Tuesday 23 November 2010

புத்தியும் மனமும்!

அப்பா உன் கண்ணில் செய்யும்


அறுவை சிகிச்சை என்னவோ

அரைமணி நேரம்தான்

ஆபத்தும் இல்லாததுதான்

காலை சென்று மாலையில் வீடு திரும்பி விடுவாய்தான்

சுற்றமும் நட்பும் உன்னருகில் இருக்கிறதுதான்

அத்தனையும் என் புத்திக்கு தெரிகிறது

மனம் கேட்க மறுக்கிறதே அப்பா!

உன் அருகில் நானின்றி

அயல்நாட்டில் அமைதியின்றி தவிக்கிறேன்

அலைபேசியில் ஆயிரம் தைரியம் சொன்னாலும்

உன் கண்ணில் ஆயுதமிடப் போவதை எண்ணி

என் கண்ணில் நீர் வடிகிறதே

அண்ணனும் இதே மனநிலையில்தான்

செய்வதறியாது தவிக்கிறான்

விரைவில் நீ குணமடைய வேண்டுமென

பிரார்த்திக்க மட்டுமே முடிகிறது எங்களால்!

53 comments:

  1. கவிசிவா உங்களின் இந்த பகிர்வு நிச்சயம் மனதிற்கு நிம்மதியை தரும்,தங்கள் அப்பாவிற்கு கண் ஆபரேஷன் முடிந்து பூர்ண குணமடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. நன்றி ஆசியா! ரிஸ்க் இல்லாத சாதாரண கேட்ராக்ட் நீக்கம் செய்யும் லேசர் அறுவை சிகிச்சைதான். ஆனால் பக்கத்தில் இல்லாததால் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

    ReplyDelete
  3. அப்பாவிற்க்கு கண் ஆப்ரேஷன் நல்லபடியாக முடியும் கவி..உங்க நிலைமை புரிகிறது.என்ன செய்ய வெளிநாட்டில் வாழும் போது...கவலை வேண்டாம்..

    ReplyDelete
  4. Kavi.. it should be OK.. He should be alright soon.. even if you are here, your well wishes are with him.. so dont worry..

    ReplyDelete
  5. அவர் சீக்கிரம் குணம் அடைந்து விடுவார்

    ReplyDelete
  6. அப்பா விரைவில் பூரண குணமாகி வீடு திரும்பிடுவார் கவலை வேண்டாம்.

    ReplyDelete
  7. என்னுடைய பிரார்த்தனைகளும்

    ReplyDelete
  8. வெளி நாட்டில் வசிப்பதில் இதுபோன்ற மன உளைச்சல்களைத்தவிற்கவே முடியாதும்மா.
    அப்பா நல்லபடியாக குணமாகி விடுவார்கள்.

    ReplyDelete
  9. கவி என்னங்க நீங்க ரொம்ப தைரியசாலி பொண்ணாச்சே. காடராக்டுக்குப்போயி இப்படி கலங்கலாமா. அப்பா நல்லபடியா வெற்றிகரமா
    ஆபரேஷன் முடிந்து வீடு வருவாங்க. be, haappy.

    ReplyDelete
  10. ஒன்றும் பயமில்லை தைரியமா இருங்க!! எங்கள் எல்லோருடைய பிரார்த்தனை பலமும் உண்டு கவி!!

    ReplyDelete
  11. நன்றி மேனகா! அப்போ இருந்த மனநிலையில் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்போ சரியாயிட்டேன் :)

    ReplyDelete
  12. நன்றி சந்தூ! அப்பாதான் எனக்கு தைரியம் சொல்றாங்க :)

    ReplyDelete
  13. நன்றி சௌந்தர்!

    ReplyDelete
  14. நன்றி வானதி!

    ReplyDelete
  15. நன்றி ஜெய்லானி!

    ReplyDelete
  16. நன்றி லெக்ஷ்மிம்மா! உண்மைதான். வெளிநாட்டு வாழ்க்கையின் வலிகளில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  17. நன்றி கோமு! தைரியம் எல்லாம் பாசத்தின் முன் தோற்று விடுகிறது :).
    இப்போ சரியாயிட்டேன்பா :)

    ReplyDelete
  18. நன்றி அப்துல்காதர்! பயம் இப்போ போயிடுச்சு :)

    ReplyDelete
  19. நல்லபடியாக அறுவைசிகிச்சை முடியும் கவலைகள் என்பதை விட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது பாதி நிம்மதி! அதான் அப்பாவே தைரியம் சொல்றாரே ! டோண்ட் வொர்ரி..

    ReplyDelete
  20. சமீபத்தில் என் அம்மாவுக்கும் காட்ராக்ட் ஆபரேஷன் நடந்தது.உங்க உணர்வுகள் புரிகிறது கவி.அங்கே ஆபரேஷன் முடியும்வரை நமக்கு இங்கே நிலைகொள்ளாது..அதுவும் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து சொன்ன நேரத்திற்கும் தாமதமானதும் இன்னும் டென்ஷன் ஏறிட்டது.

    எல்லாம் சரியாகிடும்.உங்க அப்பாவும் விரைவில் சரியாகிடுவார்,டோன்ட் வொரி!:)

    ReplyDelete
  21. பயம் இல்லாமல் தைரியமாக இருங்க...வெளிநாடுகளில் இருக்கின்ற அனைவருக்கும் ஏற்படும் சூழ்நிலை இது..என்ன செய்ய முடியும்...அப்பா சீக்கிரம் குணமாகிவிடுவார்...

    ReplyDelete
  22. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கீழே உள்ள லிங்கில் பார்க்க

    http://kuttisuvarkkam.blogspot.com/2010/11/blog-post_23.html

    ReplyDelete
  23. நன்றி வசந்த்!

    ReplyDelete
  24. நன்றி மஹி! ஆமாம் இன்னிக்கு மட்டும் பத்து தடவை ஃபோன் பண்ணியாச்சு :)

    ReplyDelete
  25. அப்பா சர்ஜரி முடிந்து சுகமாக இருக்கிறார். இப்பதான் பேசினேன். இரவு வீட்டுக்கு போயிடுவாங்க.
    அப்பாவுக்காக பிரார்த்தித்த, தைரியம் சொன்ன அத்தனை நட்புகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  26. விரைவில் தொடர்பதிவில் பங்கு கொள்கிறேன் ஆமினா!

    ReplyDelete
  27. புரியுது கவி..ஒரு பல்லை பறிக்கிறதை விட எளிமையா இருக்கும் .உங்களுக்கும் தெரியும்..விரைவில் அப்பா குணமாக வேண்டிக்கிறேன்

    ReplyDelete
  28. கவி அப்பாக்கு பரிபூரண குணம் பெற என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  29. நன்றி தளிகா! அப்பா இப்போது நலம் :)

    ReplyDelete
  30. மனமார்ந்த நன்றி ஆமினா!

    ReplyDelete
  31. லேட் ஆ வந்துட்டேனோ)) மன்னிச்சு...மன்னிச்சு...அப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தபிறகு ப்ளாக் கில் போஸ்ட் போட சொன்னேன்னு நான் சொன்னதா சொல்றிங்க...))))

    ReplyDelete
  32. மன்னிச்சோம் மன்னிச்சோம் :). அப்பாகிட்ட சொல்றேன் ஆனந்தி. பாவம் ரொம்ப போரடிச்சுப் போய் உட்கார்ந்திருகாங்க.
    டிசம்பரில் இருந்து அப்பா ரொம்ப பிசி. பின்ன ஒரே பொண்ணும் மாப்பிள்ளையும் வராங்கன்னா பிசி ஆயிட மாட்டாங்களா :)

    ReplyDelete
  33. எந்த குழந்தைக்குத்தான் அப்பா மேல் பாசம் இல்லாமல் இருக்கும்?! பெற்றோர் மீது பாசமில்லாதவர்கள் மனிதர்களே இல்லை.

    நன்றி தயாநிதி! பெயரைப் பார்த்தாதான் பயமா இருக்கு :)

    ReplyDelete
  34. கவி அப்பா நலமாக இருப்பது பற்றி சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க பதிவு போட்ட நேரத்தில் சில எமெர்ஜென்சி வேலைகள்/தலைவலிகள் வந்துவிட்டது. விரைவில் குணமடைந்து வலைபூவுக்கு வர வேண்டும் அங்கிள்!

    ReplyDelete
  35. நன்றி இலா! அப்பா ஜனவரியில் இருந்து ரெகுலரா வலைப்பூ பக்கம் வருவாங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. கவி நான் இப்பதானுங்கப்ளாக்பத்தி கோமுமேடம்சொல்லித்தெரிஞ்சுகிட்டேன். நான் chitra.m அறுசுவைத்தோழிதான். நம்ம அறுசுவைத்தோழிகளில் பலரும் ப்ளாக்கெல்லாமெழுதி
    கலக்குரீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  37. கவி நான் uma.k அறுசுவைத்தோழிதான். கோமுமேடம் சொன்னாங்க உங்க ப்ளாக் பத்தி. அதுதான் உடனே வந்துட்டேன். நல்லாஇருக்கு உங்க
    ப்ளாக்ல நீங்க எழுதர விஷயங்கள்.

    ReplyDelete
  38. வாங்க சித்ரா! தமிழில் எழுத அடித்தளம் செய்தது அறுசுவைதான்.

    தொடர்ந்து வாங்க சித்ரா நன்றி!

    ReplyDelete
  39. வாங்க உமா! ரொம்ப நன்றிப்பா! தொடர்ந்து வாங்க!

    என் பிளாகை உங்களுக்கு அறிமுகப்படுத்திய கோமுவுக்கும் என் நன்றிகள் :)

    ReplyDelete
  40. http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்.

    ReplyDelete
  41. கவிசிவா! அப்பா இப்போது நலமாக இருப்பாரென்று நினைக்கிறேன். நீங்களும் கவலை நீங்கி மன நிம்மதியுடன் இருப்பீர்களென நம்புகிறேன். வெளி நாட்டு வாழ்க்கையில் இந்த சோகம், தவிப்பு, கவலை இவையெல்லாமே தவிர்க்க முடியாத விஷயங்கள்! தைரியமாக இருங்கள்!!

    ReplyDelete
  42. பாசத்தின் வெளிப்பாடாக அருமையான கவிதை..ஆதரவுடன் தைரியம் தந்து தேற்றும் அழகான பின்னூட்டங்கள்..அருமை..

    //அப்பா சர்ஜரி முடிந்து சுகமாக இருக்கிறார்.//
    மகிழ்ச்சி

    ReplyDelete
  43. நன்றி ஆசியா! இதோ வருகிறே விருதை பெற்றுக் கொள்ள :)

    ReplyDelete
  44. நன்றி மனோம்மா! அப்பா நலமாக இருக்காங்க.

    ReplyDelete
  45. முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஹரிஸ்!

    //ஆதரவுடன் தைரியம் தந்து தேற்றும் அழகான பின்னூட்டங்கள்//

    உண்மை ஹரிஸ் மிகவும் ஆறுதலான தைரியமூட்டும் பின்னூட்டங்கள். தோழமைகள் அத்தனை பேருக்கும் மீண்டும் எனது நன்றிகள்

    ReplyDelete
  46. கவி புதிய வலை பூ டிசைன் நல்ல இருக்கு
    அப்பாவுக்கு இது எல்லோருக்கும் இந்த வயதில் வருவது தான் கவி, கவலை படாதீர்கள், அது சீக்கிரம் குணமாகிடும்.

    வெளிச்சத்தில் செல்லாமல் கண்ணுக்கு கிளாஸ் போட்டு கொள்ல சொல்லுங்கள்
    தலைக்கு தண்ணீர் ஊற்ற கூடாது என்பார்கள் டாக்டர் களின் ஆலோசனை படி நடக்க சொல்லுஙக்ல்.
    என்ன் தான் இருந்தாலும் அப்பா, அம்மாவுகு ஒன்று என்றால் நமக்கு மனசு கேட்காது தான்.

    ReplyDelete
  47. கவி,உங்கள் தந்தையின் கண் அறுவை சிகிச்சை நல்ல்ல படி முடிந்து பூரண நலம் கிடைக்க எனது பிரார்தனைகள்

    ReplyDelete
  48. நன்றி ஜலீலாக்கா! அப்பா நல்லா இருக்காங்க. நேற்றுதான் மீண்டும் செக்கப் போயிட்டு வந்தாங்க. பிரச்சினை ஏதும் இல்லை.

    ReplyDelete
  49. நன்றி சாதிகா அக்கா!

    ReplyDelete
  50. உங்க உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுதுப்பா. என்னோட அம்மாவுக்கும் ஒண்ணரை வருஷம் முன்னாடி முதுகெலும்புல ஆப்பரேஷன் ஆச்சு. உள்நாட்டுல இருந்தும் போயி கவனிச்சுக்கமுடியாத சூழ்நிலை. என்ன செய்ய?????. சில சந்தர்ப்பங்களுக்கு உள்,வெளிநாடு பிரச்சினை இல்லை. எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு.

    ReplyDelete
  51. என்ன செய்யறது சாரல் மேடம் இன்றைய காலகட்டத்தின் சாபங்களில் இதுவும் ஒன்று! பெற்றவர்களை தேவைப்படும் நேரங்களில் கூட பக்கத்தில் இருந்து பார்த்துக்க முடியலங்கறது ரொம்பவே கஷ்டம் இருவருக்குமே!

    ReplyDelete