Wednesday 1 December 2010

முதன்முறை அழுகைகள்- ஒரு எதிர்வினை!

வலைப்பூ ஆரம்பிச்சு பல மாதங்கள் ஆயிடுச்சு. இதுவரைக்கும் ஒரு எதிர்வினை கூட எழுதலேன்னா நானும் பதிவர்னு சொல்லிக்கிட்டு திரிய முடியுமா! ஆனால் எதிர்வினை எழுதி அடிவாங்கும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. அதனால் யாரும் அடிக்க மாட்டாங்கன்னு நம்பி எதிர்கவுஜ எழுதிட்டேன் :)

நாஞ்சிலார் எழுதிய இந்த கவிதைக்கு எதிர்கவுஜ...




முதல்முறை பள்ளி சென்ற போது
வராத அழுகை

முதல்முறை பரீட்சையில்
முட்டை வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை ஆசிரியரிடம்
அடி வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை சைட் அடித்து அவள் அண்ணனிடம்
மாட்டிக் கொண்டதும்
வராத அழுகை

முதல்முறை காதலில் தோற்ற போது
வராத அழுகை

முதல்முறை பார்த்த பெண்
வேண்டாம்னு சொன்ன போது
வராத அழுகை

முதல் முறை வேலை புட்டுக்கிட்ட போது
வராத அழுகை

முதல்முறை காதலித்த பெண்ணை
திருமணம் செய்தபோது
வராத அழுகை

முதல்முறை மனைவி சமையலை
சாப்பிட்ட போது
வராத அழுகை

முதல்முறை மொக்கை கவுஜ
எழுதிய போது
வராத அழுகை

பல முதல்முறை அழுகைகளை
முறியடிக்கும் ஏதாவது
ஒரு பிரகாசமான பல்பை
எதிர்பார்த்து வாழ்க்கையை
பல பல்புகளுடன் கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்...

41 comments:

  1. :(((((
    avv engalukku alugai varuthu ippaa

    ReplyDelete
  2. அதானே எங்களுக்கு வேணும் :)))

    ReplyDelete
  3. எது வேணும் ???

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. சந்தோஷங்களும் சங்கடங்கள் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையும் வேணும் :)

    ReplyDelete
  5. சூப்பர் பல்பு கவி :)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. பல்பா???????!!!!!! யாருக்கு? எனக்கு வேணாஆஆஆம்

    ReplyDelete
  7. கவி என்னதிதெல்லாம்? தாங்க முடியல......

    ReplyDelete
  8. பல்பு வாங்கறதி கவிதங்கச்சி கில்லாடியா இருப்பாங்க போல் இருக்கே.சும்மா சொல்லப்படாது.கவுஜை சூப்பர்

    ReplyDelete
  9. //பல முதல்முறை அழுகைகளை
    முறியடிக்கும் ஏதாவது
    ஒரு பிரகாசமான பல்பை
    எதிர்பார்த்து வாழ்க்கையை
    பல பல்புகளுடன் கழித்துக்
    கொண்டிருக்கிறார்கள்//

    கவிசிவானந்தாவின் கவுஜ தத்துவம் நம்பர் 4003 :)))

    ReplyDelete
  10. ஓகோ எதிர்கவுஜையா...ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..இதோட பல பயங்கரமான பின்விளைவுகளை நீங்க சந்திக்க நேரிடும் பராயில்லயா?..:)

    //பல முதல்முறை அழுகைகளை
    முறியடிக்கும் ஏதாவது
    ஒரு பிரகாசமான பல்பை
    எதிர்பார்த்து வாழ்க்கையை
    பல பல்புகளுடன் கழித்துக்
    கொண்டிருக்கிறார்கள்//

    hehehe...எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா...;))

    ReplyDelete
  11. ஆமி பூல்புலையா வுக்கு எல்லாம் போயிட்டு வந்திருக்கீங்க. இதுக்கே பயந்துட்டா எப்பூடி?!

    ReplyDelete
  12. ஸாதிகா அக்கா பல்பு வாங்கறதா? நானா? சேசே அதெல்லாம் இல்லை நான் வாங்கலேன்னா பல்பு கொடுக்கறவங்க மனசு கஷ்டப்படுமேன்னு வாங்கற மாதிரி... ஹி ஹி

    ReplyDelete
  13. @ஆனந்தி சிஷ்யைன்னா இப்படித்தான் இருக்கணும். அது சரி இதுக்கு முன்னாடி சொன்ன 4002 தத்துபித்துவங்கள் எல்லாம் குறிப்பு எடுத்துட்டீங்களா :)

    ReplyDelete
  14. @ வசந்த்

    இமாம்மாவோட ஸ்மைலி பின்னூட்ட வியாதி உங்களுக்கும் தொத்திக்கிச்சா :))

    ReplyDelete
  15. @பிரதாப்

    //இதோட பல பயங்கரமான பின்விளைவுகளை நீங்க சந்திக்க நேரிடும் பராயில்லயா?..:)//

    கவி எஸ்கேஏஏஏஏஏப் :))

    ReplyDelete
  16. ஒண்ணும் சொல்ல முடியலை?!?! சொன்னா ஏதாவது எதிர் வினையாகிடுச்சுன்னா!!!

    ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.

    அசத்துறீங்க கவி!!

    அன்புடன்

    சீதாலஷ்மி

    ReplyDelete
  17. முதல்முறை இப்படி ஒரு கவிதை
    கவி எழுதியது?இதுவும் நல்லாதான் இருக்கு.

    ReplyDelete
  18. பல்பு வாங்க பயமா கவி?!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  19. கவி என்னாச்சு. நன்னாதானே இருந்தீங்க. இப்ப பல்பு வாங்கர நிலமையா?ஐயோ பாவமே?!!!!!!!!!!!!

    ReplyDelete
  20. பிரகாசமான பல்பு கெடைச்சுதா :-)))))

    ReplyDelete
  21. நன்றி சீதாம்மா! எதிர்வினைக்கு எல்லாம் பயப்படலாமா?! எதிரெதிர்வினை போட்டுட வேண்டியதுதான் :)

    ReplyDelete
  22. @ஆசியா! ஹி ஹி கவி எழுதுவது எல்லாமே இப்படித்தான். அதான் அதை எல்லாம் இங்க போடறது இல்லை :)

    ReplyDelete
  23. லெக்ஷ்மிம்மா பல்பு வாங்கரதுக்கு பயமெல்லாம் இல்லை ஏன்னா பழகிடுச்சு அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. @கோமு நான் நல்லாத்தேன் இருக்கேன். பல்பு வாங்கரது எல்லாம் கொடுமையா?! அதுவும் ஒரு கலை ஹி ஹி

    ReplyDelete
  25. இன்னும் பிரகாசமான பல்பு கிடைக்கலை சாரல் மேடம். இந்த மாத இறுதியில் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது :) ஊருக்குப் போறேனே மொத்த குடும்பமும் சேர்ந்துல்ல கலாய்க்கும் :((

    ReplyDelete
  26. நன்றி எஸ்.கே.!

    ReplyDelete
  27. @வானதி என்னாச்சு எல்லாருக்கும் இந்த ஸ்மைலி பின்னூட்ட வியாதி தொத்திக்கிச்சா :)))

    ReplyDelete
  28. நல்லா இருக்கு :))

    நான் இப்பத்தான் அழுது முடிச்சேன் :))

    ReplyDelete
  29. @இமா
    ;)x678565876x678565876

    ReplyDelete
  30. இதோ வந்துக்கிட்டே இருக்கேன் ஆசியா!

    ReplyDelete
  31. அழுது முடிச்சுட்டீங்களா சந்தூ! இனிமே சிரிங்க :)

    ReplyDelete
  32. //முதல்முறை காதலித்த பெண்ணை
    திருமணம் செய்தபோது
    வராத அழுகை//

    அழறது ஆணா இல்ல பெண்ணா..? ஹி..ஹி..

    ReplyDelete
  33. சூப்பர் எதிர்வினை!! தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. ஜெய் இங்கயும் சந்தேகமா?! சந்தேகமே வேண்டாம் ஆண்தான் (வெங்காயம் உரிக்க வச்சிடுவோம்ல :D)

    ReplyDelete
  35. :))) நன்றி ஹுசைனம்மா!

    ReplyDelete
  36. nantru.
    thodarka.
    http://kaatruveli-ithazh.blogspot.com/

    ReplyDelete