Tuesday 8 June 2010

தங்கநாற்கர சாலையும் விபத்தும்

இந்த முறை இந்தியா போயிருந்தப்போ அப்பா அம்மா நான் மூணு பேரும் மதுரைக்கு காரில் கிளம்பினோம். டிரைவர்தான் ஓட்டினார். இப்போது நாகர்கோவில் மதுரை சாலை பக்காவாக போட்டிருக்காங்க. தங்க நாற்கர சாலை திட்டத்தில்தான் இந்த சாலையும் உள்ளது. எதிரில் வாகனங்கள் வராது ரோடும் பக்காவாக இருக்கிறது என்பதால் வாகனங்கள் எல்லாம் 100கிமீ வேகத்தில்தான் செல்கின்றன.

எங்கள் காரும் 100கிமீ வேகத்தில்தான் போய்க் கொண்டிருந்தது. எங்கள் முன்னால் அடுத்த ட்ராக்கில் ஒரு டெம்போ போய் கொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு லாரி ரோட்டின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. இதனால் முதல் ட்ராக்கில் வந்து கொண்டிருந்த டெம்போ லாரியை கடப்பதற்காக எங்கள் கார் வந்து கொண்டிருந்த ட்ராக்கிற்கு திடீரென மாறியதால் எங்கள் கார் மீது பலமாக மோதியது.

அதிர்ஷ்டவசமாக டெம்போ காரின் டயரில் மோதியதால் டயர் வெடித்து கார் அப்படியே நின்று விட்டது. முன் சீட்டில் இருந்த அப்பா சீட் பெல்ட் போட்டிருந்ததால் எங்கும் போய் மோதாமல் அப்படியே இருந்து விட்டார். டிரைவருக்கும் எந்த அடியும் இல்லை. பின் சீட்டிலிருந்த அம்மாவும் நானும் முன்சீட்டில் சென்று மோதினோம் ஆனால் அடி எதுவும் படவில்லை. நல்லவேளையாக விபத்தில் யாருக்கும் சிறு காயம் கூட இல்லை. ஆனால் கார் மிக மோசமாக சேதமடைந்து விட்டது.

பழைய காரை மாற்றி இந்த புதிய காரை வாங்கி 20நாட்களே ஆகியிருந்தது. இன்ஷ்யூரன்ஸ் இருந்ததால் பிரச்சினை ஏதும் இல்லை.

இந்த விபத்து நடக்க முக்கியமான சில காரணங்கள்

1. எங்கள் காரின் வேகம். ஒருவேளை மெதுவாக சென்றிருந்தால் டெம்போ இந்த ட்ராக்கிற்கு மாறும் போது ப்ரேக் போட்டவுடன் எங்கள் கார் நின்றிருக்கும். விபத்தை தவிர்த்திருக்கலாம். அப்படியே டெம்போ மோதியிருந்தாலும் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும்.

2. எதிர்திசையில் தவறாக வந்த லாரி. அந்த லாரி தவறாக இந்த ட்ராகில் வராமல் இருந்திருந்தால் டெம்போ அதன் வழியில் ஒழுங்காக சென்றிருக்கும்.

3. ட்ரைவர்களின் பொறுமையின்மை. லாரி தவறாகத்தான் வந்தது. ஆனால் டெம்போ ட்ரைவர் 1நிமிடம் பொறுமையாக இருந்திருந்தால் லாரி யு டர்னில் திரும்பியிருக்கும். இவர் நேரே சென்றிருக்கலாம்.

4: இண்டிகேட்டர் போட்டுத்தான் ட்ராக் மாற வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் இல்லாமல் இருப்பது.


அந்த ரோட்டில் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. ஒருமாதம் முன்புதான் என் உறவினர் ஒருவர் காரும் இதே போல் விபத்துக்குள்ளாகியது. ரோடு பக்காவாக இருக்கிறது. ஆனால் சரியான அறிவிப்பு பலகைகள் இன்னும் எல்லா இடங்களிலும் வைக்கப் படவில்லை. யு டர்ன் ஐக் குறிக்கும் பலகைகளைப் பார்க்கவே முடியவில்லை.

இன்னொரு முக்கிய பிரச்சினை வேண்டுமென்றே எதிர்திசையில் தவறாக வரும் வாகனங்கள். சிறிது தூரம் சரியான திசையில் போய் யூ டர்ன் எடுப்பதை தவிர்த்து விட்டு பல வாகனங்கள் இப்படி வருகின்றன. முக்கியமாக லாரிகள் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான் இப்படி வருகின்றன. ஒருகிலோமீட்டர் தூரத்திற்கான நேரத்தையும் பெட்ரோலையும் சேமிக்கிறேன் என்று மற்றவர்களின் உயிருக்கு உலை வைக்கிறார்கள்.

அடுத்து மிகமுக்கிய பிரச்சினையாக எனக்குப் பட்டது துணைச்சாலைகளிலிருந்து முக்கிய சாலைக்கு வரும் வாகனங்கள் கவனித்து வருவதே இல்லை. திடீர் திடீரென்று ஏறி வரும்போது முக்கிய சாலையில் வருபவர்கள் ஒருகணம் தடுமாறி விடுகின்றனர். இது அந்த சாலையில் மட்டுமல்ல நகரில் ஓட்டுபவர்கள் கூட அப்படித்தான் வருகின்றனர். ஒரு முறை டவுனுக்குள் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

அரசு முயற்சியெடுத்து நல்ல சாலைகளைப் போட்டாலும்(சில இடங்களிலாவது போடுகிறார்களே) பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காவிட்டால் என்ன செய்வது?!

18 comments:

  1. சீட் பெல்ட் அப்பாவை காப்பாற்றியிருக்கிறது...

    இந்த இடத்தில் சீட் பெல்ட் தான் கடவுள்....

    ReplyDelete
  2. கவி யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதறிந்து நிம்மதி,புதுக்கார் சேதமானது வருத்தத்திற்கு உரியது,கார் தானே,மாற்றிக்கொள்ளலாம்.ஆட்கள் தப்பித்தது இறைவனின் அருள்.

    ReplyDelete
  3. //பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காவிட்டால் என்ன செய்வது?! //

    சாலை என்னமோ நல்லாத்தான் போட்டிருக்கானுங்க... நீங்க சொன்னமாதிரி,
    வளைவுகளில் ரேடியம் இன்டிகேட்டர் எங்கேயும் காணோம்... இரவு பயணம் ரொம்ப டேஞ்ஜர்...

    எவ்ளோதான் ரோடு நல்லாருந்தாலும்ஓட்டுபவர்கள் சரியாக விதிமுறைகளை பின்பற்றிவில்லையென்றால் ஒண்ணும் பண்ணமுடியாது... உங்களுக்கு நடந்தது அதுதான்.
    நல்லவேளை ஒண்ணும் ஆகலையே....

    ReplyDelete
  4. இந்த விசயத்தில நம்ம ஊர் எப்பவும் திருந்தாது...முக்கியமா யாருக்கும் பொருமையில்லை..கவர்மெண்டை விட பொதுமக்கள்தான் இதுக்கு பொறுப்பு...பிடிச்சாலும் லஞ்சம் குடுத்து தப்பிச்சிடுறாங்க...

    ReplyDelete
  5. படிக்கும் போதே திக்கென்று ஆகிவிட்டது.கடவுள் அருளால் யாருக்கும் ஒன்றுமில்லை....சாலைவிதிகளை யார் மதிக்கிறாங்க??? லாரியை பார்த்தாலே பயமா இருக்கும் எனக்கு..

    ReplyDelete
  6. ஆமாங்க, ரோடு நல்லாப் போட்டிருந்தாலும், யூ-ட்ர்ன் எடுக்க சோம்பி, எதிர்த் திசையில வர்றதை நிறுத்த மாட்டேங்கிறாங்க!!

    ஊருக்குப் போனா, பயந்துகிட்டேதான் பயணம் செய்யவேண்டியிருக்கு. என்னவோ போங்க, இப்ப சமீபமா ஊருக்குப் போய்ட்டு வந்தவங்க நிறைய பேரு ஒரு சின்ன விபத்தையாது சொல்றீங்க, பயமாத்தானிருக்கு!!

    எல்லாரும் நலம்னு அறிந்து மகிழ்ச்சி!!

    ReplyDelete
  7. //ப்ரியமுடன்...வசந்த் said...
    சீட் பெல்ட் அப்பாவை காப்பாற்றியிருக்கிறது...

    இந்த இடத்தில் சீட் பெல்ட் தான் கடவுள்....//

    உண்மைதான் வசந்த். இங்குள்ள பழக்கத்தில் அப்பாவையும் சீட் பெல்ட் போடச் செய்தேன். இல்லேன்னா நினைச்சுப் பார்க்கவே முடியல.

    //asiya omar said...
    கவி யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதறிந்து நிம்மதி,புதுக்கார் சேதமானது வருத்தத்திற்கு உரியது,கார் தானே,மாற்றிக்கொள்ளலாம்.ஆட்கள் தப்பித்தது இறைவனின் அருள்.//

    தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல தப்பினோம். கார் உடைந்த பாகங்களெல்லாம் மாற்றப்பட்டு புது கார் போலவே வந்து விட்டது. காரை மாற்ற எங்களுக்கு மனமில்லை. எங்களைக் காப்பாற்றிய கார் என ஒரு செண்டிமெண்ட் :)

    // நாஞ்சில் பிரதாப் said...
    //பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காவிட்டால் என்ன செய்வது?! //

    சாலை என்னமோ நல்லாத்தான் போட்டிருக்கானுங்க... நீங்க சொன்னமாதிரி,
    வளைவுகளில் ரேடியம் இன்டிகேட்டர் எங்கேயும் காணோம்... இரவு பயணம் ரொம்ப டேஞ்ஜர்...

    எவ்ளோதான் ரோடு நல்லாருந்தாலும்ஓட்டுபவர்கள் சரியாக விதிமுறைகளை பின்பற்றிவில்லையென்றால் ஒண்ணும் பண்ணமுடியாது... உங்களுக்கு நடந்தது அதுதான்.
    நல்லவேளை ஒண்ணும் ஆகலையே.... //

    ஒருநாள் இரவு அந்த ரோட்டில் பயணம் செய்தோம். நீங்கள் சொல்வது உண்மைதான். நாகர்கோவில் வந்து சேரும் வரை டென்ஷந்தான்.

    //ஜெய்லானி said...
    இந்த விசயத்தில நம்ம ஊர் எப்பவும் திருந்தாது...முக்கியமா யாருக்கும் பொருமையில்லை..கவர்மெண்டை விட பொதுமக்கள்தான் இதுக்கு பொறுப்பு...பிடிச்சாலும் லஞ்சம் குடுத்து தப்பிச்சிடுறாங்க... //

    ஊரில் கார் ஓட்டணும்னா கீப் லெஃப்ட் தியரிய எல்லாம் மறந்துட்டு நடு ரோட்டுலத்தான் முடிஞ்சா கொஞ்சம் ரைட் சைடுல ஏறித்தான் கார் ஓட்டணும். இல்லேன்னா நம்பள எதிர்த்தாப்புல வர்றவன் தூக்கிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பான் :(.

    //Mrs.Menagasathia said...
    படிக்கும் போதே திக்கென்று ஆகிவிட்டது.கடவுள் அருளால் யாருக்கும் ஒன்றுமில்லை....சாலைவிதிகளை யார் மதிக்கிறாங்க??? லாரியை பார்த்தாலே பயமா இருக்கும் எனக்கு.. //

    லாரிக்கு பெரிய எமன், டெம்போக்கு சின்ன எமன்னு பேர் வச்சு கண்டாலே பயம்தான் :(

    //ஹுஸைனம்மா said...
    ஆமாங்க, ரோடு நல்லாப் போட்டிருந்தாலும், யூ-ட்ர்ன் எடுக்க சோம்பி, எதிர்த் திசையில வர்றதை நிறுத்த மாட்டேங்கிறாங்க!!

    ஊருக்குப் போனா, பயந்துகிட்டேதான் பயணம் செய்யவேண்டியிருக்கு. என்னவோ போங்க, இப்ப சமீபமா ஊருக்குப் போய்ட்டு வந்தவங்க நிறைய பேரு ஒரு சின்ன விபத்தையாது சொல்றீங்க, பயமாத்தானிருக்கு!!

    எல்லாரும் நலம்னு அறிந்து மகிழ்ச்சி!! //

    உண்மைதான் ஹுசைனம்மா. ரோட்டில் போகவே பயமா இருக்கு. ட்ரைவர் கார் ஓட்டும் போது நாம் ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்குப் பயமாக இருக்கும். அதுவும் ஆக்சிடென்டுக்குப் பின் கார் ஏதாவது எங்களை ஓவர்டேக் செய்தாலே உடல் நடுங்குகிறது. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக பயம் தெளிந்திருக்கிறது.

    ReplyDelete
  8. ரோடு என்னவோ நல்லாத்தான் போட்டிருக்காங்க. நம்மூர் மக்களுக்குத்தான் சாலைவிதிகளை மதிக்கத்தெரியாதே :-((

    ReplyDelete
  9. ஒரு சில இடத்துல ரோடு முழுசா வேலை முடியா இருக்கு, அந்த இடங்களில், ராங் சிதேலதான் வராங்க. நீங்க சொல்ற அந்த இடத்தை பத்தி சரியாய் தெரியலை. ஆனாலும், மக்கள்கிட்ட விதிகளை பின்பற்றும் எண்ணம் வளர வேண்டும்

    ReplyDelete
  10. உங்களுக்கு நடந்ததை படிததுமுடிததும் அப்பாடா என மூச்சு வந்தது.

    ஆமாம் கவி இப்பவெல்லாம் ஒரே சாலைவிபத்தைப்பற்றிதான் பேச்சே. விழிப்புடன் இருக்கவேண்டியது நாமே. இதையும் மீறி நடப்பது நம்வசமில்லை.

    ReplyDelete
  11. நம் மக்கள் மனதில் தான் ஒழுக்கமான டிரைவிங் சென்ஸ் வரணும் , கடவுளுக்கு நன்றி

    ReplyDelete
  12. //அமைதிச்சாரல் said...
    ரோடு என்னவோ நல்லாத்தான் போட்டிருக்காங்க. நம்மூர் மக்களுக்குத்தான் சாலைவிதிகளை மதிக்கத்தெரியாதே :-(( //

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அமைதிச்சாரல். சட்டங்கள் கடுமையாக செயலாக்கப்பட்டால்தான் சரிப்பட்டு வரும். அதுக்கு முதலில் நம்ம காவல்துறை சரியாகணுமே!

    //LK said...
    ஒரு சில இடத்துல ரோடு முழுசா வேலை முடியா இருக்கு, அந்த இடங்களில், ராங் சிதேலதான் வராங்க. நீங்க சொல்ற அந்த இடத்தை பத்தி சரியாய் தெரியலை. ஆனாலும், மக்கள்கிட்ட விதிகளை பின்பற்றும் எண்ணம் வளர வேண்டும் //

    நன்றி LK. விபத்து நடந்த இடத்தில் சாலைப்பணிகள் முழுமையாக முடிந்து விட்டது.

    //அன்புடன் மலிக்கா said...
    உங்களுக்கு நடந்ததை படிததுமுடிததும் அப்பாடா என மூச்சு வந்தது.

    ஆமாம் கவி இப்பவெல்லாம் ஒரே சாலைவிபத்தைப்பற்றிதான் பேச்சே. விழிப்புடன் இருக்கவேண்டியது நாமே. இதையும் மீறி நடப்பது நம்வசமில்லை.//

    நன்றி மலிக்கா. நம் ஊரில் சாலை விபத்துக்கள் அதிகரித்து விட்டன. எல்லோருக்குமே அவசரம் என்ன செய்வது?!

    //மங்குனி அமைச்சர் said...
    நம் மக்கள் மனதில் தான் ஒழுக்கமான டிரைவிங் சென்ஸ் வரணும் , கடவுளுக்கு நன்றி //

    அவ்வளவு சீக்கிரத்தில் நம்ப மக்களுக்கு வரும்கறீங்க?!

    ReplyDelete
  13. கவி! நல்லவேளை.. அங்கயும் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணினா இந்த மாதிரி விபத்துக்களை தவிர்க்கலாம்

    ReplyDelete
  14. விபத்தில் உயிர் தப்புவதென்றால் என்னவென்று எனக்குப் புரியும்.. அனுபவம்..

    ஆம்.. விதிகள் மிகக் கடுமையாக்கப் பட வேண்டும்.. இல்லைஎன்றால் - people tend to take them for granted :(

    சீட் பெல்ட் மிக முக்கியம் கவி.. அனைவரும் போட வேண்டியதொன்று.. உங்கள் அப்பாவையும் அது காப்பாத்தியிருக்கிறது.. !!

    ReplyDelete
  15. //இலா said...
    கவி! நல்லவேளை.. அங்கயும் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணினா இந்த மாதிரி விபத்துக்களை தவிர்க்கலாம் //

    உண்மை இலா

    // எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    விபத்தில் உயிர் தப்புவதென்றால் என்னவென்று எனக்குப் புரியும்.. அனுபவம்..

    ஆம்.. விதிகள் மிகக் கடுமையாக்கப் பட வேண்டும்.. இல்லைஎன்றால் - people tend to take them for granted :(

    சீட் பெல்ட் மிக முக்கியம் கவி.. அனைவரும் போட வேண்டியதொன்று.. உங்கள் அப்பாவையும் அது காப்பாத்தியிருக்கிறது.. !! //

    விதிகளை கடுமையாக்கினாலும் நம்ம மக்கள் காசை கொடுத்து சரிக்கட்டிடறாங்களே! யாரைக் குற்றம் சொல்ல :(

    ReplyDelete
  16. சாலை விபத்து என்றாலெ பயம் தான்எல்லா இடத்திலும் அபப்படி தான்.

    ஊருக்கு போகிறோம், அங்கு இன்னும் மோசம் சந்து பொந்தில் எல்லா வளைந்து வளைந்து ஓட்டுவார்கள்.

    ReplyDelete
  17. சிலருக்கு விதி வீதியில் எழுதப்பட்டிருக்கிறது
    இருந்தாலும் விதியை மதியால் வெல்லலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா கவி

    ReplyDelete
  18. உண்மைதான் கோமா

    ReplyDelete