணிகிட்டார்; அதனால, மனைவிதான்!! ஆனாலும் அவரை ‘இளவரசி’னு அழைக்கக்கூடாது; ’Duchess of Cornwall’னுதான் சொல்லணும்!!
எத்தனை பேருக்கு காசு கொடுத்து கூட்டிட்டு வந்தாருனு தெரியலை ஒன்னுமில்லாத்ததுக்கு எல்லாம் கைதட்டி விசிலடிச்சாங்க////
ReplyDeleteசார் உங்க உண்மை வெளியே தெரிந்து போய் விட்டது
வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா! எல்லாம் உங்ககிட்ட இருந்து கிடைச்சதுதானே :)
ReplyDeleteநன்றி ஹுசைனம்மா! யூ ட்யூபில் வீடியோக்கள் வந்திடுச்சு. ஆனா மெஹெந்தி டிசைனைக் காணோம் :(.
ReplyDeleteபிரதாப்புக்கு விளக்கம் கொடுத்துட்டீங்க . சந்தேகம் தீர்ந்திடுச்சா நாஞ்சிலாரே :)
This comment has been removed by the author.
ReplyDelete//சார் உங்க உண்மை வெளியே தெரிந்து போய் விட்டது //
ReplyDeleteஹா ஹா சௌந்தர் அது அவருக்கும் புரிஞ்சிடுச்சு. அதனால ஒரு அசட்டுச் சிரிப்போடதான் இருந்தார் :)
நன்றி சௌந்தர்!
கவி,
ReplyDeleteவிமர்சனம் ரொம்ப சுபெரா இருந்துச்சு :-) படிச்சதும் அய்யோ பாக்க முடியலையேன்னு வருத்தம் வேற வந்திடுச்சு :-( அப்புறம் நீ குடுத்த அந்த லின்க் போய் போட்டோஸ் மட்டும் இல்ல வீடியோவும் பார்த்துட்டேன் :-) ஒவ்வொன்னும் பாக்கும் போது. அடுத்து இது தான் வரப்போகுதுன்னு ஆசையா பக்கவெச்சது உன்னோட விமர்சனம் தான். சான்சே இல்ல, சூப்பரா இருக்கு :-)
http://everything-hereonly.blogspot.com/2010/10/cwg-commonwealth-games-2010-opening.html?spref=fb
நன்றி வசந்த்!
ReplyDeleteஹேய் ஹர்ஷு நீ வந்திருக்கறது ஆச்சரியமா இருக்கு :). ஸ்மைலி பார்த்தே கண்டு பிடிச்சுடுவோம்ல :)
ReplyDeleteநீ கொடுத்த சுட்டியை பதிவில் இணைச்சுட்டேன். நன்றி ஹர்ஷு!
உ
ReplyDeleteகுரு ! கலக்கிட்டேள்! போங்கோ!
இந்தியா வந்துடுங்கோளேன்!
அழகிரிகிட்ட சொல்லி டெல்லில வர்ண்ணையாளரா ஆக்கிடரேன்!
ஜிஜிஜிஜி!
வரேளா!
//எனது நம்பிக்கையை(?!) தவிடு பொடியாக்கி சரியாக ஏழு மணிக்கு விழா தொடங்கியது//
ReplyDeleteதேச துரோகி கவி ஒழிக... (சும்மா சும்மா...)
வாவ்...சூப்பர்... thanks for sharing pictures and video
பார்க்கத என்னைப்போல ஆளுக்கு இது புதுசுதான் .. வர்னனை சூப்பர்...!! டென்ஷன் இல்லாம சரியா போட்டிருக்கீங்க ..!! :-))
ReplyDeleteகுருவின் மேல் சிஷ்யைக்கு என்ன கோபம்?! என்னை மதுரைக்காரர் பேர் சொல்லி மிரட்டறீங்க :(
ReplyDeleteநன்றி மாமி!
தேச துரோகியா :(.
ReplyDeleteநன்றி அப்பாவி தங்க்ஸ்!
ஆமா ஜெய் டென்ஷன் இல்லாமதான் போட்டேன். நல்லவேளை நீங்களும் சந்தேகம் கேட்கலை நான் தப்பிச்சேன் :)
ReplyDeleteநன்றி ஜெய்லானி!
வர்ணனையும் விமர்சனமும் ரொம்பவும் நன்றாக இருக்கின்றன கவி!
ReplyDeleteஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ReplyDeleteஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html