Tuesday 9 November 2010

கவிசிவானந்தாவின் தனிமை இனிமை கொடுமை-வாழ்வியல் போதனைகள் :)

பெரும்பாலானவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி "எப்படி தனியா இருக்கறீங்க கஷ்டமா இல்லையா?". தனியா இருக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன? இவங்க அகராதியில் காலையில் ரங்ஸ் அலுவலகம் சென்றதிலிருந்து இரவு திரும்ப வரும்வரை வீட்டில் இருப்பதுதான் தனிமை, தனியாக இருப்பது எல்லாம்.


நம்ப அம்மாவும் இப்படித்தானே இருந்தாங்க. அவங்களுக்கு இல்லாதிருந்த தனிமை உணர்வு இப்போ எப்படி வருது? வெளிநாட்டில் இருப்பதாலா?! நானும் வெளிநாட்டில்தான் இருக்கிறேன். ஆனா எனக்குத் தனிமை உணர்வு இல்லையே! அது ஏன்?!

யோசிச்சுப் பார்த்தா எனக்கு புரிஞ்சது இதுதான். மனசு... இதுதான் தனிமை உணர்வுக்கும் அது இல்லாமல் இருப்பதற்கும் ஒரே காரணம்.

திருமணமாகி வெளிநாடு வரும் பல பெண்களும் சந்திப்பதுதான் இந்த பிரச்சினை. கணவர் துணையின்றி வெளியில் செல்ல முடியாது. கணவர் வரும் வரை வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டும். இவை ஒரு வித மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது தனிமையின் இனிமையும் கொடுமையும்.

எந்த விஷயத்தையும் பாசிட்டிவாகவும் பார்க்கலாம். நெகடிவாகவும் பார்க்கலாம். திருமணமான புதிதில் ஏற்படும் இந்த தனிமையை எப்படி பாசிட்டிவா பார்க்கலாம்?  கணவன் மனைவிக்கிடையே மூன்றாவது மனிதர் இடையூறு இல்லாமல் இருக்கலாம். இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்க இந்த தனிமையை பயன் படுத்திக் கொள்ள முடியும். கணவர் வரும் நேரத்தில் புன்னகையுடன் எதிர்கொண்டு இனிமையாக பேசி களித்து சந்தோஷமாக இருந்தால் அதுவே அடுத்த நாளுக்கான புத்துணர்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்குமே!

இதையே எப்படி நெகடிவாக அணுகலாம்?  பகல் எல்லாம் நான் தனியாக இருக்கிறேன். கஷ்டப் படுகிறேன்னு கணவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் மூக்கைச் சிந்தினால் முதலில் கணவர் பரிதாபப் பட்டு நம்மை வெளியில் அழைத்து சென்று சமாதானப் படுத்த முயன்றாலும் இது தொடர்கதையானால் அவருக்கே சலிப்பு தட்டி விடும். தாம்பத்தியத்தையே அது பாதிக்கும். தேவையா இது?

இப்போதெல்லாம் திருமண நிச்சயதாம்பூலத்திற்கும் திருமணத்திற்கும் இடையே குறைந்தது ஆறு மாத காலம் இடைவெளி இருக்கிறது. அந்த காலத்தில் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்போதே அந்த ஆண் அவர் இருக்கும் ஊரைப் பற்றி அவருடைய வேலையைப் பற்றி வேலை நேரத்தைப் பற்றி பெண்ணிடம் விளக்கி விட்டால் அந்த பெண்ணாலும் புதிய வாழ்க்கையை எதிர்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். (திருமணம் நிச்சயிக்கப்பட்ட, நிச்சயிக்கப்பட இருக்கும் மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ளவும் :D)

என்னதான் மனதைத் தயார்ப் படுத்தினாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். தனிமையை வெல்ல இணையம் ஒரு வரப்பிரசாதம். மெல்லிய இசையை வீட்டில் எப்போதும் ஒலிக்க விடலாம். நமக்குப் பிடித்த ஹாபியை தொடரலாம். படிக்க நினைத்து முடியாது போன விஷயங்களைப் புதிதாக கற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில் நமக்குப் பிடித்த விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நம்மை எப்போதும் எங்கேஜ்டாகவே வைத்திருந்தால் தனிமைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க என்னை மாதிரி :-)).

என்னைப் பொறுத்த வரை தனிமை எனக்கு கொடுமையாக இல்லை. இனிமையாகவே இருக்கிறது :-). ஆரம்பத்தில் கொடுமையாக இருந்தது உண்மை. ஆனால் எதிர்பார்ப்புகளைத் தூர எறிந்து விட்டு யதார்த்தத்தை மனம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததும் இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. சந்தோஷமாகவே இருக்கிறோம்.

எனக்கு மற்றவர்கள் எல்லாம் எப்படி தனியா இருக்கீங்கன்னு கேட்கும் போதுதான் நாம் தனியாத்தான் இருக்கோமோ அப்படீன்னு தோணுது :(. ஆனால் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். என் மனதுக்குத் தெரியும். என் சொந்தங்கள் நட்புகள் தொலைவில் இருந்தாலும் எனக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்று என் மனதுக்கு நல்லாவே தெரியும். நான் தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை :-).

தனிமையை தூக்கி எறியுங்க சந்தோஷமா இருங்க. எனக்கு அது இல்லையே இது இல்லையேன்னு இல்லாததை நினைத்து இருப்பதைத் தொலைக்காமல் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவேது :-)
 
அன்புடன்,
கவிசிவானந்தா :-)

48 comments:

  1. அருமையா இருக்கு கவிசிவா....ஆமாம் எப்படிங்க இப்படி!!!

    எனக்கும் தனியா இருக்க ரொம்ப பிடிக்கும் :-)

    ReplyDelete
  2. வாங்க ஹர்ஷினி அம்மா! ரொம்ப நாளா ஆளையே காணோம் :)

    எனக்குத் தனிமையோ இல்லை எல்லோருடனும் சேர்ந்து இருப்பதோ எல்லாமே பிடிக்கும். மொத்தத்தில் மனசு சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான் :)

    நன்றி ஹர்ஷினி அம்மா!

    ReplyDelete
  3. உண்மை கவி..எனக்கும் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்தது.இப்போ தனியாக இருப்பது தான் பிடிக்குது..நேரமும் பத்தவில்லை என்றே சொல்லும் அளவிற்க்கு இருக்கு...

    ReplyDelete
  4. நீங்க சொன்ன குறிப்புகளை குறித்து வைத்துக்கொண்டேன்...:))

    ஆமா...நீங்க ஏன் ஒரு புக் வெளியிடக்கூடாது...:))

    ReplyDelete
  5. கவி பதிவு ரொம்ப நல்லா இருக்கு. எதுபத்தி எழுதினாலும் ரொம்ப சுவாரஸ்யமா எழ்த்ரீங்க.

    ReplyDelete
  6. கவி ரொம்ப சுவாரஸ்யமாக எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  7. //எதிர்பார்ப்புகளைத் தூர எறிந்து விட்டு யதார்த்தத்தை மனம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததும் இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. சந்தோஷமாகவே இருக்கிறோம். //


    இது ஒரு மனுஷனுக்கு எப்போ புரியுதோ மனதில ஒரு வித அமைதி எப்பவுமே இருக்கும் .சரியா சொல்லி இருக்கிங்க ..!! பாஸ் மார்க்

    ReplyDelete
  8. சூப்பர் கவி! உங்க புலித்தோல் ஆசனத்தில எனக்கு ஒரு இடம் தாங்க ஒரு ஓரமா சின்னதா தண்ணி ஜக்கு கைல வச்சிட்டு பிழைச்சிப்பேன்... எனக்கு இப்படி மக்கள்ஸ் பாத்தா அட்வைஸ் பண்ணுவேன் இது செய்யுங்க அது செய்யுங்கன்னு அவங்க ரொம்ப அரிவாளித் தனமா எல்லாத்துக்கும் ஒரு எதிர் பதில் வச்சிருப்பாங்க... இப்பல்லாம் அப்படி மக்கள்ஸ்கூட நேர விரயம் செய்வதே இல்லை... அடப்பாவிங்கொப்பரானே உங்களுக்கு டைம்பாஸ் பண்ண நானா கெடச்சேன்னு :))

    ReplyDelete
  9. தனிமை எப்பவுமே இனிமை தான் எனக்கு.. :)
    நல்லா சொல்லியிருக்கீங்க கவி..

    ReplyDelete
  10. /தனிமையை வெல்ல இணையம் ஒரு வரப்பிரசாதம். மெல்லிய இசையை வீட்டில் எப்போதும் ஒலிக்க விடலாம். நமக்குப் பிடித்த ஹாபியை தொடரலாம். படிக்க நினைத்து முடியாது போன விஷயங்களைப் புதிதாக கற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில் நமக்குப் பிடித்த விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நம்மை எப்போதும் எங்கேஜ்டாகவே வைத்திருந்தால் தனிமைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க என்னை மாதிரி :-)//

    Excellent.

    ReplyDelete
  11. நன்றி மேனகா! உண்மைதான். நம் வீடு நம் குடும்பம் என்று வரும் போது தனிமையும் இனிமைதான் :)

    ReplyDelete
  12. நன்றி பிரதாப்! அதுக்காக வருங்கால மனைவியை எப்பவும் வீட்டுக்குள்ளயே வச்சிடாதீங்க :). தனியே வெளியில் சென்று வர, பழக உதவுங்க.

    புக் போட நான் ரெடி! ஆனா வாங்குறது யாரு :(

    ReplyDelete
  13. நன்றி கோமு! நல்லா எல்லாம் எழுதலை கோமு. மனதில் பட்டதை எழுதுகிறேன் அம்புட்டுதான் :)

    ReplyDelete
  14. நன்றி சாதிகா அக்கா! அங்கே போய் "Report abuse" ல் கம்ப்ளெயிண்ட் பண்ணினேன். ஆனால் பயன் இருப்பதாக தெரியவில்லை :(

    ReplyDelete
  15. ஆத்தா நான் பாசாயிட்டேன் :). நன்றி ஜெய்லானி! அது புரியற வரைக்கும் கஷ்டம்தான்

    ReplyDelete
  16. நன்றி இலா! புலித் தோலில் ஓரமா என்ன அப்படியே வந்து நடுவிலேயே உட்கார்ந்திடுங்க. ரெண்டு பேருமா ஆசிரமம் ஆரம்பிச்சு கல்லா கட்டிடலாம். நான் கவிசிவானந்தா நீங்க இலாவீரானந்தா. எப்பூடி :)

    ReplyDelete
  17. நன்றி பாலாஜி சரவணா! எனக்கு தனிமையும் இனிமை :)

    ReplyDelete
  18. நன்றி அனாமிகா! லீவ் முடிஞ்சு வந்துட்டீங்களா :)

    ReplyDelete
  19. இதுவரை நான் தனிமையை கொடுமையாக நினைத்த நேரங்களே இல்லை கவி! யதார்த்தம் புரிந்துக்கொண்டதால் எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டேன். எனக்கு நேரமே போதவில்லை என தான் சொல்லணும். நீங்க சொல்ற மாதிரி கணவன் வந்ததும் புலம்பிக்கிட்டே இருந்தா வெளியே கூடிட்டு போய் சமாதானப்படுத்துவார். ஆனால் அதுவே தொடர்கதையானால் இவளுக்கு வேற வேலையே இல்லை என நம் மீது உள்ள கொஞ்ச நஞ்ச பாசமும் பறிபோகும்.

    இப்ப வரை தனிமையில் இருக்கவே ஆசைப்படுறேன். அது தான் எனக்கு சந்தோஷத்தையும் என்னை பற்றி சிந்திக்கவும் வைக்கிறது :)

    நல்ல பகிர்வு கவி!

    ReplyDelete
  20. நன்றி ஆமினா! நம் தோழிகள் இப்படி தனிமையையும் இனிமையாக ஏற்றுக் கொள்வது சந்தோஷமா இருக்கு. இங்க நிறைய பேர் ஒரே புலம்பல்தான். ஏதாவது ஹாபி தேர்ந்தெடுத்து அதில் ஈடுபடுங்கன்னு சொன்னா ஹாபி எல்லாம் இல்லைங்கறாங்க. பிடிச்சதை செய்யுங்கன்னா எதுவுமே பிடிக்கலைங்கறாங்க. என்னத்த சொல்ல :(

    ReplyDelete
  21. ஆரம்பத்தில் கொஞ்சம் அல்ல நிறையவே கஷ்டப்பட்டேன். இப்ப பழகிடுச்சு. என்ன ஏதாவது உடம்புக்கு முடியாமல் போன அம்பேல் தான். என் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள யாராச்சும் பக்கத்தில் இருந்தா நல்லா இருக்கும் என்று நினைத்தேன். கணவரும் எவ்வளவு நேரம் தான் வேலைக்கு போகாம வீட்டில் இருப்பது. நிறைய ஹாபி இருந்தாலும் சில நேரங்களில் ஏதோ ஒரு வெறுமை உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

    ReplyDelete
  22. ரொம்பவும் அருமையான எழுத்து கவிசிவா! நீங்கள் முன்னால் எழுதியிருக்கிற மாதிரி ' மனசு'தான் எல்லாவற்றுக்கும் காரணம். அதை நாம் ஆள்கிற வரை தனிமை மட்டுமல்ல, வேறு எதனாலும் பாதிப்பில்லை!

    ReplyDelete
  23. நன்றி வானதி! உடம்புக்கு முடியாமல் போகும் போது கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் குழந்தைகளை வைத்துக் கொண்டு... ஆனால் அதுவும் கடந்து போகும்னு இயல்பா எடுத்துக்கிட்டா சரியாயிடும். வெறுமை உணர்வு ஏற்படும் போது கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வந்தால் சரியாகிவிடும். பெரும்பாலும் இது பெண்களுக்கே உரிய ஹார்மோன் மாற்றங்களினால் ஏற்படும் தற்காலிக பிரச்சினையே!

    ReplyDelete
  24. நன்றி மனோம்மா! உண்மைதான்மா. மனது நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் எதையும் சமாளிக்கலாம்.

    உங்களின் ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் மேலும் எழுதத் தூண்டுகிறது. நன்றிம்மா!

    ReplyDelete
  25. // மெல்லிய இசையை வீட்டில் எப்போதும் ஒலிக்க விடலாம். நமக்குப் பிடித்த ஹாபியை தொடரலாம். படிக்க நினைத்து முடியாது போன விஷயங்களைப் புதிதாக கற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில் நமக்குப் பிடித்த விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நம்மை எப்போதும் எங்கேஜ்டாகவே வைத்திருந்தால் தனிமைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க //

    ரொம்பவும் சரி...

    இதில் இசை தனிமையை விரட்டுவதில் பெரும்பங்கு வகிக்கிறது சோகமோ சந்தோஷமோ நம்மை ஆட்கொண்டு அடிமையாக்குவதில் அதற்கு நிகர் இல்லை சுருக்கமாகசொன்னால் இசையானந்தா தனிமையில் இருக்கும் ஆண்களுக்கும் கூட சரி...

    ReplyDelete
  26. நன்றி வசந்த்! இசையானந்தா நல்ல மருந்தானந்தா தான் :)

    ReplyDelete
  27. ம்ம்ம்... என்ன சொல்றதுன்னு தெரியல.. நீங்க கடந்து வந்தது பிடிச்சிருக்கு.. என்னால முடியல.. இனியும் முடியாது (விதிவிலக்குகள் உண்டு :) ).. ஆனா ஒன்னு.. எனக்கு எது சந்தோஷம் தரக் கூடியதுன்னு புரிஞ்சிக்க வச்சது தனிமை.. அது, தனிமையில்லாம இருக்கறது :)

    ReplyDelete
  28. மனசு வச்சா முடியும் சந்தூ! தனிமையை நினைச்சு யாரும் இல்லையேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தா ஏதாவது பிரயோஜனம் இருக்கான்னு யோசிச்சு பாருங்க. நீங்க யோசிச்சிருப்பீங்க :). மெதுவே எல்லாம் சரியாகும் சந்தூ!

    தனிமை பிடிக்கலேன்னு உங்களை எங்கேஜ்டா வச்சிக்கிட்டு இருக்கிங்க இல்ல. அதுதான் முக்கியம். எந்த சூழலிலும் நம்மை நாம் சந்தோஷமா வச்சுக்கணுங்கறதுதான் முக்கியம். ஆல் தி பெஸ்ட்.
    நன்றி சந்தூ!

    ReplyDelete
  29. //திருமணமாகி வெளிநாடு வரும் பல பெண்களும் சந்திப்பதுதான் இந்த பிரச்சினை.//கவி, கல்யாணம் ஆகாமலே எனக்கு இந்த பிரச்சினை இருக்கே:))

    என்ன செய்ய, வேலை பார்த்தாகனும். முதலில் தனியாய் இருக்கனுமே என்று நினைத்து நினைத்து ரொம்ப பயந்தேன், அப்புறம் நீங்க சொன்ன மாதிரி தான் என்னை எங்கேஜ்டா வச்சிட்டேன். இப்ப ரொம்பவே நேரம் கிடைப்பதில்லை கவி.

    காலை முதல் இரவு வரை பம்பரமா சுத்த வேண்டியிருக்கு ;(((

    எல்லாத்துக்கு மனமே காரணம் என்பது மிகச்சரி,

    கவிசிவானந்தாவுக்கு, பவிராமானந்தாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்:))

    ReplyDelete
  30. நிறைய பேருக்கு வெளிநாட்டில் தனிமை மிக வாட்டு கீறது.
    இங்கு வந்த்வுடன் ஒரு மாத்ரி பீலிங்க் தான், ஆனால் எதையும் யோசிக்க இடம் இலலத அள்வு,

    தையல், ஹிந்தி கற்று கொள்வது, பேபி கேர் நடத்துவது, விதவிதமா சமையல் முயற்சிப்பது என என்னை நானே பிசியாக வைத்துகொண்டேன்.
    அப்போத்திலிருது இப்ப வரை எனக்கு அரை மணி நேரம் கூட சும்மா உட்கார நேரம் கிடைத்ததில்லை. யாரூ போன் செய்தாலும் பிஸி வுமன் என்று தான் சொல்வாங்க
    அத்வும் இப்ப பிளாக் ஆரம்பித்ததிலிருந்து என்ன கவலை யாக இருந்தாலும் ஒரு பதிவ் போட்டால் எல்லாம் கானமபோய்விடும்.

    நல்ல பதிவு போட்டு இருக்கீங்க தனிம்மையா இருப்பவர்களுக்கு, கவிசிவானந்தாவின் வ்வாழ்வியலபடித்தால் ஒரு புத்துனர்வு வரும்

    ReplyDelete
  31. நானும் நிறைய பேச்சுலர்களை கூப்பிட்டு சாப்பாடு போடுவது, நமக்கும் நம் சொந்தஙக்லை பார்த்தாலபோல் இருக்கும், அவர்களுக்கும் குடும்பத்தோடு இருந்த பீலிங் இருக்கும்.

    ReplyDelete
  32. அட, ஒரே ரத்தம்!! (ஹி..ஹி.. ஸேம் பிளட்!!) நிறைய பேரை நானும் இப்படி பாத்திருக்கேன். இந்தத் தனிமைக்குப் பயந்தே வெளிநாடுகளுக்கு வரமறுத்த மனைவிகளைக் கண்டு அதிர்ச்சி/ஆச்சர்யப் பட்டதுண்டு. எல்லாம் மனசுதான். எனக்கெல்லாம் ஆரம்பத்துல, ஒரு ரசம், பொறியல்னு சமைச்சு முடிக்கிறதுக்கே நாலு மணிநேரம் வேணும், அதனால அதிகம் கஷ்டப்படலை!! ;-)))

    இளமையில் தனிமையை விடக் கொடுமை, முதுமையில் தனிமைதான்.

    ReplyDelete
  33. கவிசிவா...சூப்பர் பதிவு...தனிமை விரட்ட நீங்கள் சொன்ன அருளுரை ))) எல்லாமே சூப்பர்..

    ReplyDelete
  34. இந்த இடுகையை இப்பதான் பார்க்கிறேன் கவி.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  35. நன்றி பவி! உங்களைப் பற்றி எனக்குத் தெரியுமே :). உங்களை என்க்கேஜ்டா வச்சுக்கிட்டு தனிமையைப் பற்றி யோசிக்க நேரமில்லைன்னு சொல்றீங்களே அதுதான் வெணும் தனிமையை விரட்ட :)

    ReplyDelete
  36. நன்றி ஜலீலாக்கா! சுறுசுறுப்பா எப்படி பல வேலைகளையும் ஒரே நேரத்தில் சுலபமா திறமையா கையாளணும்னு உங்ககிட்ட இருந்து கத்துகணும். அந்த விஷயத்தில் நான் இன்னும் கத்துக்குட்டி :)

    ReplyDelete
  37. நன்றி ஹுசைனம்மா! முதுமையில் தனிமை... இதைப் பற்றியும் ஒரு பதிவிட எண்ணியிருக்கிறேன் :)

    ReplyDelete
  38. நன்றி ஆனந்தி! அருளுரை கேட்டுகிட்டு சும்மா போனா எப்படி! அங்கிட்டு உண்டியல் இருக்குது. தாராளமா அள்ளி கொடுத்திட்டு போங்க :)

    ReplyDelete
  39. நன்றி ஆசியா! உங்கள் பின்னூட்டம் எப்போதுமே ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

    ReplyDelete
  40. வந்தவுடனே உண்டியலை கவனிச்சுட்டு தானே கவி நமக்கு வேலையே..அது எப்படி கவியை விட்டு கொடுக்கிறது...))

    ReplyDelete
  41. வரும்போதே உண்டியலை கவனிச்சுட்டீங்களா?!!! அதான் அது காலியா இருக்குதோ :)

    ReplyDelete
  42. ரொம்ப போரடிச்சா என்னோட பிளாக் சந்தேகத்தை பத்தி யோசிங்க .. அப்புறம் உங்களுக்கு சமைக்கவே நேரம் இருக்காது ஹி..ஹி....!! :-))

    ReplyDelete
  43. நல்ல பதிவு கவி. என் தங்கை அடிக்கடி இதை சொல்வா நானும் நிறய்ய டிப்ஸ் எல்லாம் குடுப்பேன்.
    எனக்கு இப்ப எல்லாம் குட்டிஸ்க்கிட்டே ஏம்ப்பா ஒரு ஐந்து நிமிஷம் இந்த மம்மியை தனியா உட்கார விடேன் என்று கெஞ்சுவது வழக்கமாகிட்டது. இத படித்ததும் ஒ வாவ்..

    ReplyDelete
  44. @ஜெய்லானி... போரடிக்கறதா? எனக்கா? ஹா ஹா நான் வேணும்னா அதை திருப்பி அடிப்பேன்.

    அடடா இவரோட சந்தேகத்துல இருந்து எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கு அவ்வ்வ்

    ReplyDelete
  45. நன்றி விஜி! கொஞ்சம் தனிமையும் அவசியம்தானே! நமக்கே நமக்குன்னு கொஞ்ச நேரம் கண்டிப்பாக வேண்டும்.

    ReplyDelete
  46. இசை என்ற நண்பனும்,புத்தகங்கள் என்ற சகோதரர்களும் இருக்கும்வரை தனிமைன்னு ஒண்ணு கிடையவே கிடையாது. அலுத்துக்கிறவங்க, சும்மா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்காம, கொஞ்சம் அக்கம்பக்கமும் எட்டிப்பாருங்க. அப்புறம் பொழுதே போதலைன்னு சொல்லுவீங்க...

    ReplyDelete
  47. உண்மை சாரல் மேடம்! தனிமை தனிமைன்னு அதுக்குள்ளயே உளன்று வருபவர்களுக்குத்தான் தனிமை கொடுமை! நன்றி சாரல் மேடம்!

    ReplyDelete