Sunday 10 April 2011

தேர்தல் விழா!!!

நாட்டுல தேர்தல் ஜுரம் சூடு பிடிச்சுடுச்சாம். நானும் அது பற்றி பதிவு எழுதலேன்னா நாளைய வரலாறு நம்மை குற்றம் சொல்லிடுமே அப்படீங்கற தார்மீக (அப்படீன்னா என்ன?!!) எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவு :-)


 
உண்மையிலேயே நம்ப மக்கள் கொடுத்து வச்சவங்கதான். பின்னே இந்த அரசியல்வியாதிங்க அடிக்கற கோமாளிக் கூத்தெல்லாம் பார்த்து சிரிச்சி சிரிச்சு சந்தோஷமா இருக்காங்க. ஆனா இந்த எலகஷன் கமிஷன் மேலதான் மக்கள் ரொம்ப கடுப்பாயிருக்காங்களாம். பின்னே அஞ்சு வருஷத்துக்கு ஒருவாட்டியாவது கொள்ளையடிச்ச பணத்துல கொஞ்சூ.......ண்டு பங்கை கிள்ளி கவர்ல போட்டுக் கொடுப்பானுங்க நம்ப அரசியல் வியாதிங்க. அதுக்கும் ஆப்பு வச்சா என்ன பண்றது!

தேர்தல் அறிக்கைன்னா இப்படீல்ல இருக்கோணும். எல்லாம் இலவசமாம். சுருக்கமா சொன்னா இலவசமா அரிசி வாங்கி கஞ்சியை வச்சு குடிச்சுக்கிட்டு இலவச டிவியில வர மொக்கைகளைப் பார்த்து மூக்கை சிந்திக்கிட்டு மூக்கு சிந்தின துணியை இலவசமா கிடைக்கற வாஷிங் மெஷின்ல போட்டுட்டு (கவனிச்சு படிக்கோணும் வாஷிங் மெஷின்ல போட மட்டும்தான் முடியும் துவைக்கறது நாமதான் துவைச்சுக்கணும். ஹி ஹி க்ரெண்ட் இருக்காதே) கம்முன்னு குந்தியிருக்கணும்.   நாடு... அதை நாங்க குடும்பத்தோடவோ இல்லை கூடவே இருக்கும் நட்போடவோ சேர்ந்து கொள்ளையடிச்சுப்போம்னு தலீவருங்க சொல்லிப்புட்டாங்கோ.

இதுல ஒரு கட்சிக்கு தேர்தல அறிக்கை வெளியிடக் கூட நேரமில்லாம கடைசீஈஈஈஈ நேரத்துலதான் வெளியிட்டிருக்காங்கோ. ஆமாமா கோஷ்டிப் பூசலை சமாளிச்சு அங்கே கிழிஞ்ச வேஷ்டியை தைச்சு கட்டிக்கிட்டு வர நேரமாகாதா! இதையெல்லாம் நாம புரிஞ்சுக்கலேன்னா இந்தியக் குடிமகனாக இருக்க நமக்கு தகுதியே இல்லேன்னு அர்த்தம்.

ஒருத்தரு ஒரு மாசத்துக்கு முன்னாடி வரை ஒரு வயசான தாத்தாவைப் போட்டு அந்தத் தாக்கு தாக்கினாரு. ஆனா இப்போ அந்தர்பல்டியில்ல அடிச்சுட்டாரு. தாங்க முடியலீடா சாமீஈஈஈ... ஆங் இதுக்குப் பேரு கூட்டணி தர்மம். இதையெல்லாம் குறை சொன்னா அவிங்க பொழப்பு நடத்தறது எப்பூடி?!

ஒருத்தவங்க வேற நாட்டிலேருந்து இப்போதான் இறங்கி வந்திருக்காங்க. அவங்க தமிழ்நாட்டுல இருக்கணுமா இல்லையாங்கறதை நம்ப மக்கள்தான் முடிவு பண்ணோணுமாம். எம்மாம் பெரிய பொறுப்பை நம்ப மக்கள் தலையிலே கட்டியிருக்காங்கோ! யோசிச்சு முடிவெடுக்கோணும்.

ஒருத்தர் இன்னொரு வாட்டி அய்யோ... அம்மா... ன்னு அவலக் குரல் எழுப்ப வேண்டி வந்திருமோங்கற பயத்தில் இப்பவே எலக்ஷன் கமிஷனைப் பார்த்து லபோ...திபோ...ன்னு குதிக்க ஆரம்பிச்சுட்டாரு.

இன்னொருத்தரு மைக்கை சரியா புடிக்கத் தெரியாம கீழே போட்டுட்டு(?!) ஒருத்தரை மக்கள் முன்னால அடிச்சுட்டாருன்னு பாட்டு வாங்கிட்டு இருக்கார். அடிச்சாலும் அவரு ஆளைத்தானே அடிச்சாரு உங்களையா அடிச்சாரு இதைப் போய் பெருசாக்கிட்டு... போங்க போங்க யாராச்சும் கவர் கொண்டு வாராங்களான்னு பாருங்க.

ஏற்கெனவே ஜெயிச்ச இடத்துல திரும்பவும் தெருத் தெருவா ஓட்டு கேட்டுப் போனா திருவோடு(டெப்பாசிட்) கூட மிஞ்சாதுன்னு பூர்வீக இடத்தையும் சொந்த ஊரையும் தேடி ஓடிப்போய்ட்டாங்கோ ! சந்தோஷப் படுங்கப்பா உங்க தொகுதிக்கு ஸ்டார் வேல்யூ வந்திருக்குல்ல :)

இந்த எலக்ஷன்ல அரசியல்வியாதிகள் எல்லாரும் காமெடிப் பீசுன்னா ஹீரோ யாருப்பா? எல்லாம் நம்ப எலெக்ஷன் கமிஷன் தாங்க. ஒட்டுமொத்த அரசியல்வியாதியும் பேதி மருந்து கொடுத்த மாதிரி டரியல் ஆகி கிடக்கறாங்க இல்ல! எம்பூட்டு சந்தோஷமா இருக்கு! ஒவ்வொருத்தரும் எலெக்ஷன் கமிஷனைப் பற்றியும் அதிகாரிகளைப் பற்றியும் குய்யோ முறையோன்னு கத்தும் போது சிப்பு சிப்பா வருது. எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் எலெக்ஷன் முடிஞ்சு ஆட்சியை அமைச்சதுக்கு அப்புறம் காமெடிப் பீசாகப் போறது பொதுமக்களாகிய நாமதானுங்கோ :-(. அது வரைக்கும் என்ஜாய்!!!
 
படங்கள்: நன்றி கூகுளாண்டவர்!

9 comments:

  1. கவி உங்க ஊரு எலக்‌ஷன்பத்தி சொல்லுgங்க அபவாவதுகாதுகுளிரும். நம்ம நாட்டு எலக்‌ஷன்பத்தியெல்லாம் கண்டுக்காதீங்கம்மா.

    ReplyDelete
  2. //அமைச்சதுக்கு அப்புறம் காமெடிப் பீசாகப் போறது பொதுமக்களாகிய நாமதானுங்கோ :-(. அது வரைக்கும் என்ஜாய்!!! //

    அதே அதே தான்..

    ReplyDelete
  3. கவி.. நீங்களுமா? :) ஒரே எலக்ஷன் மயமா இருக்கு எங்க பார்த்தாலும்..

    ReplyDelete
  4. கிளம்பிட்டிங்களா.... புலம்புங்க புலம்புங்க புலம்பிட்டே இருங்க... :))

    ReplyDelete
  5. //எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் எலெக்ஷன் முடிஞ்சு ஆட்சியை அமைச்சதுக்கு அப்புறம் காமெடிப் பீசாகப் போறது பொதுமக்களாகிய நாமதானுங்கோ :‍( //

    காலங்காலமா நடக்கும் கோலம் கவி இது :( நல்ல பதிவு!

    ReplyDelete
  6. வொய் டென்ச‌ன்.. நோ டென்ச‌ன்.. கூல் ச‌கோ... :)))

    ReplyDelete
  7. கவிசிவா!உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_24.html
    இந்த லிங்க்கைப் பாருங்கள்.

    ReplyDelete
  8. கவி என் பகக்ம் வந்து அவார்டை பெற்று சொல்லுங்கள்.http://samaiyalattakaasam.blogspot.com/2011/04/blog-post_21.html

    ReplyDelete