Thursday 21 October 2010

தென்னை மரத்தில் தேள் கொட்டியதால் பனை மரத்தில் நெறி கட்டியிருக்கிறது

இந்தோனேஷியாவின் சுமத்ராவில் காட்டுத் தீ. இதன் காரணமாக சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் இந்தோனேஷியாவிலும் ஒரே புகை மூட்டம். காற்றுத் தரக் குறியீட்டு எண் 108 ஐ தாண்டி விட்டது. இது ஆரோக்கியமான நிலை இல்லை.குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் ரொம்பவே சங்கடமா இருக்கும். சென்ற ஆண்டு இதே போல் புகை மூட்டம் ஏற்பட்ட போது கண் எரிச்சல் ஏற்பட்டது. இப்போதும் லேசான கண் எரிச்சல் இருக்கிறது. இந்த ஆண்டு அந்த அளவுக்கு மோசமாகாமல் இருக்க வேண்டும்.


இந்தோனேஷியாவில் காட்டுத் தீக்கு முக்கிய காரணம் நிலச்சீரமைப்பு என்ற பெயரில் காடுகளுக்கு தீ வைப்பதுதான். சிறு விவசாயிகள்தான் தீ வைக்கிறார்கள் என்ற போர்வையில் பல தனியார் கம்பெனிகள்தான் இந்த தீ வைப்புகளுக்கு பின்னால். ஒருகட்டத்தில் தீ கட்டுக்குள் அடங்காமல் காட்டுத் தீயாக பரவுகிறது. ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சினைதான்.


காடுகளை சமப்படுத்த மிக எளிதாக தீ வைத்து விடுகிறார்கள். இங்கேயே பலமுறை நான் பார்த்திருக்கிறேன். சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து சரிகட்டிடறாங்க :(


இவர்கள் இப்படி காடுகளை அழிப்பதால் புகைமூட்டம் ஒரு பிரச்சினை என்றால் தட்பவெப்ப நிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள். பத்து வருடங்களுக்கு முன் அதிகபட்சமாக 32டிகிரி செல்சியஸ் வெப்பநிலைதான் இருக்கும். மிக அரிதாக 34டிகிரி செல்சியசுக்கு போகும். இப்போது 36டிகிரி 37டிகிரின்னு சர்வசாதாரணமா போகுது. முன்பு போல் மழைப்பொழிவும் இல்லை. சில நேரங்களில் ஒரேயடியாக கொட்டி வெள்ளப்பெருக்கும் வருகிறது.


மாதம் மும்மாரின்னு சொல்லுவாங்களே அது போல் மாதம் 10 மாரிகளாவது பொழியும்.இந்த வருடம் தொடர்ச்சியாக 35நாட்கள் மழை இல்லை. நல்ல சூடும் அனுபவப்பட்டது.  நாங்கள் இருப்பது சிறிய தீவு.  மழை நீர்தான் ரிசர்வாயர்களில் தேக்கப்பட்டு விநியோகிக்கப் படுகிறது. இப்படி தொடர்ச்சியா மழை இல்லேன்னா தண்ணீர் கஷ்டம். அப்புறம் என்ன கப்பலில்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும் :(.  தண்ணீர் விநியோகம் தனியார் வசம் என்பதால் அதுவும் நடக்கும். ஒருமுறை அப்படியும் நடந்ததாம். தகவல் உண்மையான்னு உறுதியாத் தெரியலை. இப்போ இந்த புகைமூட்டம் மாறணும்னா கூட மழைபெய்ய வேண்டும்.  வருணபகவான் கருணை காட்டுவாரான்னு பார்த்துக்கிட்டு இருக்கோம்.

20 comments:

  1. இயற்கையோடு விளையாடுவது வருத்தமாருக்கு..

    ReplyDelete
  2. தாங்கள் சொல்வது போல பிரச்சினைக்குரிய விசயம்தான். பார்க்கலாம். இயற்கையை யாராலும் புரிந்துகொள்ள முடியாதே!

    ReplyDelete
  3. ஆடுங்கடா ஆடுங்க!

    இன்னும் நிறைய பார்க்கப்போறோம்

    இப்படி காட்டுக்குத்தீ வைக்கிறதால என்ன பயன்?

    ReplyDelete
  4. இழந்த பின் புரியும் அதுவரை தொடரும் இப்படிதான் ..

    ReplyDelete
  5. இயற்கையை சீண்டுனா இப்படித்தான்...

    //32டிகிரி செல்சியஸ் வெப்பநிலைதான் இருக்கும். மிக அரிதாக 34டிகிரி செல்சியசுக்கு போகும். இப்போது 36டிகிரி 37டிகிரின்னு சர்வசாதாரணமா போகுது//

    இதுக்கே இப்படி அலுக்த்துக்றீங்க.... இங்க 50 டிகிரில்லாம் ஜுஜுபி.... :)) அதுவும் வருசத்துக்கு 10மாசமும்....

    கவலைப்படாதீங்க...வாரத்துக்கு ரெண்டு தடவைமழைபெய்யனும்னு...வருணபகவானுக்கு ஆர்டர் போட்டிருக்கேன்...வந்துடுவாரு...

    ReplyDelete
  6. ஒரு குட்டிப்பதிவையே தலைப்பா வச்சுட்டீங்க:))

    ReplyDelete
  7. //இதுக்கே இப்படி அலுக்த்துக்றீங்க.... இங்க 50 டிகிரில்லாம் ஜுஜுபி.... :)) அதுவும் வருசத்துக்கு 10மாசமும்..//

    பாஸ் இப்பிடி அவங்களை பயங்காட்டாதீங்க ..எப்பவாவது வரும் எண்ணம் இருந்தால் வராமலேயே போய்டுவாங்க :-))))))))

    ReplyDelete
  8. @அமைதிச்சாரல்

    ஆமாம் இயற்கையோடு அளவுக்கு மீறி விளையாடறாங்க :(. எங்க போய் முடியும்னுதான் தெரியல.

    நன்றி சாரல் மேடம்!

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி எஸ்.கே. இப்படியே போனால் இயற்கையை புரிந்து கொள்ள உலகம் இருக்குமா :(

    ReplyDelete
  10. @வசந்த்
    //இப்படி காட்டுக்குத்தீ வைக்கிறதால என்ன பயன்?//

    காட்டுக்கு தீ வைப்பதால் அந்த பகுதி முழுவதையும் எளிதாக க்ளியர் செய்துட்டு எண்ணெய்ப்பனை தோட்டங்கள் வைக்கறாங்க. ஆள் வச்சு காட்டை அழிக்கணும்னா நிறைய நாட்கள் மற்றும் காசு செலவாகுமே. இது ஈசியா முடிஞ்சுடுதுல்ல. அதான் தீ வச்சுடறானுங்க. அந்த தீவுலயாவது திரும்பவும் மரத்தை வளர்க்கறானுங்க. நாங்க இருக்கற தீவுல பாவிங்க வீடு கட்டி விக்கறதுக்காக காட்டுக்கு தீ வைக்கறானுங்க :(

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. முதல் வருகைக்கு நன்றி புதிய மனிதரே!

    //இழந்த பின் புரியும் அதுவரை தொடரும் இப்படிதான் .. //

    புரிந்த பின் இழப்பதற்கு எதுவுமே இருக்காது :(

    ReplyDelete
  13. @நாஞ்சில் பிரதாப்

    //ஒரு குட்டிப்பதிவையே தலைப்பா வச்சுட்டீங்க:))//

    ஹி ஹி

    50 டிகிரியா?! 37டிகிரியவே தாங்க முடியாம ஏசி யப் போடு இளனிய வாங்குன்னு அல்லாடறோம். 50டிகிரின்னா வெளியில் இறங்கவே முடியாதே! தொழிலாளிகள் நிலமைதான் பரிதாபம் இல்ல. அவங்களுக்காக ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கறாங்களா?

    வருணபகவானுக்கு நீங்க போட்ட ஆர்டர் கிடைக்கலை போல இருக்கு. வரும் வராதுன்னு போக்கு காட்டிக்கிட்டு இருக்கார் :(

    ReplyDelete
  14. ஆமாம் ஜெய்லானி 50டிகிரின்னா ரொம்பவே யோசிக்கணும். துபாய் பார்க்கணும்னு ஆசை இருந்துச்சு இனியும் இருக்குமான்னு தெரியல :(

    ReplyDelete
  15. இந்த கேஸ்களை தூக்கி உள்ளே போடணும். அமெரிக்காவில் காட்டுக்கு தீ வைச்சா ஜெயில் தண்டனை.

    ReplyDelete
  16. //37டிகிரியவே தாங்க முடியாம ஏசி யப் போடு இளனிய வாங்குன்னு //

    அவ்வ்வ்.. இதெல்லாம் ரொம்ப சீன் காட்டுற மாதிரி இருக்கே எங்களுக்கு...நவம்பர் வரப்போகுது, இன்னும் வெயில்தான் இங்க.. கடுப்பா இருக்கு..

    அங்க இப்ப புகைமூட்டம் சரியாகிடுச்சா? மழை பெஞ்சுதா?

    ReplyDelete
  17. @வானதி

    சட்டமெல்லாம் இங்கேயும் இருக்கு. மதிக்கற ஆளைத்தான் காணோம் :(

    ReplyDelete
  18. @ஹுசைனம்மா

    ஹி ஹி ஹுசைனம்மா 50டிகிரி வெயிலுக்கு முன்னாடி 37டிகிரி ஜுஜுபிதான்.

    இன்னிக்கு நல்லா மழை பெய்துச்சு. புகைமூட்டம் குறைஞ்சிருக்கு. பாதுகாப்பான அளவில்தான் இருக்கு.

    நன்றி ஹுசைனம்மா

    ReplyDelete
  19. நேத்து போட்ட என் பின்னூட்டம் எங்கே? :(

    ReplyDelete
  20. அய்யோ யார் தூக்கிட்டு போனாங்கன்னு தெரியலியே சந்தூ :-(

    உங்க கமெண்ட் மாடரேஷனுக்கு வரவே இல்லியே சந்தூ.

    ReplyDelete