Saturday 4 December 2010

இடுக்கண் வருங்கால் நகுக

இன்னிக்கு நாட்டு நிலைமை இப்படித்தான் இருக்கு. மக்களே ஊழல்தொகையை பார்த்து மனம் வருந்தாதீர் என்று அரசியல்வியாதிகள் கோமாளிகளாக மாறி தினம் தினம் அறிக்கை விட்டு  மக்களை வேதனையில் சிரிக்க வைக்கறாங்க.
ஆரம்பிச்சு வச்சுது இத்தாலி மகராசி அன்னை சோனியா காந்தி

ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்"

எப்படீங்க போஃபர்ஸ் விவகாரத்தில் குவாட்ரோச்சியை தப்பிக்க வச்சீங்களே அது மாதிரியா? இல்லை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை 16 மாசம் மூடிவச்சீங்களே அது மாதிரியா? புரியலீங்க தெளிவா சொன்னா எல்லாருக்கும் உபயோகப்படும்ல!

அடுத்து வந்தாருய்யா நம்ப மாண்புமிகு(?!) முதலமைச்சர்

ஊழல் விஷயங்களில் நான் நெருப்பு மாதிரி!

எப்படீங்க எங்கயாச்சும் ஊழல் பண்ண வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச உடனே நெருப்பு மாதிரி கப்புன்னு புடிச்சுக்குவீங்களே அதுமாதிரியா? இல்லை பணம் கொழிக்கும் துறைகள் உங்களுக்கு வேணும்னு நெருப்பு மாதிரி இருந்து சாதிப்பீங்களே அது மாதிரியா? சொல்றதை தெளிவா சொன்னா நாங்களும் நெருப்பு மாதிரி இருப்போம்ல

அடுத்து அடிச்சாரு பாருங்க ஒரு ஜோக்கு...

"கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை"

ஆமாமா வேற எல்லாம் "வாங்கவில்லை". நாங்க நம்பிட்டோம்.

அதுலயும் ஓடாத படங்களுக்கு கதைவசனம் எழுதி 50லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். இதுதாங்க இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோக்.

நானும் கதைவசனம் எழுதலாமான்னு யோசிக்கறேன். 50லட்சமெல்லாம் வேணாம் ஒருலட்சம் கிடைச்சாலும் போதும்.

அடுத்து துணைமுதல்வர் எனக்கு மட்டும் ஜோக்கடிக்கத் தெரியாதான்னு கேட்டுட்டு வந்தார்

"தி.மு.க ஆட்சியின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது : துணை முதல்வர் பெருமிதம்"

ஹி ஹி டங்கு ஆஃப் த ஸ்லிப்பு தூ தூ ஸ்லிப்பு ஆஃப் த டங்கு... டேமேஜ்னு சொல்றதுக்கு பதிலா இமேஜ்னு சொல்லிட்டார் போல

எது எப்படியோ நல்லா வாய் விட்டு சிரிக்கலாம் இந்த ஜோக்குக்கு.
அரசியல்வாதிக்கு குறைஞ்சவனா நானுன்னு ஸ்டேஜுக்கு வந்தாரு தொழிலதிபர் ரத்தன் டாட்டா
நீரா ராடியா டேப் விவகாரம்: "ரத்தன் டாடா, இது தனி மனித உரிமையை மீறிய செயல் என்று கருத்து தெரிவித்திருந்தார்."

ஆமாமா பிளாக் டை பிளாக் கவுன் ன்னு நீங்க ஜொள்ளியதையெல்லாம் வெளியிட்டது தனி மனித உரிமை மீறல்தான். அதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனா மாறன் மந்திரி ஆகக் கூடாதுன்னு சொன்னீங்களே அது என்னங்க தனி மனித விஷயம் புரியலியே! சொன்னீங்கன்னா அப்பாவிங்க நாங்க புரிஞ்சுக்குவோம்.

மக்களே தினந்தோறும் செய்தித் தாள் படியுங்க. நம்ப அரசியல்வியாதிகள் வெளியிடற அறிக்கைகளைப் படிச்சா வாழ்க்கையில் என்ன டென்ஷன் ஸ்ட்ரெஸ் எல்லாம் இருந்தாலும் பறந்து போயிடும். வாய் விட்டு சிரிப்பீங்க

இடுக்கண் வருங்கால் நகுக!

34 comments:

  1. //மக்களே தினந்தோறும் செய்தித் தாள் படியுங்க. நம்ப அரசியல்வியாதிகள் வெளியிடற அறிக்கைகளைப் படிச்சா வாழ்க்கையில் என்ன டென்ஷன் ஸ்ட்ரெஸ் எல்லாம் இருந்தாலும் பறந்து போயிடும். வாய் விட்டு சிரிப்பீங்க//உண்மைதான்!:-)

    ReplyDelete
  2. நன்றி எஸ்.கே!

    ReplyDelete
  3. கவி நாம அரசியல்வாதிகளைப்பத்தி எப்படி கிண்டலடிச்சாலும் அவங்களுக்கு உறைக்கபோரதில்லை. அவங்களுக்கு தோணினதைத்தான்(தாந்தோன்றித்தனமாக)
    செய்வாங்க.

    ReplyDelete
  4. நம்ம அரசியல் வாதிகளெல்லாருமே சர்க்கஸ் கோமாளி ஆகிட்டாங்களே.

    ReplyDelete
  5. உங்களை ஒரு நாள் முதல்வரா ஆக்க தீர்மானிச்சிருக்கேன் முதல் வேலையா என்ன செய்வீங்க சொல்லுங்க பார்க்கலாம் (( சட்ட சபை கட்டிடத்தை விலைக்கு வங்கிடுவேன்னு சொல்லபிடாது )) :-))

    ReplyDelete
  6. //"தி.மு.க ஆட்சியின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது : துணை முதல்வர் பெருமிதம்"//

    பின்னே தமிழக அரசியல் வாழ்கையில முதன் முதலா ஒரு சீட் அதுவும் துனை முதல்வர் சீட் கிடைச்சா இப்பிடிதான் சொல்லனும் அதான் அழகு

    ReplyDelete
  7. இந்த அளவுக்கு டென்ஷன் ஆகாதீங்க ..!! இலவசமுன்னு வாங்கும் போது யாருக்காவது இந்த டென்ஷன் இருந்துச்சா..? இல்லையே

    குடுக்கும் போது அது எங்கிருந்து வந்துச்சின்னு யாராவது ஒரு ஆள் கேட்டிருந்தா போதுமே..!!

    அப்புறம் ஒரு சின்ன மேட்டரை விட்டுடீங்க

    போபால் கார்பைடு ஓனரை தனி ஃபிளைட்டுல பத்திரமா அனுப்பி வைச்சதை மறந்துட்டீங்களே..!!

    ReplyDelete
  8. //எப்படீங்க எங்கயாச்சும் ஊழல் பண்ண வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச உடனே நெருப்பு மாதிரி கப்புன்னு புடிச்சுக்குவீங்களே அதுமாதிரியா?//

    hahahaசெம பஞ்ச்

    //நானும் கதைவசனம் எழுதலாமான்னு யோசிக்கறேன். 50லட்சமெல்லாம் வேணாம் ஒருலட்சம் கிடைச்சாலும் போதும்.//

    ஏற்கனவே உளியின் ஓசை, பெண்சிங்கம் ஏற்பட்டுத்திய பீதியில் இருந்து தமிழகம் மீளாம இருக்கு... இதுல நீங்க வேறயா? :)))

    ReplyDelete
  9. Kavi..Looking awesome with plenty of pinky paanky designs:))) Catch u later with comments..:)))

    ReplyDelete
  10. //"கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை"//

    அவர் வாங்கலை அந்த வீட்டைத்தவிர மீதியிருக்கிற சொத்தையெல்லாம் அவர் குடும்பம் வாங்கிடுச்சே!

    மீதியிருக்கிற விஷயங்கள் பத்தி பக்கம் பக்கமா எழுதலாம் எழுதி எந்த பிரயோசனமும் இல்லை வீணா நம்ம பிபி ஏறுறதுதான் மிச்சம் !

    ReplyDelete
  11. அரசியல் பேசினால் வீண் டென்ஷன் ஏறும். நோ! கமன்ட்ஸ்.

    ReplyDelete
  12. “மக்களே தினந்தோறும் செய்தித் தாள் படியுங்க. நம்ப அரசியல்வியாதிகள் வெளியிடற அறிக்கைகளைப் படிச்சா வாழ்க்கையில் என்ன டென்ஷன் ஸ்ட்ரெஸ் எல்லாம் இருந்தாலும் பறந்து போயிடும். வாய் விட்டு சிரிப்பீங்க”

    --சூப்பர்.

    ReplyDelete
  13. இவனுங்க விடுற அறிக்கைலாம் பாத்தா எரிச்சல் தான் வருது கவி :(

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. //கவி நாம அரசியல்வாதிகளைப்பத்தி எப்படி கிண்டலடிச்சாலும் அவங்களுக்கு உறைக்கபோரதில்லை. அவங்களுக்கு தோணினதைத்தான்(தாந்தோன்றித்தனமாக)
    செய்வாங்க//

    கோமு அதுங்களுக்கு உறைக்காதுன்னு தெரியுமே! அதான் சிரிக்கத் தோணுதுன்னு சொன்னேன். கஷ்டத்தில் வரும் சிரிப்பு :(

    ReplyDelete
  16. வாங்க லெக்ஷ்மிம்மா! அந்த கோமாளிங்க மக்களை லூசுங்களாக்கி ரொம்ப நாளாயிடுச்சு :(

    ReplyDelete
  17. ஏன் ஜெய் சொல்றதே சொல்றீங்க பிரதமர்னு சொல்லக் கூடாதா :)

    பிரதமர் ஆனதும் முதல்வேலை டெல்லியை வளைச்சு போடறதுதான் :) இது சும்மா :)

    உண்மையில் என் மனதில் உள்ள ஆசை ஒரு மிக நல்ல நேர்மையான கண்டிப்பான நிர்வாகியின் கீழ் கொஞ்சகாலம் எமெர்ஜென்சி காலகட்ட ஆட்சிமுறை இருந்தால் நல்லதுன்னு தோணுது. எல்லாம் கட்டுக்குள் வந்த பின் கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக நாடாக மாறணும். ரொம்ப பெரிய கனவுதான். இப்ப இருக்கர சீரழிவுகளை சரியாக்கணும்னா இதுதான் ஒரே வழின்னு எனக்குத் தோணுது.

    இதையே வேற எப்படி செய்யலாம்னு பதிவர்கள் தொடர்பதிவா எழுதலாமே :)

    ReplyDelete
  18. ஆமாமா வேற எல்லாம் "வாங்கவில்லை". நாங்க நம்பிட்டோம். ////

    அப்பா ஒரு ஆல் நம்பிட்டாங்க அது போதும்

    ReplyDelete
  19. //இந்த அளவுக்கு டென்ஷன் ஆகாதீங்க ..!! இலவசமுன்னு வாங்கும் போது யாருக்காவது இந்த டென்ஷன் இருந்துச்சா..? இல்லையே//

    இதுவரைக்கும் ஒரு இலவசம் கூட எங்க வீட்டுக்கு கிடைக்கலை வாங்கலை :)

    //குடுக்கும் போது அது எங்கிருந்து வந்துச்சின்னு யாராவது ஒரு ஆள் கேட்டிருந்தா போதுமே..!! //

    மக்கள் என்ன தெரியாமலா இருக்காங்க!

    ReplyDelete
  20. //ஏற்கனவே உளியின் ஓசை, பெண்சிங்கம் ஏற்பட்டுத்திய பீதியில் இருந்து தமிழகம் மீளாம இருக்கு... இதுல நீங்க வேறயா? :))) //

    ஹி ஹி பிரதாப் நம்ப மக்கள் எத்தனையோ தாங்கிட்டாங்க இதையும் தாங்க மாட்டாங்களா :)

    ReplyDelete
  21. ஆனந்தி பிங்கு கலரு சிங்குச்சான்னு சொல்றீங்களா :)

    ReplyDelete
  22. //மீதியிருக்கிற விஷயங்கள் பத்தி பக்கம் பக்கமா எழுதலாம் எழுதி எந்த பிரயோசனமும் இல்லை வீணா நம்ம பிபி ஏறுறதுதான் மிச்சம் !//

    வசந்த் அதான் வள்ளுவர் சொல்லியிருக்காரே "இடுக்கண் வருங்கால் நகுக"ன்னு :((

    ReplyDelete
  23. வானதி இப்பல்லாம் அரசியல் படிச்சா டென்ஷன் ஏறாது நம்ப டென்ஷன் எல்லாம் மறந்து போய் சிரிக்க ஆரம்பிச்சிடுவோம் :((

    ReplyDelete
  24. ஆசியா நிலைமை அப்படி ஆயிடுச்சு :(

    ReplyDelete
  25. ஆமி எரிச்சல் எல்லாம் படக்கூடாது. முதலில் அப்படித்தான் எரிச்சல் கோபம் எல்லாம் வரும். அப்புறம் கவி மாதிரி சாந்த சொரூபி ஆயிடுவீங்க :((
    (வேற வழி!)

    ReplyDelete
  26. //சௌந்தர் said...
    ஆமாமா வேற எல்லாம் "வாங்கவில்லை". நாங்க நம்பிட்டோம். ////

    அப்பா ஒரு ஆல் நம்பிட்டாங்க அது போதும் //

    அப்பாடா மக்கள் நம்பிட்டாங்கன்னு அவரும் நம்பிட்டாரு. எலக்ஷன் வருதுல்ல அப்போ தெரியும் நாங்க நம்பினோமா இல்லையான்னு.

    ReplyDelete
  27. கவி //மக்கள் நம்பிட்டாங்கன்னு அவரும் நம்பிட்டாரு//. எங்க ஈரோட்ல எல்லாம் தலைவருக்கு
    நல்லாவே வரவேற்பு. பின்ன இருக்காதா? எவ்வளவு
    இலவச வினியோகங்கள். அதானெஎலக்‌ஷன் வரப்போகுதே. அப்பவெட்டவெளிச்சமாயிடுமே.எப்படி வரவேற்புன்னு.

    ReplyDelete
  28. ஆமாம் கவி..நீங்க சொல்வது போல சில விஷ்யங்களை படித்தால் கண்டிப்பாக கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்பு தான் வருது...என்னத செய்ய..

    ReplyDelete
  29. க்ளாஸ் கவி..க்ளாஸ்...இதுக்கு மேலே டங்குவாரு கிழிக்க முடியாது..துவச்சு தொங்கபோட்டிங்க..:)))

    ReplyDelete
  30. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

    நன்றி!

    ReplyDelete
  31. @சித்ரா இலவசங்களை கமுக்கமா வாங்கிகிட்டு அவனுங்க மூஞ்சியில் கரியை பூசினால் நல்லா இருக்கும் :)

    ReplyDelete
  32. @கீதா ஆச்சல்

    ஒன்னும் செய்ய முடியலியே :(

    ReplyDelete
  33. @ஆனந்தி
    இதுக்கெல்லாமா அவனுங்க அசருவானுங்க! நம்ப ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துக்கறோம் அவ்வளவுதான் :(

    ReplyDelete
  34. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி சார்!

    ReplyDelete