Thursday 18 November 2010

சந்தேகமுங்கோ!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஹலோ எங்க ஓடறீங்க? சத்தியமா இது ஜெய்லானி கேட்கற மாதிரி சந்தேகம் இல்லை.  நம்புங்க அட நம்புங்கப்பா? பாருங்க ஜெய் உங்க சந்தேகங்கள் நம்ப மக்களை எம்பூட்டு தூரம் பாதிச்சிருக்குன்னு :)




என்ன பிரச்சினைன்னாலும் நம்ப எதிர்க்கட்சி எம்பி க்களும் எம்எல்ஏ க்களும் உடனே நாடாளுமன்றத்தையும் சட்டசபையையும் கத்தி கூச்சலிட்டு குடுமிப்பிடி சண்டையிட்டு ஸ்தம்பிக்க வைத்து ஒத்தி வச்சுடறாங்களே! அதனால அந்த பிரச்சினைக்கு என்னிக்காவது ஏதாச்சும் உருப்படியான முடிவு வந்திருக்கா?

அப்புறம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிங்கற பேர்ல சபையை கூட்டி உடனே ஒத்தி வைக்கறது எல்லாம் ஓவரா இல்லை! இதுவா அஞ்சலி செலுத்தும் லட்சணம்? ஒரு நிமிடம் கண்மூடி மௌனமாக அஞ்சலி தெரிவித்து விட்டு அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் என்ன?

ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடணும்னா கோடிக்கணக்கில் செலவாகுதாமே!  இப்படி ஒத்தி வைக்கறதுனால ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டறது யார்? இளிச்சவாய் மக்கள்தானா :(.

இவங்களுக்கு எல்லாம் சபை கூடும் நாளில் அகவிலைப்படி அந்தப்படி இந்தப்படின்னு படியளக்கறாங்களாமே அந்த படிகள் இப்படி ஒத்தி வைக்கப்படும் நாளுக்கும் சேர்த்துதானே கொடுக்கப் படுது?! யார் அப்பன் வீட்டுப் பணம் இப்படி பணியே செய்யாதவர்களுக்கு படி என்ற பெயரில் வீணடிக்கப் படுகிறது?

திடீர்னு எனக்கு ஏன் இந்த சந்தேகம்னு பார்க்கறீங்களா? நம்ப மாண்புமிகு(குறை) முன்னாள் அமைச்சர் ராசா விவகாரதில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. ஏதாச்சும் பயன் இருக்கா :(. தெரிஞ்சவங்க தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.

43 comments:

  1. ஹ ஹ...படிச்சு சிரிச்சுட்டேன் கவி...அட்டாகாசமான சந்தேகம்...நம்ம legislature ஐ அதிகமா நோண்ட புடாது...ஏனால் இந்த தோரணை எல்லாம் இருந்தால் தான் நம்ம நாடு னு அடையாளம் பார்த்துக்க முடியும் மத்தவங்களுக்கு....இதெல்லாம் எதாவது இந்தியன் பீனல் ரைட் ஸ் இல் இருக்கும் கவி...இதுவும் இங்கிலீஷ் காரன் ஏற்படுத்திட்டு போன ஒரு அமைப்பை விடாபிடியா பிடிச்சுட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்...rights லா இன்னும் பழமை தனமா வச்சுட்டு இருக்கனுங்க..அதான் அஞ்சலிக்கு கூட லீவ் விடுறானுங்க...இதெல்லாம் தூர இருந்து பார்த்துட்டு கடுப்பாகி ப்ளாக் கில் எழுதி சமாதானம் ஆயக்கலாம் கவி...வேற என்ன நம்மாலே செய்ய முடியும்...?? நல்ல யோசனை...என் பாராட்டுக்கள் கவிக்கு..!!!

    ReplyDelete
  2. ஓஹ் அப்போ இதெல்லாம் நம்ப மக்கள் தப்பில்லையா ஆனந்தி! இந்த இங்கிலீஷ் காரன் பண்ணின சதிதானா இது! இது தெரியாம நம்ப ஆளுங்கள திட்டிப்புட்டேனே :(

    நன்றி ஆனந்தி கருத்துக்கு :)

    என்ன பண்ண புலம்பத்தான் முடியுது

    ReplyDelete
  3. ஹா..ஹா.. இப்பதான் தனிமையில யோசனை பண்ண ஆரம்பிச்சி இருக்கீங்கப் போல வாழ்த்துக்கள்..!! தனிமை-இனிமை-கொடுமை..!!

    ReplyDelete
  4. என்னைக்கு பார்லிமெண்டில இளைஞர் பட்டாளம் போகுதோ அன்னைக்கு இதுக்கு விடிவு காலம் . அது வரையில இப்படிதான் இருக்கும் மாத்த முடியாது :-))

    ReplyDelete
  5. //ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடணும்னா கோடிக்கணக்கில் செலவாகுதாமே! //

    டெலி கான்ஃபரன்ஸ் போட்டா செலவே இல்லையே

    ReplyDelete
  6. //ஹா..ஹா.. இப்பதான் தனிமையில யோசனை பண்ண ஆரம்பிச்சி இருக்கீங்கப் போல வாழ்த்துக்கள்..!! //

    அவ்வ்வ்வ்

    //என்னைக்கு பார்லிமெண்டில இளைஞர் பட்டாளம் போகுதோ அன்னைக்கு இதுக்கு விடிவு காலம் . அது வரையில இப்படிதான் இருக்கும் மாத்த முடியாது :-)) //

    இளைஞர் அணித் தலைவரோட வயசு என்னானு தெரியும்ல!

    //டெலி கான்ஃபரன்ஸ் போட்டா செலவே இல்லையே//

    இப்போ நாற்காலியை உடைக்கறானுங்க. டெலி கான்ஃப்ரென்சில் கேமராவை உடைப்பானுங்க :(

    கருத்துக்கு நன்றி ஜெய்லானி!

    ReplyDelete
  7. //என்னைக்கு பார்லிமெண்டில இளைஞர் பட்டாளம் போகுதோ அன்னைக்கு இதுக்கு விடிவு காலம் . அது வரையில இப்படிதான் இருக்கும் மாத்த முடியாது :-))// ரீப்பீட்..

    ReplyDelete
  8. //இளைஞர் அணித் தலைவரோட வயசு என்னானு தெரியும்ல!//யம்மா..குசும்பு குசும்பு...

    ReplyDelete
  9. //அப்புறம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிங்கற பேர்ல சபையை கூட்டி உடனே ஒத்தி வைக்கறது எல்லாம் ஓவரா இல்லை! இதுவா அஞ்சலி செலுத்தும் லட்சணம்? ஒரு நிமிடம் கண்மூடி மௌனமாக அஞ்சலி தெரிவித்து விட்டு அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் என்ன?//

    நினைக்கும்போது நல்லாத்தான் இருக்கு.. ஆமா!!ஏன் அடிக்கடி சண்டை நடக்குது?? ஒருவேளை வாஸ்து சரியில்லியோ :-)))))))))

    ReplyDelete
  10. @சாதிகா

    உண்மையை சொன்னா குசும்பா! ஒரு பச்சப்புள்ளைய உண்மை பேச விட மாட்டேங்கறாங்களே :)!

    நன்றி சாதிகா அக்கா!

    ReplyDelete
  11. @அமைதிச்சாரல்

    வாஸ்துதான் சரியில்லையோ :(. சத்தம் போட்டு சொல்லவும் முடியல. வாஸ்து படி மாற்றங்கள் செய்யறோம்னு அதுலயும் கோடிக்கணக்கில் சுருட்டிடப் போறானுங்க :(. அப்புறம் அதுக்கும் அவையை ஒத்தி வைப்பானுங்க. இது ஒரு தொடர்கதை!

    நன்றி சாரல் மேடம்!

    ReplyDelete
  12. உண்மை தான் கவி...நிறைய விஷயம் வெட்டியா மரபு வழின்னு வெள்ளைக்காரனுங்க வச்சுட்டு போனதை மாத்தாமல் பிடிச்சு தொங்கிட்டு இருக்கோம்...உதாரணமா இன்னும் வெயில் கொளுத்தும் நம்ம ஊரில் வக்கீல் ஐயாக்கள் கருப்பு கோர்ட் மாட்டிகிட்டு பிலிம் காமிக்கிறது...இந்தியன் Act னு பேருக்கு இருக்கிற நிறைய குப்பைகளை இன்னும் ஓல்ட் தலைவர்கள் பிடிச்சுட்டு இருக்கிறது தான் நம்ம நாடு இன்னும் உருபடமால் இருக்கு...நிறைய பார்மாலிட்டி பதவிகளை காலி பண்ணாலே போதும் கவி...கொஞ்சம் இந்தியா பிரெஷ் ஆகும்...அதுவும் இந்த ராஜ்யசபா வே எதுக்குன்னு எல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்திருக்கேன்..கௌரவ பதவிகள் னாலே யாருக்கு பிரயோசனம்னு எனக்கு தெரில...துணை குடியரசு தலைவர் பதவி பெரிய டம்மி பீஸ் பதவி...எதுக்கு இந்த துணை பாராளுமன்றம்..Legislature Act படி புதிதாய் விவாதிக்கப்படும் எந்த நலத்திட்டங்களும் லோக் சபாவில் இருந்து ராஜ்ய சபைக்கு வந்துட்டு தான் டம்மியா ஜனாதிபதி கையெழுத்துக்கு போகும்...எதுக்கு இந்த பார்மல் இன்னும் னு தெரில...நோண்ட நோண்ட எரிச்சல் தான் வரும் கவி....

    ReplyDelete
  13. வெள்ளைக்கார நீதிபதிகள் தலையில இருந்த மாதிரியான விக் போடாம இருக்காங்களே அது வரைக்கும் தப்பிச்சாரு நீதிபதி!
    ஹி ஹி ராஜ்யசபா எதுக்குன்னு தெரியலையா ஆனந்தி! எலெக்ஷன்ல நின்னு ஜெயிக்க முடியாதவங்களை எல்லாம் எம்பி ஆக்கவும் அமைச்சராக்கவும்தான் :(. போதாக்குறைக்கு தமிழ்நாட்டுல மேலவை வேற வரப்போகுகுதாம் (வந்திடுச்சா)

    ReplyDelete
  14. இந்தியன் பாட்டி கவி வாழ்க... இந்தியன் தாத்தாவுக்கு ஆப்போசிட் இந்தியன் பாட்டிதானே...:))


    கேள்வியெல்லாம் லாஜீக்காத்தான் இருக்கு... யாருக்காவது இந்தகேள்வியெல்லாம் பார்சல் அனுப்பிவைங்க...:))

    ReplyDelete
  15. ஆனந்தி வக்கீல் பத்திச் சொன்னீங்களே ?! அதே மாதிரி தான் ஸ்கூல் புள்ளைங்க வாழ்க்கை. அங்கே குளிர் அதிகமா இருக்குறதுனால சூ,சாக்ஸ்ன்னு அழையுதுக. இங்கேயும் அதான் நாகரிகம்னு இன்னும் விடாப்ப்பிடியா பிடுச்சுட்டு நிக்குதுக..

    கவி என்ன திடீர்ன்னு இப்படிலாம் சந்தேகம். ஒரு ஆள் கேட்ட சந்தேகத்துக்கே தலமுடிய புடிச்சுட்டு இருக்கேன். அடுத்து நீங்க ஆரம்பிச்சுட்டீங்களா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  16. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். குடியரசு தலைவர்லாம் சும்மா டம்மி பீஸ் தானே?! அப்ப அந்த பொம்மைய ஏன் இன்னும் வச்சுட்டு இருக்காங்க?! தேவையில்லாம சம்பளம் வேற. பாவம் அந்தம்மா இந்த புண்ணையத்துலையாவது நாடு நாடா சுத்தட்டும் :)

    ReplyDelete
  17. //என்ன பிரச்சினைன்னாலும் நம்ப எதிர்க்கட்சி எம்பி க்களும் எம்எல்ஏ க்களும் உடனே நாடாளுமன்றத்தையும் சட்டசபையையும் கத்தி கூச்சலிட்டு குடுமிப்பிடி சண்டையிட்டு ஸ்தம்பிக்க வைத்து ஒத்தி வச்சுடறாங்களே! அதனால அந்த பிரச்சினைக்கு என்னிக்காவது ஏதாச்சும் உருப்படியான முடிவு வந்திருக்கா?//

    மறைமுகமா பணப்பரிமாற்றம் நடந்த பின் அமைதியாகிடுவாங்க பார்த்ததில்லையா? பணம்தான் முடிவு...

    ReplyDelete
  18. //அப்புறம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிங்கற பேர்ல சபையை கூட்டி உடனே ஒத்தி வைக்கறது எல்லாம் ஓவரா இல்லை! இதுவா அஞ்சலி செலுத்தும் லட்சணம்? ஒரு நிமிடம் கண்மூடி மௌனமாக அஞ்சலி தெரிவித்து விட்டு அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் என்ன?//

    லீவுன்னாலே எல்லாருக்கும் சந்தோஷம்தானே இதில் எம்பிக்கள் மட்டும் விதிவிலக்கா? :(

    ReplyDelete
  19. //நாஞ்சில் பிரதாப்™ said...
    இந்தியன் பாட்டி கவி வாழ்க... இந்தியன் தாத்தாவுக்கு ஆப்போசிட் இந்தியன் பாட்டிதானே...:))//

    அடப்பாவிங்களா ஒரு நிமிஷத்துல என்னைய பாட்டி ஆக்கிட்டாங்களே அவ்வ்வ்வ்வ்வ்


    //கேள்வியெல்லாம் லாஜீக்காத்தான் இருக்கு... யாருக்காவது இந்தகேள்வியெல்லாம் பார்சல் அனுப்பிவைங்க//

    யாருக்கு அனுப்ப! இதே பாவிங்களுக்குத்தானே அனுப்ப வேண்டியிருக்கு :(.

    நன்றி பிரதாப்!

    ReplyDelete
  20. //ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடணும்னா கோடிக்கணக்கில் செலவாகுதாமே! இப்படி ஒத்தி வைக்கறதுனால ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டறது யார்? இளிச்சவாய் மக்கள்தானா :(.//

    செஞ்ச பாவத்துக்குரிய பலனை அனுபவிக்கணும்ல!

    ReplyDelete
  21. //இவங்களுக்கு எல்லாம் சபை கூடும் நாளில் அகவிலைப்படி அந்தப்படி இந்தப்படின்னு படியளக்கறாங்களாமே அந்த படிகள் இப்படி ஒத்தி வைக்கப்படும் நாளுக்கும் சேர்த்துதானே கொடுக்கப் படுது?! யார் அப்பன் வீட்டுப் பணம் இப்படி பணியே செய்யாதவர்களுக்கு படி என்ற பெயரில் வீணடிக்கப் படுகிறது?
    //

    படிக்காசு குறைஞ்சா கவலைப்படற ஆளுங்களா இவங்க?

    ReplyDelete
  22. //திடீர்னு எனக்கு ஏன் இந்த சந்தேகம்னு பார்க்கறீங்களா? நம்ப மாண்புமிகு(குறை) முன்னாள் அமைச்சர் ராசா விவகாரதில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. ஏதாச்சும் பயன் இருக்கா :(//

    "கை" மேல பலன் இருக்கு

    ReplyDelete
  23. @ஆமினா
    ஷூவும் சாக்சும் போட வேண்டாம்னு சொல்ற ஸ்கூல் நல்ல ஸ்கூல் இல்லேன்னுல்ல நம்ப மக்கள் நினைச்சுக்கிட்டு இருக்காங்க :(

    //எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். குடியரசு தலைவர்லாம் சும்மா டம்மி பீஸ் தானே?! அப்ப அந்த பொம்மைய ஏன் இன்னும் வச்சுட்டு இருக்காங்க?! தேவையில்லாம சம்பளம் வேற. பாவம் அந்தம்மா இந்த புண்ணையத்துலையாவது நாடு நாடா சுத்தட்டும் :) //

    என்ன ஆமி இப்படி சொல்லிட்டீங்க அது ரொம்ப வசதியான முதியோர் இல்லம்!

    நன்றி ஆமினா!

    ReplyDelete
  24. @வசந்த்
    //மறைமுகமா பணப்பரிமாற்றம் நடந்த பின் அமைதியாகிடுவாங்க பார்த்ததில்லையா? பணம்தான் முடிவு...//

    பார்த்தது இல்லையே! வீடியோ லிங்க் இருக்கா :)

    ReplyDelete
  25. //லீவுன்னாலே எல்லாருக்கும் சந்தோஷம்தானே இதில் எம்பிக்கள் மட்டும் விதிவிலக்கா? :( //

    அது சரி :(

    ReplyDelete
  26. //செஞ்ச பாவத்துக்குரிய பலனை அனுபவிக்கணும்ல! //

    காசு வாங்கி ஓட்டு போட்டாங்க இல்ல அனுபவிக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  27. //"கை" மேல பலன் இருக்கு //

    புரிஞ்சுடுச்சு :)

    நன்றி வசந்த்!

    ReplyDelete
  28. கவி, ஜெய்லானியை இப்படி காமெடி பீசாகிட்டீங்களே...

    ReplyDelete
  29. கவி, வீட்டுக்கு ஆட்டோ வந்திருச்சா ?? இல்லாட்டி விரைவில் வரும்.. ஒட்டுமொத்த அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும்.

    ReplyDelete
  30. நன்றி மேனகா! உண்மையை எல்லாம் இப்படி சத்தம் போட்டு சொல்லக் கூடாது :).

    ReplyDelete
  31. நன்றி எல்கே! எங்க வீட்டுக்கு ஆட்டோ எல்லாம் அனுப்ப முடியாது. கப்பல்தான் ஒரே வழி :)!

    ReplyDelete
  32. கவி எதைப்பத்தியெல்லாம், எப்படில்லாம் யோசிக்கிரீங்கப்பா.

    ReplyDelete
  33. நன்றி கோமு! யோசிக்கறது எங்க ஒரே புலம்பல்தான் :(

    ReplyDelete
  34. //என்ன ஆமி இப்படி சொல்லிட்டீங்க அது ரொம்ப வசதியான முதியோர் இல்லம்!//

    குடியரசு தலைவர் பதவிக்கு புது அர்த்தம் கொடுத்த கவிசிவா வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    ReplyDelete
  35. அய்யா அப்துல்கலாம் காலத்தில் மட்டும்தான் அது குடியரசுத் தலைவர் மாளிகை. மற்றபடி அது ஆடம்பர முதியோர் இல்லம்தான் :).

    ReplyDelete
  36. கவி சிந்திக்க வைத்த பதிவு.

    ReplyDelete
  37. நன்றி ஆசியா!

    ReplyDelete
  38. //ஜெய்லானி said...

    //ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடணும்னா கோடிக்கணக்கில் செலவாகுதாமே! //

    டெலி கான்ஃபரன்ஸ் போட்டா செலவே இல்லையே//

    வீட்ல இருந்துக்கிட்டே படியெல்லாம் கேப்பாங்க நம்ம பழம்பெரும் அரசியல்வாதிகள் :)

    ReplyDelete
  39. நன்றி சுந்தரா!

    அவனுங்க பழம்பெரும் அரசியல்வாதிகள் இல்லை பணம்பெறும் அரசியல்வியாதிகள்!

    ReplyDelete
  40. அதுரொம்ப வசதியான முதியோர் இல்லம். ஆஹா,
    சூப்பர்.

    ReplyDelete
  41. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லெக்ஷ்மி அம்மா!

    ReplyDelete
  42. mmm நாமெல்லாம் பொலம்பி என்ன செய்ய

    ReplyDelete
  43. புலம்பி எதுவும் ஆகப்போவதில்லைதான். நாம் விடும் பெருமூச்சு எல்லாம் சேர்ந்து புயலாகி எம் தேசம் சீரடையாதாங்கற எக்கம்தான் ஜலீலாக்கா!

    ஊழல் மிகுந்த இந்தோனேஷியாவில் கூட இப்போ நல்லதொரு தலைமையின் கீழ் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் குறைந்து வருகிறது. ஊழல் பெருந்தலைகள் எல்லாம் இப்போ கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க எங்க ஊர் மேயர் உட்பட. அப்படி ஏதும் நல்லது நடக்காதான்னு ஏங்கிகிட்டு இருக்கேன் :(

    ReplyDelete