Tuesday 29 March 2011

புதுசு கண்ணா புதுசு!

அடுத்தமுறை திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் போய் இறங்கும் நம்ப ஊர் மக்கள்ஸ் வேறெங்கேயோ ஃப்ளைட்டை இறக்கிட்டானுங்களோனு திரு திருன்னு முழிக்காதீங்க. புதிய ஏர்போர்ட்டை திறந்துட்டாங்கள்ல! அழகா இருக்கு புதிய விமான நிலையம்.

இன்னும் வேலைகள் முழுவதுமாக முடியவில்லை. ஆனாலும் எல்லா வசதிகளுடன் அழகா இருக்கு. Arrival மற்றும் Departure வாயில்கள் தனித்தனியே சற்று அதிக இடைவெளியில் இருப்பதால் பழைய விமானநிலையம் போல் நெருக்கடியாக இல்லை. சுகமான கடல்காற்று
காத்திருக்கும் நேரத்தைக் கூட இனிமையாக்குகிறது :).விசாலமான கார்பார்க்கிங் வசதியும் இருக்கு.

ஏர்ப்போர்ட்டுக்கு போகும் சாலையும் குண்டு குழியில்லாமல் நேர்த்தியாக போட்டிருக்கிறார்கள். திருவனந்தபுரம் களக்கூட்டம் பைபாஸ் ரோட்டில் அனந்தபுரி மருத்துவமனைக்கருகில் இருந்து புதிய மேம்பாலம் வழியாக ஏர்ப்போர்ட்டை இணைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து வருபவர்கள் டிராஃபிக் நெரிசலில் சிக்காமல் களியக்காவிளையில் இருந்தே பைபாஸ் ரோடு வழியாக வந்துவிடலாம்.

என்னதான் எல்லாம் மாறினாலும் இமிக்ரேஷன் அதிகாரிகள் மட்டும் மாறவே இல்லை :-((. அதே கடுகடுப்புதான்.

User Development Fee ன்னு சொல்லி ஏர்போட்டில் வைத்து 575ரூபாய் வசூலிச்சுட்டாங்க. ஆனால் தொடர்ந்து இதே போல் சுத்தமாக பராமரிக்கறாங்கன்னா கொடுத்துட்டு போகலாம் தப்பில்லைன்னு தோணுது.









15 comments:

  1. கவி முதல் ஆளா வந்துட்டேன். நானும் திருவனதபுரம்
    ஏர்போர்ட்டில் இறங்கும்போதெல்லாம் இது எப்போதான் மாறுமோன்னு நினைப்பேன். மாற்றம் வந்திடுத்தா சூப்பர்தான். ஒரு ட்ரி அடிச்சுட வேண்டியதுதான்.படங்களும் சூப்பரா இணைச்சிருக்கீங்க.

    ReplyDelete
  2. அடடே கலக்குறானுங்களோ.....:) அப்படியே தம்பானுர் பஸ்ஸ்டாண்டையும் சுத்தம்பண்ணா நல்லாருக்கும்.

    கன்வேயர்ல லக்கேஜ் எடுக்கறதுக்கு போனதடவை
    1:30 மணிக்கோர் வெயிட் பண்ணேன்...செம கடுப்ஸ். குப்பை மாதிரி துக்கி போடுவானுங்க... இனி அந்த கவலை இருக்காது....

    ReplyDelete
  3. அப்போ இனி அந்த பழைய ரேஷன்கடை கவுண்டர் (immigration) அங்க இருக்காது.....அப்பாடா :))

    ReplyDelete
  4. அழகா படங்களும் போட்டு, தெளிவா ரூட்டும் சொல்லி அருமை!!

    // User Development Fee ன்னு சொல்லி ஏர்போட்டில் வைத்து 575ரூபாய் வசூலிச்சுட் டாங்க. //

    சென்ற வாரம் ஊரிலிருந்து திரும்பி வந்த நண்பர் இதையே சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.

    ReplyDelete
  5. இங்கயும் சமீபமா ஊர் போய் வந்தவங்க எல்லாம் இதையே மாஞ்சு மாஞ்சு சொல்லி ஆச்சர்யப்படுறாங்க!! பாருங்க, இந்தியாவில, அதுவும் கேரளாவுல, இப்படி சுத்தமா ஒரு இடம் இருக்கீறது நமக்கே நம்ப முடியல!! :-))

    அப்புறம், அதைச் சொன்னவங்க 575 ரூபாயையும் சொன்னாங்க. படங்கள் இப்பத்தான் பாக்கிறேன். அசத்தலாத்தான் இருக்கு. ஆனா, பிரதாப் கட்டிடத்தை மாத்த முடியும். ஆனா, கவுண்டர்ல இருக்க கடுகடு ஆட்களை??

    ReplyDelete
  6. வாங்க கவி.. ரொம்ப நாளாச்சு ஆளைப் பார்த்து.. ஊருக்குப் போயி திரும்பி வர மறந்துட்டீங்கலோன்னு நினைச்சுட்டோம் :)

    திருவனந்தபுரமா? புகைப்படங்கள்ள ஜொலிக்குது ஏர்போர்ட்.. உங்க ஊருப்பக்கமாக இருப்பதால புகை வருது :)

    ReplyDelete
  7. சூப்பராத்தான் இருக்கு கவிசிவா... நம்ம ஊருலையும் ஒன்னு இது மாதிரி வந்தா நல்லாத்தான் இருக்கும்... ;( ம்ம்ம்.... என்னத்தா நினைச்சு என்னத்தா சொல்ல....

    ReplyDelete
  8. ஆஹா கவி புது செய்தி சொல்லிருக்கீங்க,இப்ப தான் கேள்பிபடுறேன். ஒவ்வொரு முறையும் எப்படியும் நாங்கள் இறங்கும் சமயம் மழை வரும்,அப்ப பழைய இடம் பார்க்க முடியாது..சகதியும் குண்டும் குழியுமாக..இந்த தடவை போகும் பொழுது ஆசையாக இருக்கு..ஹை,ஏர்போர்ட் பார்க்கவே அழகாக இருக்கு..

    ReplyDelete
  9. வாங்க லெக்ஷ்மிம்மா! சீக்கிரமா திருவனந்தபுரத்துக்கு விசிட் அடிங்க!

    ReplyDelete
  10. @நாஞ்சில் பிரதாப்
    தம்பானூர் பஸ்ஸ்டாண்ட்... மாறும்னு நினைக்கறீங்க?! உங்களுக்கு ரொம்ப பேராசை.

    ரேஷன்கட கவுண்டரை மாத்தினாலும் ரேஷன்கடைக்காரர்கள் அதே ஆட்கள்தானே :-(

    ReplyDelete
  11. @எம் அப்துல் காதர்

    // User Development Fee ன்னு சொல்லி ஏர்போட்டில் வைத்து 575ரூபாய் வசூலிச்சுட் டாங்க. //

    சென்ற வாரம் ஊரிலிருந்து திரும்பி வந்த நண்பர் இதையே சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.//

    ஹா ஹா எல்லாரும்தான் புலம்பறோம். இனிமே புலம்ப மாட்டோம் ஏன்னா டிக்கெட்டோடவே சேர்த்து வாங்கிடுவாங்க இல்ல :)

    ReplyDelete
  12. @ஹுசைனம்மா

    பின்னே ஆச்சர்யப்படாம இருக்க முடியுமா?! அதுவும் நம்ம ஊர்ல இப்படீ..ன்னா அதிசயம்தானே :)

    ReplyDelete
  13. வந்துட்டேன் சந்தூ..

    உங்க காதுல புகை வரதை மட்டும் நான் பார்க்கவே இல்லை :))

    ReplyDelete
  14. வனி திருவனந்தபுரமும் நம்ப ஊருதான் :)). சென்னை ஏர்போர்ட்டை விட இப்போ இது நல்லா இருக்கு :))

    ReplyDelete
  15. ஆமா ஆசியா! பழைய ஏர்போர்ட் ரோட்டிலிருந்து வெளியே வரும் வரை காருக்குள் இருந்து குலுங்கோ குலுங்குன்னு குலுங்குவோம். இனிமேல் அந்த தொல்லை இல்லை. ஆனா புது ரோடு எம்பூட்டு நாளைக்குத் தாங்கும்னு எனக்குத் தெரியாது சொல்லிட்டேன் :))

    ReplyDelete