Thursday 24 March 2011

வந்துட்டோம்ல மொக்கை போட :-)

அப்புறம் எல்லாரும் எப்படி இருக்கீங்க?  நல்லாத்தான் இருக்கோம் நீ வந்துட்டீல்ல இதுக்கு அப்புறம் எப்படி இருப்போம்னு தெரியாதுன்னு நீங்க எல்லாம் நல்ல மனசோட சொல்றது நல்லாவே கேட்குது :)

இந்தியாவில் நல்லா வீட்டை சுத்திக்கிட்டு வந்தாச்சு. நிஜம்மாவே இந்த முறை வீட்டை மட்டும்தான் சுத்தினேன் :-(. மூணே மூணு நாள் மூணார் போயிட்டு வந்ததோட சரி அப்புறம் நாகர்கோவில் வாசம்தான்.

கூடிய சீக்கிரம் வழக்கமான மொக்கை பதிவுகளோட வரேன். அதுவரைக்கும் என்ஜாய் பண்ணுங்க மக்காஸ்......

26 comments:

  1. ஆ... கவி வெல்கம்.. மியாவ்.. மியாவ்...

    ReplyDelete
  2. கொண்டுவந்த பருப்புவடைப் பார்ஷலை அப்பூடியே எனக்கு தந்திடோணும்.. நான் பிரிஜ்ல வச்சுச் சாப்பிடுவேன்.. ஆருக்கும் பிச்சுப் பிச்சுக் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  3. அப்பாடி வந்துவிட்டிங்களா...

    ReplyDelete
  4. அதீஸ் வடை எல்லாம் உங்களுக்குத்தான். ஆருக்கு வேணும்னாலும் கொடுங்கோ ஆனா எனக்கு மட்டும் வேணாம். ஹி ஹி கொஞ்சம் பழைய வடை அதான் :)

    ReplyDelete
  5. வந்துட்டேன் கீதா! எப்படி இருக்கீங்க?

    ReplyDelete
  6. வாங்க கவி... கவிப் பக்கம் வந்து வந்து வந்து பார்த்து பார்த்து பார்த்து மொக்கை போடற ஆள் இல்லாமல் கொஞ்சம் ஆனந்தமாகத்தான் இருந்தோம்! வந்துட்டீங்களா???. மூணார் பக்கமெல்லம் போனீங்களே ஒரு வார்த்த சொல்லிட்டு போயிருக்கலாம். ஏன்னா மூணார் பக்கம் இருந்த யானைங்க எல்லாம் அந்தியூர் காட்டு பக்கம் வந்ததாக பேப்பர்ல படிச்சேன். சரி அதையெல்லாம் விடுங்க... ஆரம்பிங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நீங்க வந்தா நாங்க எப்படி ஃபீல் பண்ணுவோம்னு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க!! ;-)))))

    வெல்கம் பேக்!

    ReplyDelete
  8. நல்வரவு கவி,எப்படி இருக்கீங்க??எப்போ வந்தீங்க?

    ReplyDelete
  9. கவி வந்துட்டீங்களா? இண்டியா ட்ரிப் பத்தியெல்லாம் நிறைய பதிவு வரும்னு எதிர்பார்த்து இருக்கும் என்னை ஏமாற்றாமல் சீக்கிரமாக ஸ்டார்ட் பண்ணுங்க ஓ, கே வா?

    ReplyDelete
  10. ஹாய், கவிசிவா, வந்தாச்சா?ட்ரிப் எப்படி இருந்தது?
    இந்தியால எங்கல்லாம் சுத்திப்பாத்தீங்க? இந்தோனேஷியாலதானே இருக்கீங்க? இன்மேல நிறைய
    சுவாரசியமான பதிவுகளை உங்ககிட்டேந்து எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  11. //மூணே மூணு நாள் மூணார்//

    ஒவ்வொரு ஆறுக்கும் ஒரு நாளா? :))))

    அப்பா எப்படியிருக்கார்?

    Welcome back kavi..!

    ReplyDelete
  12. Hi கவி எப்படி இருக்கீங்க.... 3 மாசம் பொறாமையா இருக்கு...:))) வெல்கம் பேக்
    நம்ம மக்கள்ஸ், வடசெரி பஸ்ஸ்டான்ட், நாகராஜாகோவில் எல்லாம் எப்படி இருக்கு... நான் இல்லாததால நல்லாத்தான் இருக்குன்றீங்களா-?:))

    ReplyDelete
  13. @தவமணி

    //மூணார் பக்கமெல்லம் போனீங்களே ஒரு வார்த்த சொல்லிட்டு போயிருக்கலாம். ஏன்னா மூணார் பக்கம் இருந்த யானைங்க எல்லாம் அந்தியூர் காட்டு பக்கம் வந்ததாக பேப்பர்ல படிச்சேன்.//

    எல்லா யானையும் உங்களைத் தேடி வந்திடுச்சா?!

    மொக்கையை படிக்கவும் தினமும் வந்து பார்த்துட்டே இருந்தீங்களா?! நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு :)

    ReplyDelete
  14. ஹுசைனம்மா ஹி ஹி பாம்பின் கால் பாம்பறியும் :)

    ReplyDelete
  15. நல்லா இருக்கேன் மேனகா! நீங்க எப்படி இருக்கீங்க? ஷிவானி குட்டி ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டாங்களா?

    ReplyDelete
  16. கோமு இந்த வாட்டி இந்தியாவில் அதிகம் ஊர் சுற்றவில்லை :(. பதிவுகள் வரும் ஆனா வழக்கம் போல் மொக்கையாத்தான் இருக்கும் பரவால்லியா நீங்க ரெடின்னா நானும் ரெடி :)

    ReplyDelete
  17. வந்துட்டேன் லெக்ஷ்மிம்மா! எப்படி இருக்கீங்க? ஊர் சுத்தின அனுபவம் கம்மிதான் இந்தவாட்டி :(

    ReplyDelete
  18. @வசந்த்

    மூணார்னு சொல்றாங்களே மூணு ஆறு இருக்குதாக்கும்னு நினைச்சு போனா ஒரு ஆறு கூட இல்லை :).

    அப்பா நல்லா இருக்காங்க.

    ReplyDelete
  19. @நாஞ்சில் ப்ரதாப்
    மூணுமாசம் இந்தியாவில்.... ஜாலியாத்தான் இருந்திச்சு.

    மக்கள்ஸ் நல்லாவே இருக்காங்க! நாகராஜா கோவில் முன்னை விட படுசுத்தமாக அழகா இருக்கு! வடசேரி பஸ் ஸ்டாண்டு நெருக்கடியில் திணறுது. குளத்து பஸ் ஸ்டாண்டு சீரமைப்பு பணி நடக்குது.
    ஊர் அப்டேட் போதுமா :))

    ReplyDelete
  20. வெல்கம் பேக் அடுத்த பதிவு அரசியல் மட்டும் போட்டுடாதீங்க ..பயமா இருக்கு :-))

    பரவாயில்லை லீவ முழுஷா என் ஜாய் பண்ணீருக்கிங்க ..

    ReplyDelete
  21. அரசியல் பதிவு போடக்கூடாதாஆஆஆஆஆஆஆ

    நம்மூரு அரசியல்வியாதிங்க அடிக்கற கூத்துக்கு... கஷ்டம்தான் இருந்தாலும் ட்ரை பண்றேன் :).

    ReplyDelete
  22. //வந்துட்டீல்ல இதுக்கு அப்புறம் எப்படி இருப்போம்னு தெரியாதுன்னு நீங்க எல்லாம் நல்ல மனசோட சொல்றது நல்லாவே கேட்குது//

    This is what we call self-realisation...ha ha ha... just kidding...welcome back Kavitha...:)

    ReplyDelete
  23. //This is what we call self-realisation//

    அதுக்குப் பேரு மைண்ட்வாய்ஸ் னுல்ல நினைச்சேன் :)

    ReplyDelete
  24. கவி,வாங்க நிஜமாகவே வந்திட்டீங்களா?ஊரில் எல்லாரும் நலமா?அடிக்கடி நினைப்பதுண்டு..

    ReplyDelete
  25. வாஙக் கவி வாங்க ஊரில் எல்லாரும் நலமா?

    ReplyDelete