Saturday 5 June 2010

வந்துட்டேனுங்க!

இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் மொக்கை போட வந்துட்டேனே! எல்லாரும் நல்லா இரு(ந்திரு)ப்பீங்கன்ன்னு நினைக்கிறேன் :). இனிமே இந்தப்பக்கம் அடிக்கடி வருவேன் கவனமா இருந்துக்கோங்க.

இந்திய பயணம் பல நல்ல நிகழ்வுகளோடும் சில சங்கடமான நிகழ்வுகளோடும் இருந்தது.

முதலில் இனிய நிகழ்வுகள்...

ஏழு வருட இடைவெளிக்குப் பின் என் அண்ணனை நேரில் பார்த்த சந்தோஷம். அவனது வருகைக்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கண்களில் நீர் மல்க காத்திருந்த தருணம்... நீண்ட ஏழு வருடங்களை விட அதிகமாக தோன்றியது. அண்ணனைப் பார்த்த நொடியில் பேச வார்த்தைகளில்லாமல் கண்களால் பேசி தழுவிக் கொண்டோம். மிக மிக சந்தோஷமான தருணம் அது. என் செல்ல மருமகள் என்னைக் கட்டிக் கொண்டதில் கிடைத்த சந்தோஷம் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது.

அடுத்து என் தங்கையின்(சித்தப்பா மகள்) திருமணம் இனிதே நடை பெற்றது. உறவுகளை ஒரே இடத்தில் ஒரு சேர பார்த்ததில் கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை அத்தனை சந்தோஷம் குதூகலம் கொண்டாட்டம். சிறுவயதில் நாங்கள் செய்த குறும்புகளை பேசி சிரித்து மகிழ்ந்தோம்.

அடுத்து எங்கள் அம்மாவின் 60வது பிறந்த நாள்... எங்கள் தந்தையின் 60வது பிறந்த தினமும் சஷ்டியப்த பூர்த்தி விழாவும் அமெரிக்காவில் என் அண்ணன் வீட்டில் நடந்தேறியது. விசா பிரச்சினையால் அப்போது என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அந்த வருத்தத்தை எங்கள் அம்மாவின் 60வது பிறந்த நாள் தீர்த்து வைத்தது.

அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஹோட்டல் விஜயதாவில் ஒரு டின்னருக்கு ஏற்பாடு செய்தோம். மிக நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தோம். சும்மா ஒரு கெட் டுகெதர் என்று அப்பா அம்மாவை அண்ணா ஹோட்டலுக்கு கூட்டி வந்தார். நானும் என் மாமியாரும் பிறந்த நாள் கேக்-கோடு ஹோட்டலில் காத்திருந்தோம். மற்ற உறவினர்களும் வந்து சேர பிறந்த நாள் கேக்கை வெளியில் எடுக்க அம்மா அப்பாவுக்கு இனிய சந்தோஷ அதிர்ச்சி. பின்னர் நல்ல சாப்பாடு :). இப்படி ஒரு விஷயத்திற்கு ஐடியா கொடுத்தது என் அண்ணி. செயல் படுத்தியது நாங்கள் என்றாலும் மூளையாக இருந்தது என் அண்ணிதான்.

இந்த சந்தோஷத்துடனேயே அடுத்த நாள் நான் கிளம்பி விட்டேன்.

இவ்வளவு சந்தோஷங்களைக் கொடுத்த இந்திய பயணம் சில சங்கடங்களையும் கொடுத்தது.

நாகர்கோவிலிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். அப்போது நாங்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் சிறு காயமும் ஏற்படவில்லை. ஆனால் கார் மிக மோசமாக பாதிப்படைந்தது. இந்த விபத்து பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் அதற்கு ஒரு தனிப்பதிவிடுகிறேன்.

அடுத்து சில மருத்துவர்களின் தொழில் நேர்மையின்மை. என் அப்பாவுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட சில அசௌகரியங்களுக்காக நாகர்கோவிலில் அந்த துறையில் உள்ள பிரபல மருத்துவரை அணுகினோம். அவர் பரிசோதித்து விட்டு உடனே சர்ஜரி செய்யவேண்டும் என்றார். அது மைனர் சர்ஜரி என்பது எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த ஒன்று. அவரிடம் மைனர் சர்ஜரிதானே என்று கேட்டதற்கு இல்லை இல்லை மேஜர் சர்ஜரி எனவும் ரிஸ்க் மிக அதிகம் என்றும் சொல்லி பயமுறுத்தி விட்டார்.

என் சித்தப்பாவும் ஒரு மருத்துவர். அவரிடம் ஆலோசனைக் கேட்ட போது சர்ஜரி தேவையில்லை எனவும் எதற்கும் இன்னொரு ஸ்பெஷலிஸ்டை பார்க்கலாம் என்று திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தந்தார். அவரிடம் காண்பித்த போது சர்ஜரி தேவையே இல்லை மாத்திரைகளே போதும் என்று நம்பிக்கையூட்டினார். இப்போது அப்பா மாத்திரைகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்

இதற்கிடையே ஏற்கெனவே நாங்கள் பார்த்த நாகர்கோவில் டாக்டரின் அண்ணன்(அவரும் மருத்துவர்) என் அப்பாவோடு வேலை பார்த்தவர். அவர் தன் தம்பியிடம் இது பற்றி பேசியிருக்கிறார். அதன் பின் நாங்கள் அந்த டாக்டரைப் பார்த்த போது அவரது அணுகு முறையே மாறியிருந்தது. அது வரை ரஃபாக பேசியவர் பின்னர் மெதுவாக பேச ஆரம்பித்து விட்டார். இரண்டு நாட்கள் கழித்து பார்த்த போது இப்போது சர்ஜரி தேவையில்லை மாத்திரைகளில் குணப்படுத்தலாம் என்கிறார்.

முதலில் பையன் அமெரிக்காவில் இருக்கிறான் ஹாஸ்பிட்டலில் பிடித்துப் போட்டு விட்டால் மொத்தமாக ஒரு அமவுண்ட் கறந்து விடலாம் என்று கணக்கு போட்டவர் தன் அண்ணனுக்குத் தெரிந்தவர் என்றதும் அப்படியே மாறிப் போனார்.

ஒருவேளை நாங்கள் இன்னொரு டாக்டரைப் பார்க்காமல் இருந்திருந்தாலோ அல்லது அவரது அண்ணனைத் தெரியாமல் இருந்திருந்தாலோ தேவையில்லாமலேயே அப்பாவுக்கு ஒரு சர்ஜரி நடந்திருக்கும். எத்தனைப் பேரை இவர் இப்படி ஏமாற்றியிருப்பாரோ தெரியவில்லை :(

அந்த ஒருவார காலம் எங்கள் குடும்பத்தினர் பட்ட மனவேதனை...ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக் கொண்டு உள்ளுக்குள் வேதனைகளை அடக்கிக் கொண்டு....தனிமையில் கண்ணீர் விட்டு... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எப்படியோ எல்லாம் நல்லவிதமாக முடிந்தது.

15 comments:

  1. வாங்க வாங்க வந்துட்டீங்களா?

    ஊர் போய் வந்தாலே சந்தோஷம் , ஆனால் இங்கு வந்த்தும் உள்ள தனிமை, ஒரு சோகம்.

    ReplyDelete
  2. அடபாவிங்களா? சிலபேருக்கு ரொம்பவே அலட்சிமங்க. நானும் ஒரு மருத்துவமனை அனுபவத்தை பகிர்ந்திருக்கிறேன். இனிமேல் யாருக்கும் யூ.எஸ்.ஏ ல இருக்கிறதை காட்டிங்காதீங்க. இல்லேன்ன உங்களையும் பிடிச்சு பக்கத்து பெட்ல போடுவாங்க. எந்த மருத்துவமனை / டாக்டர் என்று சொன்னீர்களானால் மற்றவர்களும் ஏமாறாமல் இருப்பார்கள்.

    விபத்தில் எதுவும் நடக்காது எல்லாரும் நலமாக இருப்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. அப்பா இப்பொழுது நலமா கவி?

    மீண்டும் வந்ததில் சந்தோஷம்...

    தங்கைக்கு திருமண வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. வாங்க...
    அப்பா, அம்மா நீண்ட நாட்கள் நலமுடன்
    மன வளமுடன் வாழ, இறைவனிடம்
    பிரார்த்திகிறேன்.

    ReplyDelete
  5. ஆகா வந்துட்டீங்களா.... எந்த ஆஸ்பிட்டல் அது...(ஜெ.சே. தானே) அது ஆஸ்பிட்டல் இல்லை கொள்ளை கும்பல் இருக்கிற இடம்...

    விஜயதாவுக்கு என்னைக்குப்போனீங்க...என் அண்ணன் திருமணத்திற்கு முன்தினம் 29/04 ராத்திரி நான் அங்கத்தான் இருந்தேன்... ஆனா சுய நினைவுல இல்ல :)))

    ReplyDelete
  6. வாங்க , அடுத்த பயனம் எப்ப ?.....!!

    ReplyDelete
  7. வாங்க கவி,பதிவுலகம் டல்லடித்து போக இருந்தது,சரியான நேரத்தில் வந்திட்டீங்க.ஊர் போனதும் கிளம்பியதும் தானே தெரியும்,நாள் அவ்வளவு வேகமாக பறந்திருக்குமே !

    ReplyDelete
  8. வெல்கம் கவி!! தங்கைக்கு திருமணவாழ்த்துக்கள்!!...தங்கள் தந்தை நலமா?? குட்டி மருமகள் என்ன சொன்னாங்க....

    ReplyDelete
  9. வாங்கோ கவிசிவா.... வந்த களைதீருமுன்பே பெரிய பதிவு போட்டுவிட்டீங்கள். இனித் தொடர்ந்து கடிப்பீங்கதானே(பகிடியாகக் கேட்கிறேன்). என் பக்கத்திலே உங்கள் பெயர் மேலே வந்ததைப் பார்த்து உங்கள் வரவு தெரிந்துகொண்டேன். களைப்பாறி வாங்கோ.

    ReplyDelete
  10. //Jaleela said...
    வாங்க வாங்க வந்துட்டீங்களா?

    ஊர் போய் வந்தாலே சந்தோஷம் , ஆனால் இங்கு வந்த்தும் உள்ள தனிமை, ஒரு சோகம்.//

    வந்துட்டேன் ஜலீலாக்கா. தனிமை சோகம் எல்லாம் ரெண்டு மூணு நாள் கழித்துதான் ஆரம்பிக்கும். அதுவரைக்கும் வீட்டை ஒழுங்கு படுத்தறதுலயும் இடையிடையே வலையுலகை எட்டிப் பார்ப்பதிலேயுமே ஓடிடும்.

    //அனாமிகா துவாரகன் said...
    அடபாவிங்களா? சிலபேருக்கு ரொம்பவே அலட்சிமங்க. நானும் ஒரு மருத்துவமனை அனுபவத்தை பகிர்ந்திருக்கிறேன். இனிமேல் யாருக்கும் யூ.எஸ்.ஏ ல இருக்கிறதை காட்டிங்காதீங்க. இல்லேன்ன உங்களையும் பிடிச்சு பக்கத்து பெட்ல போடுவாங்க. எந்த மருத்துவமனை / டாக்டர் என்று சொன்னீர்களானால் மற்றவர்களும் ஏமாறாமல் இருப்பார்கள்.//

    நாங்கள் பார்த்த டக்டர் திறமையானவர். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவருடைய பிசினஸ் மைண்ட்தான் கஷ்டமா இருக்கு :(


    //ப்ரியமுடன்...வசந்த் said...
    அப்பா இப்பொழுது நலமா கவி?

    மீண்டும் வந்ததில் சந்தோஷம்...

    தங்கைக்கு திருமண வாழ்த்துகள்....//

    நன்றி வசந்த். அப்பா இப்போ நலமாக இருக்கிறார்.

    //NIZAMUDEEN said...
    வாங்க...
    அப்பா, அம்மா நீண்ட நாட்கள் நலமுடன்
    மன வளமுடன் வாழ, இறைவனிடம்
    பிரார்த்திகிறேன். //

    நன்றி நிஜாமுதீன்.

    //நாஞ்சில் பிரதாப் said...
    ஆகா வந்துட்டீங்களா.... எந்த ஆஸ்பிட்டல் அது...(ஜெ.சே. தானே) அது ஆஸ்பிட்டல் இல்லை கொள்ளை கும்பல் இருக்கிற இடம்...

    விஜயதாவுக்கு என்னைக்குப்போனீங்க...என் அண்ணன் திருமணத்திற்கு முன்தினம் 29/04 ராத்திரி நான் அங்கத்தான் இருந்தேன்... ஆனா சுய நினைவுல இல்ல :)))//

    அது ஜெ.சே ஹாஸ்பிடல் இல்லை. இன்னொரு கொள்ளைக் கூட்டம்.

    விஜயதாவுக்கு ஜூன் 2ம் தேதி போனோம். ஏப்ரல் 29 அன்னிக்கு முந்தைய தினம் விபத்து நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம் :(
    ஜூன் 30 எந்த மண்டபத்தில் வைத்து திருமணம்? அன்று எங்கள் உறவினர் ஒருவரின் திருமணமும் நடந்தது.

    //ஜெய்லானி said...
    வாங்க , அடுத்த பயனம் எப்ப ?.....!! //

    வந்துட்டேன் ஜெய்லானி. அடுத்த பயணம் திடிர் திடீர்னு சிங்கைக்கு மட்டும் அடிக்கடி இருக்கும் :)

    //asiya omar said...
    வாங்க கவி,பதிவுலகம் டல்லடித்து போக இருந்தது,சரியான நேரத்தில் வந்திட்டீங்க.ஊர் போனதும் கிளம்பியதும் தானே தெரியும்,நாள் அவ்வளவு வேகமாக பறந்திருக்குமே !//

    ஆமா ஆசியா போனதும் தெரியல வந்ததும் தெரியல அவ்வளவு வேகமா நாட்கள் ஓடிடுச்சு. இன்னிக்கு அண்ணாவும் ஊர் திரும்பறாங்க. அப்பா அம்மாவுக்குத்தான் கஷ்டமா இருக்கும் :(

    // Mrs.Menagasathia said...
    வெல்கம் கவி!! தங்கைக்கு திருமணவாழ்த்துக்கள்!!...தங்கள் தந்தை நலமா?? குட்டி மருமகள் என்ன சொன்னாங்க....//

    நன்றி மேனகா! அப்பா இப்போ நல்லா இருக்காங்க. மருமகள் எப்போதுமே விளையாட்டுதான் என்னை அவங்களோட கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க :)

    //athira said...
    வாங்கோ கவிசிவா.... வந்த களைதீருமுன்பே பெரிய பதிவு போட்டுவிட்டீங்கள். இனித் தொடர்ந்து கடிப்பீங்கதானே(பகிடியாகக் கேட்கிறேன்). என் பக்கத்திலே உங்கள் பெயர் மேலே வந்ததைப் பார்த்து உங்கள் வரவு தெரிந்துகொண்டேன். களைப்பாறி வாங்கோ. //

    வந்து 3நாட்கள் ஆகிவிட்டது அதிரா! இனிமே தொடர்ந்து கடியா கடிப்பேனே :). நீங்களும் கெதியா வந்து கடி பட்டுக்கோங்கோ

    ReplyDelete
  11. திருமணம் கோட்டாரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. அன்றைக்கு ஏகப்பட்ட கல்யாணம்...காலைல சரியான மழைவேற... நிறைய சொதப்பல்...

    ReplyDelete
  12. வாங்க கவி! ஹோப் ஆல் இஸ் வெல் :))
    ம‌ரும‌க‌ள் போட்டோ இருந்தா அனுப்பி வையுங்க‌... மெதுவா வேலை செய்ங்க‌... அவ‌ச‌ர‌மே இல்லை :)

    ReplyDelete
  13. வாங்க கவி.சந்தோஷமான தருணங்களை அசைபோட்ட படி அடுத்த இந்திய பயணத்தை எதிர் நோக்கி இருங்கள்.

    ReplyDelete
  14. ஏழு வருஷங் கழித்து பாத்திருக்கீங்களா? ம்ம்.. நீங்க இப்ப வர்ற முயற்சி பண்ணலாம்ல? விசா என்னவாச்சு?

    உங்களுடைய சந்தோஷ மழையில நாங்களும் நனைஞ்சோம்.. நன்றி..

    அப்பா இப்ப எப்படி இருக்கார்? என்ன விஷயம்ன்னு தெரியாம ஒன்னும் சொல்ல முடியல.. நலம் பெற பிரார்த்தனைகள்..

    ReplyDelete
  15. ஆஸ்பத்திரி ,கல்லூரி இவையெல்லாம் இப்பொழுது பணம் அள்ளும் பிசினஸாக மாறி இருக்கிறது

    ReplyDelete