Monday 19 July 2010

போலி சான்றிதழ் கொடுத்த அப்பாவிகள்

//""போலி சான்றிதழ் விஷயத்தில் அப்பாவி மாணவர்கள், பெற்றோரை தண்டிப்பது நியாயமாகாது,'' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.//

முழு செய்தியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்



அடங்கொய்யால.... மாணவன் பாவம் அப்பாவி விட்டு விடுவோம் அப்பா சொல்றதுக்கு தலையாட்டும் ஆடு பாவம். ஆனால் போலிச் சான்றிதழை பணம் கொடுத்து வாங்கிய பெற்றோர் அப்பாவியாம். இந்த கொடுமையை எங்க போய் சொல்றது?!

தன்னோட பையன் பரீட்சையில மார்க் குறைவா எடுப்பாராம். உடனே அப்பாகாரர் போலிச்சான்றிதழ் எங்க கிடைக்கும்னு விசாரிச்சு கேட்டுத் தெரிஞ்சு கொடுக்கவேண்டியதைக் கொடுத்து வேண்டிய மார்க் ஷீட் வாங்கி கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணி சீட்டும் வாங்கிடுவாராம். பையனும் தட்டுத்தடுமாறி படிச்சு வெளிய வந்து ஏதோ ஒரு இடத்தில் குப்பை கொட்டி சம்பாதிப்பானாம். இப்படி அடுத்தவன் குடியை கெடுக்கற அப்பா அப்பாவியாம். அமைச்சர் சர்ட்டிஃபிகேட் கொடுக்கறார். கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? நல்லா வருது வாயில.

ஒருவகையில் அமைச்சர் சொல்றது போல இவர்கள் அப்பாவிகள்தான். இல்லேன்னா பேப்பர் சேஸ் பண்ணி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கியிருப்பாரே. இல்லேன்னா பையனுக்கு பிட் அடிக்க வசதி செய்து கொடுத்திருப்பாரே. இவர்கள் அப்பாவிகள்தான்.

இப்படிப்பட்ட அப்பாவிகளால் உண்மையாக படித்து மார்க் எடுத்த அப்பாவி அப்பிராணி மாணவனின் வாய்ப்பல்லவா தட்டிப் பறிக்கப் படுகிறது. இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதா? இவனுங்களைக் கேட்க யாருமே இல்லையா?

20 comments:

  1. ஐ இன்றைக்கு வட எனக்கே எனக்காஆஆஆஆ?

    கவி, பணம் இருப்பவர்கள் எதையும் சாதிக்கிறார்கள்..., ஆனால் அவர்களுக்கு நிட்சயம் கடவுளால் தண்டனை, எப்பவாவது கிடைக்காமல் போகாது.

    ReplyDelete
  2. //. ஆனால் போலிச் சான்றிதழை பணம் கொடுத்து வாங்கிய பெற்றோர் அப்பாவியாம். இந்த கொடுமையை எங்க போய் சொல்றது?! //

    :) அடுத்த மாணவன் வயிற்றில் அடிக்க நினைத்த பெற்றோர்களுக்கு தண்டனைத்தரனும்

    ReplyDelete
  3. உங்க எண்ணம் ரொம்பவே ரைட்..இப்படி ஒழுங்க படிக்காத மாணவர்கள் டாக்டர் லாயர் நு வந்து நாட்ட கெடுக்கறாங்க...இவர்கள் அப்பாவிகள் இல்லை பாவிகள்

    ReplyDelete
  4. //அடங்கொய்யால...//

    //நல்லா வருது வாயில.//

    என்னாது இது...:)) நீங்கதானா ???? :))

    இவனுங்களோட லாஜிக்கே புரியமாட்டுது... என்னஎழவோ பண்ணிட்டுபோட்டும்...நீங்க டென்ஷனாவாதீங்க...பதிவு போட லீட் கிடைச்சுதுல்ல அவ்ளோதான் :))

    ReplyDelete
  5. அதிரா காரவடை உங்களுக்கே உங்களுக்குதான் :)

    //ஆனால் அவர்களுக்கு நிட்சயம் கடவுளால் தண்டனை, எப்பவாவது கிடைக்காமல் போகாது.//

    ஆனால் இன்று பாதிக்கப்பட்டவனின் நிலை?! அதுதான் என் கோபம்

    ReplyDelete
  6. நன்றி கோவி.கண்ணன். நீங்க சொல்ற மாதிரி தண்டனை கொடுப்பானுங்க?! எங்க அங்கயும் பணத்தைக் கொடுத்து வாயை அடைச்சுடுவானுங்களே :(

    ReplyDelete
  7. நன்றி காயத்ரி. நாட்டுல இருக்கற போலி டாக்டர்கள் போதாதுன்னு இப்படிப்பட்ட போலிகளும். என்னத்த சொல்றது

    ReplyDelete
  8. ப்ரதாப் இப்போ படிக்கும் போது எனக்கே அது வித்தியாசமா இருக்கு. ஆனால் தினமலரில் அந்த செய்தியைப் படிச்சதும் டென்ஷனாயிட்டேன் அதான் இப்படீல்லாம் :).

    ReplyDelete
  9. குழந்தைகளுக்கு நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பெற்றோர்களே இப்படி கேட்ட வழியில் செல்ல துணை போனது மிகக் கொடுமை. உலகம் எங்கே போய்க கொண்டு இருக்கிறது..? இவர்களைப் பாவம் என்று சொல்வது சுத்த பைத்தியக் காரத் தனம.. அல்லது அவரும் அதில் உடந்தையாக இருந்திருக்கலாம்.. பணம் கிடைக்கிறதல்லவா..?இவர்கள் பெரிய ஒழுக்கசீலர்கள்..

    நல்லதொரு மனக்குமுறல் கவிசிவா..

    ReplyDelete
  10. நன்றி பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி. எல்லாம் பணப்பேய்கள்

    ReplyDelete
  11. அதாவது, அமைச்சர் அடிக்கற ரேஞ்சுக்கு பெற்றோர்கள்லாம் அப்பாவிங்க தான் :) அதயத் தான் அப்புடி மீன் பண்ணியிருக்காரு :))

    ReplyDelete
  12. உண்மையாக‌ ப‌டித்த‌ ஒரு மாண‌வ‌னின் உரிமையை த‌ட்டி ப‌றிக்கிறார்க‌ள் என்ப‌து தான் உண்மை... அதை ப‌ற்றி அமைச்ச‌ருக்கு க‌வ‌லையில்லை என்று நினைக்கிறேன்... ந‌ல்ல‌ வெளிப்பாடு க‌விசிவா

    ReplyDelete
  13. கவி முக்கியா ஒன்னை வசதியா மறந்துட்டு பேசுறீங்க .. அமைச்சர் சொன்னது சரிதான் . சரிதான் . சரிதான் ..ஏன்னா அவர் அப்படி வாங்கிட்டு இல்ல படிச்சிட்டு வந்திருக்கலாம் .அதுக்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன்.. கூல்.....!!!

    ReplyDelete
  14. ஆனால் இன்று பாதிக்கப்பட்டவனின் நிலை?! அதுதான் என் கோபம்
    // அது இன்று பாதிக்கப்பட்டதுபோல தெரிந்தாலும், நேர்மையானவர்களாயின் வருங்காலத்தில் நல்லாயிருப்பார்கள் கவி. கடவுள் நல்லவர்களைச் சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்.

    ReplyDelete
  15. அப்படீத்தான் இருக்கும் போல சந்தூ :(

    ReplyDelete
  16. நன்றி நாடோடி. நம்ப ஊர்க்காரரா நீங்க?

    ReplyDelete
  17. வர வர ஞாபகமறதி ஜாஸ்தியாயிடுச்சு ஜெய்லானி :)

    ReplyDelete
  18. அதீஸ் டயலாக் எல்லாம் சொல்றீங்க. ம்ம்ம் நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  19. @kavisiva said...
    //நன்றி நாடோடி. நம்ப ஊர்க்காரரா நீங்க?//

    இந்த‌ கேள்விக்காவே உங்க‌ளுடைய‌ சில‌ ப‌ழைய‌ ப‌திவுக‌ளை ப‌டிச்சேன்... நீங்க‌ எழுதியிருந்த‌ குறிப்புக‌ளை வ‌ச்சி நீங்க‌ ந‌ம்ம‌ ஊருதானு க‌ணிச்சிட்டேன்.. ஓகே ரெம்ப‌ ந‌ன்றி.. (ஊருக்கு போக‌னும் ஆள் ஏதும் செட் ப‌ண்ணிட‌ மாட்டீங்க‌ளே, ஏதா இருந்தாலும் பேசி தீர்த்துக்க‌லாம், அப்ப‌டி த‌ப்பா ஏதும் பின்னுட்ட‌ம் நான் உங்க‌ளுக்கு போட‌ல‌......சும்மா)

    ReplyDelete
  20. @நாடோடி
    (ஊருக்கு போக‌னும் ஆள் ஏதும் செட் ப‌ண்ணிட‌ மாட்டீங்க‌ளே, ஏதா இருந்தாலும் பேசி தீர்த்துக்க‌லாம், அப்ப‌டி த‌ப்பா ஏதும் பின்னுட்ட‌ம் நான் உங்க‌ளுக்கு போட‌ல‌......சும்மா)//

    அப்போ அப்படி யாருக்கு தப்பா பின்னூட்டம் போட்டீங்க :)

    நன்றி நண்பரே

    ReplyDelete