Saturday, 20 February 2010

"நான் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் நான்" பேங்கும் நானும்

இணைய வழி பேங்கிங் செய்ய வசதியா இருக்குமேன்னு சில வருஷங்களுக்கு முன்னாடி "நான் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் நான்" பேங்கில் ஒரு NRI அக்கவுண்ட் ஆரம்பிச்சோம்.

ஏனோ அந்த பேங்கை ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. கஸ்டமர் சர்வீஸ் அவ்வளவு மோசம். அப்போது வேற எந்த பேங்கும் இன்டர்நெட் பேங்கிங் வசதி செய்யாததால் வேற வழியில்லாம அங்க போனோம்.

அங்க வேலை பார்க்கறவங்க எல்லாரும் ஏதோ அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக நினைச்சுக்கிட்டு எல்லார்க்கிட்டயும் இங்கிலிபீசுலதான் ஸ்பீக் பண்ணுவாங்க. நாமளே இந்த ஊர்ல தமிழைப் பேச முடியாம நொந்து ஊரிலயாவது வாய் மணக்க தமிழில் பேசலாம்னு தமிழில் பேசினாலும் அவங்க வுடறது என்னவோ பீட்டருதான். (பேங்க் மட்டுமில்லீங்க எங்க போனாலும் இந்த பீட்டருங்க தொல்லை தாங்க முடியல) கடைசியா பொறுக்க முடியாம உங்களுக்கு தமிழ் தெரியாதான்னு கேட்டே விட்டேன். "ஐ நோ டமில்" அப்படீன்னுச்சு அந்த புள்ள. அப்புறம் என்ன தமிழ்ல பேசறதுதான எதுக்கு இங்க்லீஷ் சொன்னதுக்கு அப்புறம் வழிக்கு வந்துச்சு.

அப்புறம் அந்த அக்கவுண்டுக்கு ஏடிஎம் கார்டும் கொடுத்தாங்க. அந்த கார்டையும் வாங்கிட்டு சந்தோஷமா விடுமுறையை முடிச்சு இந்தோனேஷியா வந்தாச்சு. திருப்பி அடுத்த முறை ஊருக்கு போன போதுதான் பிரச்சினையே ஆரம்பிச்சுது. ஊரில் செலவளிக்க தேவையான பணத்தையும் இங்கிருந்தே என் அக்கவுண்டுக்கு அனுப்பிவிட்டதால் வேறு பணம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஊருக்கு போயிட்டோம்.

அடுத்த நாள் ஏடிஎம்முக்கு பணம் எடுக்கப் போனால் "card invalid" னு கார்ட் திரும்பி வருது. இதென்னடா வம்பாப் போச்சுன்னு பேங்கில் போய் கஸ்டமர் சர்வீஸை கேட்டால் அலட்சியமா ஒரு டோல் ஃப்ரீ நம்பரைக் கொடுத்து இதுல கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க அப்படீன்னாங்க. என்னங்க இது கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பதில் சொல்றீங்கன்னு கொஞ்சம் சத்தம் போட்ட பிறகு இன்னொருத்தர் வந்தார்.

அவர் கார்டை வாங்கி பார்த்துட்டு ஒரு பதில் சொன்னார் பாருங்க... அது வந்து நீங்க மாசத்துல ஒருதடவையாவது இந்த கார்டை யூஸ் பண்ண்னும் இல்லேன்னா கார்ட் இன்வேலிட் ஆகிடும் அப்படீன்னார். எனக்கு சிரிக்கறதா இல்ல அழுவறதான்னு தெரியல.

அவர்கிட்ட ஏங்க நான் வச்சிருக்கறது NRI அக்கவுண்ட். உங்க பேங்கும் எனக்கு அந்த அக்கவுண்டுக்குதான் ஏடிஎம் கார்டு கொடுத்திருக்கு. அப்புறம் என்னை ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது கார்டை யூஸ் பண்ணுன்னு சொன்னா மாசந்தோறும் ஒரு தடவை அங்கயிருந்து இந்தியாவுக்கு வரச் சொல்றீங்களா?! உங்க பேங்க் எனக்கு மாசத்துக்கு ஒரு டிக்கெட் கொடுக்குதுன்னு சொல்லுங்க நான் மாசந்தோறும் வந்து கார்டை யூஸ் பண்றேன் அப்படீன்னேன்.

இல்ல மேடம் நீங்க சொல்றது புரியுது ஆனா இது பேங்கோட ரூல் அப்படீன்னார். என்னால நம்பவே முடியலை. உண்மையிலேயே அப்படி ஒரு ரூல் இருக்கா இல்லை வேற ஏதாவது பிரச்சினையான்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியவில்லை. அதுக்கு அவர் ஒரு வழியும் சொன்னார். உங்க கார்டை உங்க உறவினர்களிடம் கொடுத்து மாதாமாதம் 100ரூபாய் எடுக்க சொல்லுங்க இந்த பிரச்சினை வராதுன்னார். அப்புறம் எதுக்குங்க என் பேர்ல ஒரு அக்கவுண்ட் அதுக்கு ஒரு கார்டு?!

அன்னிக்கு முடிவு பண்ணினேன் எனக்கு உங்க ஏடிஎம் கார்டே வேண்டாம்யா! எனக்கு பணம் எடுக்கணும்னா செக்கை போட்டு கலெக்ட் பண்ணிக்கறேன் அப்படீன்னு வந்துட்டேன். இன்னிக்கு வரைக்கும் அந்த அக்கவுண்டுக்கு என்கிட்ட கார்டு கிடையாது.

இன்னும் ஏன் அந்த அக்கவுண்டை க்ளோஸ் பண்ணாம வச்சிருக்கன்னு கேக்கறீங்களா?! அவந்தானே நல்ல எக்ஸ்சேஞ் ரேட் தர்றான் :-)

இன்னொரு கூத்தும் இந்த பேங்கில் நடந்தது. சென்னையில் கல்லூரியில் படிக்கும் என் உறவினரின் மகனுக்கு அவங்க அப்பா மாதா மாதம் பணத்தை அவன் அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்வார். ஒருமாதம் பணம் அவனது அக்கவுண்டுக்கு போய்ச் சேரலை. பேங்கில் கேட்டால் மீண்டும் அதே டோல் ஃப்ரீ நம்பரைக் கொடுத்து கம்ப்ளெயின்ட் பண்ணுன்னு சொல்லிட்டானுங்க.

சரின்னு நான் தான் ஃபோன் பண்ணினேன். ஒரு பீட்டர்தான் லைனில் வந்தது. விவரங்களைக் கேட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர் நான் இல்லை என்பதால் விவரங்கள் சொல்ல மறுத்து விட்டார். அதுவரை அவரது செயல் சரியானதே! சம்பந்தப்பட்டவரிடம் பேசச் செய்ய அவரிடம் தமிழ் பேசத் தெரிந்தவர் இருந்தால் அவரிடம் கனெக்ட் பண்ண சொன்னேன். அதற்கு அவர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கஸ்டமர் சர்வீஸ் இருக்கிறது என்றார்.

எனக்கு புரியாதது இதுதான். இவனுங்க தமிழ்நாட்டிலும் கிளை திறந்து வச்சிருக்கானுங்க. ஆனா தமிழில் கஸ்டமர் சர்வீஸ் லைன் கிடையாதாம். பேங்கில் நேராக போய் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டானுங்களாம். அப்போ வாசலிலேயே "இங்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அக்கவுண்ட் ஒப்பன் செய்யப்படும்"னு போர்ட் எழுதி வச்சிட வேண்டியதுதானே!

இந்த பேங்கில்தானே பிரச்சினைன்னு போனதடவை ஊருக்குப் போன போது இன்னொரு பேங்கில் உள்ள எனது SB அக்கவுண்டுக்கு ஒரு ஏடிஎம் கார்டு வாங்கினேன். ஆனால் அந்த பேங்கின் ஏடிஎம் மெஷின் எப்போதும் அவுட் ஆஃப் ஆர்டர் அல்லது பணம் இல்லைன்னு(மெஷின்லதாங்க!) கார்டு திரும்பி வந்துடும். ஒருதடவை கூட அந்த கார்டை யூஸ் பண்ணி பணம் எடுக்கலை :-(.

இந்த பிரச்சினை எல்லாம் இல்லாத ஏதாவது பேங்க் இருந்தா சொல்லுங்கப்பா. இவனுங்க கொசுத்தொல்லை தாங்க முடியல!

பின்குறிப்பு:
இவ்வளவு பேசற நீ ஏன் பதிவுல நிறைய ஆங்கில வார்த்தை பயன் படுத்தியிருக்கறன்னு கேட்க கூடாது. அப்புறம் வங்கி-பேங்க்,
வாடிக்கையாளர் சேவை- கஸ்டமர் சர்வீஸ் னு டிஸ்கி போட வேண்டி வந்துடும் அதான் :-)

17 comments:

  1. நல்லவேளை கவி இதுவரை நான் ஏடிஎம் கார்டு வைத்திருக்கவில்லை.செக் அல்லது நேரடியாகவே பணத்தை பேங்க்ல எடுத்துயூஸ் பண்ணிக்கிறேன்.ஹஸ் மட்டும் தான் கார்டு வைத்து யூஸ் பண்ணுவார்...ஆனால் நிஜமாவே நீங்க புலம்புறமாதிரி நிறைய பேர் புலம்பிருக்காங்க..

    ReplyDelete
  2. கவி ப்ரைபலில் 2 கவிப்பக்கம்னு உங்க ப்ளாக் இருக்குல்லையா அதில் இப்போ புதுசா ஆரம்பித்திருப்பதில் ப்ராக்கெட்டில் புதுசுன்னு போடுங்க அப்பதான் புதுசா வரவங்களுக்கு குழப்பம் இல்லாம இருக்கும்.மேலும் வேர்ட் வெரிபிகேஷனையும் எடுத்துடுங்க.அப்பதான் கமெண்ட் போடுபவர்களுக்கு வசதியா இருக்கும்.வேர்ட் வெரிபிகேஷன் இருந்தால் நிறைய கமெண்ட் வராதுப்பா...

    ReplyDelete
  3. நன்றி மேனகா! நீங்க சொன்ன மாற்றங்களைச் செய்துட்டேன். தட்டுத் தடுமாறி இப்பத்தான் எல்லோரோட உதவியோட ஒவ்வொன்னா கத்துக்கிட்டு வர்றேன் :-)

    ஏடிஎம் கார்டே ஆத்திர அவசரத்துக்கு நம்ம அக்கவுண்டிலிருந்து பணம் எடுப்பதுக்குத்தான். ஆனா அதுலயும் பிரச்சினை

    ReplyDelete
  4. எல்லாரும் நான் பார்க்கிறேன் (நீங்க பார்க்கலையான்னு)நீங்க மாறலையான்னு கேட்டு தொலச்சாங்க,நாங்க மட்டும் மாறலையே.

    ReplyDelete
  5. //எல்லாரும் நான் பார்க்கிறேன் (நீங்க பார்க்கலையான்னு)நீங்க மாறலையான்னு கேட்டு தொலச்சாங்க,நாங்க மட்டும் மாறலையே.//

    ஹி ஹி நாமெல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல மாறிடுவோம்?!

    ReplyDelete
  6. கவி அது இண்டர்நேஷனல் டெபிட்கார்டுதானே , மாசத்திற்கு ரூ100போல ஏதாவது பர்சேஸ் செய்யுங்க. உங்க கவலை தீரும். இங்கு நானும் அப்படிதான் செய்கிறேன்.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ஜெய்லானி! இப்படி ஒரு வழியும் இருக்கா?! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

    ReplyDelete
  8. எனக்கு அனுபவம் இல்லை!

    ReplyDelete
  9. உண்மைதான் கவி.இன்னும் பல சங்கடங்களும் இருக்கிறது.பல சமயம் கார்ட் மெஷினுக்குள் போய் மாட்டிக்கொள்கிறது.அதற்கு பயந்தே பேங்க் திறந்திருக்கும் நேரம் மட்டும் ஏ டி எம் உபயோகபடுத்துக்கொள்கிறேன்.பெரிய அமவுண்ட் என்றால் செக் கொடுத்துத்தான் எடுக்கிறேன். ஊரில் இருக்கும் என் அக்கவுண்ட்டில் பணம் போட்டு அதை இங்கிருக்கும் ஏடிஎம்மில் எடுப்பதும் வழக்கம்.பல சமயங்களில் 50,100 என்று பேங்கில் எடுத்துக்கொள்கின்றார்கள்.கேட்டால் சர்வீஸ் சார்ஜாம்.ஒன்றுமே புரியலே!!

    ReplyDelete
  10. அங்க வேலை பார்க்கறவங்க எல்லாரும் ஏதோ அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக நினைச்சுக்கிட்டு எல்லார்க்கிட்டயும் இங்கிலிபீசுலதான் ஸ்பீக் பண்ணுவாங்க.////


    சகோதரி
    இந்தியன் பேங்க் தானே??
    ?
    ?

    ReplyDelete
  11. ஏங்க நான் வச்சிருக்கறது NRI அக்கவுண்ட். உங்க பேங்கும் எனக்கு அந்த அக்கவுண்டுக்குதான் ஏடிஎம் கார்டு கொடுத்திருக்கு. அப்புறம் என்னை ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது கார்டை யூஸ் பண்ணுன்னு சொன்னா மாசந்தோறும் ஒரு தடவை அங்கயிருந்து இந்தியாவுக்கு வரச் சொல்றீங்களா?! உங்க பேங்க் எனக்கு மாசத்துக்கு ஒரு டிக்கெட் கொடுக்குதுன்னு சொல்லுங்க நான் மாசந்தோறும் வந்து கார்டை யூஸ் பண்றேன் அப்படீன்னேன்.
    ///

    பயபுள்ள பதிலே சொல்லியிருக்காதே?!??!?!

    ReplyDelete
  12. அப்போ வாசலிலேயே "இங்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அக்கவுண்ட் ஒப்பன் செய்யப்படும்"னு போர்ட் எழுதி வச்சிட வேண்டியதுதானே!

    ///

    அதானே

    ReplyDelete
  13. எனக்கும் இந்த பயலுக மேல செம காண்டு
    ஒரு அதனால வேற வங்கி க்கு மாற்றியாச்சு
    இப்ப கொஞ்சம் பரவாயில்ல

    ReplyDelete
  14. // suvaiyaana suvai said...
    எனக்கு அனுபவம் இல்லை!//

    தப்பிச்சீங்க!

    ReplyDelete
  15. சாதிகா அக்கா முதல் வருகைக்கு நன்றி!

    ஆமாக்கா இந்த சர்வீஸ் சார்ஜ் கொடுமையும் நடக்குது! ஒருவாட்டி 800ரூபாய் தீட்டிட்டான் :-(

    ReplyDelete
  16. பிரபு தங்கள் முதல் வருகைக்கு நன்றி!

    அது இந்தியன் பேங்க் இல்லை சகோதரா! ஐசிஐசிஐ!

    ReplyDelete
  17. //ஏங்க நான் வச்சிருக்கறது NRI அக்கவுண்ட். உங்க பேங்கும் எனக்கு அந்த அக்கவுண்டுக்குதான் ஏடிஎம் கார்டு கொடுத்திருக்கு. அப்புறம் என்னை ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது கார்டை யூஸ் பண்ணுன்னு சொன்னா மாசந்தோறும் ஒரு தடவை அங்கயிருந்து இந்தியாவுக்கு வரச் சொல்றீங்களா?! உங்க பேங்க் எனக்கு மாசத்துக்கு ஒரு டிக்கெட் கொடுக்குதுன்னு சொல்லுங்க நான் மாசந்தோறும் வந்து கார்டை யூஸ் பண்றேன் அப்படீன்னேன்.
    ///

    பயபுள்ள பதிலே சொல்லியிருக்காதே?!??!?!///

    நாம ரொம்ப ஏதாவது கேட்டோம்னா "ஃபாரின்ல நடக்கற மாதிரி இங்க எதிர் பார்க்காதீங்க. ஒருவாட்டி வெளிய போயிட்டு வந்திட்டா ஊர் நடப்பே மறந்திடுமா" ன்னு நம்மகிட்டயே எகிறுவானுங்க :-(

    ReplyDelete