Thursday 8 April 2010

நான் ஊருக்குப் போறேன் :)


எல்லோருக்கும்(?!) இதனால் அறிவிப்பது என்னவென்றால் இந்த மாதம் நான் இந்தியா செல்வதால் ஜூன் மாதம் வரை என் தொல்லை பதிவுலகில் இருக்காது என்று தெரிவிக்கப் படுகிறது :). இப்படி ஸ்மைலி போட்டு சொன்னாலும் எதையோ மிஸ் பண்ணுவது போல் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் அப்பா அம்மா எல்லோரையும் பார்க்கப் போகும் சந்தோஷம் அதிகமா இருக்கு.

அடுத்த வாரம் இங்கிருந்து கிளம்புகிறேன். சிங்கப்பூர் பயணம்,பேக்கிங், ஷாப்பிங் மற்றும் பல வேலைகள் போன வாரமே ஆரம்பிச்சுட்டதால போன வாரத்திலிருந்தே இங்கு வர முடியாம போயிடுச்சு. நண்பர்களின் புதிய பதிவுகள் எதுவுமே படிக்கவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. எனது பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கும் பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

ஜூன் மாதத்திலிருந்து மீண்டும் என் தொல்லை ஆரம்பிக்கும் :). அதுவரைக்கும் பை பை.

அனைவருக்கும் முன்கூட்டிய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


தாத்தா பொங்கலை தமிழ் புத்தாண்டுன்னு சொன்னாலும் சித்திரை முதல் நாள்தான் நமக்கு புத்தாண்டு :)

14 comments:

  1. நான் நினைக்கிறேன்... நம்ம ஊருக்கு நேரம் சரியில்லைன்னு... ஏன்னா நானும் கிளம்புறேன் அடுத்தவாரம்.... இருந்தாலும் பதிவுலகமாவது கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும்....:))

    ReplyDelete
  2. அங்கு(சிங்கையில்) பதிவர் மீட்டிங் இருக்கா? :-)

    ReplyDelete
  3. இனிய பயண வாழ்த்துக்கள்!! நல்லபடியாக போய் எஞ்சாய் பண்ணுங்க கவி.

    உங்களுக்கும் அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    //தாத்தா பொங்கலை தமிழ் புத்தாண்டுன்னு சொன்னாலும் சித்திரை முதல் நாள்தான் நமக்கு புத்தாண்டு // நல்லா சொன்னீங்க..

    ReplyDelete
  4. இனிய பயணம்...வாழ்த்துகள்..இந்தியாவுக்கு சென்று திரும்பியவுடன் ப்ளாக் பக்கம் கண்டிப்பாக வாங்க...நன்றி

    ReplyDelete
  5. பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  6. பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிய பயணத்திற்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இந்நேரம் கிளம்பியிருப்பீங்கள்ன்னு நினைக்கிறேன் கவி.. நல்லபடியா போய்த் திரும்பி வாங்கோ.. நாங்களும் மிஸ் பண்ணுவோம்.. போய் வந்ததும் புதுத் தெம்புடன் தொல்லையைத் தொடருங்கோ :)))))

    ReplyDelete
  9. இனிய பயணத்திற்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. கவிசிவா... வாழ்த்துக்கள். ஆனால் எதுக்கு ஜூன் வரையும் நிற்கப்போறீங்கள்?.... நீண்டநாளாயிற்றே என அதிராவை மறந்திடவேண்டாம்.... Have a nice holiday...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி நன்றி நன்றி.
    சாதிகா அக்கா விருதுக்கு நன்றி. ஊரிலிருந்து வந்ததும் என் பக்கத்தில் அழகாக மாட்டிவிடுகிறேன்.

    பை பை

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நல்லமுறையில் விடுமுறையை கழிக்க என் வாழ்த்துகள்.

    கவிசிவா, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  13. ஊருக்கு போய் இனிமையாக நாட்களை கழித்து விட்டு திரும்ப பதிவுலகில் வந்து அசத்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. கவி நல்ல படியா ஊருக்கு போய் விட்டு வாங்க வந்ததும் வ்ந்து நான் கொடுத்துள்ள அவார்டை பெற்று கொள்ளவும்.

    ReplyDelete