Monday, 19 July 2010

போலி சான்றிதழ் கொடுத்த அப்பாவிகள்

//""போலி சான்றிதழ் விஷயத்தில் அப்பாவி மாணவர்கள், பெற்றோரை தண்டிப்பது நியாயமாகாது,'' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.//

முழு செய்தியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்



அடங்கொய்யால.... மாணவன் பாவம் அப்பாவி விட்டு விடுவோம் அப்பா சொல்றதுக்கு தலையாட்டும் ஆடு பாவம். ஆனால் போலிச் சான்றிதழை பணம் கொடுத்து வாங்கிய பெற்றோர் அப்பாவியாம். இந்த கொடுமையை எங்க போய் சொல்றது?!

தன்னோட பையன் பரீட்சையில மார்க் குறைவா எடுப்பாராம். உடனே அப்பாகாரர் போலிச்சான்றிதழ் எங்க கிடைக்கும்னு விசாரிச்சு கேட்டுத் தெரிஞ்சு கொடுக்கவேண்டியதைக் கொடுத்து வேண்டிய மார்க் ஷீட் வாங்கி கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணி சீட்டும் வாங்கிடுவாராம். பையனும் தட்டுத்தடுமாறி படிச்சு வெளிய வந்து ஏதோ ஒரு இடத்தில் குப்பை கொட்டி சம்பாதிப்பானாம். இப்படி அடுத்தவன் குடியை கெடுக்கற அப்பா அப்பாவியாம். அமைச்சர் சர்ட்டிஃபிகேட் கொடுக்கறார். கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? நல்லா வருது வாயில.

ஒருவகையில் அமைச்சர் சொல்றது போல இவர்கள் அப்பாவிகள்தான். இல்லேன்னா பேப்பர் சேஸ் பண்ணி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கியிருப்பாரே. இல்லேன்னா பையனுக்கு பிட் அடிக்க வசதி செய்து கொடுத்திருப்பாரே. இவர்கள் அப்பாவிகள்தான்.

இப்படிப்பட்ட அப்பாவிகளால் உண்மையாக படித்து மார்க் எடுத்த அப்பாவி அப்பிராணி மாணவனின் வாய்ப்பல்லவா தட்டிப் பறிக்கப் படுகிறது. இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதா? இவனுங்களைக் கேட்க யாருமே இல்லையா?

Friday, 16 July 2010

இந்திய விமான நிலையங்களில் பாஸ்போர்ட்டுகள் கவனம்

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி. ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு உதவட்டுமே என்றுதான் இந்த பதிவு.

நாம் பாஸ்போர்ட்டை இமிக்ரேஷன் ஆஃபீசர், அல்லது கஸ்டம்ஸ் அல்லது ஏர் இந்தியா ஊழியர்களிடம் கொடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். நம் பாஸ்போர்ர்ட்டை சேதப்படுத்திவிட்டு நம்மை சிக்கலில் மாட்டி காசு கறக்கப் பார்ப்பார்கள்.

எப்படீன்னா நாம இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு போகும்போது நாம் பாஸ்போர்ர்டை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு நாம் அசந்த சமயம் பார்த்து பாஸ்போர்ட்டில் ஏதேனும் பக்கத்தை கிழித்து விட்டு அல்லது சேதப்படுத்திவிட்டு exit stamp அடித்து தந்து விடுவார். நாமும் இது தெரியாமல் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு போய்விடுவோம். ஆனால் நம் பாஸ்போர்ட் பற்றிய எல்லா விவரங்களையும் ரெட் மார்க்கோடு சிஸ்டத்தில் ஏற்றிவிடுவார்.

அடுத்தமுறை நாம் இந்தியாவரும்போது ஆரம்பிக்கும் ஏழரை. விசாரணை ஆரம்பிக்கும். எவ்வளவு நாள் வெளிநாடுகளில் இருக்கிறார் அவரது வருமானம் இதைப் பொறுத்து பேரம் போலீஸ் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளால் பேரம் பேசப்பட்டு பணம் கறக்கப்படும். யாராவது நம்ம மேல தப்பு இல்லன்னுட்டு சண்டை போட ஆரம்பிச்சோம் அவ்வளவுதான் நம்ப எதிர்காலத்தையே நாசமாக்கிடுவானுங்க இந்த படுபாவிங்க.

அதனால பாஸ்போர்ட்டை இந்த படுபாவிங்கக்கிட்ட கொடுத்துட்டு தேமேன்னு நிற்காம நம் பாஸ்போர்ட்டில் எப்போதும் கவனம் வைத்திருக்க வேண்டும். இல்லேன்னா ஆப்புதான்.

இந்த செயல் அதிகம் நடக்கும் ஏர்போர்ட்டுகள் மும்பை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு. ஒரு மாதத்தில் 20 முதல் 30 கேஸ்கள் பதிவு செய்யப்படுகின்றனவாம் (இதுக்கு கூட டார்கெட் வச்சிருக்கானுங்க போல).

Aramaco's Arifuddin அப்படீங்கறவர் தன்னோட குடும்பத்தோட மொத்தம் 6பேர் ஜெட்டாவிலிருந்து இந்தியா வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் வந்திறங்கி ஒரு மாதம் தங்கி விட்டு அங்கிருந்து அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் இறங்கி அங்குள்ள இமிக்ரேஷன் கடக்க இருக்கும் போதுதான் மனைவி பாஸ்போர்ர்ட்டிலிருந்த அமெரிக்க விசா பக்கத்தை காணவில்லை என்பதை பார்த்திருக்கிரார். ஹைதராபாத்தில் இருக்கும் போது விசா இருந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் மொத்த குடும்பமும் இந்தியா திரும்பியிருக்கிறது. மும்பையில் இறங்கியதும் போலீஸ் அரெஸ்ட் செய்து இருக்கிறது. இப்போது கோர்ட்டுக்கும் இமிக்ரேஷன் அலுவலங்களுக்கும் இடையே கிடந்து அல்லாடுகிறார்.

மக்களே கவனமா இருங்க. நீங்களும் சிக்கலில் மாட்டிக்காதீங்க. நண்பர்களிடத்தும் தெரிந்தவர்களிடத்தும் சொல்லி உஷார்ப்படுத்துங்கள். மீடியாவில் வெளியிடப்பட்டால் மிக நல்லது.

பணத்திற்காக அப்பாவிகளை பாடாய்ப்படுத்தும் இந்த ஜென்மங்களை என்ன செய்வது.

Sunday, 11 July 2010

குழந்தைகள்- ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஆசை

கடந்த வாரம் என் செல்ல மருமகளின்(நாத்தனார் மகள்) பிறந்தநாள். அதற்காக சிங்கப்பூர் போயிருந்தேன். அவளுக்கு என்ன கிஃப்ட் வாங்குவது என்று கடந்த இரண்டு மாதங்களாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டால் அதை அவங்க சொல்ல மாட்டாங்களாம். அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு நாங்களே யோசிச்சு அதை அவங்க பிறந்த நாளன்று சர்ப்ரைசாக கொடுக்கணுமாம். அவங்க அப்பா அம்மாவுக்கும் இதே ரூல்தான்.

நானும் என் அண்ணியும் மண்டையை பிச்சுக்கிட்டதுதான் மிச்சம். ரங்கமணிங்க பொண்ணை ஐஸ் வச்சு எஸ் ஆயிட்டாங்க. நாங்கதான் மாட்டிக்கிட்டோம். அப்புறமா என் மருமகளை ஐஸ் வைத்து கெஞ்சி கூத்தாடி(?!)...ஒருவழியா அவளுக்கு மீன்வளர்க்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னா. சரின்னு நானும் என் அண்ணியும் அவளை கூட்டிக்கிட்டு கடைகடையா அலைஞ்சோம். அவளுக்கு பிடிச்ச மாதிரி மீன்தொட்டி கிடைக்கவே இல்லை:( அதற்குள் பிறந்தநாளும் வந்துவிட்டது. அவளே பெரிய மனசு பண்ணி "பரவாயில்ல அத்தை எனக்கு பிடிச்சமாதிரி மீன் தொட்டி கிடைக்கறப்போ வாங்கிகலாம்" அப்படீன்னா. எனக்குத்தான் மனசு கேட்கலை. அய்யோ குழந்தை பிறந்தநாளுக்கு எதுவுமே கொடுக்கமுடியலியேன்னு வருத்தமாயிடுச்சு. அவளுக்கு பிடித்த கேக் மட்டும் வாங்கிக் கொடுத்தேன்.
ஊரில் இருந்து ஃபோன் செய்தவர்களிடம் எல்லாம் அத்தையும் அம்மாவும் எதுவுமே வாங்கித் தரலைன்னு கம்ப்ளெய்ண்ட் வேற :( அப்பாவுக்கும் மாமாவுக்கும் மேல எந்த தப்பும் இல்லையாம். இந்த கொடுமைய எங்க போய் சொல்றது

பிறந்தநாளுக்கு அடுத்த நாள் அவளிடம் "நீ தினமும் மீனுக்கு சாப்பாடெல்லாம் போட்டு கவனிச்சுக்குவியான்னு" கேட்டோம். அதற்கு அவள் பதில்... அத்தை எனக்கு மீன் வளர்க்க வேண்டாம். வேற ஏதாவது வாங்கித்தாங்க அப்படீன்னா... ஆஹா மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறிடுச்சேன்னு முழிச்சோம்.

கொஞ்ச நாளாக முயல் வளர்க்கணும்னு வேற சொல்லிக்கிட்டிருக்கா. அந்த ஆசை எப்போ மாறும்னும் தெரியலை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கிஃப்ட் வாங்குவது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. பர்ப்பிள் கலரில் எது வாங்கிக் கொடுத்தாலும் சந்தோஷம்தான். இப்போது வயது பன்னிரெண்டாகிறது. தினம் தினம் விருப்பங்களும் ஆசைகளும் மாறுகிறது.

இன்னும் அவளுக்குப் பிடித்த கிஃப்ட் வாங்கவில்லை. அடுத்த பிறந்தநாளுக்கு முன்னாடியாவது வாங்க முடியுமான்னு தெரியல :( உங்க யாருக்காவது ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க.

Tuesday, 29 June 2010

அலற வைத்த அழையா விருந்தாளி

போன சனிக்கிழமை காலையிலேயே எங்க வீட்டு ரங்கமணி கோல்ஃப் விளையாடப் போறேன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டார். அவரை அனுப்பி வச்சிட்டு மீண்டும் ஒரு குட்டித் தூக்கம் (பின்னே அதிகாலை 6மணிக்கெல்லாம் முழிச்சுக்கிட்டா என்னாவறது) போட்டுட்டு ஏழரைக்கு மீண்டும் முழிச்சு (ஏழரைக்கு முழிச்சதுனாலதான் அன்னைக்கு ஏழரையாயிடுச்சோ என்னவோ) குளிச்சு முடிச்சு... அப்பப்பா காலையிலேயே எம்பூட்டு வேலை...

ஒன்பது மணிக்கு ஒருவழியா லன்ச் சமைக்கலாமேன்னு கிச்சனுக்குள் போனேன். என்னது ஒன்பது மணிக்கே லன்ச் சமைப்பீங்களா அப்படீன்னு கேட்கக்கூடாது. ஏன்னா இந்த ரங்கமணிங்களுக்கு எல்லாம் பொதுவா ஒரு குணம் உண்டு. சீக்கிரம் சாப்பிட வருவேன்னு சொல்லிட்டு போனாங்கன்னா அன்னிக்கு ஒன்னு சாப்பிடவே வரமாட்டாங்க இல்லேன்னா மூணுமணிக்கு மேல வந்து நிப்பாங்க. லேட்டாகும்னு சொல்லிட்டு போனாங்கன்னா பதினோரு மணிக்கே வந்து 12மணிக்கு மீட்டிங் இருக்குதும்மா சாப்பாடு கொடுக்கறியான்னு வந்து நிப்பாங்க. இடையிலே ஒரு ஃபோனோ மெசேஜோ கூட இருக்காது. அதனால் இப்போ நிறையா தங்கமணிங்க உஷாராயிட்டோம். எப்போ வேணும்னாலும் வந்து சாப்பிடுங்க அப்படீன்னு பதினோரு மணிக்குள்ள சமைச்சு வச்சிடுவோம். ரங்கமணி எப்போ வர்றாங்களோ அப்போ திரும்பவும் சூடாக்கி கொடுத்திடுவோம் :)

ஆங்... எங்க விட்டேன்....சமைக்க கிச்சனுக்குள் போய் ஃப்ரிட்ஜை திறந்து(பின்ன மூடிட்டேவா எடுக்க முடியும்னு நீங்க முனுமுனுக்கறது கேக்குது) காய்கறிகளை எடுத்துட்டு திரும்பினா மிக்சி பக்கத்தில் ஒரு விருந்தாளி வந்து நிக்கறாங்க. எனக்கு அவங்களைப் பார்த்ததும் கையும் ஓடலை காலும் ஓடலை. உடனே ரங்கமணிக்கு ஃபோன் பண்ணினா... அவர் எடுக்கவே இல்லை. மனதுக்குள்ளே திட்டிக்கிட்டு வந்திருக்கவங்களுக்கு எதை வைச்சு கொடுக்கலாம்னு யோசிச்சேன். வீட்டில் உள்ளதை வைச்சு கொடுத்து(கொடுக்கவும் பயம்) அவங்களுக்கு போதலேன்னா பிரச்சினையாயிடுமே... (ஏன்னா வந்திருக்கறவங்க ரொம்ப கோபக்காரங்க) அப்படீன்னு யோசிச்சுட்டே(பயந்துக்கிட்டே) செக்யூரிட்டிக்கு ஃபோன் பண்ணி விருந்தாளி வந்திருக்கற விஷயத்தை சொன்னேன்.

உடனே செக்யூரிட்டிகளும் வீட்டுக்கு வந்து விருந்தாளியைப் பார்த்தாங்க. வந்த விருந்தாளி வயசு குறைஞ்சவங்களா இருந்ததால அவங்க கையில இருந்ததை வச்சே ஒன்னு கொடுத்தாங்க. விருந்தாளி மயங்கி கீழ விழுந்துட்டாங்க. பெரியவங்க யாராவது வந்திருக்காங்களான்னு வீட்டுக்குள்ள போய் தேடினாங்க. யாரும் இல்லை. அப்புறம் செக்யூரிட்டிகளே கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. இப்போதான் எனக்கு நிம்மதியாச்சு. அப்பாடா வந்த விருந்தாளிக்கு கோபம் வராதமாதிரி கவனிச்சு திருப்பி அனுப்பிச்சுட்டோமேன்னு நிம்மதியாச்சு.

சரி.. இவ்வளவு நேரம் விருந்தாளி விருந்தாளின்னு சொன்னேனே அவர் யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?! கண்டுபிடிச்சவங்களுக்கு சபாஷ். கண்டுபிடிக்காதவங்களுக்காக... வந்தது வேற யாரும் இல்லை....குட்டி பாம்பு தான். இரண்டு நாட்களாக பெய்த மழையில் மலையிலிருந்து அடித்துக் கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்

சாவகாசமா ரங்கமணி கோல்ஃபெல்லாம் விளையாடி முடிச்சுட்டு ஏம்மா ஃபோன் பண்ணினியாம்மான்னு எனக்கு ஃபோன் பண்றார். எனக்கு வந்த கோபத்தில்... ஒண்ணும் செய்ய முடியலை ஏன்னா ஆள் எதிரில் இல்லையே :(. அப்புறம் என்ன அன்னிக்கு சமையல் அம்புட்டுதான். ரங்க்ஸு பர்ஸுக்கு வேட்டுதான் :)

டிஸ்கி: பாம்பு ஃபோட்டோ எங்கேன்னெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா புத்தகத்துல பாம்பு படம் இருந்தா கூட அந்த புத்தகத்தையே தொடமாட்டேன். அவ்வளவு தைரியசாலி நான் :( இப்பவும் கிச்சனுக்குள் போகும்போது யாராவது இருக்காங்களான்னு நல்லா தேடிப்பார்த்துக்கிட்டுதான் போறேன்.

Monday, 28 June 2010

அமெரிக்காவில் 6வயது தீவிரவாதி

அமெரிக்காவின் ஒஹையோ வில் வாழும் இந்தியர் டாக்டர்.சந்தோஷ் தாமஸ். அவர் தன் குடும்பத்தோடு க்ளிவ்லாண்டிலிருந்து மினியாபொலீசுக்கு விமானத்தில் பயணம் செய்ய இருந்த போது அவரது 6வயது மகள் அலீசா தாமஸ் பெயர் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனத்தின் no-fly லிஸ்டில் இருப்பதாக கூறப்பட்டது.

அதிகாரிகளுக்கு என்னா ஒரு காமன் சென்ஸ். 6வயது குழந்தையின் பெயர் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர்களின் லிஸ்டில்! இப்போது அது விவாதமாகிவிட்டது. ஆனால் எதன் அடிப்படையில் அலிசாவின் பெயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டது என தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அமெரிக்க போலீசு நம்ப போலீசுக்கு அண்ணனா இருக்கானுங்களே!

இந்தோனேஷியாவில் இருக்கிறேன் என்ற காரணத்துக்காக அமெரிக்காவுக்கு விசிட் விசா அனுமதிக்க முடியாதுன்னு சொன்னப்போ இது என்னடா அநியாயமா போச்சுன்னு நினைச்சேன். 6வயசு குழந்தையை தீவிரவாதியா நினைக்கறவன் இந்தோனேசியாவில் இருக்கற எல்லாரும் தீவிரவாதின்னுதான் நினைப்பான் :(

Saturday, 26 June 2010

தலைகீழான கொடி

நம்ப உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு சார்க் மாநாட்டில் கலந்துக்க போயிருக்காராம். அங்க பாகிஸ்தான் அமைச்சரை சந்தித்து பேசினாராம். அப்போ ரெண்டு நாட்டு கொடியும் அங்க உள்ள மேஜையில் வச்சிருந்தாங்களாம். அதுல நம்ப நாட்டுக் கொடிய தலைகீழா கட்டி வச்சிருக்கானுங்க அந்த பாகிஸ்தான் அதிகாரிங்க. அவனுங்க வேணும்னு செஞ்சானுங்களோ இல்ல தவறுதலா நடந்துச்சோ... ஆனா அவரு பேச்சுவார்த்தையெல்லாம் முடிச்சுப்புட்டு ரொம்ப பரந்த மனசோட இதையெல்லாம் பெருசா எடுத்துக்கப்படாதுன்னு சொல்லிப்புட்டு அடுத்த ஜோலியை பார்க்கப் போயிட்டாரு.

ஆனால் எனக்கென்னமோ டிவியில் நம்ப கொடி தலைகீழா பறக்கறதைப் பார்த்தப்போ ரொம்பவே கோபம் வந்திடுச்சு. அமைச்சருக்கு நம் கொடி எப்படி இருக்கும்ங்கறது தெரியுமான்னே சந்தேகமா இருக்கு. இல்லேன்னா நம்ப அமைச்சர் அதை சரியாக்க சொல்லிட்டு அப்புறமா பேச்சுவார்த்தையை தொடர்ந்திருக்கலாமே. என்னமோ போங்க எதுவுமே சரியில்லை

Saturday, 19 June 2010

அப்பாவுக்காக...







குட்டீ... என்ற உன் குரல் கேட்டால் குழந்தையானேன்
அம்மா என்ற உன் அழைப்பில் அன்புக்குரிய அன்னையானேன்
உன் இளவயது குறும்புகளை கேலி செய்யும் தோழியானேன்
அப்பா... என்று உன் மடி சாயும் போது அன்பு மகளானேன்

பத்து மாதம் அம்மா என்னைக் கருவில் தாங்கினாள்
அப்பா நீயோ என்னை உன் நெஞ்சில் தாங்கி தாயுமானாய்
கதை சொல்லி உறக்கும் போது பாட்டியானாய்
மூன்று வயதில் முதலெழுத்து சொல்லிக் கொடுத்து குருவுமானாய்
பள்ளிக் கல்லூரி கதைகளை ஆவலோடு கேட்கும் நண்பனானாய்
கணவனோடு புக்ககம் நான் செல்ல கண்கலங்கி தந்தையானாய்


*****************WE LOVE YOU DAD*****************


******HAPPY FATHER'S DAY TO ALL FATHERS*******