இன்னிக்கு டின்னருக்கு வெளிய போகலாம்னு ரங்கமணி சொல்லிட்டார். (இன்னிக்கு ஒருநாளாவது தப்பிச்சுக்கலாம்னு நினைச்சிருப்பார். அது பொறுக்காதே!). நானும் நல்லா பந்தாவா கிளம்பி ரெடியாயிட்டேன். இல்லேன்னா பெரிய ரெஸ்ட்ராண்டுகளுக்கு கூட்டிட்டு போகாம குட்டி கடைகளுக்குப் போய் பர்சை பாதுகாத்துக்குவாரே! அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலாமோ! (அதானே நாம யாரு)
நான் நினைச்ச படியே ஸ்டார் ஹோட்டலுக்குத்தான் போனோம். (நீ நினைக்கறதைத்தானே அவரு நினைச்சாகணும். வேற வழி). கேண்டில் லைட் டின்னர்ங்கற பேர்ல கரண்டு செலவை மிச்சம் புடிக்கறான் ஹோட்டல் காரன். கூடவே அந்த மங்கலான வெளிச்சத்துல மெனுகார்டில் ஒவ்வொரு ஐட்டங்களுக்கும் என்ன விலைன்னு சரியாவே தெரிய மாட்டேங்குது. அதானே அவனுக்கு வேணும். இது புரியாம ஆஹா ரொமாண்டிக் லைட்டிங்னு மதி மயங்கிடறோம். பில் வரும்போதுதானே தெரியும் ரொமாண்டிக்கா இல்லையான்னு!
மெனு கார்ட் வந்ததும் நீங்களே ஆர்டர் பண்ணிடுங்கன்னு அவரோட சாய்சுல விட்டுட்டேன். (மெனுவுல போட்டிருக்கறது என்ன ஐட்டம்னு தெரியாது எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னுதானே அப்படி சொல்லியிருப்ப). அவரும் ஏதோ ஸ்டீக் ஹாட் ப்ளேட் -னு ஆர்டர் செய்தார். முன்னாடியே இதுபோன்று சிக்கன் ஸ்டீக் சாப்பிட்டிருக்கிறேன் என்பதால் நானும் ஓகே சொல்லிட்டேன்.
ஆர்டர் பண்ணின ஐட்டமும் வந்தது. நானும் சாப்பிட்டேன். ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு. ஆனா எப்பவும் சாப்பிடற மாதிரி இல்லை. அவரிடம் கேட்டதற்கு இது நல்லாயில்லையா வேற ஆர்டர் பண்ணவான்னார். நல்லா இருக்கு ஆனா எப்பவும் சாப்பிடறது மாதிரி இல்லைன்னேன். நல்லா இருக்குல்ல சாப்பிடுன்னார். நானும் நம்பி சாப்பிட்டேன்.
ஆனா ரங்ஸ் முகத்துல ஏதோ கள்ளத்தனம் தெரிஞ்சுது. சாப்பாட்டோட ருசியில அதை பெருசா எடுத்துக்கலை. எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் சாப்பாடு பிடிச்சிருந்துதா அப்படீன்னு கேட்டார். நானும் ரொம்ப நல்லா இருக்குங்க அடுத்தவாட்டியும் இங்கேயே வருவோம்னேன்.
அவர் சிரிச்சுக்கிட்டே பீஃப் எல்லாம் சாப்பிட மாட்டேன்னு ரொம்ப பந்தா காமிச்ச இப்போ அதை நல்லா ஒரு வெட்டு வெட்டினதும் இல்லாம அடுத்தவாட்டியும் இதுதான் வேணுங்கற அப்படீங்கறார். நான் ?!?! :((((
அடுத்து பில் வந்துச்சு. ஹோட்டல் காரன் ரொம்ப விவரம். பில் கொண்டு வரும் போது மட்டும் குட்டியூண்டு டார்ச் லைட் கொண்டு வந்து பில்லில் அடிச்சுக் காமிக்கறான். இது மட்டும் தெளிவா தெரியணுமாம். பில்லைப் பார்த்து மயக்கம் போடாத குறைதான் :(
முள்ளங்கி சாப்பிடாதவருக்கு பருப்போடு சேர்த்து கடைந்து கொடுத்து ஏமாத்தினதுக்கு இப்பூடி பழி வாங்கிட்டார். ஆனாலும் பீஃப் ரொம்ப ருசியா இருந்திச்சு :). அடுத்தவாட்டி சாப்பிடுவேனான்னு கேட்டால் பதில் நோ தான். தெரியாமல் சாப்பிட்டதால் ஓகே. ஆனால் பீஃப்னு தெரிஞ்சப்புறம் சாப்பிட முடியாது :(. ஏன்ன்னு எல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான் :)
டிஸ்கி: ரங்க்ஸைப் பற்றி எழுதினாலே கூடவே மைண்ட் வாய்சும் வந்துடுது :(. ஃபோட்டோ கூகுளாண்டவரிடம் சுட்டது :))
கவி பகிர்வு அருமை,ஸ்டார் ஹோட்டல் போய் அனுபவப்பட்டு இப்ப தான் எல்லாரும் உஷாராகிருக்கோம்.திரும்பி கூட பார்க்கிறதில்லை கவி.விவரித்தவிதம் சூப்பர்.
ReplyDeleteபகிர்வு நன்றாக இருக்கிறது கவி!
ReplyDeleteஉங்கள் பக்கம் எந்தப்பாதிப்பும் இல்லை என்பதும் நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்பதும் அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!
கவி ஹா..ஹா..ஹா..நீங்க பல்பு வாங்கியதை நினைச்சால் சிரிப்பு சிரிப்பா வருது.
ReplyDeleteகேண்டில் லைட் டின்னர்,அதுவும் ஹோட்டல்ல.. நாங்க போறதே இல்லைப்பா. அந்த அரைகுறை இருட்டில், சாப்பாட்டுல பூச்சிபொட்டு இருந்தாக்கூட கண்டுபிடிக்க முடியாது. அதையும் சேர்த்து முழுங்கிட்டு, சாப்பாடு சூப்பர்ன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டு வரமுடியுமா என்ன :-))
ReplyDeleteஹாஹ்ஹா! கவி.. அனுபவம் அருமைன்னு சொல்ல முடியல :))
ReplyDeleteநானும் ஒருக்கா தெரியாத்தனமா வாயில வச்சு கடிச்சுட்டு (பன் உள்ளார வச்சு), தெரிஞ்சவுடனே ரெஸ்ட் ரூம் ஓடிப்போய் துப்பிட்டு வந்துட்டேன்.. முழுசும் சாப்பிட்டிருந்தா, அருமையா இருந்திருக்குமோ என்னமோ! ருசிய விட மனசு தான் காரணம், இது போன்ற விருப்பு வெறுப்புக்கெல்லாம்!
நன்றி ஆசியா! சாப்பாடு ருசியா கிடைக்குதுன்னா ஸ்டார் ஹோட்டல் சின்ன கடை வித்தியாசம் எல்லாம் கிடையாது. முப்பது நாப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் தேடிப் போய் சாப்பிடுவோம் :(. இது ரங்ஸ் செய்த சதி :)
ReplyDeleteநன்றி மனோம்மா! என்னைப் பற்றி அக்கறையோடு விசாரித்தது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. நன்றிம்மா!
ReplyDeleteஸாதிகா அக்கா நான் பல்பு வாங்கினதை நினைச்சா சிரிப்பா இருக்குதா :(.
ReplyDeleteஇப்போ உங்கல் பக்கத்தில் புதிய பதிவுகளைக் காணோம். இல்லை என் டேஷ்போர்டில் அப்டேட் ஆக மாட்டேங்குதா?
நன்றி சாதிகா அக்கா!
நன்றி சாரல் மேடம்! நீங்க ரொம்ப உஷாருதான் :)
ReplyDeleteநன்றி சந்தூ! உண்மைதான் மனசுதான் காரணம். இன்னும் என்னவெல்லாம் சொல்லாம சாப்பிட வச்சாரோ யாருக்குத் தெரியும் :(
ReplyDeleteபீப் அதிகம் சாப்பிட்டால் உடம்பு சூடு அதிகம் ஆகிவிடும் என்று கேள்வி..
ReplyDelete//மெனுவுல போட்டிருக்கறது என்ன ஐட்டம்னு தெரியாது எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னுதானே அப்படி சொல்லியிருப்ப)//
இதுக்கு நீங்களே பார்த்து சொல்லி இருக்கலாம்
கவி
ReplyDeleteநல்லா தான் பல்பு வாங்கியிருக்கீங்க. தொடர்ந்து பல பல்பு வாங்க வேண்டுகிறேன் (அவ்வ்வ்வ்வ்).........
சூப்பர் கவி..அது எப்படி பழி வாங்குறது ஆகும்..நல்லா ரசிச்சு ரசிச்சு மூக்கு முட்ட சாப்ட்டு முடிச்சுட்டு ரங்ஸ் மேலே குறை சொல்றது..இந்த தங்ஸ் களே இப்படி தான் பா..(நான் உள்பட...) ஹி ஹீ..:)))
ReplyDeleteகவி..அப்பா ப்ளாக் போயி போயி பார்கிறேன்..புது போஸ்ட் எதுவும் காணோம்..என்னாச்சு ??
ReplyDeleteநன்றி எல்கே! என்ன பண்றது அனுபவப் பட்ட பின்னாடிதான் புரியுது :(
ReplyDeleteஆமி இது நியாயமா அவ்வ்வ்வ்
ReplyDeleteநன்றி ஆமினா!
தங்ஸ் அகராதியில் அப்படித்தான் ஆனந்தி! இப்படி நீங்க சேம் சைட் கோல் போட்டீங்கன்னா தங்கமணிகள் சங்கத்தில் விசாரிக்கப் படுவீர்கள் :)
ReplyDeleteநன்றி ஆனந்தி!
அப்பா ரொம்ப பிசி :). ஒன்னுமில்லை கல்யாணவீடுகள் கோவில் தரிசனம்னு பிசியாயிட்டாங்க. அதான் இணையம் பக்கமே ஆளைக்காணோம்.
ReplyDeleteஅப்பா பிஸியா...சரி கவி...விரைவில் வந்து புது போஸ்ட் போட சொல்லுங்க அப்பாவை...
ReplyDelete/தங்கமணிகள் சங்கத்தில் விசாரிக்கப் படுவீர்கள் :)/
ReplyDeleteஹ ஹ...பரவால..என் சகோதரனுக்கு தானே ஆதரவு தந்தேன்..நல்ல உள்ளம் படைத்த ரங்கமணிகள் ஆதரவு எனக்கு இருக்கும் நம்புறேன்..சாமி சங்கத்தை கலச்சுருங்க...:))
மீன் சாப்பிடாத என் அண்ணியை அவருக்கு தெரியாம நாங்க மீன் சாப்பிட வச்ச கதை மாதிரி இருக்கு... :)) தெரிஞ்சப்புறம் அவங்க வாந்தி எடுத்தது வேறகதை...
ReplyDeleteஅது ஏன் பல்பு வாங்கற பழக்கத்தை வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கீங்ளோ... இப்படி தாறுமாறா வாங்கறீங்க...:))
ஆனந்தி தங்கமணிகள் சங்கத்தை கலைக்க ரங்கமணிகளிடம் கேட்கறீங்களா? நடக்காது நடக்கவே நடக்காது ஹா ஹா. ஏன்னா ரங்கமணிகளோட பிடி தங்கமணிகள் கையில் :)
ReplyDeleteபிரதாப் அண்ணி உங்களை அடிக்காம விட்டாங்களா?!
ReplyDeleteஎன்ன பண்றது வீட்டில் நிறைய பல்பு தேவைப்படுது. அதான் பல்பா வாங்கி குவிக்கறேன் அவ்வ்வ்வ்வ்வ்
நன்றி பிரதாப்!
//ஆனந்தி தங்கமணிகள் சங்கத்தை கலைக்க ரங்கமணிகளிடம் கேட்கறீங்களா? நடக்காது நடக்கவே நடக்காது ஹா ஹா. ஏன்னா ரங்கமணிகளோட பிடி தங்கமணிகள் கையில் :) //
ReplyDeleteநடத்துங்க..மதினி..நடத்துங்க...ஹ ஹ....
அவர் சிரிச்சுக்கிட்டே பீஃப் எல்லாம் சாப்பிட மாட்டேன்னு ரொம்ப பந்தா காமிச்ச இப்போ அதை நல்லா ஒரு வெட்டு வெட்டினதும் இல்லாம அடுத்தவாட்டியும் இதுதான் வேணுங்கற அப்படீங்கறார். நான் ?!?! :(((( ////
ReplyDeleteஇப்படி தான் நாங்களும் எங்க அம்மாவை பீஃப் சாபிட வைத்தோம் அதற்கு பிற்கு நாங்க என்ன வாங்கி வந்தாலும் கொஞ்ச உசாரா தான் இருப்பாங்க....
நான் எல்லாம் ஹோட்டல் போனா ரொம்ப உஷாரா ச்லக்ட் செய்து தான் ஆர்டரே.
ReplyDeleteபீப் எனக்கு பிடிக்காது, ஆனால் டேஸ்ட் பார்ககமலே செய்து கொடுத்துவது, ஹஸுக்கு , பிடிக்கும் ஆகையால் செய்து கொடுப்பது
நன்றி சௌந்தர்! அம்மாவையே ஏமாத்தி சாப்பிட வச்சீங்களா? இனியும் உங்களை நம்புவாங்க?!
ReplyDeleteநன்றி ஜலீலாக்கா! எனக்கு பீஃப் சமைக்கவும் பிடிக்காது. வீட்டில் செய்வதே இல்லை. எங்கள் வீடுகளில் பீஃப் க்கு தடா.
ReplyDeleteஇதுக்கு முன்னாடி இப்படி சொல்லாம எத்தனை வாட்டி சாப்பிட்டேனோ யாருக்குத் தெரியும் :(
ம்..நானும் ஊரில இருந்த வரை அப்படிதான் ..இப்போ ஒட்டகறி வரை விடுவதில்லை.. ((பீஃபை விட ஒட்டகம் சூப்பர் --அதிலதான் நிஹாரி ஐட்டம் அதிகம் செய்யறது ))
ReplyDelete@ஜெய்லானி ஒட்டகத்தையும் விட்டு வைக்கலியா! நிஹாரி ஐட்டம்னா என்ன?
ReplyDelete