Tuesday, 2 November 2010

தூதரகம்னா இப்படி இருக்கணும்!

நமது இந்திய தூதரகங்கள் மீது பொதுவாக நமக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கும். தூதரக அதிகாரிகளை பலவாறாக குறை சொல்லியிருப்போம்.


ஆனால் சில நல்ல இந்திய தூதரகங்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டவே இந்தப் பதிவு.

நாங்கள் இருப்பது இந்தோனேஷியாவில். (அதான் தெரியுமே திரும்ப திரும்ப எதுக்கு சொல்லிக்கிட்டு :D). நாங்கள் இருக்கும் தீவின் அருகே இருக்கும் இந்திய தூதரகம்னா அது மேடான் ல் இருக்கும் தூதரகம்தான். கடல் கடந்து விமானத்தில்தான் போக முடியும். சிறு சிறு தூதரக வேலைகளுக்கு கூட போய் வருவது என்பது சிரமம்.

அதனால் தூதரக அதிகாரிகள் இங்குள்ள இந்தியர்கள் சங்கத்தோடு இணைந்து வருடத்திற்கு இரண்டு முறை நாங்கள் இருக்கும் தீவில் கேம்ப் நடத்துவார்கள். கேம்ப் நடக்க ஒரு மாதம் முன்பாகவே இந்திய சங்கங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் மெயில் மூலம் தெரிவிக்கப் பட்டு விடும்.

அப்போது தங்களுக்கு என்னென்ன பாஸ்போர்ட் மற்றும் தூதரக சேவைகள் வேண்டுமோ அது பற்றி தூதரகத்துக்கு மெயில் அனுப்பி விட வேண்டும். ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டியதையும் செய்து விட வேண்டும். உதாரணமாக பிறப்புச் சான்றிதழ் பெறுவது, பாஸ்போர்ட் புதுப்பித்தல், பாஸ்போர்ட்டில் கணவர்/மனைவி பெயர் சேர்த்தல், பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்க வேண்டிய சான்றிதழ் பெறுதல் இப்படி தூதரகத்தில் செய்யப்படும் அத்தனை சர்வீஸ்களும் செய்து கொடுக்கப் படும்.

கேம்ப் நடக்கும் அன்று காலையில் நம்மிடம் இருந்து டாக்குமெண்டுகள் மற்றும் கட்டணத் தொகையை பெற்றுக் கொள்வார்கள். மாலையில் போய் வாங்கிக் கொள்ளலாம். சில வேலைகள் உடனேயே முடிந்து விடும். ஒரு மணிநேரத்திற்குள் கையில் கொடுத்து விடுவார்கள்.அப்போது தூதரக அதிகாரிகளும் நம்மோடு தோழமையோடு பேசுவார்கள். நமக்கு ஏதும் பிரச்சினை இருக்குதான்னு கேட்டு தயங்காமல் அணுகுங்கள் என்றும் சொல்லுவார்கள்.

இந்த சேவைகளை நாம் பெற தூதரகத்தில் நம் பெயரை பதிந்திருக்க வேண்டும். ஏற்கெனவே பதியாதவர்கள் இந்த கேம்ப் நடக்கும் போதே பதிந்து கொள்ளலாம். அப்படி பதிந்து கொண்டால் கேம்ப் நடக்கும் வரை கூட காத்திருக்கத் தேவையில்லை.

ஆன்லைனில் அப்ளை பண்ணி விட்டு டாக்குமெண்டுகளை கூரியரில் அனுப்பி வைத்து தூதரக அதிகாரிக்கும் ஒரு மெயில் செய்து விட்டால் போதும். நமக்கான வேலைகள் எளிதில் முடிந்து விடும். நமக்கு ஏதும் சந்தேகம் என்றாலும் நேரடியாக தொடர்பு கொண்டு பேச முடியும்.

சென்ற ஆண்டு தீபாவளிக்கு இந்திய தூதரகம் இங்குள்ள இந்தியர்களுக்காக சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அருமையாக நடத்தினார்கள் (மழைதான் கொஞ்சம் சொதப்பிடுச்சு).

ஒருமுறை இங்கே சுற்றுலா வந்த இந்திய பயணி இறந்து விட அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க எல்லா உதவிகளையும் தூதரகம் செய்தது. ஆனால் பொதுமக்களாகிய நாமும் அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த பத்து வருடங்களில் இரண்டு முறை பாஸ்போர்ட் அடிஷனல் புக்லெட் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை பாஸ்போர்ட் புதுப்பிக்கவும் செய்தாச்சு. எந்த பிரச்சினையும் இல்லை. பாஸ்போர்ட் புதுப்பிக்க எல்லாவற்றையும் கூரியரில்தான் அனுப்பினேன். இரண்டு வாரத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வந்திடுச்சு.

எங்கள் நண்பர் ஒருவர் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு தவித்த போது கூட அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து புது பாஸ்போர்ட் கிடைக்க வழி செய்து கொடுத்தது.

எல்லா தூதரகமும் இதுபோல் இருந்தால் நல்லா இருக்கும் :). ஒருவேளை மற்ற நாடுகள் போல் இல்லாமல் இங்கு இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோரையும் அவர்களால் சரியாக கவனிக்க முடிகிறதோ!

நாமும் இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமாவது தமிழர் சங்கம், மலையாளி சங்கம், பஞ்சாபி சங்கம்னு மாநில வாரியா ஒரு சங்கம் வச்சுக்காம பொதுவா இந்திய சங்கமாக இணைந்து தூதரகங்களோடு இணைந்து பணியாற்றினால் எல்லோரும் பயனடையலாம்.

சில தூதரகங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு. அப்படிப்பட்ட சூழல்களில் இது போன்ற கேம்ப்கள் அமைத்து தன்னார்வ ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு பணிகளைச் செய்தால் பலரும் ஒரே நேரத்தில் பலனடையலாம். ஒரேயடியாக குறை சொல்லிக் கொண்டிருக்காமல் இப்படியும் முயற்சிக்கலாமே!

டிஸ்கி:

ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகம் பற்றி தெரியவில்லை. மேடானில் உள்ள இந்திய தூதரகம் சிறந்ததுதான். எனக்குத் தெரிந்தவரை இங்கே யாரும் தங்களுக்கு கசப்பான அனுபவம் நடந்ததாக சொல்லவில்லை.

26 comments:

 1. கவி,தங்களின் பகிர்வு மிக்க மகிழ்ச்சியை தருகிற்து.

  ReplyDelete
 2. பரவால்லையே!! இங்கயும் தூதரக சேவை பரவாயில்லை!! ஆனா,என்ன இந்த கீழ்மட்டப் பணியாளர்களின் நலனில் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்தா நல்லாருக்கும்.

  ReplyDelete
 3. திருவனந்தபுரத்தில் கஸ்டம்ஸ் ஆபிஸரால் உங்களுக்கு நடந்த கசப்பான அனுபவத்தை முன்பு படித்தேன்.

  அத்தி பூத்த மாதிரி அங்கொன்னு இங்கொன்னும் இருக்குறது தான் கஷ்ட்டமா இருக்கு.

  ReplyDelete
 4. //சில நல்ல இந்திய தூதரகங்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டவே இந்தப் பதிவு.//


  எவ்வளவு வாங்குனீங்க... ஐ மீன் எத்தனை பொட்டி வாங்குனீங்க??? :)))

  ReplyDelete
 5. நன்றி ஆசியா! சில நல்ல அதிகாஇகளும் இருக்கிறார்கள். "சில" "பல" ஆனால் நல்லா இருக்கும் :)

  ReplyDelete
 6. நன்றி ஆசியா! சில நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். "சில" "பல" ஆனால் நல்லா இருக்கும் :)

  ReplyDelete
 7. நன்றி ஹுசைனம்மா! ஒருவேளை இங்கேயும் கீழ்மட்ட ஊழியர்கள் இருந்தால் இவர்களும் அப்படித்தான் நடந்துக்குவாங்களோ :(

  ReplyDelete
 8. நன்றி ஆமினா! நல்ல அதிகாரிகள் அத்தி பூத்தார் போல இருப்பதுதான் கஷ்டம் :(

  ReplyDelete
 9. நன்றி பிரதாப்!

  பொட்டியா... அப்படீன்னா என்ன? ஒருத்தரை நல்லவன்னு சொல்றது ஒரு தப்பா :(

  ReplyDelete
 10. @நாஞ்சில் பிரதாப்

  சில பல பொட்டிகளை அனுப்பினால் பொட்டியின் மதிப்புக்கு ஏற்ற படி அவர்களைப் புகழ்ந்து பதிவு எழுதப்படும் :))

  ReplyDelete
 11. நல்லது. இங்கே நான் ஒரு முறை இந்திய தூதரகம் போய் பட்டபாடு. வாழ்க்கையே வெறுத்துப் போனது தான் மிச்சம். எங்கோ ஒரு டன்ஜனில் தான் தூதரகம். லைனில் நின்றவர்களுக்கு பயங்கர திட்டு வேறு.
  இதே மற்ற தூதரகங்கள் போனால் பயங்கர மரியாதை குடுப்பார்கள். ப்ரெஸில்ஸ் தூதரக அதிகாரிகள் மிகவும் பொறுமையாக, சிரித்த முகத்துடன் பேசினார்கள்.

  உங்கள் நாட்டில் இருப்பது போல இங்கும் மாறினால் நலம்.

  ( நான் அனுப்பிய பெட்டி வந்திச்சா???)

  ReplyDelete
 12. நன்றி வானதி!

  //எங்கோ ஒரு டன்ஜனில் தான் தூதரகம். லைனில் நின்றவர்களுக்கு பயங்கர திட்டு வேறு.
  //

  உண்மையோ உண்மை. சிங்கப்பூரில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் என்கிட்ட நல்லா பொறுமையா பதில் சொன்னாங்களே. நான் டென்ஷன் பார்ட்டின்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமோ :)

  பொட்டியா? அப்படி எதுவும் வரலியே :)

  ReplyDelete
 13. அன்பு கவிசிவா,

  நல்ல பதிவு. நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க.

  பாராட்டுகள்! பாராட்டிய உங்களுக்கும், பாராட்டும் விதமாக இருக்கும் தூதரகத்துக்கும்.

  அன்புடன்

  சீதாலஷ்மி

  ReplyDelete
 14. நன்றி சீதாம்மா! உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சியா இருக்கு :)

  ReplyDelete
 15. நல்ல தூதரகம்தான்...இப்படியே எல்லா இடத்திலும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...

  ReplyDelete
 16. கவி! கேக்க நல்லா இருக்கு. இதுவரை ஒரு முறை தான் நியூயார்கில் இருக்கும் தூதரகத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. நேரத்துக்கு சென்றேன் எல்லா டாக்குமென்ட்ஸும் இருந்தது. காலையில் கொடுத்தால் மாலையில் எல்லாம் வந்தது. பில்டிங் / கூட்டம் / வரிசையில் முண்டுவது இதெல்லாம் இடப்பற்றாக்குறையினால் . நம்ம மக்கள்ஸ் லைன்ல ஒருத்தர் இருந்தா அதுக்கு 3 பேர் நுழைவாங்களே அந்த அனுபவம் இது தான் :)

  ReplyDelete
 17. நன்றி மேனகா! நல்லாத்தான் இருக்கும்... அது எப்போன்னுதான் தெரியலை :(

  ReplyDelete
 18. நன்றி நசரேயன்! ரொம்ப நாளா இது பற்றி எழுதணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உங்க பதிவைப் பார்த்ததும் அங்கே பின்னூட்டம் போட்டுட்டு இங்க வந்து பதிவும் போட்டுட்டேன் :)

  ReplyDelete
 19. நன்றி இலா! சில இடங்களில் மக்களும் தவறு செய்கிறோம். பிற நாடுகளில் ரொம்ப டீசண்டா லைனில் நிற்போம். அதுவே இந்தியாங்கற வார்த்தையை கேட்டுட்டா அதுக்கப்புறம் லைனாவது ஒண்ணாவது. முண்டியடிச்சுக்குவோமே :(

  ReplyDelete
 20. வித்தியாசமான தூதரகமா இருக்கு! அவங்களே வந்து கேம்ப் போடறது, கேம்ப் போடும் நாளையும் முன்னாடியே தெரிவித்து விடுவது, கொரியர்ல அனுப்பி வேலையைச் செய்து முடிப்பது.... அருமை.. நல்ல சேவை கவி!

  ReplyDelete
 21. //கடந்த பத்து வருடங்களில் இரண்டு முறை பாஸ்போர்ட் அடிஷனல் புக்லெட் வாங்கியிருக்கிறேன்//

  பாஸ்போர்ட் பத்து வருஷத்துக்கு இல்ல தராங்க ..!!அது எப்படி ரெண்டு ..? :-))

  ReplyDelete
 22. நன்றி சந்தனா! வித்தியாசமான தூதரகம்தான். இந்திய சங்கங்களும் அவர்களோடு இணைந்து செயல்படுவதால்தான் இது சாத்தியமாகிறது சந்தூ.

  ReplyDelete
 23. ஜெய்லானிக்கு சந்தேகம் வந்திடுச்சா?!

  பாஸ்போர்ட் காலாவதி ஆக்றதுக்கு முன்னாடி பக்கங்கள் எல்லாம் ஸ்டாம்ப் அடிச்சு முடிஞ்சு போச்சுன்னா சில வருடங்களுக்கு முன் நம்முடைய ஒரிஜினல் பாஸ்போர்ட்டோடு இன்னொரு புக்லெட் இணைச்சு கொடுப்பாங்க. அப்படிதான் இரண்டு முறை அடிஷனல் புக்லெட் வாங்கினேன்.

  இப்போ பாஸ்போர்ட் பக்கங்கள் முடிஞ்சுப் போச்சுன்னா புதிய பாஸ்போர்ட்டே கொடுத்துடறாங்க. இப்போ அடிஷனல் புக்லெட் எல்லாம் கிடையாது.

  சந்தேகம் தெளிவாயிடுச்சா?!

  ReplyDelete
 24. இந்திய தூதரகங்கள் என்று பார்த்ததும் நம்ம ஏரியான்னு உள்ள வந்துட்டேன். ஏங்க உங்களுக்கு இத்தனை கசப்பான அனுபவம் இருந்ததா?? பாவம். நான் பார்த்தவரை தூதரகங்கள் நல்லாவே இருந்தது. சிரியாவிலும் (இந்தியர்கள் குறைவு) சரி, மாலேவிலும் (நான் சொல்லனுமா?? திரும்பும் பக்கமெல்லாம் நம்ம மக்கள் தான்) சரி. கீழ்மட்ட மக்களுக்கும் இங்கு முன்னுறிமை உண்டு. நீங்க சொல்லும் எல்லா வித உதவியும் இந்த தூதரகங்கள் செய்கின்றன. நான் தான் இன்னும் மோசமான தூதரகங்களை காணவில்லையோ என்னவோ!!!

  ReplyDelete
 25. வனி தூங்கிகிட்டே படிக்கக் கூடாது. கசப்பான அனுபவம் எனக்கு இல்லை. ஆனால் நிறையபேருக்கு ஏற்பட்டிருக்கு. அதான் நல்ல தூதரகத்தைப் பற்றி சொல்லலாமேன்னு இதில் சொல்லியிருக்கேன் :)

  ReplyDelete