தீபாவளி வருது. அது பற்றி பதிவு போடலேன்னா மொக்கை போடும் பதிவுலகம் என்னாவது?
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரம்(2009ல்)
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரம்(2008ல்)
சிறுவயதில் தீபாவளின்னா (அப்போ நீ கிழமான்னு கேணத்தனமா உண்மையை எல்லாம் கேட்கப் படாது :D) கொண்டாட்டம் குதூகலம்தான். புதிய காலெண்டர் வந்தவுடன் பார்ப்பது இரண்டு விஷயங்கள். முதலில் எனது பிறந்த நாள்(நட்சத்திரப் படி) . அடுத்தது தீபாவளி!
எப்படி பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதம் முன்பே எங்கப்பாவை ட்ரெஸ் வாங்கணும்னு கேட்டு நச்சரிப்பேனோ அதே போல் தீபாவளிக்கும் நச்சரிக்க ஆரம்பித்து விடுவேன் :). பெரும்பாலும் ரெடிமேட் ஆடைகள்தான். அதனால் டெய்லர் கடையில் போய் காத்து நிற்கும் வேலையெல்லாம் அப்போ கிடையாது.
நல்ல நாள் எல்லாம் பார்த்து அப்பா அம்மா அண்ணா நான்னு தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்க கிளம்புவோம். நமக்கு ட்ரெஸ்சை விட அதன் விலைதான் ரொம்ப முக்கியம் :). அழகான ட்ரெஸ்ஸாக இருந்தாலும் விலை குறைவானது என்றால் எனது அப்போதைய அகராதியில் நல்லா இல்லைதான் :). எங்க அப்பாவுக்கு கொஞ்சமே கொஞ்சம் எங்கயாவது ஜரிகை இருந்து விட்டால் போது ரொம்ப பிடித்துப் போகும் (அப்பா அப்படித்தானே :D). அப்படி இப்படி கொஞ்சம் அழுது அடம் பிடிச்சு நான் நினைக்கற ட்ரெஸ்ஸை வாங்கிடுவேன். அண்ணா பாவம் அதிகமா எதுவும் சொல்ல மாட்டார். கொஞ்சம் வளர்ந்த பிறகு அவரே ஃப்ரெண்ட்ஸோட போய் எடுத்துக்குவார். அம்மாவும் அதிகமா எதுவும் சொல்ல மாட்டார். (நீதான் குடும்பத்தில் ரவுடியான்னு கேட்கக் கூடாது. ஹி ஹி கடைக்குட்டி அதான் அப்படி)
பலகாரங்கள் எல்லாம் அம்மாவும் பாட்டியும் பத்து நாட்களுக்கு முன்னாடியே செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அச்சு முறுக்கு, முறுக்கு, முந்திரி கொத்து இந்த மூணு ஐட்டங்களும் தவறாமல் எல்லா தீபாவளிக்கும் செய்யப்படும். வழக்கம் போல் நான் முதலில் எதுவும் சரியாக சாப்பிடாமல் எல்லாம் தீர்ந்த பிறகு நான் சாப்பிடவே இல்லைன்னு சொல்லி அழுவேன் :(. எங்க பாட்டி என் குணம் தெரிந்தே கொஞ்சம் தனியா வச்சிருப்பாங்க :)
எட்டு வயது வரை நாங்கள் இருந்தது ஒரு கிராமம். தீபாவளிக்கு முன் சிவகாசியில் படித்துக் கொண்டிருந்த உறவினர் ஒருவரிடம் சொல்லி அப்பா பட்டாசு வாங்கிட்டு வரச் சொல்வார். கம்பி மத்தாப்பு வைக்கக் கூட பயப்படும் படுதைரியசாலி நான் :). அப்பா வாழைத்தண்டில் கம்பி மத்தாப்பை குத்தி பிடிக்க வைப்பார் :). அதையும் அப்படியே கையை நீட்டிக் கொண்டு தலையை திருப்பிக் கொண்டு பிடிப்பேன். ஆனால் அதிலும் ஒரு சந்தோஷம். அண்ணாவும் அப்பாவும் சேர்ந்து ராக்கெட் எல்லாம் வெடிப்பாங்க.
கடைசியா ட்ரெயின் வெடி! நீளமா கயிறு கட்டி அதன் ஒரு முனையில் பத்த வச்சா அது அப்படியே ட்ரெயின் மாதிரி போகும். அதைப் பார்க்க எல்லாரும் ஏதோ புல்லட் ட்ரெயினின் வெள்ளோட்டம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்போம் :)
கொஞ்சம் வளர்ந்த பிறகு மதுரை நாகர்கோவில்னு வந்துட்டோம். மதுரையிலும் தீபாவளி ஜாலிதான். முந்தைய நாள் இரவு வீட்டிலுள்ள ஆண்கள் மட்டும் (நிறைய உறவினர்கள் மதுரையில் இருந்ததால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு வீட்டில் கூடிதான் தீபாவளி கொண்டாட்டம்) மதுரை டவுன்ஹால் ரோட்டுக்கு போவாங்க பட்டாசு வாங்க. எல்லா சாமான்களும் மிகவும் மலிவாக கிடைக்கும். இப்போது நடக்கிறதான்னு தெரியலை. அங்கேயே ஒரு பெரிய பையோ பக்கெட்டோ வாங்கி அது நிறைய பட்டாசு வாங்கிட்டு வருவாங்க. கம்பி மத்தாப்பு மட்டுமே எனக்கு :(
அப்புறம் நாகர்கோவிலில் தீபாவளி. சேட்டிலைட் தொலைக்காட்சியின் தாக்கம் ஆரம்பித்திருந்த நேரம். நானும் கம்பி மத்தாப்பிலிருந்து ஊசிவெடிக்கு பிரமோஷன் ஆகியிருந்தேன். அதைக் கூட ஏதோ ஆட்டம் பாம் ரேஞ்சுக்கு திரியை எல்லாம் பிய்த்து ஊதுபத்தியால் பயந்து பயந்து வைப்பேன் :)
அப்புறம் காலேஜ் போன பிறகு வெடிகளின் மீது நாட்டம் குறைந்து விட்டது. ஆனாலும் தீபாவளின்னா சந்தோஷம் இருந்துச்சு.
இப்போ இங்கே தீபாவளி வார நாட்களில் வந்தால் வார இறுதிக்கு தள்ளிவைக்கப் படுகிறது :(. தீபாவளி நேரத்தில் இந்தியாவில் இருந்தால் கூட முன்பிருந்த கொண்டாட்டம் குறைவாகவே இருக்கிறது. எல்லோரும் டிவி முன்னே தவம் கிடக்கிறார்கள். தெருக்களில் குழந்தைகள் வெடி வெடிப்பது கூட குறைந்து விட்டது :(. ஏதோ கடமைக்காக கொண்டாடுவது போல் இருக்கிறது.
இங்கு தீபாவளிக் கொண்டாட்டங்கள் வசதியான நாட்களுக்கு மாற்றப் பட்டாலும் கூட அன்றைய நாள் நிஜம்மாகவே தீபாவளி போல் நண்பர்கள் இணைந்து கொண்டாடுகிறோம். வெடிகள் வெடிக்கிறோம். ஆட்டம் பாட்டம்னு சந்தோஷமா இருக்கோம். ஆனாலும் எதையோ இழந்த உணர்வு இருக்கவே செய்கிறது. இந்த தடவை எங்கள் ஊர் தீபாவளிக் கொண்டாட்டம் நவம்பர்28 :).
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தலைதீபாவளி கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!
தனி தீபாவளி கொண்டாடும் சகோஸ் அடுத்த வருடம் ஜோடியோடு தலை தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்! :)
அது ஏன் பதிவு போட்டாலே உங்க மனசாட்சியும் கூடவே வந்துருமோ....அநியாயத்துக்கு குறுக்கே பேசுது...:))
ReplyDeleteநான் வீட்டுல தீபாவளி கொண்டாடி 5-6 வருஷம்...ஆச்சு... பொருள்தேடி ஊரைவிட்டு கிளம்பியதில் இழந்த பல இழப்புகளில் தீபாவளியும் ஒன்று... :)
தீபாவளி வாழ்த்துக்கள்.
நாங்க எல்லாம் மனசாட்சிக்க பயந்த நல்லவங்க :) (நானே சொல்லிக்கலேன்னா வேற யாரு சொல்லுவா :D)
ReplyDeleteநானும் இந்தியாவில் கொண்டாடிய தீபாவளி 2003ல் :(. அதன் பின் எப்போதும் இங்கேதான்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
கவி, சொந்த நாட்டில் இருப்பவர்களே தீபாவளி பழைய மாதிரி இல்லை என்ற புலம்பலை தான் இன்று எத்திசை நோக்கிலும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே கேட்கும் வெடிசத்தங்கள் இன்று ஒரு நாள் முன்பு ஏதோ எப்போதாவது தான் கேட்க முடிகிறது.
ReplyDeleteநாளை நமது வாரிசுகளுக்கு நாம் இந்த தீபாவளி கொண்டாட்டங்களை கதையாக சொல்லும் நிலை வந்திடுமோ என்று தோன்றுகிறது ;(((((((((
தீபாவளி வாழ்த்துக்கள் கவி:)) அப்பாவுக்கும் சொல்லுங்க:))
கவி நான் அனுப்பர க்மெண்ட்ஸெதுவும் வரதில்லை
ReplyDeleteஆனாகூட வந்து, வந்து பின்னூட்டம் கொடுத்திட்டே தான் இருக்கேன். ஹேப்பி தீபாவள்.
நல்ல நினைவலைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதீபத்திருநாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஒவ்வொரு தீபாவளிக்கு நினைவு மலர்ந்து கொண்டே தான் இருக்கும் கவி! பகிர்வு நன்று!
ReplyDeleteஉங்களுக்கும் இனிய தீவாளி நல்வாழ்த்துகள்!
//ஆனாலும் எதையோ இழந்த உணர்வு இருக்கவே செய்கிறது.//
ME TOO..
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.நவம்பர் 28 க்கும் சேர்த்து தான்.அந்த முந்திரிக்கொத்து ஹாஸ்டலில் இருக்கும் பொழுது கன்னியாகுமரி நாகர்கோவில் மக்கள் எடுத்து வருவாங்க,செம டேஸ்டாக இருக்கும்.
ReplyDeleteதீபாவளி பதிவு மிக அருமையா இருந்தது)))):-D
ReplyDelete"சகோதரி கவிசிவா தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்"
நன்றி பவி! இந்த புலம்பல்கள் நம்ப அப்பா அம்மா காலத்துலயும் இருந்துச்சு. மாற்றங்கள் மட்டுமே மாறாதது :). எப்பவுமே அந்த காலத்துல... அப்படீன்னு புலம்பறது இருக்கு பவி :)
ReplyDeleteநன்றி கோமு! உங்கள் எல்லா கமெண்டும் வந்திருக்கே கோமு. உங்களுக்கு மெசேஜ் அனுப்பறேன் :)
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்!
ReplyDeleteநன்றி நசரேயன்!
ReplyDeleteநன்றி சாரல் மேடம்!
ReplyDeleteநன்றி சந்தூ! எதையோ இழந்த உணர்வு இருந்தாலும் அன்றைய நாள் சந்தோஷமாத்தானே இருக்கறோம் :)
ReplyDeleteநன்றி ஆசியா! முந்திரிகொத்து எங்க ஊரில் ரொம்ப ஃபேமஸ். இப்பவும் எல்லா விஷேஷங்களுக்கும் செய்வாங்க. நல்ல ஹெல்தியானதும் கூட.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. நன்றி அப்துல்காதர்!
ReplyDeleteலக்னோவே வெடி சத்தத்துல அதிர்து கவி. பயங்கரமா செலவு பன்றாங்க (வருஷத்துக்கு ஒரு முறை தானே:) எல்லா வீட்டுலையும் அலங்கார லைட். ஒரு மரத்தையும் விட்டு வைக்காம அதுலையும் லைட்! ஒரு வாரமா வெடி சத்தம் தான். ஷாம் பட்டாசுன்னு கேட்டுட்டே இருக்கான் (நாங்க போடுவதை அவன் பார்த்து ரசிப்பான்). சென்னையில் கூட இப்படிலாம் இல்லை. குளிர் நேரத்தில் பட்டாசால் கிடைக்கும் கதகதப்பு அருமை தான் :)
ReplyDelete//நீதான் குடும்பத்தில் ரவுடியான்னு கேட்கக் கூடாது. //
ReplyDelete@ Kavisiva, நீதான் குடும்பத்தில் ரவுடியா? ha ha ha
நன்றி ஆமினா! ஷாமுக்கும் கம்பி மத்தாப்பு வாங்கிக் கொடுங்க. கையில் பிடிச்சுக்க பயப்பட்டார்னா எங்கப்பா செய்த ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க :)
ReplyDeleteநன்றி அனாமிகா!
ReplyDelete//@ Kavisiva, நீதான் குடும்பத்தில் ரவுடியா? ha ha ha //
இல்லைன்னு பொய்யெல்லாம் சொல்றதுக்கு நான் என்ன அரசியல்வாதியா :). அழுகுனி ரவுடி நான் ஹா ஹா
//நாஞ்சில் பிரதாப்™ said...
ReplyDeleteநான் வீட்டுல தீபாவளி கொண்டாடி 5-6 வருஷம்...ஆச்சு... பொருள்தேடி ஊரைவிட்டு கிளம்பியதில் இழந்த பல இழப்புகளில் தீபாவளியும் ஒன்று... :)//
மீ...டூ...
தீபாவளி வாழ்த்துகள் கவி
//நானும் கம்பி மத்தாப்பிலிருந்து ஊசிவெடிக்கு பிரமோஷன் ஆகியிருந்தேன். //
என்னம்மோ ஒண்ணாப்புல இருந்து ரெண்டாப்புக்கு ப்ரோமோஷன் வாங்குன மாதிரில்ல சொல்றீங்க?
:)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDelete//நானும் கம்பி மத்தாப்பிலிருந்து ஊசிவெடிக்கு பிரமோஷன் ஆகியிருந்தேன். //
ReplyDeleteஅதுக்குப்பிறகு பிரமோஷனே ஆகலை போல...?
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கவி.
ReplyDeleteஅன்புடன் இமா
தீபாவளி கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!! போட்டோஸ் சூப்பரா இருக்கு..!!
ReplyDeletenaanum paarthen singaporil diwalikkaga alangaram seidhadhai in news la... arumayana padhivu.. vazhthukkal....
ReplyDeleteநன்றி வசந்த்! ஹி ஹி ஊசி வெடி வைக்கறது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன?
ReplyDeleteநன்றி சௌந்தர்! இப்படி உண்மையை எல்லாம் தெளிவா சொல்லக் கூடாது :)
ReplyDeleteநன்றி இமாம்மா!
ReplyDeleteநன்றி அஸ்மா!
ReplyDeleteநன்றி ஜெய்லானி! இந்த வருடமும் அலங்காரங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி தோசை சார்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteaஅச்சு முறுக்கு , ்ுந்திரி ்ொத்து முறுக்கு எல்லாமே சூப்்ர் அயிட்டம்
ReplyDeleteஊ்ில் எங்கும் வெடி சத்தம் கலை ்்ட்டும், இங்கெல்லாம், எல்லாம் புஸு தான்///